Sunday, October 28, 2018

சிறகே சிறையாய் - பாட்டு புத்தகம்

ஆண்கள்லாம் அழகா தெரியும் பருவம் எது?!

நிச்சயமா 30லிருந்து 40வயசுலதான். முப்பது வயசுக்குள் ஹேர்ஸ்டைல், மீசைன்னு புதுசுபுதுசா ட்ரை பண்ணி எது ஒரிஜினல் தோற்றம்ன்னே தெரியாது. 40க்கு மேல் தொப்பை, நரை, வழுக்கைன்னு வந்தபின் எதுமே செட் ஆகாது. ஆனா, முதிர்ச்சி எட்டி பார்க்கும் வயசில் அந்த 30 டூ 40வயசில் ஆண்கள் அழகிருக்கே?! அடடே! மழுங்க ஷேவ் செஞ்சு, கிருதா ஒதுக்கி, நீட்டா முடி கட் செஞ்சு....  ரொம்ப அழகு... 

அதுமாதிரியான ஒரு தோற்றத்துல உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்துல ரஜினி தோற்றம்.  ஆன்மீகமும், அரசியலும் கலக்காத நடிகனா மட்டுமே இருந்த ரஜினிகாந்த். அதும் அழகான ரஜினி. கருப்பா இருந்தா பொண்ணுங்களுக்கு பிடிக்காதுன்ற எண்ணத்தை உடைச்ச அழகு.  தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, தங்க மகன், நான் அடிமை இல்லை, நான் சிகப்பு மனிதன்னு  சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த காலக்கட்டம்.  மீன்விழியாள்ன்ற வார்த்தைக்கு சொந்தக்காரி நடிகை மாதவி. ஐடெக்ஸ் கண்மைக்கு முதன்முதலா மாடலா வந்தது மாதவிதான். அடுத்து பானுப்பிரியா... முத்துபல் தெரிய சிரிக்கும் அழகி.  சில நடிகைகளுக்கு மட்டுமே எந்த உடை போட்டாலும் பொருத்தமா இருக்கும். அதில் மாதவியும் ஒன்னு. பிகினி முதல் சேலை வரை எல்லாமே இவங்களுக்கு பொருந்தும்.

பாலுமகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளர். மணிரத்ணம், மகேந்திரன் மாதிரியான படாபடா ஆளுங்க படத்துக்குலாம் ஒளிப்பதிவாளரா இருந்திருக்கார். இவர் இயக்குனரும்கூட, கோகிலா, ரெட்டைவால் குருவி, மூடுபனி, மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், சதிலீலாவதின்னு சில படங்கள் இயக்கி இருக்கார்.  எனக்கு  தெரிஞ்சு மூன்றாம் பிறையும் சதிலீலாவதிதான் ஹிட் அடிச்சது. மத்ததுலாம் சுமார் ரகம்தான். ஒருமாதிரியான மனப்பிறழ்வு கதைதான் இவரோட கதைக்கருவா இருக்கு. அது ஏன்னு தெரில.  அதுமாதிரி ஹிட் அடிக்காத ஒரு படம்தான் உன் கண்ணில் நீர் வழிந்தால்..

ரஜினி ஸ்டைலும் இல்லாத, பாலுமகேந்திரா ஸ்டைலுமில்லாத படமில்லாததால் படம் ஹிட் அடிக்கல, ஆனா பாட்டுலாம் செம ஹிட். இப்ப வரும் பாடலில் முதல்ல பியானோ இசையும், அதை தொடர்ந்து வரும் வயலின் இசையுமே நம்ம மனசின் நினைவுகளை கிளறி செல்லும்.  சோகப்பாட்டுதான் ஆனாலும் மெல்லிசைப்பாடலா மாத்தினது பாலுமகேந்திராவின் கைவண்ணம். பாடலின் ஆரம்பத்தில் ரஜினியும், மாதவியும் புல் தரையில் நடந்து வருவதை மெல்லிய பனிப்படலத்தினூடாக பதிவு செஞ்சது அருமை. பாட்டை கேளுங்க. பாடல் காட்சிகளை பாருங்க. பாட்டுக்காக படத்தை பார்த்தா வருத்தப்படுவீக..

துணையின் ஆறுதல் இருந்தா எந்த சோகத்திலிருந்தும் வெளிவரலாம், எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வரும்ன்றதை இந்த பாட்டு உணர்த்தும்


கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்...
மனமே நினைவை மறந்து விடு..
துணை நான் அழகே துயரம் விடு...
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே!!
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா?!
நியாயமா பெண்ணே?!!
 ஹோ..

கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்?!


நானே உன் சுமையாக ஏன் வந்தேன்?!
சிறகெல்லாம் சிறையாக வாழ்கின்றேன்!!
நான் உறங்கும் நாள் வேண்டும்!!
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்!!
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்!!
என் கண்ணில் நீர் வேண்டும்!!
சுகமாக அழ வேண்டும்...

 கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்?!


 இருள் மூடும் கடலோடு நான் இங்கே...
என் தோணி கரை சேரும் நாள் எங்கே?!
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்?!

பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்?!
நிழலாக நீ வந்தால்...
 இது போதும் பேரின்பம்!!

 கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்!!
மனமே நினைவை மறந்து விடு...
துணை நான் அழகே துயரம் விடு...
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே!
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே?! ஹோ....

கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்?!

படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
நடிகர்கள் : ரஜினி, மாதவி

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. வரிகளும் பிடிக்கும். இசையும்பிடிக்கும். எஸ் பி பி ஜானகிம்மா குரல்களும் பிடிக்கும். இனிமையான பாடல்.

    ReplyDelete
    Replies
    1. அதும் இரவு நேரத்தில் கேட்க நல்லா இருக்கும்

      Delete
  2. Replies
    1. கேட்க நல்லா இருக்கும்

      Delete
  3. என்றும் ரசிக்கும் பாடல்...

    ReplyDelete
  4. //பாலுமகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளர். மணிரத்ணம், மகேந்திரன் மாதிரியான படாபடா ஆளுங்க படத்துக்குலாம் ஒளிப்பதிவாளரா இருந்திருக்கார்//
    மணிரத்னம் படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்சா மாதிரி தெரியல.

    ReplyDelete
    Replies
    1. இல்லியா பின்ன?!

      Delete
  5. இந்த பாடலின் இன்னொரு சிறப்பு
    பல்லவி ஆண் குரலில் மட்டுமே இருக்கும்
    சரணம் பெண் குரலில் மட்டுமே இருக்கும்

    ReplyDelete