Monday, April 02, 2012

மம்மி பிங்க் கலர்- ஐஞ்சுவை அவியல்

                                           
  மனக்காயம்....,
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் மீது பொறாமை கொண்ட மத வேசதாரிகள், அவர் மீது பொய்யான குற்றஞ்சாட்டி, பிலாத்து மூலம் சிலுவையில் அறையச் செய்தனர். இயேசு கிறிஸ்துவோ அவர்களை மன்னித்தார்; உலக மக்களின் மீட்புக்காக சிலுவையில் உயிர் நீத்தார்.சிலுவையில் அறைந்த பொழுது அவருடைய கை, கால்களைப் பிணைத்து ஆணி அடித்தனர். அதனால் நான்கு காயங்களும், பின்னர் விலாவில் ஈட்டியால் குத்தியதால் ஒரு காயமும் ஏற்பட்டது. இவை ஐந்தும் "திருக்காயங்கள்' எனப்படும். இவை உடல் சார்ந்த காயங்கள். 

ஆனால் இயேசுவுக்கு உள்ளம் சார்ந்த மனக் காயங்களும்கூட உள்ளன. அவை எவை? புனித மத்தேயு நற்செய்தியை வாசிப்பதன் மூலம் இதை நாம் உணரலாம். அதிகாரம் 25-இறை வசனங்கள் 42, 43, 44-ஐப் பாருங்கள்.

""நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன்; எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை. அன்னியனாய் இருந்தேன்; என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன்; என்னை உடுத்தச் செய்யவில்லை. நோயுற்றும், சிறையிலும் இருந்தேன்; என்னைப் பார்க்க வரவில்லை''.ஆம்! பசி, தாகம், அன்னியத்தனம், ஆடை இன்மை, நோய் ஆகிய இவையே நாம் கண்டு கொள்ளாத ஆண்டவருடைய ஐந்து மனக் காயங்கள்!

பசிக்கு உணவுதான் தீர்வு. பசி, இயற்கையின் தூண்டல். நம்மை உழைக்க வைக்கும் உந்து சக்திக்கு உணவுதான் எரிபொருள். ஆனால் உணவு இன்று ஆடம்பரப் பொருளாகிவிட்டது. அதனுடன் செயற்கையும் சேர்ந்து கொண்டது. பெரிய பெரிய உணவகங்களில் விளம்பரத்துடன் நடைபெறும் "உணவுத் திருவிழா' இதற்கு உதாரணம். அங்கே வீணாகும் உணவுப் பண்டங்கள், பசித்த பல வயிறுகளை நிரப்பும்.தாகம், குடிநீரால்தான் அடங்கும். நீர் நமது உடலின் ஜீவத் தண்ணீர். ரத்த ஓட்டம், செரிமானம், கழிவு வெளியேற்றம் எல்லாம் குடிநீரால்தான்

.நதியைப் போலவே இந்தியாவில் நதி நீர் இணைப்பும், பங்கீடும் முறையாக நடைபெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் மாநிலங்கள் அளவில்கூட தீர்வு எட்டப்படவில்லை. போதாக்குறைக்கு ஆக்கிரமிப்பு, சாயக் கழிவுகளின் சங்கமம் இத்தியாதி.அன்னியத்தனம்... அண்டைவீட்டுக்காரனே அநேக சமயங்களில் அன்னியனாகத் தெரியும் நாட்கள் இவை! அப்படியாயின் நம் அண்டை நாடுகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

ஆடை இன்மை... புதியது வேண்டாம்; பழைய ஆடைகளைப் பகிர்ந்து அளித்தாலே புண்ணியமாக இருக்கும். தேவைக்கு அதிகமான ஆடைகளை வைத்திருப்பதும் ஒரு வகையில் பிறருடைய ஆடைகளைக் களவு செய்வது போலத்தான். நோய்... பொது மருத்துவமனைகளில் நோயாளியாக அல்ல, பார்வையாளராகச் சென்றாலே நம்மால் அங்கே இருப்பவர்களுக்கு சிறு சிறு உதவிகளைச் செய்ய முடியுமே? அதனால் ஆதரவற்றவர்கள் ஆறுதல் பெற முடியும்.ஏதேனும் ஒரு வகையில் சக மனிதனுக்கு உதவினால் அது இறைவனுக்கே செய்தது போலாகும்.

 ஏனெனில் மனிதன் யார்? இறைவனுடைய சாயல், நிழல்தானே? எனவே இயேசுவின் மனக் காயங்கள் ஆறிடும் வகையில் நாம் மக்களுக்குத் தொண்டு புரிவோம்.
நன்றி: தினமலர் ஆன்மீக மலர்.
கூகிள் சர்ச்....,
டாக்டர் :  அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போகாம கூகுள்ல நல்ல ஆஸ்பத்திரி எதுன்னு  தேடுனதாலதான் அவரு இறந்துட்டார்.
இறந்தவரின் மகன் :  அதுகூட பரவாயில்ல... வந்தவுடனே டாக்டர் மருந்த தராம நல்ல மருந்து எதுன்னு  கூகுள்ல தேடிகிட்டு இருந்தாரு அதான் அவரு இறந்துட்டார்.
நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கூகிளில் தேடி தீர்ப்பு அடுத்த வருடம் தரப்படும்.
                           
என் பெரிய பொண்ணு தூயாக்கு 4 வயசாகும்போது பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க  ஷாப்பிங் போனோம். , தூயாக்கு டிரெஸ் எடுக்கும்போது,அவளுக்கு பிடிச்ச கலர் சொல்லி  ''பேபி பிங்க் கலர் ஃபிராக் கொடுங்க!'' என்று சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்கினோம். 

அடுத்ததாக எனக்கு புடவை எடுக்க  செல்ல புடவை கடைக்கு போனோம், ''மம்மி பிங்க் கலர் புடவை குடுங்க!'' என்றாள் சேல்ஸ்மேனிடம்.  அவரோ புரியாமல் விழிக்க,நாங்க ஒரு நிமிடம் புரியாமல் விழித்து, பின்பு அவளுக்கு துணி எடுத்த போது  '' அவளுக்கு,பேபி பிங்க் கலர்னு நாங்க சொன்னதால, அம்மாவுக்கு ”மம்மி பிங்க்னு ஒரு கலர் இருக்கும்னு அவ யூகிச்சிருக்கா!’ என்று அவரிடமும் விஷயத்தை சொல்லி,எல்லாருமாக சிரித்தோம்.
                                         

                                  
பறித்த இவளை பறிக்காத பேர் சொல்லி அழைப்பர். இவள் பெயர் என்ன?
விடை வழக்கம் போல அடுத்த பதிவில்...,
                              
                                    
ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து சிறிய பிரஷ் (பழைய டூத் பிரஷ்) கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் புதிது போல் மின்னலடிக்கும்.  தண்ணீரில் சிறிது பாலை விட்டு துடைத்தால் வெள்ளி நகை பளிச்சிடும். அதே போல் டூத் பேஸ்டால் கழுவினாலும் வெள்ளி நகை பளபளக்கும். சிறிதளவு புளியை கரைத்து சிறிது உப்பு, சிறிது சமையல் சோடா உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, இதில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்தால் நகை பளிச்சென பளபளக்கும்.
 

20 comments:

  1. இதுக்கு எதுக்கம்மா அடுத்த பதிவு வரை காத்திருக்கணும். பொதுமக்களே... புதிரின் விடை கொய்யாக்காய். ஏசு கதை அருமை. மழலை உலகம் புரிந்து ரசிக்கத் தக்கது என்பதை தூயா உணர்த்தி விட்டாள். அருமை அவியல்!

    ReplyDelete
  2. சுவை பிரமாதம்

    ReplyDelete
  3. ஏசு நாதர்பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு கணேஷ் புதிருக்கான விடையைக்கூறிவிட்டார்

    ReplyDelete
  4. இப்பத்தான் கவனிச்சேன்... காப்பகத்துல சொத்துக் கணக்கு இத்தோட சேர்த்து 200 ஆயிடுச்சே... 200 சீக்கிரத்துல 2000 ஆக என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அவியல் நல்லா இருக்கு...

    ReplyDelete
  6. யேசுவின் வரலாற்றை விட அதன் பின்னரான கிஸ்தவ வரலாற்றை கிறிஸ்தவ நாகரீக பாடத்தில் கற்றிருக்கிறேன். ஆனால் அவர் உள்ள காயம் இது பற்றி இப்போதுதான் அக்கா படித்தேன். ஜஞ்சுவையையும் இனிதே சுவைத்தேன் அக்கா

    ReplyDelete
  7. மம்மி பிங்க் ரசிக்கும் படி இருந்தது . அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  8. >>என் பெரிய பொண்ணு தூயாக்கு 4 வயசாகும்போது பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க ஷாப்பிங் போனோம். \


    பொங்கல் பண்டிகைக்கே துணி எடுக்கர அளவு நீங்க அவ்ளவ் பெரிய அப்பாடக்கரா? ஏன் உங்க பொண்ணுங்களூக்கு எடுக்காம பண்டிகைக்கு எடுத்தீங்க?

    ReplyDelete
  9. உங்க பிளாக்ல இன்னைக்கு சசிகலா கமெண்ட் இருக்கு , நாளைக்கு ஜெயலலிதா வருவாங்களா? ஹி ஹி

    ReplyDelete
  10. கூகிள் சர்ச் அருமை !

    ReplyDelete
  11. கூகிள் சர்ச்... மம்மி பிங்க்... இரண்டுமே ரசித்தேன்....

    நல்ல பகிர்வுக்கு நன்றி ராஜி!

    ReplyDelete
  12. அவியல் அருமையா ருசிக்குது. கூகிள் ரொம்பவே ருசிச்சது. இப்பல்லாம் உண்மைக்குமே அப்படித்தானே இருக்குது :-))

    ReplyDelete
  13. அனைத்து சுவையையும் ஒரே பதிவில் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  14. மாறுபட்ட சுவையில் அவியல் அருமை ராஜி.ஏசுநாதர் கதை மனதில் நிற்கிறது !

    ReplyDelete
  15. ""நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன்; எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை. அன்னியனாய் இருந்தேன்; என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன்; என்னை உடுத்தச் செய்யவில்லை. நோயுற்றும், சிறையிலும் இருந்தேன்; என்னைப் பார்க்க வரவில்லை"

    - சகோ. ராஜி! இந்த வசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? அதாவது இயேசு அவரைச் சொல்லாமல் ஏழைகளைக் குறிப்பிட்டே இதைச் சொன்னார். அதாவது ஏழைக்கு உணவோ, நீரோ, ஆடையோ கொடுக்க வில்லை என்றால் அதை ஆண்டவருக்கே கொடுக்க வில்லை என்று அர்த்தம். இதை மறுமை நாளிலே அதாவது நியாயத்தீர்ப்பின் நாளிலே நம்மிடம் கேட்பதாக இதன் முழு விளக்கம் சொல்கிறது. தகவலுக்காக. வேறொன்றுமில்லை.

    - அழகான பதிவு. ருசியான அவியல். ஈஸ்டர் ஸ்பெசலோ? வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்க சுட்டி தூயாவுக்கும்.

    ReplyDelete
  16. நகையை பத்திரமா-
    வையுங்க!
    பாத்திரத்தில் வைக்காதீங்க-
    கரண்டு இல்லாதத பார்த்து ஆளையே
    தூக்கிடுரானுங்க !
    நகை எம்மாத்திரம்!

    உங்கள் தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  17. ருசியான அவியல் ! நன்றி சகோ !

    ReplyDelete
  18. மகுடம் சூடிட்ட சகோதரியை மனமுவந்து வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  19. இந்தப் பதிவை தமிழ்மண மகுடத்தில் கண்டு மிகமிகமிகமிக மகிழ்ந்தேன். இன்னும் பல சிகரங்களை எட்டிட என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் தங்கையே..!

    ReplyDelete
  20. அருமை... அருமை.. அவியலின் சுவை அபாரம் ராஜி. உயிர்த்தெழுந்த நாளுக்கான உயரிய பதிவுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete