என்ன மாமா பண்ணிக்கிட்டிருக்கே?!
சும்மா நொய் நொய்னு சொல்லாம என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்.
உன் நிம்மதிய நாந்தான் கெடுக்குறேனா?! இரணயன் கேட்ட வரம் போல, உள்ளுமில்லாத வெளியுமில்லாத, ஆகாயமுமில்லாத, பூமியுமல்லாத, இருட்டுமல்லாத, வெளிச்சமுமல்லாத, காலையுமல்லாத மாலையுமல்லாத எந்த இடத்தில் தேடினாலும் நிம்மதி கிடைக்காது. நிம்மதிங்குறது கடவுளைப்போல! அது வெளில இல்ல. நம்ம மனசுக்குள் இருக்கு. அவரவருக்கு தகுந்த மாதிரி பிரச்சனை உண்டு. பசிக்க்கலையேன்னு பிரச்சனை ஒருத்தருக்கு. பசியே பிரச்சனையாய் இன்னொருத்தருக்கு. நேரமில்லையேன்னு வருத்தம் ஒருவருக்கு, நேரம் போகலியேன்ற வருத்தம் இன்னொருத்தருக்கு.. இப்படி விதம் விதமான பிரச்சனை. நிம்மதியில்லாத சூழலை ஒருமுறையாவது தன் வாழ்நாளில் அனுபவிக்காத மனுசனில்லை.
உலகில் நிம்மதியா இருக்கும் ஆட்கள்ன்னு பார்த்தா குழந்தையும், மனநிலை பாதிக்கப்பட்டவங்களும்தான். அவங்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. ஆனா, அதை உணரும் நிலையில் அவங்க மனசு இல்லை. அப்படி பார்த்தா, நம்ம நிம்மதியின்மைக்கு காரணம் வெளிச்சூழல் இல்லை.. நம்ம மனசு மட்டுமே! மனசு எதைபத்தி சிந்திக்குதோ அதுவாவே ஆகிடும் ஆற்றல் கொண்டது. அதனால்தான், சிலசமயம் விலைமதிப்பற்றதா தெரியும் விசயங்கள் பின்னாளில் குப்பையா தெரியும். ஒருநேரத்தில் தலையில் வச்சு கொண்டாடுனதை வெறுத்து ஒதுக்க தோணும். மாற்றம்ங்குறது மனதின் சுபாவம். அதனால்தான் மகிழ்ச்சியான விசயம் நடக்கும்போது நிம்மதி அடைவதும், துக்கமான நிகழ்வு நடக்கும்போது மன உளைச்சல் உண்டாவதும்.. ஆனா, அந்த மன உளைச்சலையும் தாங்கும் சக்தி அந்த மனசுக்கு உண்டு. அதனால்தான், ஐயோ! இதை எப்படி தாங்குவோம்ன்னு நினைக்கும் விசயத்தைக்கூட தாங்கி உயிர் வாழுறோம். வாழ்க்கையில் எல்லாத்தையும் நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்க முடியும். நிகழ்த்திக்க முடியும். ஆனா, மரணத்தை?!
