Saturday, May 02, 2020

தடங்கலுக்கு வருந்துகிறோம்-கிராமத்து வாழ்க்கை

மத்திய வயதினர் தன்னோட பால்யத்தில் அனுபவிச்சு, இப்பவும் நினைவில் ஆடும் நினைவுகளின் தொகுப்பே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...
கண்ணாடி வளையல்களை அணிந்த காலத்தில் கண்ணாடி வளையல்களை மட்டுமில்ல! உடைஞ்ச வளையல்களையும்கூட  சேமிச்சு வைப்போம். எதுக்கு?! விளையாடத்தான். உடைஞ்ச வளையலில் விளையாட்டா?! கையில குத்தாதான்னு இன்றைய தலைமுறையினர் யோசிப்பாங்க. அதான் நடக்காது.  உடைஞ்ச வளையல் துண்டுகளை ஒரு வட்டத்துக்குள் பரவலா கொட்டி அடுத்த வளையல் அசைக்காம எடுக்கனும். ஒருசில நேரத்தில் ஒரே கலர் வளையல்களும்,  ஒரே டிசைன் வளையலும் சேர்த்து ஜோடியா எடுப்பதும் நடக்கும். ஊருக்கு ஊர் விளையாட்டின் விதிமுறைகள் மாறும்.


தடங்கலுக்கு வருந்துகிறோம் இந்த வார்த்தையை இன்றைய பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஏன்னா, கொட்டும்  மழையிலும் துல்லியமா படம் வரும் எச்,டி அலைவரிசையில் டிவி பார்க்கும் தலைமுறை இது.  ஆனா,  ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் நாலு பாட்டை பார்க்குறதுக்குள் நாலு முறை இந்த அறிவிப்பை பார்த்து நொந்துபோன நாம் இதை மறக்கமுடியுமா?!  சேலைத்தலைப்பு போர்த்திய ஷோபனா ரவி, நெற்றிமுடியை வெட்டிய சந்தியா ராஜகோபாலன், பொட்டு வைக்காத ஃபாத்திமா(பாபு), அழகிய தமிழில் முன் நெற்றி வழுக்கையோடு வரதராஜன்  என செய்திகள் புரியலைன்னாலும் இவங்களை ரசிக்க டிவி முன்னாடி உக்காந்திருப்போம். ஒலியும், ஒளியும்,  செட்டுக்குள் நடந்த  ஹெரான் ராமசாமி நாடகமும்..மறக்க முடியுமா?!


அம்மா துணி துவைக்க ஏரிக்கு போகும்போது நானும் போவேன்., அம்மா துணி துவைக்கும்வரை தண்ணியில் ஆட்டம் . வரும்போது ஏரியில் இருக்கும் களிமண்ணை கொண்டு வந்து தண்ணி சேர்த்து குழைச்சு சொப்பு சாமான் செய்வோம். பொம்மை, கோவில், மாட்டு வண்டி செய்வோம். வீடியோவில் இருக்குற மாதிரிதான் நானும் செய்வேன். ஆனா, சக்கரம் நாலு இருக்கும். மாடு செஞ்சதில்லை. ட்ரெஸ், உடலெல்லாம் மண் அப்பிக்கிட்டு வருவேன். ஆனா, அம்மா திட்ட மாட்டாங்க. இப்பத்திய மம்மிகள் டோண்ட் டச் மண். அலர்ஜியாகிடும்ன்னு கத்துறாங்க.
திருவிழாக்களின்போது அம்மா மண்ணில் செஞ்ச சொப்பு சாமனை வாங்கி தருவாங்க. சில சமயத்தில் அலுமனிய சொப்பும் வாங்கி தருவாங்க. அப்பா சபரி மலைக்கு போய்வரும்போது திருச்செந்தூரிலிருந்து இந்த மர சொப்பு சாமான் செட்டை வாங்கி வருவார்.  சொப்பு சாமானைவிட அந்த பெட்டி ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு சாமானாய் தொலைச்சுட்டு வந்து அம்மாக்கிட்ட அடிவாங்குனதுலாம் மறக்கமுடியுமா?! சில்வர்லயும் இதுமாதிரி சொப்பு சாமான் வந்துச்சு. இப்ப சிகப்பு, மஞ்சள், ப்ளூன்னு நான் ஸ்டிக் சாமான் மாதிரியான சொப்பு சாமான் கிடைக்குது. என்னைவிட என் அம்மாக்கு இந்த மாதிரி சின்ன சின்னதான சொப்பு சாமான் மேல் ஆர்வம் அதிகம். இப்பயும்  வீட்டில் மண் சொப்பு சாமான் அம்மா வீட்டில் இருக்கும். 
லீவுக்கு ஊருக்கு எங்க  கழனிக்கு போகும்போது, அங்க இருக்கும் மரத்திலிருந்து இலையை பறிச்சு இந்த பீப்பியை  அண்ணா செஞ்சு தருவார்.  விசில் சத்தம் மாதிரியே இருக்கும். எத்தனை முயன்றும் எனக்கு செய்ய வரலை. இன்னிய வரைக்கும் செய்ய தெரியாது.

