Monday, October 29, 2018

எமனின் நால்வகை கடிதங்கள் - ஐஞ்சுவை அவியல்

என்னடி!என்னிக்குமில்லாத அதிசயமா ரொம்ப நேரமா  கண்ணாடி முன் நின்னிட்டிருக்கே!? 

நரைமுடி அதிகமா இருக்கு மாமா! அதான் டை அடிக்கலாமா?! வேணாமான்னு பார்த்துக்கிட்டிருக்கேன்.

நாற்பது வயசுல நரைமுடி வர்றது சகஜம்தான், இதுக்கு பல காரணம் உண்டு. மரபுவழியா வர்றதுமுண்டு. பித்தம் அதிகமானாலும் நரைக்கும். ஓவர் டென்ஷன்லயும் முடி நரைக்கும். இப்பத்திய உணவுமுறை மாற்றங்கள், ஷாம்பு மாதிரியான செயற்கை ரசாயண  பொருட்கள், சுற்றுச்சூழல் பாதிப்புனாலயும் முடி நரைக்குது.


உன்னால ஏற்படும் டென்ஷனாலதான் முடி நரைக்குது போல! 

அடிப்பாவி1 என்னையே எல்லாத்துக்கும் குறை சொல்லு. நீ ஒழுங்கா முடியை பராமரிக்காம என்னைய ஏன் சொல்றே! வாரத்துக்கு ஒருநாளாவது எண்ணெய் தேய்ச்சு சீயக்காய் போட்டு தலைமுழுகனும். தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கனும். வெளில போகும்போது தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கனும். வீட்டுக்கு வந்ததும் தலைக்கு குளிக்கனும். அதிக காரமில்லாத மைல்ட் ஷாம்புவை யூஸ் பண்ணனும். 

சரி, இதுலாம் இனி சொல்லி என்ன பயன்?! அதான் நரைமுடி வந்திருச்சே மாமா! அதை கருப்பாக்க என்ன பண்ணலாம்ன்னு சொல்லு..

ஹேர்டை யூஸ் பண்ணுறது சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். டை பூசுன ஓரிரு நாளில் முடியின் அடியில் நரைமுடி தெரிஞ்சு அசிங்கப்படுத்தும். சிலருக்கு முடி காவி கலராகி அசிங்கப்படுத்தும்., அதனால், நாற்பது வயசு ஆனப்பின் நரைமுடி வர ஆரம்பிச்சா அதை அப்படியே விட்டா அதுவே நமக்கொரு அழகையும், மதிப்பையும் கொடுக்கும். ம்ஹும், எனக்கு முடி கருப்பாதான் இருக்கனும்ன்னு நினைக்குறவங்களும் சரி, சின்ன வயசுலயே முடி நரைக்க தொடங்குறவங்கலாம் இயற்கை முறையிலேயா முடியை கருப்பாக்கலாம்.

தேங்காய் எண்ணெயோடு சம அளவு எலுமிச்சை சாறெடுத்து தலைமுடியின் அடிவரை தடவி, மசாஜ் செய்து, அரைமணிநேரம் ஊற வச்சு அலசி வந்தா முடி கருமையாகும். அதேமாதிரி மருதாணி இலைகளை அரைச்சு பூசி வந்தாலும் முடி தன்னோட இயற்கை நிறத்தை பெறுவதோடு பளபளன்னும் பட்டுப்போல மென்மையாவும் இருக்கும். நெல்லிக்காய் வெட்டி காயவச்சி தே. எண்ணெயோடு போட்டு சூடேத்தி தடவி வந்தாலும் முடி கருப்பாகும். கறிவேப்பிலையை புளிச்ச தயிரோடு சேர்த்து அரைச்சு தலையில் தடவி வரலாம். வெந்தயத்தை ஊற வச்சு அரைச்சு தேய்க்கலாம்,. இல்லன்னா, முதல்நாள் நைட்டே ஊற வச்சு அந்த நீரை கொண்டும் அலசினா முடி படிப்படியா கருப்பாகும். நெய்யை, மண்டையில் படும்படி தேய்ச்சு அலசி வந்தாலும் நிறம் மாறும். தயிரில் ஊற வச்ச மிளகும் இளநரையை போக்கும். ஒரு கப் பிளாக் டீயில் ஒருஸ்பூன் உப்பு சேர்த்து மண்டையில் படும்படி தேய்ச்சு கழுவி வந்தாலும் இள நரை மறையும். 

நரைமுடிங்குறதை நினைச்சு வருத்தபடவேண்டியதில்லை. ஆனா, நமக்கு வயசாகிட்டு வருதுன்றதை புரிஞ்சு, நம்ம கடமையை சரிவர செய்யனும். ஏன்னா, நம் மரணத்தை உணர்த்தும் விதமா நால்வகை கடிதத்தை எழுதுறதா சொல்வாங்க. இது வயசாகி இறைந்து போறவங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். விபத்து மாதிரியான அகால மரணத்துக்கில்லை.  இதை உணர்த்தும் விதமா ஒரு கதை சொல்வாங்க.

அம்ரிதான்ற ஒரு ராஜாவுக்கு தன்னை மரணம் நெருங்கக்கூடாதுன்னு நினைச்சு எமதர்ம ராஜாவை நினைச்சு தவமிருந்தான்., சுவாமி! எனக்கு மரணமே நேரக்கூடாதுன்னு வரம் கேட்டான். பிறந்தவர் இறந்தே ஆகனும். அதனால் வேற வரம் கேள்ன்னு சொன்னாரு எமன். அதுக்கு அந்த அமிர்தா மரணம் என்னை நெருங்குவதை எச்சரிச்சு நீங்க எனக்கு கடிதம் போடனும்ன்னு சொன்னான். ஓகேன்னு எமனும் வரம் கொடுத்தார். அம்ரிதா தன் மனம்போன போக்கில் வாழ்ந்தான்.   வயசு ஆக, ஆக முடி நரைக்க ஆரம்பிச்சுது. அடுத்து பற்கள் ஒவ்வொன்னா விழ ஆரபிச்சுது. உங்களுக்கு வயசாகிட்டுது ராஜா. மரணம் உங்களை நெருங்குதுன்னு சொன்ன ராணியை அம்ரிதா கண்டிச்சான். பின் எப்பயும்போல, குடி, சூது, மாதுன்னு இருந்தான். ஒருநாளில் மூப்படைந்து நடக்க முடியாமல் போய்  உடல் முடங்கிபோனது. அனைவருமே அம்ரிதா இறக்கப் போகிறான் என நினைத்தனர். ஆனா, அப்போதும், அம்ரிதா தனக்கு மரணம் நெருங்க காலம் இருப்பதாக எண்ணி, சந்தோஷமாகவே இருந்தான். ஏன்னா, எமன் தனக்கு கடிதம் அனுப்புவார்ன்னு இறுமாப்பாவே இருந்தான். 