என்னதான் முயன்றாலும் மரணத்தை நம்மால நிகழ்த்திக்க முடியாது. மாறுதலுக்குரிய இந்த உலகத்துல நிம்மதிக்கு குறைவில்லை. ஆனா, அதுக்காக, நிம்மதியை தேடிக்கிட்டே போய்க்கிட்டே இருக்கக்கூடாது. அப்படி ஒன்னிலிருந்து ஒன்னுன்னு தேடிக்கிட்டே போனால் எதுலுமே திருப்தி இருக்காது. நிம்மதியும் கிடைக்காது. எந்த கடவுளும் நமக்கான நிம்மதியை நமக்கு கொடுக்கமுடியாது. ஏன்னா, நிம்மதி வேறெங்குமில்லை. நம்ம மனசுக்குள்ளயே இருக்கு. அதுக்கு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். மனசை எளிமையா வச்சுக்கனும். பந்த பாசம்ன்னு சிக்கக்கூடாது. அதுக்காக, உறவே வேணாம்ன்னு சொல்லல.கைகளுக்குள் இருக்கும் பட்டாம்பூச்சியை கையாளுற மாதிரி உறவுகளை கையாள கத்துக்கனும். கைகளை இறுக்கினா, பட்டாம்பூச்சி செத்துரும். கைகளை திறந்து வச்சா பட்டாம்பூச்சி பறந்துரும். எதிர்காலத்துல இப்படிதான் நடக்கனும்ன்னு எந்த அவசியமும், நிர்பந்தமுமில்லை. அதனால், எதிர்காலத்தை நினைச்சு மனக்கோட்டை கட்டக்கூடாது. அதுக்காக, எதிர்காலத்துக்காக திட்டமிட வேணாம்ன்னு சொல்லலை. திட்டமிடும்போதே அதிகப்படியான எதிர்பார்ப்பை வளர்த்துக்கக்கூடாது. மொத்தத்துல கற்பனையான வாழ்க்கையை வாழவேணாம். அதேப்போல கடந்தகாலமென்பது திரும்ப ஒருபோதும் வரப்போறதில்லை. அதனால் கடந்தகாலம் கத்துக்கொடுத்த பாடத்தை மட்டும் நினைவில் வச்சுக்கனுமே தவிர, அதுக்காக கவலைப்பட்டுக்கிட்டு இருக்க வேணாம்.
இந்த நிமிசம் மட்டுமே நம்வசம்ன்னு வாழ பழகனும். பல்லாயிரக்கணக்கான விந்தணுக்களில் உயிரும் உடலும் பெற்ற நமக்கு, நம்ம பிறந்து வரும்முன்னமயே நமக்காக, தாயின் மார்பகத்தில் நமக்கான உணவை வைத்த இயற்கை நமக்கான நிம்மதியை நமக்குள்தான் வச்சிருக்கு. பீ ஹாப்பி மாமா.
என் கெரகம். உன்கிட்டலாம் அட்வைஸ் கேட்கனும்ன்னு இருக்கு. சரி, எல்லா வயசு பெண்களும் சபரிமலைக்கு போகலாம்ன்னு தீர்ப்பு வந்து எல்லாமே அல்லோகலப்படுதே. உனக்கு வாய்ப்பு கிடைச்சா நீ போவியா?!
போகமாட்டேன் மாமா.
ஏன் நீதான் சாமி இல்ல, பூதமில்லைன்னு சொல்வியே!
சாமி இல்லதான். ஆனா, அது பலக்கோடி பேரின் நம்பிக்கை சார்ந்த விசயம். அதை உடைக்குற மாதிரி நான் போகமாட்டேன். சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாதுன்னு சொல்ல பலக்காரணம் இருக்கலாம். நான் புரிஞ்சுக்கிட்ட காரணங்களை சொல்றேன்.
முன்னலாம், ஆன்மீக பயணத்தை இளவயசுலயே பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்ட சாமியார்களும், ஆண்டு அனுபவிச்சு வயசான காலத்திலயும்தான் போவாங்க. காசி, ராமேஸ்வரம், திருப்பதின்னு போவாங்க. இந்த இடங்களுக்கு போறதுல ரிஸ்க் இருந்தாலும், அடர்ந்த காடுகள் இல்லை. ஆனா, சபரிமலை அடர்ந்த காடு, மலை, பம்பை மாதிரியான காட்டாறுன்னு பல இடஞ்சல்களை சந்திக்கனும். அதில்லாம, இப்ப மாதிரிலாம் விரத நாட்களை அந்த காலத்தில் அட்ஜஸ்ட் பண்ணிக்காம 48 நாட்கள் மாலை போட்டிருப்பாங்க. பெண்களால் முடியாது. ஏன்னா மாதவிடாய் வரும். அதை தீட்டுன்னு சொல்லி ஒதுங்கினாலும், அந்த காலத்துல, உடலிலிருக்கும் சூட்டை குறைக்காம இருக்க, அந்த மூணுநாட்களில் பெண்களை குளிக்க விடமாட்டாங்க. மூணு நாட்கள் கழிச்சு எண்ணெய் தேய்ச்சு தலைக்கு குளிப்பதை வழக்கமா கொண்டிருந்தாங்க. ஆனா ஐயப்பனுக்கு தினத்துக்கு ரெண்டு முறை குளிச்சு பூஜை செய்யனும். அப்படி இருக்க பெண்கள் எப்படி பூஜை செய்வாங்க?! முடியாதுல்ல?!
