காய்ச்சல்ல விழுந்திட்டா நொய் கஞ்சி, பால், பிரட், இட்லி, இடியாப்பம்ன்னு கைக்குழந்தை வாய்ல முத்தம் கொடுத்த மாதிரி சப்ப்ப்ப்புன்னு சாப்பாடு கொடுப்பாங்க. காய்ச்சல் போனதும் காரம், புளிப்பு கம்மியா பருப்பு வேக வச்ச தண்ணி வடிக்காம சாம்பார் வச்சு லேசா மிளகு தட்டிப்போட்டு தொட்டுக்க நார்த்தங்காய் இல்லன்னா கிச்சிலி ஊறுகாய் கொடுப்பாங்க. அப்படியும் நாக்கின் உணர்ச்சி நரம்புகள் வேலை செய்யலைன்னா வெறும் ரசம்ன்னு சொல்லப்படுற கொட்டு ரசம் வச்சு தொட்டுக்க துவையல் கொடுப்பாங்க. சூடான சாதத்துல இந்த ரசத்தை ஊத்தி சாப்பிட்டா மாம்சுக்கு கொடுக்குற லிப்கிஸ் மாதிரி சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மிளகு
சீரகம்,
பூண்டு
மிளகாய்
புளி
உப்பு
மஞ்சப்பொடி
பெருங்காயம்
கறிவேப்பிலை
புளியை சுத்த பண்ணி ஊற வெச்சுக்கனும்....
மிளகு, சீரகம், பூண்டு, மிளகாயை வறுக்காம பச்சையா தண்ணி ஊத்தி அரைச்சுக்கனும்...
ஊற வச்ச புளியை கரைச்சு வடிகட்டிக்கனும், அதில் அரைச்ச மிளகு, சீரக விழுதை போட்டு கரைச்சு மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்.....
பச்சை கறிவேப்பிலையை புளிக்கரைசலில் போட்டு நல்லா கசக்கி விட்டுக்கனும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
பெருங்காயம் சேர்த்துக்கோங்க... இந்த ரசம் பொங்கியோ இல்ல கொதிக்கவோ கூடாது. நல்லா சூடேறி நுரைச்சுக்கிட்டு வரும்போது, அந்த நுரை மேல ஒரு கரண்டி தண்ணி ஊத்தி அடுப்பை அணைச்சுடனும்... இதுக்கு தொட்டுக்க தேங்காய், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைச்ச துவையல் சூப்பரா இருக்கு. நாவின் சுவை அரும்புகள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
அகத்தை சீர் செய்யும் சீரகம், பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்ன்னு சொல்லும் நச்சுக்கொல்லியான மிளகு, ஜீரண உறுப்புகளை தூண்டும் கறிவேப்பிலை, பெருங்காயம்ன்னு சேர்த்து, எண்ணெய் சேர்க்காம இருக்குறதால இந்த ரசம் உடலுக்கு மிக நல்லது.. தக்காளி, பருப்பு தண்ணிலாம் சேர்க்காததால சீக்கிரம் கெட்டு போகாது. வெளில வச்சாலே மூணு நாலு நாளைக்கு வரும்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
ராஜி.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteபயனுள்ள வகையில் உள்ளது
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅருமை.......... நானும் தான் ரசம் வைக்கிறேன்.ஹும்........வெள்ளிக்கிழம ட்ரை பண்ண வேண்டியதான்...... நன்றி ரசத்துக்கு.
ReplyDeleteரசம்?! வெளியூருக்கு போய் வீட்டு சாப்பிடில்லாம நா காய்ஞ்சு வந்தபோது உன் மாப்ளை ப.மிளகாயை போட்டு ரசம் வச்சார்... என்னா ருசி?! வாய்க்கு கொண்டு போகும்போதே மிளகாய் நெடி.... முகத்தை சுளிச்சுட்டேன். இப்ப நினைச்சா அது தப்புன்னு தோணும்...
Delete//மாம்சுக்கு கொடுக்குற லிப்கிஸ் மாதிரி சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும். //
ReplyDeleteஹா..... ஹா.... ஹா...
ரசத்தின் படம் ரசம்! சுவைக்கத் தூண்டுகிறது.
உப்பு சப்பில்லாம எதாவது பண்டம் இருந்தா ’இது என்ன பச்ச புள்ள வாய்ல முத்தம் கொடுத்த மாதிரின்னு என் அப்பா சொல்வார். அதை இங்க சேர்த்தாச்சு. பச்சை குழந்தை வாய் சப்புன்னு இருந்தா லவ்வுறங்க வாய் சுர்ருன்னுதானே இருக்கும்?!
Deleteநன்றிசகோதரியாரே
ReplyDeleteதம=1
நன்றிண்ணே
Deleteஎன்னதான் மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், மருத்துவரைப் பார்த்தாலும் இதற்கு ஈடாகாது.
ReplyDeleteஆமாம்ப்பா..
Deleteஇரசம் சுவை அருமை! த ம 6
ReplyDeleteநன்றிப்பா
Deleteரசம் தெரியும் நீங்கள் சொன்ன குறிப்புடன் ஆனால் நீங்கள் போட்ட இருக்கும் படங்கள் புதுமையோ என்ற தோற்றத்தை தந்துவிட்டது
ReplyDeleteஎன் மனைவிக்கு முடியவில்லை என்றால் இந்த மாதிரி ஏதாவது செய்வாள் கைக்குழந்தை வாயில முத்தம் , மாம்சுக்கு கொடுக்கிற லிப்கிஸ் ரசித்தேன் அது சரி இதில் மாம்ஸ் என்பது யாரை குறிக்கிறது
ReplyDeleteThanks
ReplyDelete