ஒருநாள் அவன்முன் எமன் வந்தான். நீ மரணிக்கும் நாள் வந்திடுச்சு. உன்னை அழைத்து போகவே வந்தேன்னு சொல்லி, அம்ரிதாமுன் நின்றான். அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே! நீங்க என்னை ஏமாற்றிவிட்டீர்கள், மரணம் என்னை நெருங்கும்முன் கடிதம் அனுப்புவேன் என எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என எமனை கடிந்துக்கொண்டான். அப்போது, எமன் அம்ரிதாவிடம், "நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவச்செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்துவிட்டாய். பின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய்? நான் இதுவரை உனக்கு 4 கடிதங்களை அனுப்பினேன். அவை அனைத்தையும் நீ நிராகரித்துவிட்டாய்" என்றார். "நான்கு கடிதங்களா?என அம்ரிதா கேட்க, ஆமாம்,  தலைமுடி நரைத்தது நான் அனுப்பிய முதல் கடிதம்.  பற்கள் முழுவதையும் இழந்தது நான் அனுப்பிய 2வது கடிதம்.  பார்வைதிறன் குறைந்து போனது நான் அனுப்பிய மூன்றாவது கடிதம்.   உடல் முடங்கி போனது நான் அனுப்பிய நான்காவது கடிதம். இதை எதையுமே உணராமல் இருந்தது உன் தவறுன்னு சொல்லி அம்ரிதாவை தன்னோடு எமன் அழைத்து சென்றான்.  இந்த கதைமூலமா நாமளும் நமக்கு கடவுள் கொடுக்கும் எச்சரிக்கையை புரிஞ்சுக்கிட்டு தன்னோட வயசுக்குண்டான கடமைகளை சரிவர செஞ்சா முதுமையை சிறப்பா கழிக்கலாம். அதேப்போல, மரணத்தையும் தைரியமா எதிர்கொள்ளலாம். வயதாவதென்பது சாபமல்ல வரம்ன்னு புரிஞ்சு செயல்படனும். வயசுக்கு தக்க பெருந்தன்மையோடு நடந்து ஆன்மீகத்துல நாட்டம் கொள்ளனும். தியானம், யோகான்னு செஞ்சு ரிலாக்சா இருக்கனும்.
வயசாகிட்டாலே பெருந்தன்மை வந்துராது மாமா. அதேமாதிரி ஆன்மீகத்துல நாட்டமும், யோகா,தியானம்ன்னு  செஞ்சாலும்  புத்தி வேலை செஞ்சுடாது. அதுக்கு உதாரணம் நடிகர் சிவக்குமார்.  கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக்கிட்ட சிவக்குமார்,  செல்பி எடுத்த ஒரு பையனோட செல்போனை தட்டி விட்டுட்டார். இதுதான் இன்னிக்கு ஹாட் டாபிக். தெரியுமா மாமா?!

நடிகர்களும் மனுசங்களேன்னு புரிஞ்சுட்க்கிட்டு அவங்களை என்னமோ பெரிய அவதார புருசங்கமாதிரி பீல் பண்ணி செல்பி எடுக்குறது, பாலாபிஷேகம் செய்றது நாக்குல கற்பூரம் ஏத்துறதுன்னு அட்ராசிட்டி பண்ணா இப்படிதான். அவங்களும் ரத்தமும் சதையுமான மனுசங்கதானே!? எங்க போனாலும் பிரைவசி இல்லாம ஆட்கள் சூழ்ந்தால் கடுப்பாகத்தான் செய்வாங்க.

உங்க வாதம் சரிதான் மாமா. ஆனா, சிவக்குமார் விசயத்துல அப்படி ஒதுங்கி போக முடியாது. ஏன்னா, யோகா தியானம் செஞ்சா உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் கிளாஸ் எடுக்கிறார். சினம் சார்ந்தோரை கொல்லும்ன்னு டிவில பேசுறார். ராமாயணம், மகாபாரதத்தை புட்டு புட்டு வைக்குறார். அப்பேர்பட்டவர், தான் சொல்ற மாதிரி நடந்து காட்டனும். அதைவிட்டு இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிட்டா ஊர் ஏசத்தான் செய்யும். புராணங்கள், இதிகாசங்களும், யோகா, தியானம்ன்னு எதும்  மாற்றத்தை கொண்டு வந்துராதுன்னு சிவக்குமார்தான் சரியான உதாரணம். உணர்ச்சிகளை அடக்கி வச்சா இப்படிதான் இடம் பொருள் ஏவல்ன்னு தெரியாம வெளிப்படும். அதைவிட சரிவிகிதமா  உணர்ச்சிகளை சமாளிக்க கத்துக்கனும்.

நீ சொல்றதும் ஒருவிதத்துல சரிதான். அந்த நேரத்துல என்ன நினைஇச்சாரோ! அது அவருக்கே வெளிச்சம். ரொம்ப பேசிட்டோம். இந்த மீமை பார்த்ததும்  என் சின்ன வயசு ஞாபகம் வந்துச்சு.  இன்னிக்கான கேள்வி .. GMT ( Greenwich Mean Time ) நேரத்திற்கும், IST ( Indian Standard Time ) நேரத்திற்கும் மணி அளவில் உள்ள வேறுபாடு எவ்வளவு.? யோசிச்சு சொல்லு. பார்க்கலாம்.
இதுலாம் ஈசி. இதுக்கு நான் எதுக்கு ?! எங்காளுங்க வந்து விடை சொல்வாங்க இருங்க.
என் மானத்தை வாங்கிடாதீங்க சகோஸ்

நன்றியுடன்,
ராஜி


20 comments:

 1. கோபத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல...

  அப்புறம் புதிர் என்றால் தான் விடை...!

  ReplyDelete
  Replies
  1. இதென்ன போங்காட்டம்?!

   Delete
 2. சுவாரஸ்யமான பதிவு. நரைச்சவங்களை எல்லாம் பயமுறுத்தி இருக்கீங்க!!!! சிவகுமார் வீடியோவும் இதில் சேர்த்துட்டீங்களா... ரொம்ப ஃபாஸ்ட்தான்!

  ReplyDelete
  Replies
  1. இயல்பா போய்க்கிட்டிருந்த வாழ்க்கை சூழலை கார்ப்பரேட் கம்பெனிகளின் வரவால் ஆன்மீகம், தியானம், யோகா, சித்தா அது இதுன்னு சொல்லி வாழ்க்கையை சிக்கலாக்கி வச்சிருக்காங்க. அதீதம்லாம் ஆபத்துலதான் போய் முடியும்ங்குறதுக்கு சிவக்குமார்தான் உதாரணம்.

   Delete
 3. சிவகுமாரின் தனிப்பட்ட குணம் எனக்கு இதுவரை பிடித்து இருந்தது. காணொளி கண்டதும் அவரது பிரசங்கம் அர்மில்லாதது என்று தோன்றுகிறது.

  அந்த நபர் செல்ஃபிதானே எடுத்தான் கொலைக்குற்றமா செய்தான் ?

  செல் உடைந்தால் அவனால் வாங்க முடியுமோ... என்னவோ... சிவகுமாரிடம் பணம் இருக்கிறது வாங்கலாம்.

  பணத்திமிர் இனி சிவகுமாரின் படங்கள் வெளியானால் தியேட்டரை புறக்கணிப்பேன்.

  எமன் கதை எல்லோருக்கும் பாடம் நல்லவேளை எனக்கு இன்னும் முதல் கடிதமே வரவில்லை...

  ReplyDelete
  Replies
  1. //செல்ஃபிதானே எடுத்தான் //- கில்லர்ஜி...எனக்கு என்னவோ அந்தப் பையன் செய்ததுதான் குற்றமாகத் தெரிகிறது. இருந்தாலும் பொது இடம்... நல்ல மனிதர் சிவகுமார் அவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாம்.

   இந்த செல்ஃபி மோகம் முதல்ல ஒழியணும் கில்லர்ஜி... இது எவ்வளவு ஆபத்தானது என்பதையாவது இந்த நிகழ்ச்சி உணர்த்தும். இதுனால ரயில், மலை, ஆறு போன்றவற்றில் இறந்தவர்களை எத்தனை முறை நாம் படிக்கிறோம்...

   Delete
  2. செல்ஃபி உயிருக்கு ஆபத்தானது என்பதை மறுக்கவில்லை நண்பரே... இருப்பினும் சிவகுமாரிடம் நான் இதை எதிர் பார்க்கவில்லை.

