கார்த்திக் படம்ன்னா விரும்பி பார்ப்பேன். அதுக்காக மத்த நடிகர் படங்களை பார்க்காம இருந்ததில்லை. ஆனா, விஜய்ன்னா மட்டும் எரிச்சலா வரும். ஆனாலும், விஜய் நடிச்ச லவ் டுடே, பூவே உனக்காக, யூத், துள்ளாத மனமும் துள்ளும்.. இந்த மாதிரி படங்கள் பிடிக்கும். பஞ்ச் டயலாக் பேசி, அஜீத், சூர்யாவை வம்புக்கிழுக்கும் வசனைங்கள், அரசியல் ஆசை என தன்னோட வழக்கமான நடிப்புல இருந்து விலகி நடிச்ச படங்கள் இவையெல்லாம். அதனாலோ என்னமோ பிடிக்கும். இதுல ரகுவரன் விஜய்க்கு அப்பாவா வருவார். ரொம்ப நல்லா நடிச்சிருப்பார். கோகுலத்தில் சீதையில் வந்த அதேமாதிரிதான் சுவலட்சுமி கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்.
லவ் டுடேவில் அத்தனை ஹாண்ட்சம்மா இருப்பாரு விஜய். நாலு வருசமா ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருப்பார். ஆனா, அந்த பொண்ணு பதிலே சொல்லாது. படத்துல இருமுறை வரும் இந்த பாட்டு. முதல்ல காதலிலும், இன்னொருமுறை எத்தனை சொன்னாலும் புரிஞ்சுக்கலியேன்னு ஒருமாதிரி விரக்தியான மனநிலையில் அமைஞ்ச பாட்டு.
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?!
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?!
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?!
என் உயிர்பூவை பறித்தாய்?!
முதல்நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்!!
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்!!
என் வலிதீர ஓர் வழி என்ன?!
என் பனிப்பூவே மீண்டும் பார்த்தால் என்ன?!
நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்...
உன் வாயால் என் பெயர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன் ..
தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
இல்லை நீயே கொல்லியிடு...
ஏன் பெண் என்று பிறந்தாய்?!
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?!
நோகாமல் பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!!
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன்!!
நீ என்னை பார்த்தால்தான் துடிக்குது உள்ளம்!!
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!!
இமயம் கேட்கும் என் துடிப்பு..
ஏனோ உனக்குள் கதவடைப்பு?!
ஏன் பெண் என்று பிறந்தாய்?!
ஏன் என் கண்ணில் விழுந்தாய் ?!
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?!
என் உயிர் பூவை எரித்தாய்?!
ஏன் பெண் என்று பிறந்தாய்?!
ஏன் என் கண்ணில் விழுந்தாய் ?!
நான் தலைசாய்ந்து தொழுதேன்
என் தலைமீது நடந்தாய்!!
உறவை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய், உலகாய் உனையே நினைத்தேன்.
இந்த உலகையெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப்பூவே உன்னை பார்த்தால் போதும்!!
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும்
நீ தீண்டி விட்டால் உயிர்ப்பேன்
ஒரு முறை முகம் பார்க்க துடிக்குது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களில் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா ?
இதுதான் காதல் சரித்திரமா ?
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனி பூவே உன்னை பார்த்தால் போதும்
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
படம் : லவ் டுடே
பாடல் : வைரமுத்து
பாடியவர் : உன்னி கிருஷ்ணன்
இசை : சிவா
மிகவும் ரசிக்கும் பாட்டு (அது ஒரு கனாக் காலத்தில்...!)
ReplyDeleteஅதுபத்திய பதிவு வருமா?!
Deleteகேட்டிருக்கிறேன், நல்ல பாடல்.
ReplyDeleteஉங்களுக்குதான் உன்னிக்கிருஷ்ணன் பாட்டே பிடிக்காதே சகோ.
Deleteநல்ல பாடல் அடிக்கடி கேட்டதில்ல...இப்ப கேக்கும் போது கேட்டுருக்கமோன்னு தோனிச்சு..ஹா ஹா ஹா கல்யாணி ராகத்துல அமைஞ்ச பாடல்...பல்லவி நல்லாருக்கும்...படம் பார்த்தது இல்ல...
ReplyDeleteகீதா
படமும் நல்லா இருக்கு கீதாக்கா. நமக்கு இந்த ராகம்லாம் தெரியாது.
Deleteஅருமையான பாடல்
ReplyDeleteஎன்னோடு சேர்ந்து பாடலை ரசித்தமைக்கு நன்றிண்ணே
Delete