மாயாவி படத்தில் ஒரு காட்சி வரும். அவனவன் சிம்ரன் படத்தைதான் மூணு மணிநேரம் பார்ப்பான். நான்லாம் சிம்ரன் போஸ்டரையே மூணு மணிநேரம் பார்ப்பேன்னு... அந்த மாதிரிதான் நானும் கார்த்திக் போஸ்டரையே மூணு நாள் பார்த்துக்கிட்டிருப்பேன். அப்பேற்பட்ட ஆளுக்கிட்ட இந்த பாட்டு சிக்கலாமோ!!?? சிக்கிடுச்சு. முன்னலாம் ரீல் அந்துபோகும், சிடி தேஞ்சு போகும். இல்லலாம் எத்தனை தடவை ரிப்பீட் ஆனாலும் கவலை இல்லை. டிவில டேட்டா கனெக்ட் செஞ்சு யூட்யூப்ல ஒருநாள் முழுக்க கேட்டும் பார்த்தும் அளுக்கலை. ஆனா டேட்டா காலியாகுதேன்னு டவுன்லோடி ரிப்பீட் மோடுல போட்டுவிட்டு வீட்டில் சிறுசுங்கக்கிட்ட திட்டு வாங்கியும் ஆஃப் பண்ண பாடில்லை..
மாமன் மச்சானுக்கிடையே ஈகோ பிராப்ளம். ரெண்டு குடும்பத்து வாரிசும் லவ் பண்ணி அதை பகை போக்க பார்க்குது. இதான் படத்தோட ஒன்லைன் கதை. சின்ன தம்பி படம் வந்த காலக்கட்டம். செண்டிமெண்டா மூணு அண்ணன் தம்பிங்க குடும்பத்து பெண்ணாக குஷ்பு.. இந்த படத்தில் எல்லா பாட்டும் ஹிட். அதிலும் ஆறடி சுவருதான் பாட்டுதான் அப்ப செம ஹிட். 12 படிக்கும்போது வந்ததால் படம் பார்க்க கூட்டிப்போகல. பாட்டு புத்தகம் வாங்கி மறைச்சு வச்சிருந்தேன். இத படத்தின் இந்த ஸ்டில்தான் போஸ்டரா ஒட்டினாங்க. இந்த ஸ்டில் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டுல இந்த சீன் 2.56 நிமிசத்துல வருது. இப்ப ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கேன்.
வீட்டுக்கு தெரியாம சந்திக்கும்போது காட்டுல சந்திக்கும்ப்போது டமால் டுமீல்ன்னு இசையோடும், வேறவேற லொக்கேஷன்ல பாட்டு இல்லாம மனசை கவர்கிறமாதிரி மெல்லிசா தபேலா இசையும், பாட்டு முழுக்க புல்லாங்குழலோ இல்ல ஷெனாயோ வாசிக்கவிட்டு சூப்பரான பாட்டு. ஆனா, ஆறடி சுவருதான் பாட்டோட ஹிட்டால இந்த பாட்டு அவ்வளவா எடுபடாம போச்சு.
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்..
ஒன்ன தாக்குது.. கேட்குது.. பூக்குது ஆசைதான்
பிறக்குது சபலம், சபலம்..
கொடுப்பது சுலபம், சுலபம்..
மனக்காயங்கள் ஆறாதோ காதலால்தான்..
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்....
கல்லூரி வாசலிலே, நட்டு வைத்த காதல்விதை...
காயாகி கனிந்துவரும்
காலமுள்ள காலம்வரை...
கல்யாண பந்தலுக்கு காத்திருக்கு வாழை இது
கண்ணா உன் கையணைக்க
பூத்திருக்கும் வாழை இது..
சிங்காரமேனிதான் சொக்க வெள்ளி பாற்குடம்..
சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்...
எப்போது ஆரம்பம் அந்தப்புற நாடகம்?!
ஏனிந்த காமமோ என்ன சொல்ல காரணம்?!
காத்திரு கண்ணே! கொடி நாட்டலாம் ஓய்!!
ஒரு போக்கிரி ராத்திரி...
என்னோடு நீயிருந்தால்
நெஞ்சுக்கொரு நிம்மதிதான்
இல்லாமல் தனித்திருந்தால்
அம்புப்பட்ட பைங்கிளிதான்..
எப்போதும் என் மனது
உன்னைச்சுற்றி கோலமிடும்..
தன்னந்தனி என்றிருந்தா
தத்தளித்து ஓலமிடும்...
என் கூந்தல் வேண்டுது.. உன்னோட பூச்சரம்..
எந்நாளில் கைவரும் உன்னுடைய மோதிரம்?!
என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்..
பார்த்தாலும் தீருமோ உன்னழகு நூதனம்..
காதலால் கூவும் ஒரு பூங்குயில் ஹோய்
பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில் ஹோய்
ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பாவைதான்..
இந்த பாட்டை எழுதும்போது வாலிக்கு 60வயசுக்கு மேலயாம்!! கார்த்திக்கும், குஷ்புவும் செம அழகு இந்த பாட்டில்... ஆனா, குஷ்பு அக்கா மூஞ்சில இன்னும் கொஞ்சமா ரூஜ்ஜை தடவி இருக்கலாமோ?! ஓவர் மேக்கப்டா சாமி. கார்த்திக்கு எஸ்.பி.பி விட மனோ, மலேசியா வாசுதேவன் குரல்தான் மேட்சா இருக்குறதா எனக்கு தோணுது..
படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
நடிகர்கள்: கார்த்திக், குஷ்பு
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
நன்றியுடன்,
ராஜி
எங்கே காணொளி காணாம்...?
ReplyDeleteமொபைல்ல பார்த்தீங்களோ!? எனக்கும் மொபைல்ல தெரில.
Delete√
ReplyDeleteஇந்தப் பாடல் அவ்வளவாகக் கேட்பதில்லை!
ReplyDeleteஆறடி சுவரில் அடிப்பட்ட பாட்டு இது
Deleteஇன்னைக்கு காணொளி வந்திருக்கு...!
ReplyDeleteகாணொளி எனக்கு கணினியில் இணையம் பிரச்சனை
ReplyDeleteஅலைபேசியில் தெரியவே இல்லை.
இந்தப்பாட்டு கேட்டதாகவே ஞாபகமில்லையே சகோ.
எனக்கு தெரியாமல் நாட்டுல நிறைய நடக்குது போலயே...
ஆமாண்ணே. நமக்கு தெரியாம பல விசயங்கள் நடந்துக்கிட்டுதான் இருக்கு
Deleteநல்ல பாட்டு. கேட்கிறேன்.
ReplyDeleteகேளுங்கண்ணே
Deleteபாடல் கேட்கவில்லை.
ReplyDeleteஇந்தப் பாட்டு கேட்டதே இல்லை...படமும் தான்...கேட்கிறேன் ராஜி...இணையம் சரியா இருக்கறப்ப..
ReplyDeleteகீதா
பாட்டு கேட்காதது ஓகே. ஆனா இந்த படத்தை போயி தெரிலைன்னு சொல்லிட்டீங்களே கீதாக்கா,
Deleteநல்ல பாட்டு. பிடித்த இடைக்கால பாடல்கள் எவ்வளவ கேட்டாலும் அலுப்பதில்லை.
ReplyDeleteஎன்னைத் தேடி...
https://vazhkai-oru-porkkalam.blogspot.com/2020/05/ennaith-thedi.html
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஉங்களைத்தேடி விரைவில் நான் வருகிறேன்...