   Delete
  3. நெல்லை தமிழன் சகோ உங்க வாதம் தப்பு. நம்மை மாதிரியான ஆட்களை அனுமதி இல்லாம எடுப்பது தப்பு. ஆனா, செலிபிரிட்டின்ற போது அனுமதி வாங்க மாட்டாங்க. வாங்கமுடியாது என்பதே உண்மை. அடுத்து, அந்த பையன் சிவக்குமார் சாரை எந்த விதத்திலும் சங்கடப்படுத்தல. சிரிக்க சொல்லலை, கிட்ட போகலை, உரசலை. தூரமாதான் இருந்தான். அப்படி இருக்க சிவக்குமார் சார் செஞ்சது தப்புதான்

   Delete
 4. எமன் அனுப்பிய கடிதங்களாக வயதை உணர்த்திய முறை அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஒரு டிவி ஷோவில் இந்த கதையை சொன்னாங்கப்பா.

   Delete
 5. திருமிகு ராஜி மற்றும் திருகில்லர் ஜீ அவர்களுக்கு
  திரு சிவகுமார் அவர்கள் செய்தது தவறுதான் .
  அதேவேளையில் ,
  தன்னை பற்றி கூறும்போது "நான் முன் கோபம் அதிகம் கொண்டவன் " என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாரே ! (தாய் ,மனைவி ,மகள் சொற்பொழிவில் ..)
  தன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டால் சாப்பாடு சாப்பிடாமல் வீண் பிடிவாதம் செய்து தன் மனைவியை துன்ப படுத்தி இருப்பதாகவும் , முன் கோபம் தன் மிகப்பெரிய பலவீனம் என்றும் கூறியுள்ளார்.
  திரு சிவகுமார் அவர்கள் , தனக்கென்று ரசிகர் மன்றம் உருவாவதை தடுத்தவர்.
  அண்ணண் சிவகுமாரின் சுயநலமற்ற இந்த போக்கு எனக்கு பல தடவை குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . அதனால்தான் ரசிகர் மன்றம் என்பதை "கமல் நற்பணி இயக்கம் என்று பெயர் வைக்க சொல்லி இளைய சக்தியை வீண் விரயமாக்காமல் நல்ல நோக்கத்திற்கு திருப்பிவிட்டேன் என்றார் கமல்.
  திரையுலகில் கற்பு தவறாமல் ஒழுக்கத்தோடு நடப்பவர் .
  புகை மற்றும் மது வை தவிர்த்தவர் .
  இவை எல்லாம் திரை உலகிற்கு உள்ளேயும் வெளியேயும்
  இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக அமைபவை.

  அன்பான திருகில்லர் ஜீ அவர்களே
  - சிவகுமாரின் படங்கள் வெளியானால் தியேட்டரை புறக்கணிப்பேன-
  என்று கூறியுள்ளீர்களே ?
  அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறதே ?

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு... திரு. சிவகுமார் அவர்கள் ஒரு ஒழுக்கசீலர் என்பது நான் மட்டுமல்ல தமிழக மக்கள் பெரும்பான்மையானோர் அறிந்த விடயமே...

   அவரது பேச்சுகள் கேட்டு பிரமித்தவன் நான், தானொரு முன்கோபி என்று பிரசங்கம் செய்து விட்டு பிறரை கோபப்படுதல் தவறு என்று சொல்வது சரியல்ல என்று கருதுகிறேன்.

   "புறக்கணிப்பேன்" என்று சொன்னது தமாசுக்காக... நான் தியேட்டருக்கு போய் இரண்டு மாமாங்கம் ஆகி விட்டது நண்பரே...

   Delete
  2. அன்பான திரு கில்லர் ஜீ அவர்களே,
   தங்களின் விளக்கத்திற்கு நன்றி

   Delete
  3. திரை உலகில் புகை, குடி தவிர்த்தவரல்ல.

   ஒருத்தருக்கு அட்வைஸ் செய்யும்போது நாம அந்த தப்பை பண்ணாம இருக்கனும். அதான் இங்க விவாதப்பொருள். படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர்கோவிலா இருக்கக்கூடாது.. லட்சுமணன் ஒருநிமிசம் சினத்தை அடக்கி இருந்தா சூர்ப்பனகை மூக்கறுப்பட்டிருக்காது. அதேமாதிரி சீதை சினத்தோடு கடிஞ்சு சொன்ன ஒரு வார்த்தைக்காகத்தான் லட்சுமணன் ராமனை தேடி சீதையை காட்டில் தனியா விட்டு போனான். இதுலாம் பேசுறவர் கோவத்தை குறைக்கனும்..

   அன்பா பேசின வார்த்தைகள்லாம் நிக்காது. கோவமா பேசும் வார்த்தைகள் மட்டுமே நிக்கும். இது என் அனுபவ உண்மை, அதுமில்லாம, பக்குவமில்லாம இடம், பொருள் ஏவல் பார்க்காமகோவப்பட சிவக்குமார் ஐயாவுக்கு வயசு இருபத்து அஞ்சில்ல. யோகா, தியானம் செஞ்சு உணர்ச்சி கட்டுப்படுத்தலாம்ன்னு சொல்லிட்டு அவரே கோவப்பட்டு பிரயோசனமில்லை.

   அடுத்து, இப்பலாம் பொதுவெளியில் சிவக்குமார் ஐயா ஏடாகூடமாதான் நடந்துக்குறார். ஏதோ ஐடி கம்பெனில டன் கணக்குல காண்டம் கிடைச்சுதுன்னு சொல்லி மாட்டிக்கிட்டவர்தான் இவர். சிவக்குமார் சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்ல. ஆனா, அவர் உத்தமர், ஒழுக்கசீலர்ன்னுலாம் சொல்லாதீங்க. அவரும் நம்மை மாதிரியான சகமனிதனே!

   Delete
 6. எமனுக்கு ஒவ்வொரு கடிதம் போடறதுக்கும் இவ்வளவு வருஷம் எடுத்துக்குதா இல்லை அவங்க போஸ்ட் ஆபீஸ் சரியா நடக்கறதில்லையா? கேட்டுச் சொல்லுங்கள் ராஜி (உடனே... நான் கண்ணாடிதான்.. படித்ததை அப்படியே சொன்னேன்னு சொல்லிடாதீங்க)

  ReplyDelete
  Replies
  1. அவங்க போஸ்ட் ஆபீஸ் சரியாதான் இருக்கு. முன்னலாம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் நாற்பதில் முடி நரைக்க ஆரம்பிக்கும். அடுத்து 60ல பற்கள் விழும். எழுபதுல காது, கண்பார்வை மங்கும். 80ல நினைவு தப்பும். இப்படிதான் இருந்துச்சு. சில விதிவிலக்குகள் உண்டு. இந்த ஆர்டர் மாறும். ஆனா, இப்ப அப்படி இல்ல.

   Delete
 7. உங்களுக்குத் தெரியாததை கெட்டுத் தெரிந்து கொள்ளலாம் அதைவிட்டு எங்களிடம் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வது போங்காட்டம்

  ReplyDelete
  Replies
  1. உங்க அனுபவம் எனக்கு வருமாப்பா?! தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கலாம். தப்பில்லைப்பா

   Delete
 8. அருமையான அவியல்.......இள நரை/முது நரைக்கு தீர்வுகள் அருமை.எமன் அனுப்பிய கடிதம் புதிய சேதி,எனக்கு.....///சிவகுமார் குறித்து கருத்திட இஷ்டமில்லை./// நன்றி தங்கச்சி பதிவுக்கு......

  ReplyDelete
  Replies
  1. ஒரு முப்பது வயசுக்குள் நரை வந்திட்டா கவலைப்படனும். அதுக்கு மேலன்னா அப்படியே விட்டால்தான் பெருந்தன்மை. இது என் கருத்துண்ணே

   Delete