Tuesday, October 31, 2017

பச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்.... - கிச்சன் கார்னர்

விநாயகர் சதுர்த்தி ஆரம்பிச்சு சரஸ்வதி பூஜை, புரட்டாசி, சஷ்டி விரதம்ன்னு  வாயக்கட்டி போட்டு வச்சதுல நாக்கு செத்து போச்சு. சிக்கன், மட்டன்னு சாப்பிட பிடிக்கல. சரி, மீன்?! இந்த மழைல அது விக்குற இடத்துக்கு போனா... உவ்வே. ஏழேழு ஜென்மத்துக்கும் மீன் சாப்பிட முடியாது. ஐ வீட்டுல கருவாடு இருக்கேன்னு எடுத்து தண்ணில ஊற வெச்சேன்.

சாப்பிட நல்லா இருக்கும். ஆனா, க்ளீன் பண்ணுறதுக்குள் தாவு தீர்ந்துடும். ஆபத்பாந்தவன் மை சன் கைகொடுத்தான். அம்மா நான் க்ளீன் பண்ணவா?!ன்னு.. நைசா அவன்கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சுட்டு, ஃபேஸ்புக்ல உக்காந்துச்சு.  கால் மணி நேரத்துல நல்லா சுத்தமா, தலை, வால், குடல்லாம் எடுத்து, செதில்லாம் தேய்ச்சு கழுவி, எலுமிச்சை சாறு போட்டு கழுவி கெட்ட வாடை இல்லாம கொடுத்தான்...

தேவையான பொருட்கள்...
நெத்திலி கருவாடு...
வெங்காயம்,
தக்காளி,’
மஞ்சப்பொடி,
மிளகாய் தூள்,’
உப்பு...
எண்ணெய்,’
கடுகு,
கறிவேப்பிலை
கொத்தமல்லி...

வெங்காயம், தக்காளிலாம் பொடியா நறுக்கிக்கோங்க... 


என் செல்லம் அப்பு கழுவிக்கொடுத்த கருவாடு...

வாணலில எண்ணெய் ஊத்தி சூடானதும், கடுகு போட்டு பொரிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கிக்கனும்...

வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும் நறுக்கி வச்ச தக்காளிய சேர்த்துக்கவும்...

வெங்காயம், தக்காளி சீக்கிரம் வதங்க உப்பு சேர்த்துக்கோங்க...

தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சத்தூள் சேர்த்து கொஞ்சமா தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க. வெங்காயம் தக்காளி வெந்து   தண்ணி முக்கால்வாசி வத்தியதும்,  கழுவி வச்ச கருவாட்டை போட்டு சுருள வதக்கி, நீர்லாம் வத்தினதும் இறக்கி கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து இறக்கி பரிமாறுங்க. 


சூடான சாதத்துல சேர்த்து சாப்பிட்டா...... யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி...  ருசியா சூப்பரா செத்துபோன நாக்குக்கு உயிர் வரும். என்ன ஒரு மைனஸ் பாயிண்ட்ன்னா அதிகம் வெந்துட்டா குட்டி குட்டி முள்லாம் படுத்தும். அதனால, கருவாடு உடையாம பார்த்துக்கனும். அதிகமா தண்ணி சேர்க்காம, அதிகமா கிண்டாம சமைக்கனும். இட்லி, தோசை, ரசம் சாதம், பழைய சாதத்துக்கு செமயா இருக்கும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....

நன்றியுடன்,
ராஜி.


29 comments:

  1. செல்லத்துக்கு தான் அதிக வேலை...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. அவனுக்கு மீன் சுத்தம் செய்வதில் கொஞ்சம் ஆர்வம். அதேமாதிரி, செடி நடுவதிலும்....

      Delete
    2. "மீன் சுத்தம் செய்வதில் ஆர்வம்"
      இது நம்புறது மாதிரி இல்லையே...

      Delete
    3. நிஜமாதான்ண்ணே. மீனோட உள்பாகங்களை பார்க்குறதும், அந்த செதில்களை சுத்தம் செய்யுறதும் பிடிக்குதாம்

      Delete
  2. அருமை......அப்பு வுக்கு டேங்க்ஸ்.......////என்னது செத்த நாக்கு உசிர் புழைச்சுக்குமா....ரைட்டு.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் சாப்பிட்டு பாருங்கண்ணே

      Delete
  3. வாவ்....
    கருவாடு பிரியனான எனக்கு படிக்க படிக்க எச்சில் ஊறியது அக்கா...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் செஞ்சு சாப்பிடுங்க சகோ

      Delete
  4. இந்த நெத்தலிக்கருவாடு எங்கள் ஊரில் அதாவது இலங்கையில் மிக பேமஸ், முக்கியமாக கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கிறார்கள். சிங்கள
    மக்களின் சமையலில் வாரத்திற்கு ஒரு முறையாவது இடம்பெறும். மிகவும் சுவையாக
    பலவகை ரெசிபிஸ் செய்வார்கள், மசாலாப் பொருட்கள் அதிகம் சேர்க்க மாட்டார்கள்.

    நெத்தலிக்கருவாட்டுடன் தக்காளி சேர்த்து சமைக்க கூடாதென இங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். காரணம் தக்காளியிலுள்ள ஒரு வகை அமிலம் கருவாட்டிலுள்ள
    சத்துக்களை முக்கியமாக கால்சியத்தை அழித்து விடுமாம். புளிப்புச் சுவைக்கு எலுமிச்சம்பழம் அல்லது கொடுக்காய்புளி பயன்படுத்தலாம். கிடைக்கும் போது புளிமாங்காயும் சேர்ப்போம்.

    அடுத்து இதை சுத்தம் செய்யும் போது அதிலுள்ள வெள்ளிக்கோடு அழியாமல் இருக்க
    வேண்டுமாம் அப்போது தான் இதிலுள்ள கல்சியம் சத்து முழுமையாக கிடைக்குமாம்.
    இதை நான் சொல்லவில்லை இங்குள்ள DIETITIANS சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ. எங்க ஊர்லயும் தக்காளி சேர்க்காம புளி சேர்ப்பாங்க. ஆனா, தக்காளி சேர்த்தா சத்து போய்டும்ன்னு இப்பதான் கேள்விப்படுறேன்.

      Delete
  5. மகனை கருவாடு கழுவ விட்டுட்டு மூஞ்சி புத்தகத்துல உட்காரும்போது அயித்தான் வீட்ல இல்லையோ...

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும், கேள்வி கேட்டு.. அப்புறம் அடி வாங்குறதாம்?!

      அப்புவை திட்டுவாங்க.உனக்கு இது தேவையாடா?! உன் அம்மாக்கு எடுபிடி வேலை செய்யாம போய் படின்னு.. ஆனா அவனுக்கு இதுலலாம் கொஞ்சம் விருப்பம்... சமையல்போது காய் நறுக்க, தோட்ட வேலை செய்யன்னு.. மத்தபடி சாப்பிட்ட பிளேட்டைகூட கழுவமாட்டான்.

      Delete
  6. அய்...மணமான கருவாட்டு குழம்பு...

    நீங்க சொன்ன மாதரி இங்கயும் நாக்கு செத்து போச்சு தான்...ராஜிக்கா..

    குழம்பு பார்க்கவே ருசியா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடவும் நல்லா இருக்கும். கருவாடு அதிகமா வெந்தா குழம்புல கரைஞ்சிடும். அப்புறம் முள்ளு வாய்க்கு வாய் அகப்பட்டு இம்சிக்கும்

      Delete

  7. விரதத்தோட மச்சத்த விடலாம் என்று பார்தேன் வாரவருசம் பார்போம் இப்ப நேத்தலிய ஒரு பிடி பிடிப்போம்

    ReplyDelete
  8. ஆகா
    வாசனை தஞ்சாவூர் வரை வந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியே வாசம் பிடிச்சு வீட்டுக்கு வாங்கண்ணே

      Delete
  9. வோட்டு மட்டும் போட்டு விட்டு அம்பேல் ஆகிக்கறேன்!!!!

    ReplyDelete
  10. நெத்தலியில் கல்சியம் மட்டுமல்ல பொஸ்பரஸ் சத்தும் அதிகமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. குறைந்தளவு கொழுப்பு இருக்குறதால யார் வேணும்ன்னாலும் சாப்பிடலாம்

      Delete
  11. விரதம் முடிந்தவுடன் கலைகட்டுது போல சமையல்

    ReplyDelete
    Replies
    1. எஸ், கிட்டத்தட்ட 50நாளுக்கு மேல வாயை கட்டியாச்சு. இனி கலை கட்டும்...

      Delete
  12. என்னடா நாத்தம் இது...உவ்வே....... மீன் பண்ணதுதான் பண்ணீங்க அதை மூடி போட்டு மூடி வைக்க கூடாதா.... நாலு பேர் வந்து போற இடம்...ஹும்

    ReplyDelete
    Replies
    1. ஐயே! பார்த்து... பார்த்து.. இதுக்கு முன்னாடி நீங்க மீன், கருவாடுலாம் பார்த்தது இல்லப்பாரு. இதுலாம் ஓவர் ஆக்டிங்க்...

      Delete
  13. ஓட்டு போட்டாச்சு தாமதமாகிவிட்டது. கணினிப் பிரச்சனை...

    இந்த ரெசிப்பி.. சரி விடுங்க... நெத்திலிக்குப் பதிலா ஏதாவது காய் சேர்த்து செய்வதுண்டே...உருளை, காலிப்ளவர், இப்படி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க நான் வெஜ் சாப்பிடமாட்டீங்களா?! சாரி சாரி

      Delete
  14. வேண்டாத பதிவு(எனக்கு)

    ReplyDelete