Sunday, October 29, 2017

பந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ?!- பாட்டு கேக்குறோமாம்.

பொதுவாகவே பந்தமும், பாசமும் ஒருத்தருக்கு விலங்குதான், இதுலாம் இருந்தா வளைஞ்சு கொடுக்கனும். இதுலாம் இல்லாம பிராக்டிக்கல் மைண்டா இருந்துடறது பெட்டர். அதிலும் பெண்?! இதுல இருந்து விலகி இருப்பது ரொம்ப நல்லது. ஏன்னா, சேதாரம், இவங்களுக்குதான் சேதாரம் அதிகம். ஆனா, அப்படி இருக்க முடியாதுங்குறதுதான் உண்மை...

அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
பந்தமென்பது சிலந்தி வலை... பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி.. இதில் சுற்றம் என்பது மந்தையடி..
பந்தமென்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை..
சொந்தம் என்பது சந்தையடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
ஃபடாஃபட்...

செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கப்பூரு போகுமா?!
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?!
கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு... வாழ்க்கை என்ன என்பதை!
கொத்தும்போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை...
 ஃபடாஃபட்

அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!

கோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால்... ராமன் கதை இல்லையே!
கோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
கொள்ளும்போது கொள்ளு... தாண்டி செல்லும்போது செல்லடி!!
 ஃபடஃபட்
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!

காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை..
காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை...
பங்குனிக்கு பின்பு என்ன?! ஐயமின்று சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும்..
 பழமை வெறும் பனித்திரை..
 ஃபடஃபட்

அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தயடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி..
பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை..
சொந்தம் என்பது சந்தயடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி..
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!

படம்: அவள் ஒரு தொடர்கதை..
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்,
எழுதியவர்: கண்ணதாசன்,
பாடியவர்: எல்.ஆர்.ஈஸ்வரி
நடித்தவர்: சுஜாதா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி. 
பாடல் லிங்க்: https://www.youtube.com/watch?v=JMoH_zRU0r0

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476218

நன்றியுடன்,
ராஜி.

21 comments:

  1. கணீரென்று பாடும் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் இப்பாடல் அனைவவருக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. எனக்கு பிடிச்ச பாட்டு..

      Delete
    2. இப்படத்திலிருந்துதான் ஜெயலட்சுமிக்கு ஃபடாஃபட் என்ற புணைப்பெயர் வந்தது.

      Delete
    3. ம்ம்ம் அவங்க தூக்கு போட்டு இறந்துட்டாங்க. சரிதானேண்ணே?!

      Delete
  2. நல்ல பாட்டு/பாடல்....கருத்தான பாட்டும்.உங்களுக்குப் புடிக்கிறதில ஆச்சரியமில்ல தங்கச்சி......ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் பண்ணுறிகளா?! இல்ல பாராட்டுறீங்களாண்ணே?!

      Delete
  3. வாவ் நான் பல முறையில் சீடியை ரிப்பீட்டில் போட்டுக் கேட்பேன் என்னா ஒரு பாட்டு ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ஆமா, என் ஃபேவ் லிஸ்ட்ல இந்த பாட்டும், இந்த படத்தோட பாடல்களுக்கும் என் கலெக்‌ஷன்ல இடமுண்டு

      Delete
  4. நல்ல பாடல். பலருக்கும் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. ஈஸ்வரியம்மா குரலும், ஜெயலட்சுமியின் நடிப்பும் அட்டகாசம்ண்ணே

      Delete
  5. அருமையான பாட்டு
    நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. என்னோடு பாடலை ரசித்தமைக்கு நன்றிண்ணே

      Delete
  6. ராஜி எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அதை வரிகளோடு பகிர்ந்தற்க்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மட்டும்தான் பிடிக்கும்ன்னு நினைச்சேன்ப்பா. நம்ப கேட்டகிரி ஆளுங்க நிறைய பேரு இருக்கீங்க போல!

      Delete
  7. ப்ராக்டிக்கல் மைண்டா இருக்கிறது நிஜம்மாவே நல்லதுப்பா ..ஆனா நம்மால் அப்படி இருக்க முடியலையே :( அதனால்தான் நம்மை பார்த்தே பிரச்சினைங்க தேடித்தேடி வருது ..சூப்பர் பாட்டு படாபட் ஜெயலக்ஷ்மி பாவம் ..அந்த கதாபாத்திரம் எவ்ளோ பார்வேர்ட் டைப் ..நிஜ வாழ்க்கையில் தோத்துட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் நிஜம் வேறு நிழல் வேறுன்னு புரிய வச்சவங்க. முள்ளும் மலரும், பத்ரகாளி படத்துலயும் அசத்தி இருப்பாங்க

      Delete
  8. எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு காட்சியில் நடித்த படாபட் ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்டது ஒரு முரண். என்னே வாழ்க்கை!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் கலகல்வென இருக்கும் ஆட்கள் மனசுக்குள் பல வெளிப்படாத சோகம் இருக்கும்ன்னு சும்மாவா சொன்னாங்க.

      Delete
  9. வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் திரைப்பாடல்கள் உதவலாம் ஆனால் யார் கற்றுக் கொள்கிறார்கள்

    ReplyDelete
  10. அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!....

    சூப்பர் பாட்டு ராஜிக்கா...எனக்கும் பிடிக்கும் ...படாபட்

    ReplyDelete
  11. நல்ல பாடல் மிகவும் பிடிக்கும் இந்தப் பாடல் சகோ/ராஜி....எல் ஆரின் கணீர் குரல்!!

    ReplyDelete