Tuesday, May 26, 2020

சுலபமாய் செய்யலாம் முறுக்கு வத்தல் - கிச்சன் கார்னர்

வெயில் காலம் வந்துட்டாலே வத்தல், வடாம் போடுறதுன்னு ஏக பிசி.  முன்னலாம் கஞ்சி வத்தல், முறுக்கு வத்தல், மாங்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், மோர் மிளகாய், தாளிப்பு வடகம்ன்னு  கோடை விடுமுறையில் பிசியாகிடுவேன். கஞ்சி வத்தல் ஊத்தும்போது அதில் ஒரு டம்ப்ளர் கஞ்சியை சுடச்சுட குடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம்லாம் போட்டு வாசமாய் அட்டகாசமாய் இருக்கும்..

இப்பத்திய பிள்ளைகள் லீவு விட்டாலே இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குதுங்க.  கால் எலும்பு முறிவினால் மாடிப்படிகட்டு ஏற முடியாததால் இந்த வருசம் வத்தல் போடலை. பாப்பாவை நம்பி கஞ்சி காய்ச்சவும் முடில. இந்த வருசம் கடையில்தான் வத்தல் வாங்கனும்போல!! இது போனவருசம் வத்தல் போட்டபோது எடுத்த படம்..  டிராஃப்ட்ல இருந்தது.. இப்ப பதிவிட உதவியது...

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு படி
பச்சை மிளகாய்-10
இஞ்சி - 25கிராம்
சீரகம்- 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசியை கழுவி 2 மணிநேரம்  ஊற வைக்கனும்.
இஞ்சியை தோல் சீவி, ப.மிளகாயை கழுவி விழுதா அரைச்சுக்கனும்...
ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் வச்சு, கொதிக்கும்போது அதில் பச்சைமிளகாய், இஞ்சி அரைச்ச விழுதை சேர்க்கனும்...
தண்ணி கொதி வந்ததும் அரிசியை கழுவி போட்டு, உப்பு போட்டு நல்லா வேக விடுங்க...
அரிசி வெந்து பொங்கல் பதத்திற்கு வந்ததும் பெருங்காயம் சேர்க்கனும்..
சீரகம் சேர்த்து நல்லா கிளறிவிட்டு அகலமான தட்டுகளில் போட்டு ஆறவக்கனும்...


 காட்டன் துணியை நனைச்சு முறுக்கு அச்சு இல்லன்னா  எண்ணெய் பாக்கெட் கவரில் போட்டு பிழிஞ்சுக்கனும். 
வெயிலில் காய்ந்ததும் மாலையில் பின்பக்கமா தண்ணி தெளிச்சு ஊறவிட்டு எடுத்து மறுநாள் வெயிலில் காய வச்சு டப்பாவில் எடுத்து வச்சுகிட்டா வருசக்கணக்கில் இருக்கும்..

தேவைப்படும்போது பொரிச்சு எடுத்து கிளறின சாதம், காரக்குழம்புக்கு தொட்டுக்கலாம். மாலை நேரத்துல நொறுக்காவும் சாப்பிடலாம்...

# எனக்கு குக்கரில் செய்ய பிடிக்காததால் பாத்திரத்தில் கிளறிக்கிட்டேன். குக்கரிலும் செய்யலாம்...

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. நல்லது. இலங்கையில் கொழும்பு மாடிக் குடியிருப்பு வாழ்க்கையில் இதெல்லாம் செய்ய முடியாது. ஆனால் பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது. பிறகு முயற்சிக்கலாம்.

    தங்கள் பதிவு தானாகவே வலை ஓலை வலைத் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    ReplyDelete
  2. அசத்தல்...!

    ஆமாம்... கொரியர் சர்வீஸ் ஆரம்பமாகி விட்டதா...?

    ReplyDelete
  3. முறுக்கு வத்தல் நல்லா வந்திருக்கு.

    எனக்கென்னவோ ஹீப்ரூ மொழியில் துணியில் எழுதினதுபோல உள்ள படத்துக்கு அடுத்த படம் 'சுட்டது' என்று தோணுது. உங்க வற்றல்தானா?

    ReplyDelete
  4. நன்றாய் வந்திருக்கிறது.  இந்த வருடம் நாங்கள் எந்த வத்தல் பக்கமும் போகவில்லை!  

    ReplyDelete
  5. நடத்துங்க.... எங்கள் வீட்டிலும் இந்த வருடம் குறைவாகத் தான் செய்தார்கள்.

    ReplyDelete
  6. ராஜி நல்லா வந்திருக்கு. நானும் இந்த வற்றல் போட்டேன்.

    கீதா

    ReplyDelete