அடுத்து, ஆரோக்கியமான குழந்தையை பெத்து தரவேண்டி, அந்த மூணு நாட்களில் பெண்களுக்கு பரிபூரண ஓய்வையும் சத்தான உணவையும் கொடுப்பது நம்ம வழக்கம். அப்படி இருக்க, காட்டுக்கு கூட்டிப்போனா அந்த புள்ளைக்கு எப்படி இதுலாம் கிடைக்கும்?! ஐயப்பன் பெண்வாசனையே ஆகாத ஆள் இல்ல. தன்னை விரும்பின மஞ்சமாதான்ற பெண்ணையே பக்கத்துல வச்சுக்கிட்டு, அந்தம்மாவை தரிசனம் செஞ்சப்பிறகுதான் தன்னையே தரிசனம் செய்யுமளவுக்கு பெண்களுக்கு ஐயப்ப வழிப்பாட்டில் முக்கியத்துவம் உண்டு. எங்கப்பாலாம் கிட்டத்தட்ட 35 வருசமா மலைக்கு போய்க்கிட்டு இருக்கார். பூஜைக்கான எல்லா வேலையும் எங்கம்மாதான் செய்வாங்க. மாலை தொடுப்பது முதற்கொண்டு அலங்காரம் செய்றது வரை நாந்தான் செய்வேன். அப்பா மலைக்கு போனால் நாந்தான் சரணகோஷம் பாடி இருவேளையும் பூஜை செய்வேன். அப்பா மலையேறும் நாளில் நாங்க இங்க படிப்பாட்டு பாடி, நைவேத்தியம் செஞ்சு அன்னதானம் செய்வது வழக்கம். இப்பதான் போன் வசதிலாம் இருக்கு, ஆனா எந்த வசதியும் இல்லாத அந்தகாலத்துலயே அப்பா தோராயமா மலையேறும் நாளை சொல்லிட்டுதான் போவார். அதனால், பெண்ணை ஒதுக்கி வச்சு பிரம்மச்சர்யம் காக்க சொல்லலை. பெண்ணோடு சேர்ந்துதான் பிரம்மச்சரியம் இருக்க சொன்னார் ஐயப்பன். நான் சின்ன வயசுல மலைக்கு போய் வந்துட்டேன். இனி தகுந்த வயசு வந்தபின் போவேனே தவிர, இப்ப போகமாட்டேன்.
ரொம்ப சந்தோசம். பெண்ணியம் பேசி நீயும் போவேன்னு சொல்வேன்னு நினைச்சேன்.
பெண்ணியம் பேசுறதுக்குன்னு தனி இடம் இருக்கு. மாமனார்முன் சேர்ல உக்காரக்கூடாது. மாமியார் முன் மாடர்ன் ட்ரெஸ் போடக்கூடாது. மச்சினர்முன் பாடக்கூடாது, கருத்து சொன்னா வீட்டுக்காரருக்கு எரிச்சல்ன்னு தன் திறமைகளை நாலு சுவத்துக்குள் மறைச்சு வச்சிருக்கும் பெண்களுக்கென நம்ம ஹலோ எப்.எம் வேலூர் கிளை சார்பா மகளிர் மட்டும் நிகழ்ச்சி நடத்துறங்க, அங்க போய் பெண்ணியம் பேசிக்குவேன்.
சமையல் போட்டி, அழகுப்போட்டி, மெகந்தி, மோனோ ஆக்டிங்க், சமையல், கோலம்ன்னு விதவிதமான போட்டி நடத்துறாங்க. எல்லா வயசு பெண்களும் கலந்துக்கலாம். முதல் மூன்று நபரை தேர்ந்தெடுத்து டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டின்னு பரிசு கொடுக்குறாங்க. எனக்கு இதுலாம் தெரியாதுன்னு சொன்னாலும் கலந்துக்கும் எல்லா லேடீசுக்கும் கிஃப்ட் பாக்கெட்டும், பம்பர் பரிசா ஸ்கூட்டி, டிவி, ப்ரிட்ஜ்ன்னு தர்றாங்க. கூடவே மதியம் சாப்பாடும் உண்டு. ஆண்களுக்கு நோ அட்மிஷன். அதனால் உங்க இம்சைலாம் இல்லாம எங்களுக்குன்னு ஹலோ எப்.எம் கொடுக்கும் இந்த நாளை திருவிழாவா கொண்டாட கிளம்பிட்டேன். இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேனே! கைவினை பொருட்கள்லாம் செய்யும் லேடீசுக்கு ஸ்டால் போட்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும் வாய்ப்பு தர்றாங்க. அதனால் வரும் சனிக்கிழமை வேலூர் போறேன் மாமா.
அம்மா தாயே! நல்லபடியா போய் வா! நான் நிம்மதியா ஒருநாளுக்கு இருப்பேன்.
இப்பதானே சொன்னேன். நிம்மதி வெளில இல்ல மனசுக்குள்ன்னு. நீயெல்லாம் என்ன சொன்னாலும் திருந்த மாட்டே. எப்படியோ ஒழிஞ்சு போ!
நன்றியுடன்,
ராஜி
சுப்பர் அவியல்...... நிம்மதிங்குறது நம்ம மனசுக்குள்ள தான் இருக்கு.........எம்மாம் பெரிய தத்துவம்/உண்மை......இத தேடித் தான் எல்லாருமே அலையுறாங்க......ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லிட்டீங்க,தங்கச்சி......கூடவே வேலூர் எஃப்.எம்.விளம்பரத்தையும் பண்ணியாச்சு.......கோ ஹெட்.........// நன்றி பதிவுக்கு.
ReplyDeleteஇல்லாத இடத்தில் தேடினா எந்த பொருளும் கிடைக்காதுண்ணே. அதுமாதிரி நிம்மதி நமக்குள்ளயே இருக்கும்போது வெளியில் தேடினா எப்படி கிடைக்கும்?!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
என்ன சகோ தத்துவம் பெரிய லெவலுக்கு போகுது... நல்ல கருத்துதான் எல்லாத்துக்கும் மனம்தான் காரணம்.
ReplyDeleteபழசை மறக்க முடியாமல்தான் நானும் வாழ்ந்துகிட்டு இருக்கேன்...
மறக்கும் மனதை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதில்லை.
நான்லாம் தத்துவம் சொன்னா சிரிச்சுப்புடுவீங்களே! இதுக்குதான் விளையாட்டுத்தனமாவே இருந்துட்டு போறது. அதனால்தான் என் வார்த்தைகளைலாம் தமாசுன்னு கடந்து போய்டுறீங்க.
Deleteஎல்லாமே கடந்து போவீங்க. சீக்கிரத்துலயே அண்ணி வருவாங்க. விவேக்-ரூபலா வாரிசாக... கவலைப்படாதீக
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் பாடல் நினைவுக்கு வருகிறது. சபரிமலை பற்றியும் நல்ல கருத்துகள். சுவையான அவியல்.
ReplyDeleteசன் டிவில வந்த தொடர்தானே! நினைவிருக்கு...
Deleteஅவியல் அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete