Sunday, May 03, 2020

வரியில்லாத பாட்டும் ஹிட் அடிக்குமா?! - பாட்டு புத்தகம்

ஒரு பாட்டுன்னா என்ன வேணும்?! கவர்ந்திழுக்கும் இசை, காந்தர்வ குரல், அர்த்தமுள்ள வரிகள், ஆழமான கருத்துகள்.. இவை போதும் .   அட, எது இருக்கோ இல்லியோ பாட்டுக்கு இசையும் இசைக்கேத்த வரிகளும் முக்கியம். 


மரகதமணி என்னும் அதிகம் பிரபலமில்லாத ஒரு இசையமைப்பாளர் வரியே இல்லாம, வெறும் ஸ்வரங்களையும், நிவேதா என்ற ஒற்றை வார்த்தையையும் வச்சு ஒரு பாட்டை உருவாக்கி, ஹிட் அடிக்கவும் வச்சார்ன்னு சொன்னால் நம்ப முடியுமா?!

அழகன், நீ பாதி நான் பாதி, ஜாதிமல்லி, வானமே இல்லை.. படங்களுக்கு இசையமைச்சவர்தான் இந்த மரகதமணி. இந்த படமெல்லாம் ஹிட் அடிக்கலைன்னாலும் பாட்டுலாம் செம ஹிட். வரிகள் இல்லா பாட்டுன்னு முடிவு செஞ்சாச்சு.   பாட்டை ஹிட் அடிக்கனுமா?! அப்ப எஸ்.பி.பி பாடினால்தான் சரிப்படும்ன்னு சரியான முடிவெடுத்து பாட வச்சார்.  இந்த பாட்டை எஸ்.பி.பி அனுபவிச்சு பாடி இருப்பார். கொடுத்த ஸ்வரங்களை அட்டகாசமாய் பாடினது மட்டுமில்லாம, பாட்டின் ஒரே வார்த்தையான நிவேதாவை  குழைஞ்சு, குழைஞ்சு பாடி இருப்பார்.   டான்ஸ் ஆடி பாட்டை சொதப்பாம சின்ன சின்னதா கட்ஷாட்களால் பாட்டை சூப்பரா எடுத்திருப்பாங்க.  கௌதமியும், ரகுமானும் சூப்பரா இருப்பாங்க. 



நான் சங்கீத வித்வான் இல்லை; அதனால் ஸ்வரங்களை எழுத தெரில.  

திரைப்படம்... நீ பாதி, நான் பாதி
இசை: மரகதமணி
பாடியவர் : எஸ்.பி.பி’
எழுதியவர்: வாலி
நடிகர்கள்: கௌதமி, ரகுமான்

இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்?!

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. ரசனையான பாட்டு... கட்ஷாட்களால் பாரதிராஜாவை மிஞ்சிவிட்டதாக தோன்றும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. அனேகமா அதிகமான கட்ஷாட்களால் ஆன பாட்டு இதுவாதான் இருக்கும்.

      Delete
  2. பாடல் இப்பொழுதுதான் கேட்டேன் அழகிய காட்சிகளுடன் பாடல்.

    ReplyDelete
  3. இந்த காலத்தில் பாடல் வரிகள் என்று ஒன்று இருந்தும் புரியாமலும் அர்த்தங்கள் ஏதும்மில்லாமலே இருக்கின்றன..

    ReplyDelete
  4. இதற்கு முன்னாலேயே நினைத்தாலே இனிக்கும் படத்தில் எஸ் பி பியும் சுசீலாம்மாவும் பாடிய வரியில்லாத பாடலை மறந்துட்டீங்களா? "நானநன நனனா நனா நனனா நனா நனனா... நினைத்தாலே இனிக்கும்...". எம் எஸ் வி செம தூள் செய்ய எஸ் பி பி குரலும் சுசீலாம்மா குரலும் ஜாலம் காட்ட செம ஹிட் அடித்த பாடல் அது.

    ReplyDelete
  5. நல்ல பாடல். நிறைய முறை கேட்டிருக்கிறேன் - இப்போது தான் பாடல் காட்சியை பார்த்தேன்!

    ReplyDelete
  6. ஏற்கனவே கேட்டிருக்கிறேன்
    அருமையான பாடல்

    ReplyDelete