Friday, May 29, 2020

ஸ்ரீலட்சுமண சித்தர் சுவாமிகள் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

பொழுதன்னிக்கும் சாமி கும்பிட்டுக்கிட்டும், இறை உணர்வோடும், தரும சிந்தனையோடும் இருக்கும் இறை பக்தர்கள் நம்மில் பலர் உண்டு. இன்னும் கொஞ்சம் அதிகமான இறை பக்தியுடன் குடும்பத்தை விட்டு விலகி சாமியாராய் போனவர்களும் நம்மில் சிலர் உண்டு.  ஆனா, நம்மில் எத்தனை பேர்கள் சித்தர்களா மாறி இருக்கோம்?! அதென்ன பெரிய விசயமா ஓலைச்சுவடிகளை படிச்சு சித்து வேலைகளை கத்துக்கிட்டால் சித்தராகிடலாம்ன்னு பதில் வரும். ஆனால், அது முடியாது. ஏன்னா, பக்தர்கள்/சாமியார்களுக்கும் சித்தருக்கும் ஒரே வித்தியாசம்தான் இருக்கு. பலவாறாய் குழம்பி, இறைவனை காண முயன்று, கோவில் குளம் என இறைவனை தேடிக்கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்/சாமியார்கள். இறைவனை கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.  இறைவனை கண்டபின்  சித்தர்களுக்கு எங்கும் எதிலும்  இறைவனே! இறைவன் ஒருவனே என உணர்ந்ததால் பெரிதாய் இறைவழிபாட்டில்கூட அவர்கள்  அதிகமாய் ஈடுபடுவதில்லை. முடிந்தளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்துவிட்டு சதா சர்வக்காலமும் தான் உணர்ந்த இறைவனை நினைத்து கொண்டு தனிமையில் இருப்பர். 

அவ்வாறு இறைவனை உணர்ந்த சித்தர்களை பற்றி அதிலும் பாண்டிச்சேரி சுற்றிலும் வாழ்ந்த சித்தர்களை பற்றியும், அவர்கள் ஜீவ சமாதியான இடங்களை  பதிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில்,  இன்று ஸ்ரீலஷ்மண சுவாமிகள் ஜீவசமாதி கோவிலை பார்க்கப்போகிறோம். இது, புத்துப்பட்டு ஐயனார் கோவில் பின்புறம் நடந்து செல்லும் தொலைவில் சுமார் 300மீ தூரத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தை தரிசிக்கத்தான் கூகுளாண்டவர்கிட்ட வழி கேட்டால், அவர்   ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் திருக்கோவிலில் கொண்டு போய் விட்டுட்டார். நடப்பவை யாவும் நன்மைக்கே! நமக்கு ஒரு வாரம் பதிவு தேத்த ஒரு கோவில் கிடைச்சதுன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.  எல்லாம் அவன் செயல் அல்லவா?!


கடந்தவாரம்  தரிசனம் செய்த அய்யனாரப்பன் கோவிலுக்கு பக்கத்தில் உள்ள காட்டின்வழியாக 3 ஆள் உயரமுள்ள குதிரை சிலைகள், மற்றும் பல சிலைகளை தரிசித்து ,மலையாளத்தார் சன்னதியும் தரிசனம் செய்து ஒரு பச்சைபசேலென இருக்கும் மண் பாதைவழியே நடந்து சென்றால் நாம    ஸ்ரீலட்சுமண சித்தர் சுவாமிகள் ஜீவசமாதிக்கு வந்திடலாம். கோவிலின் பின்பக்கமாக கார் செல்லுமளவு நல்ல தார் ரோடு போட்டிருக்காங்கஇருந்தாலும் விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் இங்கு ஆட்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஒரு வனாந்திரத்தினுள் தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும். அதனால இந்த ஜீவசமாதிக்கு செல்லும் நேரம் காலை அல்லது அய்யனாரப்பன் கோவில் நடைதிறந்து இருக்கும் நேரம் செல்வது நலம்அதேசமயம் இங்கே பூபழம் எல்லாம் கிடைக்கும். நாங்க போனபோது இந்த சித்தரின் ஜீவசமாதிக்கு கொஞ்ச தூரத்தில் ஒரு வயசான அம்மா, கற்பூரம், எலுமிச்சைப்பழம், பூ பழம், வெற்றிலை பாக்குலாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. நாங்க சென்றிருந்த சமயம் நல்ல வெயில்காலமாக இருந்ததுஅன்று அந்த அம்மா வெயிலுக்கு இதமாக நல்ல சுவையான மோர் வச்சிருந்தாங்க அதையும் ஒரு பிடிபிடித்துக்கொண்டு சித்தரை தரிசனம் செய்ய சென்றோம். பக்தர்கள் எப்போதும் இந்த சமாதிக்கு தரிசனம் செய்ய வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒருவழியாக சித்தரின் சமாதிக்கு வந்து சிறிதுநேரம் ஓய்வெடுத்திருந்தோம் அதற்குமுன் யாரோ ஒரு பக்தர் மாலைகள்பூ ,பழம்லாம் சாற்றி சித்தருக்கு வழிபாடு செய்திருக்கிறார்போல! நாங்கள் சென்ற நேரம்சித்தர் மலர் அலங்காரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருந்தார். நாங்களும் அந்த பூ விற்று கொண்டிருந்த பாட்டியிடம், கற்பூரம், நெய் விளக்குலாம் வாங்கி, சித்தரின் சமாதியடைந்து விளக்கு, கற்பூரம்  ஏற்றி கும்பிட்டோம்எங்களுடன் வந்த சிலபேர் தேவாரம் படித்து எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். வழிபாடுகள் எல்லாம் முடிந்தவுடன் இந்த லட்சுமண சித்தர் சுவாமிகளின் வரலாறை ஒருவர் எங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்.

இந்த லட்சுமண சித்தர் சுவாமிகள் பிறந்த இடம் புதுச்சேரியில் உள்ள வழுதாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள சண்முகாபுரமாகும். இவருடைய அப்பா பெயர் பரமசிவன்.  அம்மா பெயர் யாருக்கும் தெரியவில்லை. இவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே வேலைகள் செய்வாராம். உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தாராம். நல்ல உயரமாக கருப்பான தேகத்துடன் வாட்டசாட்டமான இளைஞனாக வலம்வந்த லட்சுமண சித்தர் சுவாமிகளுக்குமுனியம்மாள் என்ற நல்மங்கையை பார்த்து மணம் முடித்து வைத்தனராம் இவரது பெற்றோர்கள். சிறுவயது முதலே அம்பாள்மீது அலாதி பக்திகொண்டவர் லட்சுமண சித்தர் சுவாமிகள். என்னவோ அவருக்கு திருமணவாழ்கை சரியாக அமையவில்லை போலும் திருமணவாழ்வு கசந்து இல்லறத்தின்மேல் நாட்டங்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி பெற்ற தாய்-தந்தையை மறந்து ,மனைவியை துறந்து மீனாட்சிபேட்டை அம்பாள் கோவிலிலே எல்லாநேரமும் அம்பாளை தொழுது கொண்டே இருந்தார். அவர்களது பெற்றோர்கள் எவ்வளவோ புத்திமதி சொல்லி அவரைவீட்டுக்கு அழைத்தனர். அவர் அம்பாளின் பாதகமலங்களே தஞ்சம் என்று கோவிலிலேயே இருந்துவிட்டார். யாராவது உணவு கொடுத்தால் வாங்கி சாப்பிடுவார்இல்லையெனில் சதா அம்பாளின் வழிபாடுகளிலேயே மூழ்கி இருந்தார் .

என்ன இருந்தாலும் அவருடைய சுற்றத்தார் அவரை திருமண வாழ்கைக்கு திரும்பச்சொல்லியும், கட்டிய மனைவியின் மனதை காயப்படுத்தாதேஆவலுடன் சென்று வாழ்க்கையை தொடங்கு என்று அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அதையெல்லாம் தொந்தரவாக கருதிய லட்சுமண சித்தர் சுவாமிகள்பெற்றோரையும் ,சுற்றத்தாரையும் விட்டு மரக்காணம் செல்லும் வழியில் இருக்கும் புத்துபட்டு எனும் இந்த ஊரில் உள்ள அய்யனார் கோவிலுக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டார். அவருக்கென்று யாரும் துணி எடுத்து கொடுப்பதில்லை. எங்கேயாவது சாக்குப்பைகள் கிடைத்தால் அதை தன் மேலாடையாக போற்றிக்கொண்டு தெருவில் சுற்றிக்கொண்டிருப்பர் . அதனால் அவ்வூரில் உள்ளவர்கள் அவரை  சாக்கு சாமியார்என்று அழைத்தனர் அங்குவரும் நாய்களுடன் பேசிக்கொண்டிருப்பார். தனக்குத்தானே பேசிக்கொள்வார். இல்லையெனில் அம்பாளின் நாமத்தையே உச்சரித்துக்கொண்டிருப்பார்.

