Monday, May 25, 2020

தாராவியினை இதே நிலையில் இருக்கச்சொல்கிறதா Slum Tourisam?!- ஐஞ்சுவை அவியல்

மாமா! டிவியில் கொரோனா பாதிப்பு பத்தி போடும்போது தமிழகத்தில் சென்னையில் அதிகமா பாதிப்பு இருக்குற மாதிரி, மும்பையில் தாராவியில் அதிகமா பாதிச்சிருக்குன்னு சொல்றாங்களே! தாராவின்னா இந்த நாயகன், காலா, காதலர்தினம், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துல வந்த  இடம்தானே! 

அதேதான் புள்ள! சூரியன் மறையாத நாடுன்னு பிரிட்டனை சொல்வாங்க. ஏன்னா, பிரிட்டனின் கொடிஉலகத்தின் எல்லா மூலையிலும் எதோ ஒரு நாட்டில் பறந்து சூரியனை பார்த்துக்கிட்டே இருக்கும். அதேமாதிரிதான் ஏதோ ஒரு நாட்டிலிருந்து சூரியனை  24 மணிநேரமும் தமிழன் பார்த்துக்கிட்டே இருக்கிறான்னு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்க. அந்தளவுக்கு உலகம் முழுக்க தமிழனின் கொடி பறக்கின்றது.  சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, அரபு நாடுகள்ன்னு தமிழகர்கள் பெருமளவில் இருந்தாலும்  ஒரே இடத்தில் இருப்பதில்லை. பரவலாய் நாடு முழுக்க இருப்பாங்க. உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கும்போது நம் இந்திய நாட்டிலும் தமிழன் கால் பதிச்சிருப்பாந்தானே?!    மகாராஷ்டிராவில் கொஞ்சம் அதிகமாவே தமிழன் கால் பதிச்சுட்டான்போல! மும்பையில் ஒரு குட்டி தமிழகத்தை உருவாக்கிட்டான். 
18ம் நூற்றாண்டு வரை மேற்கு வங்கத்தில் மான்க்ரூவ்  தீவுகளைப்போல தாராவியும் தீவாகத்தான் இருந்தது.  அப்ப, கோலின்ற மீன் பிடிப்பதை குலத்தொழிலாக கொண்ட  மக்கள் மீன்பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர்களால் கோலி-வாடா என இந்த இடம் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் இந்த இடம் பம்பாய் ஆனது. இங்கு 1887ல் தோல் பதனிடும் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்டது.   பம்பாய் நகரம் அசுர வளர்ச்சியடைய ஆரம்பித்தது.  உத்தர பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் எம்பிராய்டரி தொழிலும், குஜராத்திலிருந்து வந்தவர்கள் மண்பாண்ட தொழிலும், தமிழகத்திலிருந்து சென்றவர்கள் நெசவுத்தொழிலும் செய்தனர். கூடுதலாக ப்ளாஸ்டிக் மீள் உற்பத்தி தொழிலும் கன ஜோராக நடந்தது. 

 
பம்பாய் நகரின் அசுர வளர்ச்சி ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. பொதுவாக நகரங்கள் செழித்து வளரும்  அதேநேரம் கிராமப் பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது உண்மை.  மெட்ராஸ், கல்கத்தா, பம்பாயின் வளர்ச்சி கிராமத்து உழைக்கும் வர்க்கத்தை தன்பால் ஈர்த்தது. காரணம், நகரங்களின் வளர்ச்சிக்கு கட்டுறுதியான உடலும், கடுமையாய் ழைக்கும் ஆட்கள் தேவை. அத்தகைய ஆட்கள் கிராமப்புறங்களில் இருந்தார்கள் அவர்களை பல்வேறு ஆசைவார்த்தை காட்டி நகரங்கள் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 

பம்பாய் நகரத்தின் தேவையும், கிராமப்புறத்தில் உருவான வறுமையும், இயலாமையும், தமிழர்களை பம்பாயை நோக்கி போக வைத்தது. அன்றைய மெட்ராஸ் மாகானத்து மக்களே பெரும்பாலும் பம்பாய்க்கு புலம்பெயர ஆரம்பித்தார்கள்..  திருநெல்வேலி, வட ஆற்காடு, சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிழைப்புக்காக பம்பாயை நோக்கிச் பயணப்பட்டனர். அப்பதான் ஓடத்துவங்கிய ரயிலில் பலர் பயணப்பட்டனர். மீதி ஆட்கள் நடந்தே மும்பை சென்றனர். வந்தாரை வாழவைக்கும் சென்னை மாதிரி அன்றைய பம்பாய் வந்தவருக்கெல்லாம் வேலை கொடுத்தது.  ஆனா, தங்க இடம் கொடுக்கலை.  மீன் பிடி தொழில் சரிய தொடங்கியதால் மீனவர்கள் கோலி-வாடாவிலிருந்து வேறு இடம் நோக்கி நகர்ந்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சதுப்பு நிலப்பகுதியாய் இருந்த 7 தீவுகளில் குடியேற ஆரம்பித்தனர்.  அதுவே இன்று தாராவியாய் சுமார் 10 லட்சம் மக்களால் வளர்ந்து நிற்கின்றது. 
தாராவியிலிருந்து பம்பாயின் எல்லா பகுதிகளுக்கும் சீக்கிரத்துல போயிடலாம்ன்றது தொழிலாளர்களுக்கு வசதியா போச்சு. ஏர்போர்ட் 12கி.மீ,  நடந்து போற தூரத்துல 4 ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ன்னு இருக்குறதால பெருமளவில் தொழிலாளர்கள் இங்க இருக்காங்க.  வெறும் 100- 200 ச.அடியில்  தகரத்தால் ஆன வீடுகள்ன்னு 520 ஏக்கர் பரப்பளவில் தாராவி பறந்து விரிந்திருக்கு.  வீட்டுக்கொரு கழிப்பறை இல்லைன்னாலும் மிக்சி, கிரைண்டர், ஆப்பிள் போன்ன்னு எல்லா வசதியும் இவங்கக்கிட்ட இருக்கு.  ஒரு காலத்துல சீந்துவார் இல்லாம இருந்த கோலி-வாடா, தாராவியாய் மாறி மும்பையிலேயே நெருக்கடியான இடமாகிட்டுது. இங்க 100 சதுர அடிகூட பல லட்சங்களுக்கு விலை போகுது. அதுவும் கிடைக்கவும் மாட்டேங்குது. படிப்பு, பதவின்னு உயர்ந்தாலும் இந்த இடத்தைவிட்டு அவங்க இடம் மாறுவதில்லை.



வருசத்துக்கு 1பில்லியன் டாலர் அளவுக்கு முறைப்படுத்தப்படாத பொருளாதாரத்தை ஈட்டி தந்தாலும் உங்க உட்கட்டமைப்பு வசதியை யாராலும் செய்து தரப்படவில்லை. தரப்படவில்லை என்பதைவிட முடியவில்லை என்பதே உண்மை. இதற்கு காரணம் புறா கூண்டு சைசிலான வீடுகளும் வாழ்வாதார சிக்கல்களும், மறைவான அரசியலும்தான். நுகர்வு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகள் குறிப்பா ஐரோப்பியர்களுக்கிடையே slum tourismன்ற வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை கண்டு அவர்களை ரசித்து, பரிதாபப்பட்டு, வியந்து, உதவி... தங்களது ஆன்மாவை திருப்திப்படுத்திக்கொள்கின்றனர். வறுமையுடனான மக்களின் போராட்டத்தை ‘உண்மையில் ஏழைகள்தான் மகிழ்ச்சியாக இருக்காங்க’ன்னு  தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொள்ள இல்லன்னா நாம எவ்வளவோ பரவாயில்லைன்னு  திருப்திபடுத்திக்க்குறதுக்கோ இந்த சேர் சுற்றுலாவை  தேர்ந்தெடுக்கிறாங்க.  தாராவி மக்களுக்கு பொருளாதார ரீதியாய் உதவினாலும் அவர்களின் வறுமையை, சுகாதாரமின்மையை ஊக்குவிக்குற மாதிரி இருக்குன்னு சமூக ஆர்வளர்கள் சொல்றாங்க. இங்கு நடக்கும் உள்ளடிகளை வச்சுதான் நாயகன் படம் எடுத்தாங்க. 

அவரை பத்தி சொல்லேன் மாமா! இப்பவே பதிவு நீண்டு போச்சு. அவரது வரலாறை இன்னொரு நால் பதிவில் பார்க்கலாம்.. 

சரி, இந்த mpl கேம்ன்னா என்ன  மாமா?!

எதுகு கேக்குறே புள்ள!?

டிவியில்  ஒருபையன்  தான் இஞ்சினியர் படிச்சுட்டு வேலையில்லாம வீட்டில் இருக்கும்போது இந்த கேமை விளையாடி 50,000வரைக்கும் ஜெயிச்சதாவும் வீட்டுக்கு ஹெல்ப் பண்ணதாவும், அந்த விளையாட்டை யார் வேணூம்ன்னாலும் விளையடாலம்னு சொல்றான். இன்னொரு பையன் இந்த கேமை விளையாடி 40000வரை ஜெயிச்சு பிரண்ட்ஸ்கூட செலவு செஞ்சதாவும் ராயல் என்ஃபீல்ட் வாங்கனும்ன்ற தன் ஆசை இதாலதான் நிறைவேற போகுதுன்னு சொல்றான். அதான், நாமளும் விளையாடி சம்பாதிக்கலாம்ன்னு கேட்டேன்..
முன்னலாம் பொழுது போகதாயம், பல்லாங்குசின்னு விளையாடுவோம். இந்த டிஜிட்டல் உலகில் கூட சேர்ந்து விளையாட ஆள் இல்லாததால் வீடியோ கேம் வந்தடு. அதுவே வளர்ந்து மொபைல், கம்ப்யூட்டரில் ஆங்கிரி பேர்ட், டெம்பிள் ரன், கேண்டி கிரஷ்ன்னு வளர்ச்சி அடைந்தது., இப்ப அதோட லேட்டஸ்ட் வெர்ஷந்தான் இந்த mpl, ஆன்லைன் ரம்மி மாதிரியான விளையாட்டுகள்.  பணத்தை காட்டி   விளையாடும் எந்த விளையாட்டும் சூதுதான். இதுலாம் விளையாடுவது தப்பு. 


சின்ன வயசு பசங்களின் ஆசையை தூண்டி கோடிகோடியாய் பணத்தை குமிக்குறதுக்கு பேரு ரியல் மணி கேம். இதோட விவரத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம். முன்னலாம் வீட்டில் தாயம் விளையாடுவதையே  சில் பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. ஏன்னா அது விளையாடியதால் தருமன் தோற்றான். நாடு நகரமிழந்தான். தம்பி, மனைவியை அடமானம் வைத்து, திரௌபதி துகில் உறியப்பட்டாள்ன்னு சொல்வாங்க.  ஆனா, இப்ப தினத்துக்கு ஆன்லைன் சூதை விளையாடச்சொல்லி நடுவீட்டில் நின்னு தமன்னா, வீராட் கோலி மாதிரியான பெரிய ஆளுங்க கூப்பிடுறாங்க. இந்த விளம்பரத்தால் இஞ்சினியரிங் படிச்சா வேலை கிடைக்காது. வேலை இல்லன்னாலும் இந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடி சம்பாதிச்சு ஜாலியா இருக்கலாம், வேலைக்கு போறதைவிட இதுல அதிகமா சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்துக்கிட்டே அதுவும் விளையடிக்கிட்டே சம்பாதிக்கலாம்ன்ற மாதிரியான  தப்பான அபிப்ராயத்தை உண்டாக்கும். எனக்கு தெரியாம எதாவது விளையாடி, எதாவது சிக்கலை இழுத்து விடடுக்காத. 

சரி அந்த கேமை விளையாடலை. ஆனா, இந்த விளையாட்டை விளையாடவா?!
இது விளையாட யாருக்குதான் பிடிக்காது., வேணும்ன்னா சொல்லு நானு, உன்னோடு வந்து விளையாடுறேன்.   என்ன ஒன்னு இந்த விளையாட்டின் ஒரே விதி பாப்பாக்கு பல் முளைச்சிருக்கக்கூடாது. பல்லு இருந்தால் விரல் துண்டாகிடும்.  

ஆமா மாமா! எந்த விசயத்திலும் ஆம்பிளைங்களுக்கு பயம் வந்தால் எதுவா இருந்தாலும் அப்படியே கைவிட்டுடுவாங்க. ஆனா, பொம்பளைங்களுக்கு பயம் வந்தால் தப்பா எதுவும் நடந்துடக்கூடாதுன்னு முன்னைவிட பலமா இறுக்கமா பிடிச்சுப்பாங்க. இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம். அது வண்டியிலும் தொடரும், கீழ விழுற மாதிரி இருந்தால் ஹாண்டில்பாரை விட்டுட்டு கீழ குதிக்க பார்ப்பாங்க. ஆனா, பொண்ணுங்க, முன்னைவிட ஆக்சிலேட்டரை முறுக்குவாங்க. அப்படி முறுக்கித்தான் ராஜி கீழ விழுந்தாளம். அவ அப்பா சொன்னாரு. இந்த வீடியோவை பார்க்கும்போது அவ நினைவுதான் வந்துச்சு.  இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இருங்க. நான் போய் சாப்பாட்டு வேலையை ஆரம்பிக்குறேன்..
நன்றியுடன், 
ராஜி

16 comments:

  1. தாராவி பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உள்ளடி வேலைகள் நிறைய இருக்கு. ஆனா, அவற்றையெல்லாம் சொன்னால் அரசியல் பதிவாகிடும் . அரசியல் அலர்ஜி என்பதால் தவிர்த்துட்டேன்

      Delete
  2. தாராவி பற்றிய தகவலுக்கு நன்றி...

    "சூப்பர் - காலா" சென்று அனைவரையும் மீண்டும் காப்பாற்றுவதாக - அடுத்த கதை என்று கேள்விப்பட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. காலா முதல் பகுதியையே பார்க்கலை...

      டிவியிலும் இன்று காலா படம்தான் போட்டிருக்காங்கண்ணே.

      Delete
  3. காணொளியில் அந்தப் பெண்ணிற்கு எப்படியெல்லாம் அடிபட்டு இருக்குமோ...? இருந்தாலும் உடனே எழுந்து நடக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. அதான் மனசே ஆறலைண்ணே. வீட்டு சுவத்திலெல்லாம் ஏறி விழுந்துச்சு. அதுக்கு ஒன்னுமே ஆகல. ஜஸ்ட் நேருக்கு நேர் மோதி கீழ விழுந்தேன். அதுக்கே கால் பணால்.

      Delete
  4. தாராவி - நிறைய அரசியல். அதில் நம்மவர்களும் புகுந்து விளையாடுவார்கள்.

    இன்றைய தொகுப்பில் இருந்த அனைத்தும் நன்று. குழந்தையுடன் விளையாடுவது சிறப்பு.

    ஸ்கூட்டி ஓட்டும் பெண் பாவம்! தனபாலன் சொன்னது போல எப்படியெல்லாம் அடிபட்டு இருக்குமோ? அதில் பின்னால் வரும் சிரிப்போலி - கேட்டாலே பிடிக்காதது - பல காணொளிகளில் இந்த சிரிப்பொலி தான் சேர்க்கிறார்கள். அடுத்தவர்களின் வேதனையில் சிரிப்பது என்ன ட்ரெண்டோ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இந்த சிரிப்பொலி கேட்டாலே எரிச்சல் ஆகும்.

      குட்டியூண்டு பாப்பா வாயில் நான் தட்டி விளையாடுவேன். கன்னத்தை சுருக்கி, மூக்கை விரிச்சுன்னு பாப்பாவை படாத பாடு படுத்துவேன். அதுக்கே என்னைய கண்டா குழந்தைகள் வராது

      Delete
  5. தாராவி பற்றி அறிந்தோம்.
    கேம் விளையாட்டுகள் மனிதனை அடிமையாக்குகின்றன.
    அடிபட்ட பெண் பாவம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்துல ஆங்கிரி பேர்ட், கேண்டி கிரஷ்ன்னு இருந்தவதான் நானும்.. ஆனா, அதை தாண்டி முன்னேறியதில்லை.. இப்பத்தைய பிள்ளைகள் பப்ஜி விளையாடுதுங்க. அதுவே ஆபத்துன்னு சொல்லும் வேளையில் ஆன்லைன் ரம்மி, எம்.பி.எல் மாதிரியான சூது விளையாட்டுகள் நடுவீட்டுக்கே வந்து ஆசைக்காட்டி இளைஞர்களை புதைகுழிக்குள் இழுக்கிறது.

      Delete
  6. தாராவி பற்றிய பல அறியாத செய்திகளை அறிந்தேன்
    நன்றி சகோதரி

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அறியாத பல தகவல்கள் இருக்குண்ணே. 1400 பேருக்கு ஒரு கழிவறைன்னு இருக்காம். பெரும்பான்மையான மக்கள் பொதுவெளியில், ரயில் தண்டவாளங்களில்தான் மலம் கழிக்கிறார்களாம். இருக்கும் கழிவறைகூட சுத்தமாய் இருக்காதாம்.. இப்படி நிறைய பதிவில் சொல்லாமல் விட்டவை ஏராளம்ண்ணே

      Delete
  7. பால் தாக்கரே கூட தாராவியின் அருகில்தானே குடியிருந்தார்! எத்தனை லட்சம் கொடுத்தாலும் தாராவியைவிட்டு வெளியேற அங்கிருப்பவர்கள் தயாரில்லை என்னும்போது அரசாங்கம்தான் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
    Replies
    1. நகரத்தின் மையத்தில் இருப்பது அங்கிருப்பவர்களுக்கு வசதியா போயிட்டுது. ஏர்போர்ட், ரயில் நிலையம், பேருந்து நிலையம்ன்னு நகரின் எல்லா மூலைக்கும் போக வசதின்னு இருக்கும்போது அந்த இடத்தை விட்டுவர எப்படி மனசு வரும்?!

      Delete
  8. ஐஞ்சுவை அவியஸ் ஸ்வாரசியம். தாராவி பற்றி அறிந்து கொண்டேன்.

    துளசித்ரன்

    ராஜி இந்த தாராவி எத்தனை படங்கள்ல வந்திருக்கு. தாராவி பற்றி எங்க மும்பை உறவுகள் சொல்லிக் கேட்டிருக்கேன். வீடியோ ப்ளே ஆகலையே என் நெட் பிரச்சனை போல...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. லாக் டவுனில் பயன்பாடு 200% அதிகமாம்! அதான் பல இடங்களில் படுத்துது...

      Delete