Tuesday, October 17, 2017

வெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்

தீபாவளி பலகாரம்ன்னாலே எங்க ஊர் பக்கம் அதிரசத்துக்குதான் முதலிடம். மத்ததுலாம் அதுக்கடுத்துதான். தீபாவளிக்கு மறுநாள் நோன்பு எடுப்போம். இப்ப அது விசயம்ல்ல.  அந்த நோன்புக்கு அதிரசம் அதுலயும் குறிப்பா வெல்ல அதிரசம்தான் செய்வோம்.  எண்ணி வச்சது, அப்படியே வச்சது, பாகு எடுத்தது, பாகு எடுக்காததுன்னு விதம் விதமா அதிரசம் சுடுவாங்க. என் அம்மா வீட்டில் நெய்ல செஞ்ச அதிரசம்தான் நோன்புக்கு. முன்னலாம் நார்மல் சைசுக்கு செஞ்ச அதிரசம் இப்ப பத்து ரூபா காயின் அளவுக்கு சுருங்கிடுச்சு. கேட்டா ஆயிலாம்.. உடம்புக்கு சேராதாம்.  என் மாமியார் வீட்டில் பாகு எடுக்காம அதிரசம் செய்வாங்க. இதை நாலு நாள் கழிச்சுதான் சாப்பிட முடியும். என் அம்மா கைப்பக்குவம் எனக்கு அதிரசத்துலதான் வந்திருக்கு. பெருமைக்கு சொல்லலீங்கோ. அதிரசம் நான் நல்லாவே செய்வேனாக்கும்....

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கிலோ
வெல்லம் - 1கி
சுக்கு - 10கிராம்
ஏலக்காய் - 5 
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

அரிசியை தண்ணில 2 மணி நேரம் ஊற வெச்சு, தண்ணி நல்லா வடிச்சு, ஒரு காட்டன் துணில மூட்டை கட்டி வைங்க. அரை மணி நேரம் கழிச்சு, லேசா ஆற வச்சு, மெஷின்ல இல்ல மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க. அரிசி லேசான ஈரப்பதத்துல இருக்கனும், ரொம்ப காய்ஞ்சுட்டாலும் அதிரசம் நல்லா இருக்காது. மிக்சிலயும் அரைச்சுக்கலாம்
அரைச்சு வந்த மாவை நல்லா ’சலிச்சுக்காம’ சலிச்சுக்கனும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணிய பொடிச்ச வெல்லத்தை போட்டு வெல்லம் முங்குற அளவுக்கு தண்ணிய ஊத்தி வெல்லம் கரைஞ்சதும் வேற ஒரு பாத்திரத்துல வடிக்கட்டி கொதிக்க விடனும். எஃப்.பில அப்டேட் பண்றேன்ன்னு பொங்க விடாதீங்க. அடிக்கடி கிளறி விடுங்க.
சுக்கு, ஏலக்காயை பொடிச்சு சலிச்சுக்கோங்க.. கசகசாவை வண்டு, பூச்சி இல்லாம பார்த்துக்கோங்க. ஏன்னா அதிரசம் சைவ ஜாதி...
பாகு வந்திடுச்சான்னு பார்க்கலாமா?! ஒரு தட்டுல தண்ணி ஊத்தி, அதுல கொதிக்குற பாகுல சொட்டு விட்டா கரையாம நிக்கனும். அதுக்கு பேரு முத்து பதம். அதான் சரியான ஸ்டேஜ்.
அடுப்பை சிம்ல வச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா வெல்லப்பாகில் மாவை சேர்த்து கிளறி விடுங்க..
அடிப்பிடிச்சுடாம நல்லா கிளறி விடுங்க...
சுக்கு, ஏலக்காய், கசகசா, வெள்ளை எள்ளை சேர்த்துக்கோங்க...
கொஞ்சம் நெய் சேர்த்துக்கோங்க...
மாவை சின்ன, சின்ன உருண்டையாக்கி,  வாழை இலை இல்லாட்டி பாலிதீன் பேப்பர்ல எண்ணெய் தொட்டு தட்டிக்கோங்க.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் ஒண்ணொண்ணா போட்டு, ரெண்டு பக்கமும் நல்லா சிவந்ததும் எடுங்க. வடை போல வாணலி ஃபுல்லா அதிரசம் போடாதீங்க. ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு சுடுங்க.
ரெண்டு பக்கமும் பொன்னிறமா வெந்ததும்,  அதிரசம் அமுக்கும் கட்டையில வச்சு அழுத்தி எடுத்தா, அதிரத்துல இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வெளில வந்துடும். இந்த மாதிரி கட்டை இல்லாட்டி பூரி அழுத்துறதுல வச்சு லேசா அழுத்தலாம். இல்லாட்டி ஒரு கிண்ணத்தை திருப்பி போட்டு அது மேல அதிரசம் வச்சு ஒரு தட்டால அழுத்தி எடுத்தாலும் எண்ணெய் வந்திரும்.
சூடான, சுவையான அதிரசம் ரெடி. குறைஞ்சது பதினைந்து நாள் வச்சு சாப்பிடலாம். சுக்கு, கசகசா, எள் சேர்த்திருக்கிறதால உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது. சூடா இருக்கும்போதே அதிரசம் சாப்பிட சூப்பரா இருக்கும். 

அக்கம் பக்கம் முஸ்லீம் வீடுக இருக்கு. இந்த அதிரசத்துக்காகவே வெயிட்டிங்க்.. தீபாவளி காலைல கொடுத்தாகனும். கொஞ்சம் லேட்டானாலும் சண்டை பிடிப்பாங்க. பகிர்ந்து மகிழத்தானே பண்டிகை?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474990
நன்றியுடன்,
ராஜி. 

22 comments:

  1. அதிரசம் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் நீங்கள் சொன்னபட் செய்து பார்த்துவிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. முன்னமயே ஒருமுறை அதிரசம் பிடிக்கும்ன்னு சொல்லி இருக்கீங்க. மைண்ட்ல இருக்கு

      Delete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொல்லி தப்பிச்சுக்கலாம்ன்னு பார்க்குறீகளா?! அதுலாம் சீர்வரிசையை வாங்காம விடமாட்டேனாக்கும்.

      Delete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அதிரசம் செய்வது பற்றி நீங்கள் அருமையாக சொன்ன விதத்தில் இப்போதே செய்து சாப்பிட்டு பார்க்கணும்போல இருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. சுக்கு, ஏலக்காய்ன்னு வாசமா இருக்கும். எள், கசகசான்னு மெல்லும்போது தனி சுவை கொடுக்கும்

      Delete
  4. பகிர்வு நன்று அதிரசம் புகைப்படமே அழகாக இருக்கிறது ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது அதிரசம் ரெண்டு பார்சல் ப்ளீஸ்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்லிட்டு பார்சல் பண்ண அட்ரஸ் சொல்லாம போனா எப்படி?!

      Delete
  5. அதிரசம் ரெசிப்பி சூப்பர்!

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சசோ

      Delete
  6. பண்டிகையின் சிறப்பு அதி-ரசமாய் பாராட்டு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சகோ

      Delete
  7. அழகா இருக்கு படத்துடன் பார்க்கவே சாப்பிடணும் போல
    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனி தீபாவளி வாழ்த்துகள்ப்பா

      Delete
  8. படங்களுடன் குறிப்பு அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  9. எனக்கும் அதிரசம் பிடிக்கும் செய்து பார்த்து விட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பார்க்குறதோட இந்த மகளுக்கும் பார்சல் பண்ணிடுங்கப்பா

      Delete
  10. அதிரசம் விரும்பாதார் யார்? அருமை...தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்க்கும் நன்றிப்பா

      Delete
  11. எனக்கும் இன்னும் பக்குவம் வராத ஒரே பலகாரம் இந்த அதிரசம் தான். ஒரு தடவை முயற்சித்தேன் . கல்லாகி போச்சு. பாகுப்பதம் அதிகமாகி விட்டது போல என நினைத்தேன். அதன் பின் யாரிடமாவது சொல்லி செய்வது தான். அரிசிமாவில் செய்யும் அதிரசம் என்பதனால் எனக்கு நிரம்ப பிடிக்கும், நாவில் பட்டதும் நடிப்பகுதியில் இருக்கும் மாவுப்பகுதி கரைந்து செல்லும் போது ரசித்து உண்பேன்.

    இந்த பக்குவத்தில் நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து விடுகின்றேன்பா.

    எங்கம்மா ஊரிலிருந்து போன மாதம் அதிரசம் செய்து அனுப்பி இருந்தார்கள். அதில் எள்ளு சேர்த்த அதிரசம் தனியேயும். பயறு சேர்த்த அதிரசம் தனியாகவும் இருந்தது. எள்ளுச்சேர்த்த அதிரசத்தினை விட பயறு சேர்த்தது எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
  12. ஒட்டுப்போட்டேன். அதிரசம் பார்சலை அனுப்பி வையுங்க

    ReplyDelete