மோகன் படமா?! மைக் புடிச்சு பாடும் பாட்டு கண்டிப்பா இருக்கும். அப்படி ஒரு காட்சி இருந்தால் படம் ஹிட்ன்னு 80-90களில் சினிமா செண்டிமெண்ட்.. அந்த செண்டிமெண்ட் நல்லாவே வேலை செய்தது. பாட்டுக்காகவே மோகனின் படங்கள் ஹிட் அடித்தது. மொக்கை படமானாலும் மோகன் படங்களில் பாட்டு நல்லா இருக்கும். ஓரிரு பாட்டுக்கள் இல்ல எல்லா பாட்டுமே! மோகன்+இளையராஜா+எஸ்.பி.பி இந்த மூன்று பேரின் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒத்துப்போச்சு.
விளைவு, இன்று நாம் ரசிக்கும் 90களின் ஹிட் பாடல்களில் பெரும்பான்மையானது இந்த மூவரின் காம்பினேஷனில் வந்த பாட்டுதான். உதயகீதம்ன்னு ஒரு படம் ரேவதி, மோகன், லட்சுமின்னு நடிச்சது. இந்த படத்தில் எல்லா பாட்டுமே செம ஹிட். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம்... அதில் மானே தேனே கட்டிப்புடி பாட்டு குத்து பாட்டு ரகம். மூட் அவுட்ல இருக்கும்போதும், பயணத்தின்போதும் இந்த பாட்டை கேட்டால் மனசு லேசாகும்...
மானே! தேனே! கட்டிப்புடி..
மாமன் தோள தொட்டுக்கடி..
மல்லிக வாசனை மந்திரம் போடுது...
மன்மத வாசனை மய்யல தேடுது...
மல்லிக வாசனை மந்திரம் தேடுது..
மன்மத ராசனின் மய்யலை தேடுது...
மானே! தேனே! கட்டுப்புடி...
நாணல் பூவைப்போல உள்ளம் வாடிடுமே!
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே!
கோடைமேகம் போல உன்ன்னை தேடி வந்தேன்..
ஆசை வேகம்மீறும் சிந்து பாடி வந்தேன்..
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்..
மம்மதன் அள்ளி வச்சான்..
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்..
மம்மதன் அள்ளி வச்சான்..
ஆத்தோரம்?! காத்தாடுது....
காத்தோடு?! பூவாடுது..
பூவோடு?! தேன்பாய்து...
தேனோட?! தேன் சேருது..
அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா, வா, வா,,
மானே! தேனே! கட்டிப்புடி...
அன்னம்கூட தோற்கும் நடையாடுதடி...
ஏ! அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி..
காதல்வேதம் பாட, இன்று தேடி வந்தேன்...
மாமன் மேல ஆசைக்கொண்டு ஓடி வந்தேன்...
உள்ளத்த மெல்லத்தான் அள்ள வந்தால்
அம்மம்மா என்ன சுகம்?!
ஊரோரம்?! தோப்பானது..
தோப்போரம்?! நீரானது..
நீரோட?! நீர் சேருது...
ஆனந்தம்தான் பாடுது
கன்னம் கண்களில் சொன்னது என்னைடியோ!! வா!!வா!!
மானே!! தேனே!! கட்டுப்புடி...
சிலாகிக்க வைக்கும் வாத்திய கோர்வை, ஆழமான கருத்துகள், அட்டகாசமான வரிகள்ன்னு எதுமில்லைன்னாலும் ஒரு பாட்டை ஹிட் அடிக்க எஸ்.பி.பி குரல் போதும்.. பாட்டுக்கு இடையில் வரும் சின்ன சின்ன செல்ல சேட்டைகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது...
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்?!
படம்: உதயகீதம்
நடிகர்கள்: ரேவதி, மோகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
எழுதியவர்கள்: நா.காமராசன்
நன்றியுடன்,
ராஜி
அருமையான பாடல்... ரசித்த பாடல்...
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteஉதயகீதம் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும். குறிப்பாக மதர்லேண்ட் பிக்சர்ஸ் படம் என்றாலே இளையராஜா ஸ்பெஷல் கேர் எடுத்துக் கொள்வார் என்று தோன்றும்!
ReplyDelete