த்ரிஷா இல்லன்னா நயந்தாரான்னு போற உலகத்துல லவ்வுக்காக யாராவது உயிரை விடுவாங்களா?! நானா இருந்தா, எனக்கில்லாதது யாருக்கும் இருக்கக்கூடாதுன்னு அவனை வெட்டிப்போட்டு போவேன். இங்க ஒரு புள்ளை அரளி விதையை குடிக்க போகுதாம்!
ஆசை வெச்சேன் உன்மேல.. மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே..
ஆதரிச்சா நல்லதைய்யா!
இல்ல அரளி விதை உள்ளதைய்யா!
சண்டை போட்ட கெண்டை மீனு
ரெண்டும் சேர்ந்து ஒன்னாச்சு..
ரெண்டும் சேர்ந்து கொஞ்சும்போது
ஏரித்தண்ணி தேனாச்சு..
தூண்டிலிலே சிக்கவில்ல..
சுத்தி ஒரு கொக்குமில்ல...
மீனு ரெண்டும் தூங்கையிலே
அக்கம் பக்கம் யாருமில்ல..
ரெண்டு மீனும் கண்விழிச்சா
ஏரியிலே தண்ணியில்ல...
ஏரியிலே தண்ணியில்ல...
ஆசை வெச்சேன் உன்மேல.. மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே..
ஆதரிச்சா நல்லதைய்யா!
இல்ல அரளி விதை உள்ளதைய்யா!
தென்னந்தோப்பில் என்னைப் பார்த்து
சொன்ன வார்த்தை என்னாச்சு?!
அப்பன் பேசும் பேச்சை கேட்டு காது
ரெண்டும் புண்ணாச்சு..
ரெக்கையெல்லாம் வெட்டிப்புட்டு
நிக்குதைய்யா பச்சைக்கிளி...
ஊருக்குள்ள உன் மறுப்பு
வாடுதைய்யா வஞ்சிக்கொடி..
கட்டிலில் தேங்கி நிக்கும்
கண்ணீர் மட்டும் ரெண்டு படி...
கண்ணீர் மட்டும் ரெண்டு படி...
ஆசை வெச்சேன் உன்மேல.. மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே..
ஆதரிச்சா நல்லதைய்யா!
இல்ல அரளி விதை உள்ளதைய்யா!
படம் ; நட்பு,
இசை; இளையராஜா
நடிகர்கள்; கார்த்திக், ராதாரவி, ஸ்ரீபாரதி
பாடியவர் : பி.சுசீலா
பாடலோட லிங்க்: https://www.youtube.com/watch?v=adQnyN_l1kM
பாடலோட லிங்க்: https://www.youtube.com/watch?v=adQnyN_l1kM
அன்புடன்,
ராஜி.
ஈரமான பாடல்கள்...!
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.
Deleteஇருந்தாலும் பி.சுசீலா இப்படி பாடியது தப்புதான்
ReplyDeleteஆமாம் ஆமாம்ண்ணே
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅரைச்சு உனக்கும் கொடுப்பேன்ன்னு மறைமுகமா சொல்றதா ஏன் நினைக்கக் கூடாது :)
ReplyDeleteகிட்டக்க இருந்தா கொடுக்கலாம்.. ஓடி ஒளிஞ்சா என்ன பண்ணுறதாம்?!’
Deleteஇப்பதான் முதல் முறையா இந்தப் பாட்டைக் கேக்குறேன் ராஜி....நல்லாருந்துச்சு..நட்புனு படமும் பார்த்ததில்லை...
ReplyDeleteகீதா
மீசை இல்லாத கார்த்திக்கா அறிமுகமாகி ஒட்டு மீசை வச்சு ஏதோ ஒப்பேத்தி வந்த காலம்.... சொந்த மீசை வச்சு அழகா ஹாண்ட்சம்மா மாற ஆரம்பிச்ச படம். அலைகள் ஓய்வதில்லைக்கு பிறகு நடிக்க ஸ்கோப் உள்ள படம்,, தொடர்ந்து சொதப்பிக்கிட்டு வந்த நேரத்தில் இந்த படம் ஹிட் கொடுத்துச்சு. ராதாரவியும் செமயா நடிச்சிருப்பார். அக்னி நட்சத்திரம் பிரபு- கார்த்திக் போல இந்த படத்துல ராதாரவி கடமைக்காக விரைப்பா சுத்தும்போது குறும்புக்கும், ரொமான்சுக்காகவும் கார்த்திக்கை போட்டிருப்பாங்க. செமயா நடிச்சிருப்பார். ரொமான்ஸ்ல கலக்கும்போது நண்பனுக்கு மதிப்பு கொடுத்து காதலை விட்டு தர முடியாம தவிக்குறதுன்னு பின்னி இருப்பார்
Deleteஅருமையான பாடல்
ReplyDeleteநன்றி சகோ
Deleteஎழுதியவர் பெயர் இல்லை. நாட்டுப்புறப் பாடலோ?
ReplyDeleteஎழுதியவர் யாருன்னு தெரிலப்பா. ஆனா, நாட்டுப்புற பாட்டு இல்ல
Deleteநல்லதொரு பாடல்....
ReplyDeleteகேட்க நல்லா இருக்குல்ல
Deleteநிஜமா இப்படி பாட்டு இருக்கா இல்லை நீங்க ரீமிக்ஸ் பண்ணி இருக்கீங்களா தோழி
ReplyDeleteஇருக்குப்பா. நட்பு படம்... இந்த படத்துல அடி மாடி வீட்டு மானே!.... 1.உன்னை காண துடிச்சேன்... 2.இன்றுதானே ஜென்மம் எடுத்தேன்..... 3. அதிகாலை சுபவேளை, உன் ஓலை வந்தது.... பாட்டுலாம் செமயா இருக்கும். கேட்டு பாருங்க.
Deleteபாட்டு ரீமிக்ஸ் பண்ற அளவுக்கு நான் வொர்த் இல்லப்பா
சில கற்பனைகள்....!
ReplyDeleteபாடலுக்கு கற்பனை அழகு
Delete