மாமா.... வாட்ஸ் அப்ல ஒரு தகவல் வந்திச்சு பார்த்தீங்களா?!
என்னது?!
ரஷிய இளைஞர் ஒருத்தர் பிச்சை எடுத்த கதை...
ம்ம்ம் இந்தியாக்கு வந்த ரஷிய இளைஞர் பெர்ன் கோவ்ன்னு ஒருத்தர், ஊரைலாம் சுத்திட்டு காஞ்சிபுரத்துக்கு வந்திருக்கார். அங்க தன்கிட்ட இருந்த காசுலாம் செலவழிஞ்ச பின், அங்கிருக்கும் ஏ.டி.எம் பூத்ல போய் பணமெடுக்க போய் இருக்கார். நம்மாளுங்க ஆதார், பான்கார்ட் இணைப்புன்னு பண்ணி வச்சிருக்கும் கூத்துல இவரால பணமெடுக்க முடில. கோவத்துல ஏ.டி.எம் கார்டை உடைச்சு போட்டுட்டு பக்கத்திலிருக்கும் குமரன் கோட்டம் கோவிலில் போய் உக்காந்திருக்கார். அன்று இரவு முழுக்க பசியோடு அங்கயே இருந்திருக்கார். காலைல எழுந்து பார்த்தா, பிச்சைக்காரங்க கோவில் வாசல்ல உக்காந்திருக்குறதும், அவங்களுக்கு கோவிலுக்கு வர்றவங்க பைசா போடுறதை பார்த்து, தானும் தன் தொப்பியை கழட்டி, நீட்டிக்கிட்டு உக்காந்து பிச்சை எடுத்திருக்கார். இதை கேள்விப்பட்ட அந்த பகுதி காவல்துறை ஆய்வாளர் துளசி 500ரூபா கொடுத்து சென்னைல இருக்கும் ரஷிய நாட்டு தூதரகத்தை பார்க்க சொல்லி அனுப்பி இருக்காங்க.
அதேதான் மாமா. நானும் சொல்ல வந்தேன்.
ம்ம்ம் இது அக்டோபர் 11தேதி நிகழ்ச்சி. இப்ப வந்து இதை சொல்றேன். அன்னிக்கு இந்த நியூசை பார்த்து நான் அழுதிட்டேன்.
ஏன் அழுதீங்க?!
அவன் படிச்ச படிப்பு, வேலை, சொத்து, நட்பு, சொந்தம்ன்னு எதுமே அவனுக்கு கைக்கொடுக்கலியே! கையேந்த வச்சிடுச்சேன்னுதான். யார் யாருக்கு என்ன கொடுக்கனும்ன்னு கடவுளுக்கு தெரியும்ன்றதுல எனக்கு ரொம்ப நம்பிக்கை. அதனால, பிச்சைக்காரங்களை கண்டா பெருசா மனசு பாதிக்காது, ஆனா, ஒரே ஒரு ஆள் மட்டும் வருசங்கள் பல கடந்தும் என் மனசுல நிக்குது. தாம்பரம் சானிட்டோரியம் பக்கம் ஒரு மாசம் இருந்தேன். அப்ப ஒரு வைராக்கியம். அப்பா அம்மாக்கிட்ட பேசுறதில்ல. அங்கிருக்கும் சப்வேல ஒரு அம்மா பிச்சை எடுத்திட்டிருக்கும். யார்கிட்டயும் கேக்க மாட்டாங்க. யாராவது கொடுத்தா வாங்கிப்பாங்க. அவங்கக்கிட்ட பேசும்போது சொல்லிச்சு, ஊர்ல புருசன்,குழந்தைங்க, வீடு, வாசல்,கழனின்னு இருக்கு... வீட்டுக்கார்கூட சண்டை, நெருப்பு வச்சிக்கிட்டேன். எப்படியோ பாடுபட்டு காப்பாத்திட்டாங்க. அதுக்கப்புறம் எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்க்க, நான் வந்திட்டேன். இப்பயும் பசங்க வந்து பார்த்திட்டு போவாங்கன்னு சொல்லிச்சு. கிட்டத்தட்ட அந்த நேரத்தில் என் சூழ்நிலையும் அதான்,. எத்தனை சொத்து, வீடு, வாசல் இருந்தபோதும் அடுத்தவங்கக்கிட்ட கையேந்தும் நிலை... இல்லாம கையேந்திடலாம். ஆனா, எல்லாம் இருந்தும் கையேந்தும் நிலை?! அதான் அழுதுட்டேன்..
ம்ம்ம்ம்ம் அத்தனை பட்டிருக்கேன்னு சொல்றீங்களே! பேசாம சாமியாரா போய் இருக்கலாம். நானாவது தப்பிச்சிருப்பேன்.
எல்லாத்தையும் உதறி சாமியாரா போறது ஈசி. ஆனா, நாம போனப்பொறவு நம்மை நம்பி இருந்தவங்க நிலை?!
அதுலாம் நல்லா இருப்பாங்க. பொறந்த குழந்தையே தாயை பிரிஞ்சு சில இடத்துல உசுர் பொழைக்குது..
லூசுப்போல பேசாத. சித்தார்த்தன் புத்தராகி ஒருமுறை தன் மகனை பார்க்க அரண்மனைக்கு வர்றார். அப்ப, அவர் மனைவி புத்தர்கிட்ட கேட்குறாங்க. சாமியாரா போற மனுசன் என்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே! உண்மைய சொல்லிட்டு போய் இருந்தா நான் உங்களை தடுத்திருக்க மாட்டேன். என்கிட்ட உண்மையை சொல்லாததும், என்னை நீங்க நம்பலைன்ற நினைப்புதான் என்னை இத்தனை நாளும் நோகடிக்குதுன்னு சொல்லி அழுகுறாங்க.

அதுக்கு புத்தர் அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டு, நான் பயந்தது உன்னை கண்டில்லை, என்னை நினைத்துதான், உன்னையும், நம் மகனின் முகத்தையும் பார்த்தால் உறுதி குலைஞ்சு போவேன்னுதான் சொல்லாம போய்ட்டேன்னு புத்திசாலித்தனமா பதில் சொல்றார்.
“ இந்த அரண்மனையை விட்டு போகாம, இங்கேயே தங்கி இருந்தா, ஞானம் பெற்றிருக்க முடியாதா?”ன்னு கேட்டாங்க. “கிடைத்திருக்கும். அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லைதான். ஆனா, இங்கிருந்து ஓடிப் போகும்போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல” என்பதை நான் இப்ப உணர்ந்துக்கிட்டேன்னு சொல்றார்.
புத்தனை போற்றும் நாம் அவர் மனைவி யசோதையை ஒரு பொருட்டா மதிக்குறதில்ல. புத்தர் மனைவியை மட்டுமில்ல, ராகவேந்திரர் மனைவின்னு இந்த பட்டியல் நீளும். எந்த கவலையும் இல்லாம துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு எதுக்கும் கவலைப்படாம பற்றற்றவன்னு சொல்லிட்டு போய்டலாம். ஆனா அதுக்கப்புறம் அவங்க குடும்பம் படும் பாடு?! மகன், சகோதரன், புருசன், அப்பா, மாமா, நண்பன்னு அவங்க வெற்றிடம் கொடுக்கும் தாக்கம் எதாலும் ஈடு செய்யமுடியாது. அதேமாதிரி, ஆண் சாமியாரா போற மாதிரி பெண்கள் சாமியாரா போகமுடியாது. கேட்டா அதுக்கு நூறு விளக்கம் சொல்வாங்க. சமூகம், ஓடுகாலி அது இதுன்னு தூத்தும். புத்தர் அரண்மனை விட்டு செல்லும்போது, எதில் குறை வைத்தோம், அன்பிலேயா?! இல்ல கடமையிலயான்னு மலைச்சு நின்னு தலைய மழிச்சுக்கிட்டு பிள்ளைக்காகவும், ராஜ்ஜியத்துக்காகவும் எந்த பற்றுமில்லாம வாழ்ந்தா. புத்தர் காடு, மேடுன்னு அலைஞ்சு அடைஞ்ச ஞானத்தை யசோதை அவரோட பிரிவில் அடைஞ்சா. இப்ப சொல்லு சாமியாரா போய்டுறது ஈசியா இல்லியான்னு...
ம்ம்ம்ம் இதை சொன்னா சாமிகுத்தம், சாமி கண்ணை குத்தும்ன்னு சொல்வாங்க. நீங்க ரொம்ப டென்சன் ஆவாதீக.
கொஞ்சம் கூல் பண்ணிக்க இந்த ஜோக்கை பாருங்க...
அப்படியே இந்த ஹெல்த் டிப்ஸ்சும் பாருங்க....
என்னை கூல் பண்ணது போதும்.. இந்த கேள்விக்கு பதில் சொல்லு.... முக்காலி பார்த்திருக்கியா?!
ம்ம் பார்த்திருக்கேன். கல்யாணம், காதுகுத்து, ஆரத்தி, சந்தனம், குங்குமம், பூக்கள்லாம் வச்சிருப்ப்பாங்க.
ம்ம் அதேதான். அதோட மூணு காலும் வெவ்வேறு அளவு வச்சு செஞ்சிருந்தாலும் சாயாது. ஏன்னு சொல்லு பார்க்கலாம்...
அதுவந்து....
ம்ம்ம் நல்லா யோசிச்சு சொல்லு.. ஒன்னும் அவசரமில்ல... நான் கொஞ்சம் வெளில போய் வரேன்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.
அவியல் அருமை சகோதரியாரே
ReplyDeleteநன்றி
தம +1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஎப்படியோ அயித்தானை விரட்டிவிட ப்ளான் நடக்குது....
ReplyDeleteம்க்கும் அயித்தானை விரட்டிவிட்டுட்டு?! புவ்வாக்கு என்ன செய்ய?!
Deleteசுவையான அவியல்....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஎன்னம்மோ ரஷ்யன் தமிழ்நாட்டுல வந்து பிச்சை எடுப்பதை பேசுறீங்களே. இங்கே அமெரிக்காவ்ல் தமிழன் வந்து பிச்சை எடுப்பதை யாரும் படம் எடுத்து போடமாட்டுறீங்க... உங்ளுக்கு தமிழன் என்றாலே இளக்காரமாக ஆகி போச்சு (அமெரிக்காவில் தமிழன் பிச்சை எடுக்கிறானா நம்பமுடியவில்லை என்பவர்களுக்கு அந்த பிச்சைகாரன் நாந்தானப்பா இந்த ஆதாரம் போதுமா?)
ReplyDeleteநீங்க அமெரிக்காவுல எடுப்பது காதல் பிச்சை.அதுலாம் இதுல சேராது தம்பி
Deleteஎனக்கு சாமியார போகனும் என்றுதான் ஆசை ஆனால் என் மனைவி அதற்கு அனுமதி தரமாட்டேங்கிறா? காரணம் என் கூடவே நிறைய பெண்கள் இருப்பார்களாம்
ReplyDeleteஅதான் மனைவி...
Deleteபதிவே கதின்னு கிடக்கிறதை விட சாமியாரா போங்கன்னு என் இல்லாள் சொன்னதால்தான் ,இப்போ புத்தி தெளிஞ்சிட்டேன் :)
ReplyDeleteதெளிஞ்ச மாதிரி தெரியலியே! எங்க வீட்டுலலாம் எழுத சொல்றாங்க. உங்க வீட்டுல எழுத வேணாம்ன்னு சொல்றாங்கன்னா எதாவது காரணம் இருக்கும்.
Deleteவிதி வலியது இங்கேவந்து சில்லைறை வாங்கணும் எழுதி இருக்கே ....
ReplyDeleteசாமியாரை ஆண்கள் போனால் பிரச்னையேது பெண்கள் போனால் பாதுகாப்பு ஏது .......
முக்காலி யாரவது சொல்லுங்கப்பா நாளைக்கும் வந்து பார்கிறேன்......
முக்காலி எப்படிச் சாய்ந்தாலும், அதன் மூன்றுபுள்ளிகளின் கீழே உள்ள புவியீர்ப்பு விசையும் ஒரே தளத்தில்தான் கீழே விழும். அதனால் முக்காலிகளின் மூன்று கால்களும் எப்போதும் தரை மீது படிந்தேஇருக்கும். முக்காலி சாய்ந்து கீழே விழாமல் இருப்பதற்கு இதான் காரணம். வடிவகணிதத்தின் அடிப்படையில்அது வடிவமைக்கப்பட்டிருக்கு. இதனால்தான் நில அளவைக் கருவிகளும், கேமரா ஸ்டாண்டுகளும் வசதியாக அமைவதற்கு மூன்று கால்களில் இருக்கு.
Deleteஓகே பா நியாபகம் வருகிறது லேட் பிக்கப்
Deleteஅருமையான அவியல்......சாமியாரா போறது....அத விடுங்க,வேற டாஃபிக் பேசலாம்.......ஆங்க்,என்ன கேட்டீங்க தங்கச்சி......முக்காலி ஏன் ஆடாதுன்னா, நாமளே ரெண்டு கால்ல ஆடாம நிக்கிறோம்,முக்காலி ரெண்டு கால்ல ஆடாம நிக்காதா,போங்க சிஸ்டர்........
ReplyDeleteபதில் தெரியலைன்னா ஒத்துக்கனும். அதைவிட்டு சமாளிக்கூடாது.
Deleteபல்சுவையை ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும், பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ
Deleteஅனைத்தும் அருமை.டயர்டு அன்டு ரிடயர்டை சற்று அதிகமாகவே ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா. நம்மூர்லயும் வரிசையா பெண்பிள்ளைகள் பிறந்தா போதும் பொண்ணு, வேண்டா...ன்னு பேர் வைப்பாங்கப்பா. இது உங்களுக்கு தெரியுமா
Deleteஅனைத்தையும் ரசித்தேன்...
ReplyDeleteஅவசரப்பட்டு பதில் சொன்னால் எப்படி...?
நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன்ண்ணே. அதான் சொல்லிப்புட்டேன். இத்தனைக்கும் பதிவு போட்டு 15 மணிநேரத்துக்கு பொறவுதான் பதில் சொன்னேன்
Deleteபல்சுவை அக்கா...
ReplyDeleteஅருமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Delete........புத்தனை போற்றும் நாம் அவர் மனைவி யசோதையை ஒரு பொருட்டா மதிக்குறதில்ல. புத்தர் மனைவியை மட்டுமில்ல, ராகவேந்திரர் மனைவின்னு இந்த பட்டியல் நீளும்....
ReplyDeleteபுதிசா ஒரு கோணம்...
கொஞ்சம் வருத்தமாவே இருக்குக்கா ...அவங்க நிலைமை ரொம்ப பாவம் தான்..
நல்லாருக்கு அவியலின் சுவை.
ReplyDeleteஉண்மை தான். எத்தனையோ முறை சாமியாராக போக நினைத்தும் உறவுகள் தான் தடுத்து நிறுத்துகிறது. உதறி தள்ள முடியவில்லை. புத்தன் செய்தது சரிதான்.
ReplyDeleteசில பிச்ட்சைக்காரர்கள் சம்பாதிப்பது நினைத்துப் பார்க்க முடியாது
ReplyDeleteமகளே!இப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாம்!நன்றாம் !
ReplyDelete