Saturday, October 28, 2017

பொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணமா?!

அதனால, இனி விட்டுட்டு போறவுகளை கெஞ்சாதீங்க... உங்களுக்கும் தன்மானம் உண்டு...
என்ற அயித்தான் இப்படிதான் ஷேவ் செய்வாப்ல. ஆரம்பம்லாம் அசத்தலாதான் இருக்கும். ஆனா, ஃபினிஷிங்க்?! ஆங்கங்க பட்டி பார்க்காத சுவரு மதிரி இருக்கும். 
அம்மான்னா அம்மாதான். என் அம்மாகூட தட்டுல சோத்தை போட்டு வச்சுட்டுதான் திட்டவே ஆரம்பிப்பாங்க.  

இதுலாம் டூ இல்ல ட்வெண்டி மச் ஓவர்

யாரும்மா அது சாந்தி?!  கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குறேன்.

இந்த தொகுதி இப்ப எப்படி இருக்குன்னு பார்க்கனும்...

கிறுக்கு பய ஊருல கேணப்பயலுக நாட்டாமையாம்...

மீன் போன்ற கண்கள்ன்னு இதை பார்த்துதான் சொன்னாங்களாம்...

எந்த மணின்னு சொல்லி இருக்கலாம். எனக்கு மூணு மணிய தெரியும்!!!

டேய்! யப்பா! இது அந்த ‘நயன்’ இல்ல சாமி....

கொஞ்சம் ஓவராதான் போறாங்களாம்....

பொண்டாட்டி பேரை சொல்லாததுக்கு இதும் காரணமா?! இத்தனை நாள் மரியாதைன்னுல்ல நினைச்சுட்டேன்...

ஐலைனர், மஸ்காராவும் கேக்கும்...

வாங்கிக்கொடுத்துட்டுதான் மறுவேலை...

ஃபோட்டோகிராஃபர் வரும்போது மட்டுமில்ல பசங்க வரும்போதும்கூடதான்...

அழகான வாழ்வியல்....

மைனஸ் ஓட்டு போடும் அந்த நல்லவருக்கு...
இங்க எழுத வரும் அனைத்து பேருக்கும் ஒவ்வொரு நோக்கம்.. சிலர் தங்களுக்கு தெரிந்ததை பகிர... கரந்தை அண்ணா, இளங்கோ அண்ணாலாம் தமிழ் ஆர்வம், புலவர் ஐயாவோட வயதின் தனிமை, கில்லர்ஜி அண்ணா மாதிரியான ஆளுங்க தங்களோட தொப்புள் கொடி உறவின் நெருக்கம் வேண்டி, என்னை மாதிரி ஆளுங்க பொழுதுபோக்கு,  தனிமை, சோகம், ஆத்திரம், ஆதங்கம்ன்னு எத்தனையோ உணர்ச்சிகளின் தாக்கத்தால இங்க எழுதுறாங்க.  எல்லாராலயும் பத்திரிகைல எழுதி பேர் வாங்க முடியாது. அதுக்கு வீட்டு சூழலும் ஒத்துழைக்காது. அதுமாதிரியான ஆட்களுக்கு ஒரு சிறு திருப்தியை இந்த வலைப்பூ கொடுக்குது. 

எல்லாருடைய கருத்தும் ஒத்துபோகாது. கணவன், மனைவியே ஆனாலும், கருத்து வேறுபாடு வருவது சகஜம். அதுமாதிரி கருத்து வேறுபாடு இருந்தா இந்த காரணத்துக்காக மைனஸ் ஓட்டு போடுறேன்னு சொல்லிட்டு போடுங்க. தமிழ்மணம் ஓட்டு வச்சு ஒரு கமரக்கட்டு கூட வாங்கமுடியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, சரியான திரட்டிகள் இல்லாததால தமிழ்மணத்தை மட்டும்தான் தங்களோட பதிவின் அறிமுகத்துக்காக எல்லாரும் நம்பி இருக்காங்க. அதனால, உங்க மைனஸ் ஓட்டுனால பல பதிவுகள் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. மைனஸ் ஓட்டு போடுவது உங்க உரிமை. ஆனா அது எதுக்குன்னு சொல்லிட்டு போடும் தைரியம் இருந்தா போடுங்க. இல்லன்னா தயவு செஞ்சு என் பதிவுக்கு வராதீங்க. உங்க ஒருத்தரால, எல்லாரையும் சந்தேகப்படுறதா இருக்கு... 

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

27 comments:

 1. Replies
  1. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி தனா சார். அப்படியே பிளாக் ஆரம்பிச்சு எழுதுங்க

   Delete
 2. வணக்கம் சகோ அனைத்தையும் இரசித்தேன் முடிவில் சொன்னது ஆதங்கமா ? கண்டனமா ? என்பது தெரியவில்லை

  இருப்பினும் மைனஸ் ஓட்டுப் போடுவதால் அந்த மனம் திருப்தி கொள்கிறது என்றால் அதற்காக நாம் சந்தோஷப்படுவோம் காரணம் ‘’அந்த ஆத்மா திருப்தி’’ அடைந்திட காரணகர்த்தாவான நமக்கு இறைவன் நன்மையே கொடுப்பான்.

  வழக்கம் போல் எழுதி தள்ளுங்கள் அடுத்த பக்தி பதிவுக்கு முதல் படமாக கொல்லங்குடி காளி படத்தை வையுங்கள் அவள் பார்த்துக் கொல்’’வாள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டனம்ண்ணே. இப்ப இருக்கும் ஆளுங்க பத்தி அதிகம் தெரியாது. 2012 டூ 2014 காலகட்டத்துல எழுதுன ஆளுங்க பாதி பேர் பத்தி பர்சனலா தெரியும். அவங்க இங்க பதிவு எழுத வந்த நோக்கம் தெரியும். இன்னிக்கு நிறைய பேர் பேஸ்புக்ல இருந்தாலும் பதிவெழுதாம நிறைய பேர் இருக்காங்க. அதுல 90% பெண்பதிவர்கள். தென்றல் சசி கிராமத்து கவிதைகளை அள்ளி விடுவா. அம்பாளடியாள் அக்கா ஆன்மீகம் கலந்த கவிதைல அசத்துவா. அவ கவிதைல ரௌத்திரம் தாண்டவமாடும். கிரேஸ், ஏஞ்சல், ஆமினா, தேவி, அகிலா, ஷானா அக்கா, சரளான்னு....... இன்னிக்கு முகநூல்ல ஆமினா மட்டும் எழுதுறா. ஏஞ்சல் எப்பவாவது வர்றாங்க. ஃபேஸ்புக் எல்லாருக்கும் செட் ஆகுறதில்லண்ணே. பிளாக்ல இன்பாக்ஸ் தொல்லை இல்லாதது, கமெண்ட் மாட்ரேஷன் இருக்குறதுலாம் எங்களுக்க்கு வரம்.

   உண்மைய சொல்லுங்க. இந்த பிளா உங்க பர்சனல் சோகத்தை மறைக்க உதவுதா இல்லியா?! அதுமாதிரிதான் எல்லாருக்கும். யாரோ ஒருத்தரோட திருப்திக்காக அத்தனை பேரும் பாதிக்குறோம். அதுமில்லாம இது நம்பிக்கை துரோகமும்கூட....

   பதிவு பிடிக்கலியா?! இதனால பிடிக்கலைன்னு சொல்லி சண்டை போட்டு மைனஸ் ஓட்டு போடட்டும். அது கருத்து சுதந்திரம். மதுரை தமிழன் அண்ணன் சொல்வாரு. சாமி பதிவா போடுறே. எனக்கு பிடிக்கலைன்னு... அதுமாதிரி சொல்லட்டும் அதுவிட்டு முதுகுல குத்துற பழக்கம் என்ன?! எனக்கு இதுமாதிரியான ஆட்களை பிடிக்காதுண்ணே.

   Delete
  2. ஹலோ சாமி பதிவு பிடிக்கலைன்னு சொல்லல அந்த சப்ஜெக்ட் அவ்வளவா இன்ரெஸ்டிங்க் இல்லைன்னுதான் சொன்னேன்..

   Delete
  3. பிடிக்காதுங்குறதுக்கும், இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் பாருங்க.....

   Delete
 3. அயித்தான் புகைப்படம் வெளியிட்டமைக்கு நள்றி இன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்க மச்சான் ஷேவ் பண்ற லட்சணம் இதான். ஆங்காங்கு பிசிறு தட்டும். இதுக்கு பேரு க்ளீன் ஷேவ்ன்னு பெருமை வேற. பேசாம, ஒரு ட்ரிம்மர் வாங்கி மச்சானுக்கு சீரா கொடுங்கண்ணே.

   Delete
 4. படங்களும் அதற்கு ஏற்ற கருத்துக்களும் அட்டகாசம்

  ReplyDelete
 5. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. ராஜியம்மா இந்த மைனஸ் வோட்டு போடுபவர் சென்னையை சார்ந்த நகைச்சுவை பதிவர்தான் அவர் பிஜேபியை சார்ந்தவர். நான் மோடியை பற்றிய எழுதும் பதிவுகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் நான் அவதூறாக மோடியை பற்றி எழுதுகின்றேன் என்றும் அப்படி நான் எழுது பதிவுகளுக்கு நீங்கள் எல்லாம் ஆதரவு தருகிறீர்கள் என்றும் அதனால் எல்லோருக்கும் மைனஸ் வோட்டு போட்டு தமிழ் மணத்தில் இருந்து அவர்களை விரட்டுவேன் என்று சொல்லி செய்தும் வருகிறார்.. நான் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்மே இருந்து மோடியை பற்றி எழுதி வருகிறேன் ஆனால் நம்ம பதிவருக்கு தீடிரென்று தேசபக்தி கொப்பளித்து இப்படி செய்து வருகிறார். இப்படி அவர் செய்வதால் நீங்கள் எல்லாம் எனக்கு ஆதரவு தர் மாட்டீர்கள் என்று நினைக்கிறார். அவருக்கு என் மீது கோபம் இருந்தால் என் பதிவுகளுக்கு நெகடிவ் வோட்டு போடலாம் ஆனால் உங்களைப் போல உள்ளவர்கள் மோடியை பற்றி எதும் எழுதாமல் நல்ல பதிவுகள் இட்டாலும் கிழ்தரமாக செயல்பட்டு உங்களை போல உள்ள அனைத்து பதிவர்களுக்கும் நெகடிவ் வோட்டு போடுகிறார். இதில் இருந்தே அவருக்கு எவ்வளவு கீழ்தரமான எண்ணம் இருக்கிறது என்பது தெரிகிறது...

  இதுதான் விஷயம்....அவர் நம்ம பதிவர்கள் 10 பேர் எனக்கு வந்து கருத்துக்கள் சொல்வதால்தான் என் தளம் பலரையும் சென்று அடைகிறது என்று நினைக்கிறார் ... ஹும்ம் அவருக்கு தெரிந்த வலைத்தள அறிவு அவ்வளவுதான்

  ReplyDelete
  Replies
  1. யார்ன்னு புரிந்ததுண்ணே. தேவையா அவருக்கு?! அவரோட மதிப்பை அவரே தரம் தாழ்த்துக்குறார்.

   Delete
  2. எனக்குத் தான் முதலில் அந்த வலையுலக மெண்டல் மைனஸ் வோட் போட ஆரம்பித்தார் ...கில்லர்ஜி பதிவில் 'உள்நோக்கத்தோடு நண்பர்கள் அனைவரின் பதிவுகளில் மைனஸ் வோட் போடுபவர்கள் சொந்தப் பெயர் இல்லாதவர்கள் மட்டுமல்ல ,அப்பன் பெயர் தெரியாதவர்களும் கூட 'என்று கடுமையாக கூறிய பிறகும் ,அந்த மெண்டல் திருந்துவதாக தெரியவில்லை !
   உண்மையை வெளிக் கொணர்ந்த உண்மைத் தமிழனுக்கு நன்றி :)

   Delete
 7. புகைப்படங்கள், ஏற்ற கருத்துகள், பொருத்தமான சொற்றொடர் அமைப்புகள். வித்தியாசமான முறையில் அருமையான பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள். இதுபோன்ற பல்துறை சார்ந்த, சமூக அவலங்களை யதேச்சையாக வெளிப்படுத்துகிற பதிவுகளை வாசிப்பதில் நான் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம். இப்படிதான் வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரிதான் சொல்லனும். டைரக்டா சொன்னா அடிக்க வருவாங்கப்பா.

   Delete
 8. அருமை தங்கச்சி, நன்றி.........சிரிக்கவும்/சிந்திக்கவும் வைத்த பதிவு.//////அந்தப் பெயரிலி குறித்து அலட்டிக் கொள்ள வேண்டாம் தங்கச்சி........

  ReplyDelete
  Replies
  1. அலட்டிக்கலைண்ணே. ஆனா, தேவையில்லாத வேலை இது. மைனஸ் ஓட்டு போட என்ன காரணம்ன்னு சோல்ல முடியலைன்னா ஏன் போடனும், ஏன் வரனும்?!

   Delete
 9. நல்லதோர் நகைச்சுவை தொகுப்பு! அனைத்தும் மீண்டும் ரசித்தேன்! :)

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், மீண்டும் ரசித்தமைக்கு நன்றி சகோ

   Delete
 10. படங்களும் வசனங்களும் தூள்
  அருமை
  மைனஸ் ஓட்டுக் கலாச்சாரத்தை ஒருவர் மட்டுமே
  செயல்படுத்தி வருகிறார்
  விட்டுத் தள்ளுங்கள் அவரை
  ஏதோ அவருக்கு ஒரு மன நிறைவு கிடைக்கிறது
  கிடைக்கட்டும்
  தம +1

  ReplyDelete
 11. கலக்கல் எல்லாமே......

  ReplyDelete
 12. மாமா ஷவ் ...பண்றதும்...

  அப்பறம் வர எல்லா காமெடியும் பார்த்து சிப்பு ..சிப்பா வருது ராஜிக்கா...

  சூப்பர்...சூப்பர்...

  ReplyDelete