Tuesday, August 21, 2018

பஜ்ஜி - கிச்சன் கார்னர்

பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது வீட்டை சுத்தம் பண்ணுறது, பொண்ணுக்கு மேக்கப், சொந்தம் பந்தம்லாம் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு கேசரியும்,பஜ்ஜியும் முக்கியம்ன்னு நம்ம தமிழ் சினிமாவுலயும், சீரியல்லயும் சொல்றாங்க. ஆனா, நிஜத்துல அப்படி இல்ல. ஹோட்டல்ல வாங்கின ஸ்வீட்டும் மிக்சரும்தான் கொடுக்குறாங்க. 

இந்த பஜ்ஜியை வச்சுக்கிட்டு நம்மாளுங்க பண்ணுற அலப்பறை இருக்கே. ஐயோ சாமி! எண்ணெய்ல குளிச்சு வந்த பஜ்ஜி வேணுமாம். ஆனா, அது மேல இருக்கும் எண்ணெய் மட்டும் வேணாமாம். தூசு, தும்பும் இருக்கும் பேப்பர் ரெண்டு எடுத்து அதுக்கு நடுவுல பஜ்ஜியை வச்சு லேசா அழுத்தி எண்ணெய்லாம் பிழிஞ்சு எடுத்திட்டு அப்புறமா சாப்பிடுவாங்க. பேப்பர்ல இருக்கும் அச்சு மை, தூசியை விட எண்ணெய் எவ்வளவோ பரவாயில்லன்னு சொல்லத் தோணும்.  ஆனா, சொன்னாலும் அவங்கலாம் ஏத்துக்க மாட்டாய்ங்க. 

என்  வீட்டில் எல்லாருக்கும் பஜ்ஜின்னா கொள்ளைப் பிரியம். ஆனா, எனக்கென்னவோ பிடிக்கறதில்ல. வெங்காயம், உருளை பஜ்ஜின்னா ஒண்ணொன்னு எடுத்துப்பேன். 

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் (அ) பெரிய வெங்காயம் (அ) உருளை(பிரட், காளிஃபிளவர், அப்பளம்ன்னு  இப்ப புதுசு புதுசா  பஜ்ஜி வருது. 
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
சோயா மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா -  சிறிது
இஞ்சி பூண்டு விழுது - சிறிது
வெறும் மிள்காய் தூள் - சிறிது
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
விருப்பப்பட்டா கலர் பவுடர் சேர்த்துக்கோங்க. நான் சேர்த்துக்கலை. 

வாழைக்காய்(அ) வெங்காயம் (அ) உருளைகளை தோல் சீவி,   மெல்லிசா சீவி தண்ணில போட்டுக்கோங்க. 

அகலமான கிண்ணத்துல மிளகாய் தூள் போட்டுக்கோங்க. 
அடுத்து ஆப்ப சோடா சேர்த்துக்கோங்க. 
அடுத்து தூள் உப்பு சேர்த்துக்கோங்க.

அடுத்து கடலை மாவு சேர்த்துக்கோங்க. 

இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணி விட்டு கொஞ்சம் கெட்டியா தோசை மாவு பதத்துக்கு மாவு கரைச்சுக்கோங்க. 

அடுப்பு பத்த வச்சு வாணலில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், சீவி வச்சிருக்கும் காய்களை பஜ்ஜி மாவில் ரெண்டு பக்கமும் மாவுல முக்கி எண்ணெய்ல போட்டு சிவந்ததும் எடுக்கவும்.


சூடான பஜ்ஜி ரெடி. 

எப்பயோ நான் பஜ்ஜி செய்யும்போது என்னோடு செல்லம் கௌதம்..  அதுலாம் ஒரு கனாக்காலம்.

மீள்பதிவு
நன்றியுடன்,
ராஜி. 

10 comments:

  1. Replies
    1. எனக்கு பிடிக்காதுண்ணே

      Delete
  2. என்ன காரணம் பஜ்ஜி ஏதும் வீட்டில் மருமகளுக்கு கல்யாண ஏற்பாடா ?

    ReplyDelete
    Replies
    1. வரன் ஆரம்பிச்சிருக்கு. இப்பதான் வேலையில் சேர்ந்திருக்கா. நாங்கதான் இன்னும் முழுமூச்சா இறங்கலை. ஒரு ஆறு மாசம் போகட்டும்ன்னு இருக்கோம்.

      Delete
  3. பஜ்ஜி செய்வதும் ஒரு கலை... அதைவிட வாழைக்காய் பெரிய அளவில் சீவுவது... அதைவிட வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயத்தைப் பிரியாமல் சீவி போடுவது....!!!

    பஜ்ஜி படம் ஈர்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் வெட்ட பயந்துக்கிட்டுதான் பஜ்ஜி செய்வதையே நிறுத்திட்டேன்.

      Delete
  4. பஜ்ஜி.... எப்போதாவது சாப்பிட ஓகே.

    இங்கே நானே செய்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நான் எப்பவாவதும்கூட பஜ்ஜி சாப்பிட பிடிக்குறதில்ல. சும்மா பசங்களுக்காக ஒரு பஜ்ஜி.

      Delete
  5. மாலை நேர டிபனுக்கு பஜ்ஜி தான் எளிதில் செய்யக் கூடியது

    ReplyDelete
  6. வாழைக்காயை சீவி இருக்கும் அழகும் பஜ்ஜி சூடாகப் பொரியும் அழகும் பஜ்ஜியை உடனேயே செய்யத்தூண்டுகின்றன!

    ReplyDelete