Monday, December 24, 2018

தன் உருவத்தை தானே வடிவமைச்ச ஆடலரசன் - ஐஞ்சுவை அவியல்

நேத்து ஆருத்ரா தரிசனம்ன்னு கோவிலுக்கு போனியே! நல்லா சாமி கும்பிட்டியா மாமா?!

ம்ம் நல்லபடியா தரிசனம் ஆச்சு.  நீதான் வரலைன்னுட்டே...

உனக்கே எல்லா புண்ணியமும் கிடைக்கட்டும். எனக்கு வேணாம். அதான் டான்ஸ் ஆடுறதுன்னு சிவன் முடிவு பண்ணியாச்சுதுல்ல. அப்புறம் எதுக்கு பல போஸ்ல நின்னுக்கிட்டு இருக்கார்?வெவ்வேற போஸ்ல இருந்தா பார்க்க நல்லா இருக்கும். அதை விட்டு..

அடிப்பாவி! நடராஜர் உருவ அமைப்பு உனக்கு போரடிக்குதா?! அந்த உருவ அமைப்பை கொண்டு வர ஒரு சிற்பி எப்படி அல்லல்பட்டார்ன்னு தெரியுமா?! தன் உருவம் இப்படிதான் இருக்கனும்ன்னு சிவனே வந்து மாடலா நின்னிருக்கார். 

அப்படியா?! இதென்ன மாமா புதுக்கதை?!

சோழமன்னர் கண்டராதித்த சோழரும், சோழப்பிராட்டியான செம்பியன்மகாதேவியும் பல பழைய கோவில்களைலாம் புதிப்பிச்சிருக்கார், புதுசா நிறைய கோவில்களை கட்டியும் இருக்கார். அந்த வரிசையில் ஒரு பழைய கோவிலை புதுப்பிக்கும் ஆசை செம்பியன்மகாதேவிக்கு வந்திருக்கு.  அக்கோவிலில் அழகான ஆறடி உயரமுள்ள நடராஜர் சிலையை கருவறையில் வைக்கனும்ன்னு செம்பியன்மகாதேவியின் விருப்பம். தன் விருப்பத்தின்படி சிற்பியிடம் ஒரு பஞ்சலோக சிலையை செய்ய ஆணையிட்டார். ராணியின் ஆணையின்படி சிற்பியுயும் ஒரிரு சிலைகளை செய்ய அதை ராணி எதாவது ஒரு குறை சொல்லிக்கிட்டே ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு  அவங்க மனசில் நினைச்ச மாதிரி சிலை உயரமாகவும் உயிரோட்டமாவும் இருக்கனும்ன்னு ஆணையிட்டு, நாட்களும் கடந்து போச்சுது.

பொறுமையை இழந்த ராணி, தன் மனசில் இருக்குற மாதிரியான சிலையை குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் செய்துமுடிக்கனும். இல்லன்னா, தலை துண்டிக்கப்படும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.  காலக்கெடு குறைய குறைய சிற்பிக்கு பதட்டம் அதிகரிச்சுதே தவிர சிலை வந்தபாடில்லை. கடவுளே! தனக்கேன் இந்த சோதனைன்னு இறைவனை வேண்டியபடி, அவர் கொதித்துக்கொண்டிருக்கும் பஞ்சலோக குழம்பை, தான் செய்துள்ள அச்சில் ஊற்றுபோது, ஒரு வயசான தம்பதிகள் வாசலில் வந்து நின்று, தாகம் தீர்க்க குடிக்க எதாவது கொடுக்கச்சொல்லி கேட்டாங்க. உயிர்போகும் டென்ஷன்ல இருந்த சிற்பி, தாகமா இருந்தால், இந்த உலோக குழம்பை குடிங்கன்னு கையிலிருந்த உலோகக்குழம்பை நீட்டி இருக்கார். அந்த தம்பதிகளும் யோசிக்காம அதை வாங்கி குடிச்சுட்டாங்க. வயசான தம்பதிக்கு என்னாகுமோன்னு சிற்பி திகைச்சு நிற்கும்போதே, அந்த வயசான ஆண் வலக்காலை ஊன்றி,இடக்காலை தூக்கி,  நடனமுத்திரை காட்டியபடி நிற்க, வயதான பெண், அவரை வணங்கும் கோலத்தில் அருகில் இருக்க, மனித உருவம் மறைந்து ஆறடிக்கு உயிரோட்டமுள்ள சிலாரூபம் தோன்றியது.  சரியாய் அந்தவேளையில் அங்குவந்த ராஜாவும், ராணியும் ரோமக்கால்கள், நகங்களுடன் ஆறடியிலிருந்த சிலாரூபத்தை கண்டு வியந்து, சிற்பியை பாராட்டினர். அங்கு நடந்தவற்றை சிற்பி கூற, ராஜாவால் இதை நம்பமுடியவில்லை.  இது கற்பனைக்கதை என நினைத்து, கோபங்கொண்டு, சிற்பியை வெட்ட, து தன் வாளை ஓங்கினார் ராஜா. சிலையின் வலது காலில் வாள் பட, வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் பீச்சியடித்தது. ராஜாவிற்கு குஷ்டரோகம் ஏற்ட்டது.  தன் குற்றத்தை உணர்ந்த ராஜா ஈசனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனும் ராஜாவிடம் இந்த நோயிலிருந்து குணமடைய  இங்குள்ள வைத்யநாத சுவாமிக்கு நாற்பத்திரண்டு நாட்கள் அபிஷேகமும் பிரார்த்தனையும் செய்யுமாறு கூறினார். அதேமாதிரி, ராஜாவும் இறைவனை வணங்க, தன் நோயை குணமாக்கிக்கொண்டார். இப்பவும் அந்த கோவிலுக்கு நோயினால் பாதிக்கப்பட்டவங்க வந்து வேண்டிக்கிட்டு குணமாகுறாங்க.  தன் உருவம் இப்படி இருக்கனும்ன்னு வந்து சிவனே சிலையாய் உருமாறிய இடம் திருநல்லம்ன்ற ஊர். இது கும்பக்கோணத்துக்கு பக்கத்தில இருக்கு.

ஓ!அப்படியா மாமா!?
அதேமாதிரி ஒரு நடராஜர் சிலையை வடிக்க சிற்ப விதி இருக்கு. அது என்னன்னா, நடராஜருக்கு அபிஷேகம் செய்யும்போது, தண்ணி, பால், இளநீர், தயிர், தேன்ன்னு ஊற்றும்போது, தலையில் ஊற்றும்போது அது வழிந்து இடதுக்கை வழியாக இடதுகாலில் விழுந்து அங்கிருந்து பூமியை தொடனும். இப்படி அமைஞ்சிருந்தா அந்த சிற்பம் பரிபூரண சிற்பவிதிப்படி அமைஞ்ச நடராஜர் சிலை. இல்லன்னா பழுதானதுன்னு அதை வாங்காம விட்டுடலாம். கடையில் வாங்கும்போதே கொஞ்சம் பால், இல்ல தண்ணிய இடதுகையில் விட்டு பார்த்து வாங்கனும்...
சின்னவளுக்கு நூடுல்ஸ்ன்னா ரொம்ப பிடிக்குது. மதிய நேரத்துலகூட இதை சாப்பிடுறா. பார்க்கவே எனக்கு பிடிக்கல.  நம்ம ஊரு சாப்பாட்டை சாப்பிட்டால்தானே உடம்புக்கு நல்லது. இதையெல்லாம் எவன் கண்டுபிடிச்சானோ தெரியல மாமா.

நூடுல்ஸ்சின் தாயகம் சைனா.  ஆனா, நூடுல்ஸ்ன்ற வார்த்தை லத்தீன் மொழிக்கு சொந்தம், நூடுல்ஸ்ன்னா முடிச்சுன்னு அர்த்தம். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கிண்ணம் ஒன்னு நூடுல்ஸ்சோடு சைனாவிலிருக்கும் சிங்ஹாய் மாகாணத்தில் 2002ல கிடைச்சிருக்கு.  . லஜியாவில் இருக்கும் தொல்பொருள் ஆய்வு நடத்தும் இடத்தில் அங்கிருந்த படிவங்களுக்கு 3மீட்டருக்கடியில் ஒரு மண்பாண்டத்தில் நூடுல்ஸ் நிறைஞ்ச கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது. 4000 வருசத்துக்கு முந்தி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட இடம்தான் லஜியா. இதற்கு முன்னதாக, கி.பி. 25 மற்றும் 220-க்குள் சைனா கிழக்கு ஹான் வம்சாவளியினர் வாழ்ந்தபோது எழுதப்பட்ட புத்தகத்தில் நூடுல்ஸ் பற்றிய குறிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.  

தோல்வியை சந்தித்த தாய்வான்-ஜப்பானிய தொழிலதிபர் மொமொஃபுக்கு அண்டோ, ஜப்பானில் போருக்கு பின் மக்கள் பசியுடன் இருந்ததை பார்த்து அவர்களுக்கு உணவளிக்க ஒரு வழியை கண்டுபிடிக்க முனைந்தார். போதுமான அளவு உணவு இருந்தால்தான், உண்மையான அமைதி பிறக்கும் என்று அவர் நம்பினார். அதனால்,  ஒசாகாவில் தனது குடிசையின் பின்புறத்தில் ஒரு வருடம் ஓயாமல் உழைத்தார் அண்டோ. அப்போது அவர் கண்டுபிடித்ததுதான், உலகில் இப்ப பிரபலமாக இருக்கும் சிக்கன் ரேமன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். . 1958ஆம் ஆண்டு முதன்முதலில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விற்பனைக்கு வந்தது. அப்பல இருந்து  கொஞ்சம் கொஞ்சமா மாறி இன்றைய இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் நிலைக்கு வந்திருக்கு. . உலக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அமைப்பின் ஆய்வுப்படி, உலகெங்கிலும் தினத்துக்கு சுமார் 270 மில்லியன் மக்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறாங்க. போனவருசம் மட்டும்  உலகம் முழுக்க 100 பில்லியன் கிண்ணம் நூடுஸ்ஸ் சாப்பிட்டிருக்கோம். இதில் 38 பில்லியன் கப் சைனாவில் மட்டும் வித்திருக்கு.  இந்த நூடுல்ஸ்க்குன்னே தனியா அருங்காட்சியகங்கள்லாம் இருக்கு. இங்க விதம்விதமான நூடுல்ஸ் சாப்பிட கிடைக்கும். சாப்பிட்டுக்கிட்டே, நூடுல்சின் வரலாறுகளையும், தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம்.
பொதுவா சாப்பிடும்போது சத்தமா உறிஞ்சுவதும், சப்புக்கொட்டி சாப்பிடுறதும் அசிங்கமா பார்க்கப்படும். ஆனா, நூடுல்ஸ் சாப்பிடும்போது சத்தம் வரலாம்.  அப்படி சத்தம் வந்தா, நூடுல்ஸ் ருசியா இருக்குன்னு அர்த்தம். புத்தாண்டு, பிறந்த நாள் விழாக்களில் நீளமா இருக்கும் நூடுல்ஸ் கிடைச்சா நீண்ட ஆயுள் கிடைக்குமென்பது சீனர்களின் நம்பிக்கை.  ஓக் மரக்கொட்டையிலிருந்து செய்யப்படும் ஒரு நூடுல்ஸ் வகை கொரியாவில் பிரபலம். ஓக் கொட்டையிலிருந்து செய்யப்படும் மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து அந்த மாவில்தான் நூடுல்ஸ் தயாரிக்கப்படும். சிவப்பு மற்றும் வெள்ளை ஓக் மரக் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவுக்கென தனித்தனி ருசி உண்டு. 
போதும் போதும்! அவ நூடுல்ஸ் சாப்பிடுறதைவிட நீ இப்படி பாடமெடுக்குறதுதான் இம்சையா இருக்கு. என்னைய ஆளைவிடு சாமி.. இப்படிலாம் லெந்த்த்தா பேசி போரடிக்கக்கூடாது.  நச்சுன்னு இந்த படத்திலிருக்க மாதிரி சுருங்க சொல்லனும்.. ஒரு முட்டை உடைஞ்சு அற்பாயுசுல போயிடுச்சுன்னு மத்த முட்டைலாம் வருத்தப்படுதாம்.
சரி, இனிமே அப்படியே நடந்துக்கிறேன். இப்ப போய் சூடா ஒரு கப் நூடுல்ஸ் செஞ்சு கொண்டுவா..

நன்றியுடன்,
ராஜி

12 comments:

 1. ராணி மனதில் நினைத்தபடியே சிற்பி சிலை வடிக்கவில்லை என்றால் சிற்பியின் தலையை துண்டிப்பது நியாயமா ?

  இப்படி கேடுகெட்டவளை ராணியாக மக்கள் நினைப்பதே பாவம்.

  முதலில் இவளது தலையை வெட்டணும்.

  நூடுல்ஸ் இப்ப குழந்தைகளை ஆட்டி வைக்குது உடம்புக்கு பல விளைவுகளை உண்டாக்குவதாக படித்தேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. செம்பியன்மகாதேவி இயல்பாவே ரொம்ப அன்பானவர்ன்னு வரலாற்று குறிப்புகள் சொல்லுது. அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. சிலையை பத்தி நாம சிலாகிச்சுக்கனும்ன்னு சுவாரசியத்துக்காக இப்படி சொல்லி இருக்கலாம்.

   ஒருவேளை நிஜமாவே இது நடந்திருந்தால், அப்படி ஒரு கட்டளையிட இறைவன் ராணியை தூண்டி இருக்கலாம்.

   Delete
 2. நடராஜர் சிலை சரியா என்று கண்டுபிடிக்கும் டெக்னிக் தெரிந்துகொண்டேன். நூடுல்ஸ் தகவல் சுவாரஸ்யம். 1958லேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? அட!

  ReplyDelete
  Replies
  1. நூடுல்ஸ் 4000 ஆண்டுகளுக்கு முந்தியே கண்டுபிடிச்சாச்சு. ஆனா, இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்தான் 1958ல கண்டுப்பிடிக்கப்பட்டது.

   Delete
 3. எதுக்கு பல போஸ்ல நின்னுக்கிட்டு இருக்கார்?வெவ்வேற போஸ்ல இருந்தா பார்க்க நல்லா இருக்கும். அதை விட்டு..//

  ராஜி பல போஸ்ல தானே நிக்கிறார் அப்புறம் என்ன...ஹா ஹா ஹா ஒரே போஸ்னு வந்துருக்கனுமோ?!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. டங்க் ஸ்லிப் மாதிரி கை ஸ்லிப் ஆகிடுச்சு கீதாக்கா. பெருசுப்படுத்தாதீங்க.

   Delete
 4. அந்த சிற்பம் பரிபூரண சிற்பவிதிப்படி அமைஞ்ச நடராஜர் சிலை. // எப்படினு தெரிஞ்சுகிட்டாச்சு ராஜி...அப்புறம் நூடுல்ஸ் தகவல் ஸ்வாரஸ்யம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நூடுல்சால் பல கெடுதல்கள் வருது கீதாக்கா. எப்பவாவது ஒருமுறை சாப்பிட்டா பரவாயில்லை. என் சின்ன பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா, எப்பவாவது வெளியில் போகும்போது வாங்கி தருவோம். வருசத்துக்கு ஓரிரு முறைதான். ஆனா, காலேஜ் கேண்டீன்ல எத்தனை முறையோ?! யாருக்கு தெரியும்?!

   Delete
 5. சிலை நுட்பம் தகவல் சிறப்பு 👌.

  நூடுல்ஸ் எனக்குப் பிடிக்காத உணவு.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பிடிக்காது. ஆனா சின்ன பொண்ணுக்கு பிடிக்கும்ண்ணே

   Delete
 6. நூடுல்ஸ் வரலாறு அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete