Monday, October 09, 2017

காரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்

மாமோய்! நம்ம ஜாதகத்துல கோளாறாம். நாம சேர்ந்திருந்தா வீட்டுக்கு ஆகாதாம். ரெண்டு பேர் உயிருக்கும் ஆபத்தாம்...  ஒரு குறி சொல்லுற சாமியார் சொல்லுதாரு.

காரியமில்லாம காரணமில்ல புள்ள. ஒரு ராஜாவுக்கு பாம்பாலதான் சாவுன்னு அரண்மனை ஜோசியர் சொன்னாராம். அதனால, பாறை, மரம், புதர் இல்லாத மைதானத்துல அரண்மனை கட்டி, அரண்மனைக்கும் மைதானத்துக்கும் இடையே பெரிய அகழி வெட்டி வச்சான்... அகழிக்கும் அரண்மனைக்கும் இடையே நுழை வாயில் தவிர்த்து எல்லா இடத்துலயும் நெருப்பு மூட்டி வச்சான். நுழை வாயில்ல மந்திரிச்ச தாயத்து கட்டி, கடும் சோதனைக்கு பிறகு ஆட்களையும், பொருட்களையும் அரண்மனைக்குள் வரவச்சான். நல்லாவே நாட்கள் போய்க்கிட்டிருந்துச்சு... 

பூஜையில் அமர்ந்தான் மன்னன். பூஜை முடிந்தது.. இறைவனுக்கு சமர்பிக்க அருகிலிருந்த பூக்கூடையிலிருந்து  பூக்களை எடுத்தான். அப்ப, பூக்களுக்குள் இருந்த மிகச்சிறிய பூநாகம் கடிச்சு செத்து போய்ட்டான்., அதனால, உயிர் போகும் விதி இருந்தா எங்கயும் உயிர் போகும்... அதனால மனசை போட்டு குழப்பிக்காம வேலைய பாரு. மனுசனை பக்குவப்படுத்ததான் சாமியே தவிர, இந்த மாதிரி பயமுறுத்தி தன் பிடிக்குள் வச்சிக்குறதில்ல. ஒரு பக்கம் விஞ்ஞான வளர்ச்சி உச்சத்துல இருந்தாலும் அதைக்கொண்டே இந்த மாதிரி மூட நம்பிக்கையும் தலை விரித்தாடுது.

சரிங்க மாமா... 
ஏழாவது படிக்கும் பெண்குழந்தைக்கு என்ன தெரியும்?! மாதாந்தர தொந்தரவால உடையில் கறை பட்டு, அந்த கறை பெஞ்சிலும் பட்டதால டீச்சர் திட்டிவிட, அதுக்காக அந்த குழந்தை  வீட்டுக்கு வந்து தற்கொலை பண்ணிக்கிச்சு.  நாப்கின் எப்படி வைக்கனும்?! அக்குழந்தையின் உடலுக்கேத்த மாதிரி ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின் மாத்தனும்ன்னு சொல்லித்தராத அவங்க வீட்டு பொம்பளைங்களை சொல்லுறதா?! இல்ல, ஒரு பொம்பளையா இருந்தும் அக்குழந்தையின் அவஸ்தை புரியாம  கண்டமேனிக்கு திட்டுன அந்த டீச்சரை சொல்லுறதா?! இல்ல ஒரு பனிரெண்டு வயசு குழந்தைக்கு தற்கொலைன்னா என்ன?! எதுலாம் உயிர் போக்கும்ன்னு புரிய வச்சு அந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போகுமளவுக்கு தைரியத்தை கொடுத்த சமூகத்தை சொல்லுறதா?! எதும் புரில.


இதே மாதிரி ஒரு சம்பவம்... ஒரு ஆறு வருசத்துக்கு முந்தி நடந்தது. என் ஃப்ரெண்ட் ராஜி, அவ பிள்ளைகளுக்கு மதிய சாப்பாடு கொண்டு போய்   ஸ்கூல் மைதானத்துல உக்காந்திருக்கா. அங்க இருக்கும் பெஞ்ச்ல எட்டாவது படிக்கும் ஒரு பெண்குழந்தை உக்காந்திருக்கு. ஏன் பாப்பா இங்க உக்காந்திருக்கேன்னு கேட்டதுக்கு , தயங்கி தயங்கி தான் பெரிய மனுசி ஆனதை சொல்லி இருக்கு. சரி, வீட்டுக்கு போறதுதானேன்னு கேட்டதுக்கு அப்பா போன் நம்பர் மாத்திட்டதால சொல்ல முடில. சாயங்காலம் பஸ் போகும்போது போய்க்க, இங்க சாமி சிலைலாம் இருக்கு. நீ போய் மைதானத்துல உக்காருன்னு சொல்லிட்டாங்க. ரெண்டாவது பீரியட்ல இருந்து உக்காந்திருக்கேன்னு சொல்லி இருக்கு. அப்புறம், ராஜி, ஆஃபீஸ் ரூம் போய் விவரம் கேட்டதுக்கு இங்க ஹயக்ரீவர் சிலை இருக்கு. அது கன்னி தீட்டு. தீட்டு கழிக்காம இங்க இருக்கக்கூடாதுன்னு அவ அப்பாக்கு போன் பண்ணினா போன் நம்பர் மாத்திட்டதை இங்க இன்ஃபார்ம் பண்ணதால வீட்டுக்கு சொல்ல முடியலன்னு, அதனாலதான் வெளில உக்காத்தி வச்சிருக்கோம்ன்னு கூலா சொல்லி இருக்காங்க

ஹயக்ரீவர் அது இதுன்னு மூட நம்பிக்கையை சொல்லுற உங்களுக்கு இந்த மாதிரி மதியானத்துல உக்காத்தி வச்சா பேய் பிடிக்கும்ன்னு மட்டும் சொல்லி தரலியாக்கும். நான் அந்த பிள்ளைய கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டு வரேன்னு சொல்லி பர்மிஷன் கேட்டு இருக்கா. உங்களை நம்பி எப்படி அனுப்புறதுன்னு அவங்க மறுப்பு சொல்லி இருக்காங்க. இங்கதான் என் மூணு பசங்க படிக்குறாங்க.,  அந்த புள்ளையோட அப்பா போன் பண்ணி என் பிள்ளை வீட்டுக்கு வந்திருச்சுன்னு சொல்லும் வரை என் பிள்ளைகளை அனுப்பாதீங்கன்னு சொல்லி அந்த குழந்தையை கொண்டு போய் வீட்டுல விட்டு வந்திருக்கா.

ம்ம்ம்ம் ஒன்னு சொல்லுற எல்லாத்தையும் நம்பி தொலைக்கனும். இல்லன்னா எல்லாத்தையும் விட்டு தொலைக்கனும். ரெண்டுங்கெட்டானா இருந்தா இப்படிதான் லூசு மாதிரி செய்ய தோணும்.
வார்த்தைகள் மட்டுமே போதும். அதனால, கோவத்திலும்கூட வார்த்தைகளில் கவனமா இருக்கனும் புள்ள.  மனுசங்க வேர் அறுக்க வார்த்தையை தவிர எதுமே தேவையில்ல.


ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, தியேட்டர்காரன் கொள்ளைன்னு இனிமே சினிமா பார்க்க தியேட்டருக்கு போனா ஆயிரக்கணக்குல செலவாகும்போல! அதை சொல்லுது இந்த ஜோக்.

அதுலாம் சினிமாக்கு போறவுக கவலைப்பட வேண்டியது. நமக்கு என்ன மாமா?!

சரி, இத்தனை சொன்னீங்கள்ல... நான் ஒரு கணக்கு கேக்குறேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்...