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி


10 comments:

 1. ஒளியும் ஒலியும் எல்லாம் பார்க்க காத்திருப்பு - மறக்கவே முடியாது...

  ReplyDelete
  Replies
  1. எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்து உக்காந்தால் சிக்னல் கிடைக்காது, ஆண்டனாவை திருப்புவாங்க. அஞ்சி நிமிசத்துக்கு பிறகு படம் வந்து நாலு நிமிசம் ஓடும். பிறகு தடங்கலுக்கு வருந்துகிறோம்ன்னு அறிவுப்பு வரும். அப்ப தூக்கி போட்டு டிவியை உடைக்கலாம்ன்னு தோணும். ஆனா, டிவி நம்முடையது இல்லியே!

   Delete
 2. ஒலியும் ஒளியும், சித்ரஹார், ஞாயிறு மதியம் பிறமொழித் திரைப் படங்கள், அந்த வரிசையில் வரும் தமிழ்ப்படம்...

  செய்தி வாசிப்பில் தமிழன்பனை விட்டு விட்டீர்கள்

  அப்புறம் ரேடியோ மெட்ரோ, ஸெகண்ட் சானல் ப்ரியா..

  ReplyDelete
  Replies
  1. பெயர் நினைவுக்கு வரலை சகோ.
   னேயர்களின் கருத்துக்களை கடிதங்கள் வாயிலாக படித்து பதில் சொல்லும் எதிரொலியில் வந்த கண்ணனும் மறக்கமுடியாதவர்

   Delete
 3. ஒளியும் ஒலியும் நினைவுகள் நன்று.

  சொப்பு - எங்கள் வீட்டில் கல்லில் இருக்கிறது - இப்பொழுதும் கூட.

  இனிமையான நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. என் அம்மா இப்பவும் இந்த சொப்பு சாமான்களை வாங்குறாங்க. சின்ன சின்ன மண்குவளைகளில்தான் தண்ணி குடிக்குறதே!

   Delete
 4. அருமையான நினைவுகளை அழகாக அசை போட்டுள்ளீர்கள்

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே அனுபவிச்சது சசோ

   Delete
 5. சிறு வயது நினைவலைகள் மனதில் வலம் வருகின்றன

  ReplyDelete
 6. சொப்பு மண்,அலுமினியம்,சைனா பிளாஸ்டிக் எல்லாம் இருந்தன கனாக்காவம். பூவரசம் இலை நம்ம வீட்டு அடுக்களைக்கு பின்புறம் இருந்தது செய்து ஒரே ஊதல்தான் :) இந்த இலையில் இடி சம்பல் வைத்து சுற்றி பாடசாலைக்கு எடுத்து செல்லவும் தருவார்கள்.பாடசாலையில் தரும் பணிஸ் உடன் தொட்டு சாப்பிடுவோம். ஹோர்லிக்ஸ் போத்தலில் தேனீர் எடுத்து செல்வோம்.:)

  இனிய நினைவுகள் தொடரட்டும் நாங்களும் மகிழ்கிறோம்.

  ReplyDelete