Saturday, April 26, 2014

விஜய் டிவிக்கு என்ன ஆச்சு!? - கேபிள் கலாட்டா

ஜீ தமிழ் தொலைக்காட்சில திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2  மணிக்கு ஹோம் மினிஸ்டர்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பெண்களின் ஆளுமைத் திறனையும், அறிவாற்றலையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமா பல விளையாட்டுக்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகுது. தங்களின், வயசு, கவலைலாம் மறந்து சிறு குழந்தையாய் மாறி, தன் குடும்பத்தினர் முன் திறமை வெளிப்படுவத்த   பெண்கள் விளையாடுவது  ரசிக்க வைக்குது.
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயித்துக்கிழமைல  11.30 மணிக்கு “அச்சம் தவிர்”ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. எதையாவது சாதிக்கத் துடிப்பவர்களின் வித்தியாசமான திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாய் இது இருக்கு. பல்லால் காரை இழுப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு வண்டி ஓட்டுவது, மொசைக் கற்களை வெறும் கையால் உடைப்பது என நிகழ்ச்சி சுவாரசியாமாய் செல்லுது. சுவாரசியமாய் இருந்தாலும் பல சமயம் நம் இதயத்துடிப்பை எகிற வைக்குது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாம இதுப்போல முயற்சி செய்ய வேணம்ன்னு அவங்களே எச்சரிக்கையும் கொடுத்துடுறாங்க. பெரும்பாலும் இந்நிகழ்ச்சில கிராமத்து இளைஞர்கள்தான் தங்கள் திறமைகளை காட்டுறாங்க.
கேப்டன் தொலைக்காட்சியில் பயணம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல நம்ம கடல் பயணங்கள் சுரேஷ்குமாருக்கு போட்டியா ”கருணா”ன்ற ஒருத்தர் இந்தியாவில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்குலாம் போய் அங்க இருக்கும் மக்களின், கலை, கலாச்சாரம், அந்த இடத்தின் சிறப்பு, சாப்பாடு, ஹோட்டல்ன்னு விளக்கமா சொல்லி நம்மை அந்த இடத்துக்கு போகும் ஆசையை தூண்டுறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை சன் தொலைக்காட்சியில் காலை 6.55க்கு ஆன்மீக கதைகள்ன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல ஜோதிட சிகாமணி சிவக்குமார் என்பவர் எளிய நடையில் ஜென் கதைகள் முதல் கீதாச்சாரம் வரை அழகா சொல்றார். பரபரப்பான காலை வேளையிலும் அந்த அஞ்சு நிமிசம் ஒதுக்கி நிகழ்ச்சியை விடாமல் பார்க்க வைக்குது அவரின் பேச்சு. நீங்களும் ஒரு முறை பாருங்க..., தொடர்ந்து பார்க்கவும், யோசிக்கவும் செய்வீங்க.
முன்னலாம் நீயா நானா, காஃபி வித் அனு, தமிழ் பேசுங்க ஒரு லட்சம் வெல்லுங்க, நம்ம வீட்டு கல்யாணம் மாதிரியான நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளும்  விஜய் டிவில வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா இந்த நிகழ்ச்சிகளும் இப்பலாம் எரிச்சலைத் தருது.  சேனல் மாத்திக்கிட்டு வரும்போது என்ன நிகழ்ச்சின்னு தெரியல ரோபோ சங்கர்லாம் இருந்ததால கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு பார்த்தேன்.

நீங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்குப் பால் கொண்டுப் போனீங்களா!?ன்னு அறிவார்த்தமா  நடுவரா வந்தவர் கேட்க, பால்லாம் கொண்டு போகலை நானே போய்ட்டேன்னு நிகழ்ச்சில பங்கு பெற்றவர் திறமையா பதில் சொல்ல, சுத்தி இருந்தவங்கலாம் ஆஹா! ஓஹோ!ன்னு கைத்தட்ட, ஒருதரம் எப்படி ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ளப் போனீங்கன்னு நடிச்சுக்காட்டுங்கன்னு நடுவர் சொல்ல...., அதுக்கு மேல எதாவது சொல்லிடுவாங்களோ!! பசங்களாம் டிவி பார்க்குதுங்களேன்னு நான் சேனலை மாத்திட்டு வந்துட்டேன். இந்த விஜய் டிவிக்கு என்ன ஆச்சு!?

13 comments:

  1. பெரும்பாலும் இப்போதெல்லாம் அபத்த நிகழ்ச்சிகள்தாம் ஒளிபரப்புகிறார்கள். நான் விஜய் டி.வி.யில் நீயா நானா, ஆபீஸ் தவிர எதையும் பார்ப்பதில்லை. மற்ற சேனல்களில் வெறும் செய்தியை மட்டும் பார்த்து ஒப்பிட்டுக்கொள்வது... அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. இப்படி "அறிவார்த்தமா" எல்லாம் நடக்குதா...? வெளங்கிடும்...

    ReplyDelete
  3. எல்லா தமிழ் டீ.வீ க்களும்,பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க(அது என்னமோ,இங்கிலீசுபிசுவில சொல்லுவாங்க{என்னமோ,ரேட்டாமே?},நமக்கு அது வராது)புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் பண்ணுறாங்க.சில சமயம் முகத்துக்கு அஞ்சி சில பிரபலங்கள்(?!)நிகழ்ச்சி ..............ஐய்யய்யோ!!!!!!!!!!!

    ReplyDelete
  4. நான் விஜய் டி. வி பார்ப்பதேயில்லை. "நீயா நானா" நிகழ்ச்சி கிட்டத்தட்ட 100 நிமிடங்கள் ஒளிபரப்பாகிறது. யார் பொறுமையாக பார்ப்பார்கள்? எந்த ஒரு நிகழ்ச்சியையும் 30 நிமிடங்களுக்கு மேல் ஒலி பரப்பினால் அலுத்துவிடும். (சீரியல்கள் உட்பட).

    நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள்:

    சன் டிவி யில் ஞாயிறு 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குட்டி சுட்டீஸ் (இந்த குழந்தைகள் தான் என்னமாய் பேசுகிறார்கள்). யாரும் miss பண்ணக்கூடாத ப்ரோக்ராம்.

    சன் டி.வி.யில் ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஒளிபாப்பாகும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க

    சீரியல் வாணி ராணி, (fast moving serial with very crisp dialogues). அவ்வளவே.

    ReplyDelete
  5. எனக்கும் விஜய் டி‌வியை சுத்தமா பிடிக்காது. ஒரே பீட்டர் மற்றும் double meaning.

    ReplyDelete
  6. அதிலும் நம்ம கோபிநாத் இருக்கரே பெண்களின் காவலன்.. அவரை தவிர வேற யாரும் இல்லை.. பெண்களை காப்பாற்ற... இவனெல்லாம் ....

    ReplyDelete
  7. அட ஆமாங்க அக்கா! connectionனு ஒரு நிகழ்ச்சி மூளைக்கு வேலை தருகிற மாதிரி இருக்கு என என் தங்கை சொல்ல நானும் பார்த்தேன் நம்ம நிறையை பக்கத்துல வைச்சுகிட்டு, அப்போ தான் நீங்க சொன்ன நிகழ்வு கொஞ்ச நேரத்தில் வயற்றில் புளி கரைக்க, ரிமோட்டுக்கு தாவினேன். கொடுமை:(

    ReplyDelete
  8. புதுசு புதுசா யோசிச்சு நிகழ்ச்சி ஒளிபரப்புறதில விஜய் டிவிக்கு நிகர் அவங்களே தான்... கொஞ்சம் FAMOUS ஆயிருச்சுன்னா மத்த டிவிக்காரங்க அதே மாதிரி ஆரம்பிச்சிடறாங்க....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இதுக்குத் தான் டி.வி.யே பார்க்கறதில்லை! :)))) அப்படியே பார்த்தாலும் ஏதோ நியூஸ் பார்த்துட்டு நிறுத்திடுவேன்....

    ReplyDelete
  11. திறமையை வெளிப்படுத்துகிற நிகழ்ச்சியாய் காண்பிக்கப்படுபவைகளில் இது மாதிரியுமாய்.

    ReplyDelete
  12. நிறைய நல்ல நிகழ்ச்சிகளாக சொல்லிக்கொண்டு வருகிறீர்களேன்னு நினைச்சேன், திருஷ்டி மாதிரி விஜய் டி‌வி நிகழ்ச்சியை சொல்லி முடிச்சுட்டீங்க.

    ReplyDelete
  13. இப்பெல்லாம் டி.வி பார்க்கவே நேரம் இருப்பதில்லை.... நீயா , நானா மட்டும் பார்ப்பேன்...அது கூட பல சமயங்களில் தவறவிடும் சூழலாகிவிடுகிறது

    ReplyDelete