வட்ட வடிவ கடிகாரத்தை  6 துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு துண்டிலும் கிடைக்கும் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை ஒரே மாதிரி வர வேண்டும். 


யோசிச்சு வைங்க. நான் போய் சமைச்சுட்டு வாரேன்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474190

நன்றியுடன், 
ராஜி.

21 comments:

  1. மனதில் உள்ள தீட்டு என்றைக்கு நீங்குமோ...? ம்...

    கடிகாரத்தில் உள்ள அனைத்து எண்களின் கூட்டுத்தொகை 78...

    ஆறு துண்டுகளில் ஒவ்வொன்றிலும் எண்களின் கூட்டுத்தொகை 78/6 = 13 என்று வர வேண்டும்...

    இதன் அடிப்படையில் பிரித்தால் :-

    12 + 1
    11 + 2
    10 + 3
    9 + 4
    8 + 5
    7 + 6

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான்ண்ணே

      Delete
  2. அவியல் அருமை......சில புரிந்து கொள்ளப்படாத/புரிய முயற்சிக்காத ஜென்மங்கள் இன்னமும்.....எங்க போய்ச் சொல்ல..அவனவனுக்கு வரும் போது தான்.......ஹூம்.....

    ReplyDelete
    Replies
    1. யோகா அண்ணா நல்லா இருக்கீங்களா ..
      என்னை மறந்தே போயிட்டிங்க இல்லை

      Delete
    2. என்னையும் உங்களையும்தான் நயந்தாரா, திரிஷா மாதிரியான பழம்பெரும் நடிகைகள்ன்னு முகநூல்ல கிண்டல் பண்றாங்க. யோகா, மனோ, விக்கி, பாலகணேஷ் மாதிரியான ஆட்கள்லாம் நம்பளை கண்டுக்காததால்....

      Delete
  3. ஏழாம் வகுப்பு மாணவி சம்பவம் முழு விவரம் இங்கே தான்ப்பா அறிந்தேன் :( அடச்சீ அந்த அறிவுகெட்ட பள்ளி ஆசிரியர்களை அடிச்சே போடணும் .பிசாசு கூட்டம் ஒரு பெண் பிள்ளைக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு இதுங்களுக்கு கற்றுக்கொடுக்காத உணர்வு இதுங்கல்லாம் பிறந்ததே வேஸ்ட் .. இங்கே பள்ளிக்கூடங்களில் 7 ஆம் வகுப்பில் முதலில் கற்றுக்கொடுக்கப்படுவதே இம்மாதிரி தருணங்களில் என்ன செய்யணும் என்பதைத்தான் ..
    எதற்கெடுத்தாலும் தற்கொலை காட்சிகளை காட்டும் தொல்லை காட்சி சீரியல் கில்லர்களும் இதற்கு அதான் தற்கொலைக்கு தூண்டுவது ஒரு காரணம் ..சீரியல்களில் பிழைச்சிடுவாங்க ஆனா நிஜ வாழ்வில் :(

    ஆனால் ஒன்றுப்பா ராஜி அந்த பெண் குழந்தை நடந்துபோகும்போது எத்தனை பேர் சிரிச்சிருப்பாங்களோ அவள் கிளாசில் அதுவும் மன உளைச்சல் ஆகியிருக்கும் பிள்ளைக்கு ,,பொதுவாகவே அந்த மாதிரி நாட்களில் ஹார்மோனல் மாறுபாடால் மனசு எமோஷனல் உணர்வுகளால் நிரம்பி இருக்கும் ..பாவம் அக்குழந்தை ..பெண்களுக்கும் பெண் பிள்ளைங்களை பெற்றவங்களுக்குத்தான் இந்த வலியும்வேதனையும் இன்னும் அதிகமா புரியும் :(

    ReplyDelete
    Replies
    1. ஆன்னா ஊன்னா நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்களில்லைன்னு கதை அளக்கதான் நம்பாளுங்களுக்கு தெரியும். நடைமுறை வாழ்க்கையோடு ஒத்து போக தெரியாது. பெண்ணடிமை தனத்துக்கு இந்து மதம் ஜால்ரா தட்டுதுன்னு சொன்னா அது மிகையாகாது

      Delete
  4. பெண் குழந்தைகளுக்கு வரும் பிரீயட்டை அது இயற்கையானது என்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண்குழந்தைகளுக்கும் சொல்லி கற்று கொடுக்க வேண்டும் எப்படி இயறகை கடன் களை தினசரி நாம் கழித்து கொள்கிறோமோ அது போலதான் இது மாதந்திர கடன் கள் இதில் சங்கடபடவோ அல்லது கேலி செய்யவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும் இப்படி சொல்லி வளர்த்தால் இந்த மாதிரி சங்கடங்கள் எதிர்காலத்தில் பெண் குழந்தைகலுக்கு ஏற்படாது.., இதர்கு பெண்கள் முயற்சி எடுக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அந்த மூணு நாட்கள் பத்தி பேசவே கூடாதுன்னும், அது சம்பந்தமா படிக்குறது, நாப்கின் விளம்பரம்லாம் பார்க்குறது, நாப்கின் வாங்கி வருவதுலாம் பாவம், அருவருக்கத்தக்கதுன்னு நினைக்குற ஆட்கள் இப்பயும் இருக்காங்கண்ணே.

      Delete
  5. ஐயோ பாவம் அந்த பெண் ,ஆசிரியை இப்படி செய்யலாமா :)

    ReplyDelete
    Replies
    1. அதும் பெண்ணாயிருந்தும்....

      Delete
  6. சினி லோன் ஜோக் ரசித்தேன்.

    7 ஆம் வகுப்புப் பெண் சம்பவம் கஷ்டப்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. பாவம் அந்த சின்ன பிள்ளை

      Delete
  7. மகளே அவர்கள் உண்மைகள் கருத்தை வழிமொழிகிறேன் த ம 7

    ReplyDelete
    Replies
    1. எத்தனை விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் இப்படி தீட்டு வெங்காயம் வெள்ளைப்பூண்டுன்னு சொல்லும் ஆட்கள் இன்னமும் உண்டு

      Delete
  8. உண்மை சுடும் மிகவும் நன்று

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  9. இம்மாதிரி பல சம்பவங்களுக்குப் பின்னாவது சில தவிர்க்க வேண்டிய நம்பிக்கைகள் காணாமல் போனால் சரி

    ReplyDelete
    Replies
    1. விஞ்ஞான வளர்ச்சியோடு மூட நம்பிக்கையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளருதுப்பா.

      Delete
  10. இதுக்கு எனக்கும் நிறைய கோபம் வந்தது இதுக்கு எதுக்கு அந்த டீச்சருக்கு கோபம் வரணும்? மனுசனா பொறந்த எல்லாருக்கும் தெரியற விஷயம் தான் அதுவும் இன்று மீடியா பல நுறு விளம்பரங்களை காட்டி சொல்லி கொடுக்குது இந்த டீச்சருக்கு ஏன் எரிச்சல் புரியலை மனம் உடையும் அளவுக்கு திட்டணுமா ?
    உண்மைதான் மூட நம்பிக்கையில் மூழ்கி செத்தாலும் சாவாங்க நல்லது செய்ய தயாராக மாட்டாங்க அப்ப கல்வியை அவங்க தெய்வமா பார்க்களை பள்ளியில் வைத்த சிலைதான் பெரிசா போயிடுச்சு
    கடைசி சினிமா கூற்று சூப்பர் உண்மை

    ReplyDelete
    Replies
    1. சக மனுசனை மதிக்க கத்துக்கொடுக்காத இறைபக்தி அவசியம்தானான்னு அடிக்கடி எனக்கு கேள்வி எழும் சகோ

      Delete