திடீரென வானத்தில் ஏதோ கோடுகளை வரைவதுபோல் வரைந்து கொண்டிருப்பார். சதா அம்பாளின் பெயரைச்சொல்லி ஜெபித்துக்கொண்டிருப்பார். இவரது கோலத்தை பார்த்து சிலர் காசு கொடுப்பார்களாம். அதை கையால்கூட தொடமாட்டாராம். சிலசமயம் சிலரிடம் காசை வாங்கி விடுவாராம். பின்னர் அதிலிருந்து ஒரு காசை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அப்படியும் இப்படியுமாக திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருப்பாராம். பிறகு அப்படியே தூக்கி போட்டுவிடுவாராம் திடீரென கடைவீதிக்கு லட்சுமண சுவாமிகள் சென்றால் அங்கிருக்கும் கடைக்காரர்கள் சுவாமிகளின் பொற்பாதம் நம் கடையில் படாதா என்று ஏங்குவார்களாம். இவர் எந்த கடைகளுக்கு செல்கிறாரோ அந்த கடைகளில் அன்று நல்ல வியாபாரம் ஆகுமாம். சிலசமயம் ஏதாவது ஒருக்கடைக்குள் சென்று அவராகவே கல்லாப்பெட்டியை திறந்து காசை எடுப்பாராம். இல்லையென்றால் கல்லாவில் இருக்கும் ஒரே ஒரு காசை மட்டும் எடுத்து தெருவில் வீசி விட்டுச் சென்று விடுவாராம். லட்சுமண சுவாமிகள் எந்த கடையின் கல்லாவில் இருந்து காசையெடுத்து தெருவில் வீசுகிறாரோ அந்த கடையில் அன்று வியாபாரம் ஜோராக நடக்குமாம்.

இவரை தேடிவந்து பகதர்கள் தங்கள் குறைகளை கூறினால் அதை கூர்ந்து கவனிப்பாராம். பின்னர் பரிகாரம் சொல்லுவாராம். அவர் சொல்படி பரிகாரம் செய்பவர்களுக்கு அந்த குறை விரைவில் தீர்ந்துபோவதை அவரை நாடிவரும் மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தனராம். எப்பொழுதும் அம்பிகையை உபாசனம் செய்துகொண்டிருப்பதால் ,மக்கள் அவரை ஒரு மிகப்பெரிய மகானாகவே கருதி வழிபட்டனர். சிலசமயம் சுவாமிகள் இரவுநேரத்தில் ஐய்யனார் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பாராம், அந்த சமயத்தில் பக்தர்கள் யாராவது விழித்துக்கொண்டு பார்த்தால்சுவாமிகளின் தலைவேறு, உடல்வேறு..கால்கால்கள் வேறு என தனித்தனியாக கிடக்குமாம். அதைப்பார்த்து சிலர் சுவாமிகள் இறந்துவிட்டாரோ என அச்சப்படுவார்களாம். ஆனால் அடுத்த  நாள் காலையில் சுவாமிகள் நன்றாக நடந்து செல்வதை பார்த்து ஆச்சரியத்துடன் பார்ப்பார்களாம் தீடிரென எங்கேயாவது சுவாமிகள் நடந்து செல்வாராம். அப்படி நடந்து செல்லும்போது ,வாகனங்கள் வந்தாலும் சரி. சுட்டெரிக்கும் வெயில்,   கடும் மழை என எதையும் பொருட்படுத்தாமல் சாலியின் நடுவே மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பாராம். அது ஏன் என சுவாமிகளுக்கு மட்டுமே தெரியும் ,அதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு செல்வார்களாம். லட்சுமண சுவாமிகளின் பெருமையை அப்பகுதி மக்கள் எல்லோரும் நான்றாக அறிந்திருந்தனர்.

நாட்கள் இப்படியே சென்றது. லட்சுமண சுவாமிகளுக்கு,  தான் அம்பாளின் பாதத்தை அடையும் நேரம் நெருங்கி விட்டதை சுவாமிகள் உணர்ந்துகொண்டார். அதன்பிறகு சிலகாலம் யாருடனும் பேசாமல் புத்துப்பட்டு ஐய்யனார் கோவிலின் பின்புறம் உள்ள பத்மாசூரன் குளக்கரையின் அருகில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார். நாளடைவில் சுவாமிகளின்மேல் புற்று மண் வளர்ந்து சுவாமிகள் புற்றாகவே மாறி விட்டார். சுவாமிகள், 1947-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி சமாதியானார். இப்பொழுதுகூட நிறைய வெளியூர் பக்தர்கள் தினமும் இந்த ஜீவசமாதிக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். சிலர் இந்த ஜீவ சமாதியில் லட்சுமண சுவாமிகளுக்கு பிடித்த மலர் அலங்காரம் செய்து அவருக்கு பிடித்த பால் பாயாசத்தை வைத்து அமைதியாக அமர்ந்து தியானம் செய்து வழிபாட்டு செல்கின்றனர்

இப்பொழுதும் இந்த ஜீவசமாதியில்  அமர்ந்து தியானம் செய்யும்பொழுது மனதிற்கு அமைதியாக ஒரு சூழல் நிலவுவதை நம்மால் அனுபவபூர்மாக உணர்ந்துகொள்ள முடிகிறது .சிலர் தினசரி வந்து இங்கே விளக்கு ஏற்றி வழிபடு செய்கின்றனர். அதேபோல் சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு அருகில் இருக்கும் புற்றுக்கு அருகில் ஒரு பெரியவேப்பமரம் வளர்ந்து ஜீவசமாதிக்கும், அந்த புற்றிற்கும் நிழலாக இருக்கிறது.ஒருசமயம் மோசமான குணமுடைய ஒருவன் இந்த வேப்பமரத்தை அகற்றும் எண்ணத்துடன் வெட்டமுயன்றபோது மரத்தை வெட்டாதே என்று அசரீரி ஒலித்ததாம். அதை அந்த கயவன் பொருட்படுத்தவில்லை. அம்மரத்தின் கிளைகளை வெட்டினான்அந்த வெட்டிய கிளையோடு அவனும் அங்கேயே விழுந்துவிட்டான். விழுந்த அவனால் எழ முடியாமல் இரவு முழுவதும் அங்கேயே வீழ்ந்து கிடந்தான். மறுநாள் காலையில் அங்கே சென்ற வழிப்போக்கர்கள் சிலர் அவனது நிலையைக்கண்டு அவனுடைய இருப்பிடத்தை கேட்டு அவனுடைய வீட்டிற்கு கொண்டு சேர்ந்தனர் .சேர்ந்த சிலநேரங்களில் அந்த கயவனின் உயிர் பிரிந்தது. அவன் வெட்டிய மரத்துண்டுகள் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது பயன்படுத்தப்பட்டதாம் .

பாண்டிச்சேரி செல்லும் வாய்ப்பு இருப்பவர்கள் கட்டாயம் இந்த ஜீவ சமாதிக்கு சென்று சித்தரின் சமாதியை தரிசித்து அவரது ஆசிகளை பெறுங்கள். அதேப்போல் ஸ்ரீலஷ்மண சுவாமிகளின் அருட்சக்தியை கண்ணால் கண்டவர்கள் இன்றும் சிலபேர் உள்ளனர். அவரால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார்களாம். ஸ்ரீலஷ்மண சுவாமிகளின்  ஜீவசமாதி பீடத்தினருகில் அமர்ந்து மனமுருகி, உண்மையாய் வேண்டுபவர்களுக்கு நினைத்த நியாயமான காரியங்கள் நிறைவேறுகிறது என்று இங்கு வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். நாமும் அவரது ஜீவ சமாதியில் அமர்ந்து மனமுருகபிரார்தித்து சுவாமிகளின் திருவளருளை பெறுவோம்.

மீண்டும் அடுத்தவாரம் உங்களை வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியில் இருந்து சந்திக்கிறேன் . 

நன்றியுடன்

13 comments:

  1. நல்லதொரு இடம் பற்றி சொல்லி உள்ளீர்கள் சகோதரி...

    விளக்கமும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு இடம் மட்டுமல்லாமல் நல்ல அமைதியான சூழல் உள்ள இடம்,உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா ...

      Delete
  2. அடுத்த முறை பாண்டி செல்லும்போது பார்க்கவேண்டும் என்று குறித்துக்கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்றுவாருங்கள் அப்பா,அப்படியே சித்தருக்கு பூமாலையெல்லாம் வெளியிலையே வாங்கிக்கோங்க,சிலநேரம் அங்கே கடைகள் இருக்காது.

      Delete
  3. Replies
    1. //தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
      நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்//
      நான் செய்வது ஒன்றுமே இல்லை எல்லா நன்றியும்
      சித்தருக்கு மட்டுமே

      Delete
  4. தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா...

      Delete
  5. அறிந்து கொண்டேன்.   

    ReplyDelete
    Replies
    1. அறிந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா ..

      Delete
  6. நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    துளசிதரன்

    ஆஹா ராஜி நான் வழுதாவூர் சாலையில் தான் இருந்தோம். சண்முகாபுரம் அச்சாலையில்தான்..ஆனால் அங்கிருந்தவரை இந்தத் தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து அறிகிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

      Delete
    2. கீதாக்கா,இதுக்குதான் ஊருக்குள்ளே ஒரு ஆல் இன் ஆல் அழகு ராணி இருக்கணும்கிறது..இப்பயெல்லாம் கூகிள் மேப்பும் கையுமாக சுத்திகிட்டு இருக்கிறேன்.

      Delete