Tuesday, December 04, 2018

செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி - கிச்சன் கார்னர்

நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க. அதுமாதிரி அசைவ பிரியர்களுக்கு பிராய்லர் கோழிக்கறி இன்றி எதும் அமையாது. ஆட்டுக்கறி, நாட்டுக்கோழியைவிட விலை குறைச்சல், நாட்டுக்கோழியைவிட சதைபத்தானது. சமைக்க ஈசி, நாட்டுக்கோழின்னா நாமதான் உசுரோட வாங்கி வந்து அறுத்து சுத்தம் பண்ணனும். ஆனா, பிராய்லர் கோழிக்கதை அப்படி இல்ல. சதைப்பத்தா இருக்கும். கோழியின் உசுரை எடுக்கும் வேலையோ இல்ல சுத்தம் பண்ணும் வேலையோ இல்ல. கொல்லும் பாவத்திலிருந்து தப்பிச்சுக்கவும் ஒரு சாக்கு. அதனால, பிராய்லர் கோழி விற்பனை அமோகமா இருக்கு. ஆனா, எத்தனைக்கெத்தனை ருசியும், விலைக்குறைச்சலும், வேலையை மிச்சம் பண்ணாலும் பிராய்லர் கோழிக்கறி ஸ்லோபாய்சன் என்பதை மறுக்கமுடியாது.

அசைவ பிரியர்களின் தவிர்க்க முடியாத உணவாகிப்போன பிராய்லர்கோழி வளர மொத்தம் 12 கெமிக்கல் பயன்படுத்தப்படுது. அந்த கோழிக்கறியை சாப்பிடுறதால நம்ம  எலும்புகளில் இருக்கும் சத்து மெல்லமெல்ல அழியுது, மஞ்சள் காமாலை,  இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என வியாதிகளின் எண்ணிக்கை உயர்ந்துக்கிட்டே போகுது. ஊசிகளின் மூலமாகவே பிராய்லர் கோழிகளின்  தசை வளர்ச்சி நடக்குறதால  இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் அபாயமும் உண்டாகும். கவனிச்சு பார்த்தா நாட்டுக்கோழியை முட்டையில் மஞ்சக்கரு அதிகமாவும், வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும். ஆனா, பிராய்லர் கோழியில் வெள்ளைக்கரு அதிகமாவும், மஞ்சக்கரு குறைச்சலாவும் இருக்கும்.  மஞ்சக்கருவில்தான் நல்லது செய்யும் கொலஸ்ட்ரால் இருக்கு. ஊட்டச்சத்து வேண்டியவங்க பிராய்லர் கோழிமுட்டையை சாப்பிடுவதால் நோ யூஸ்..

மாதவிடாய் கோளாறுகள், சிறுவயதிலேயே பூப்படைவது, ஆண்மைக்குறைவு, உடல் எடை அதிகரிப்பு, இதய பிரச்சனை என பல்வேறு உடல் உபாதைக்கு பிராய்லர் கோழி காரணமாகுது. இத்தனையும் தெரிஞ்சாலும் பிராய்லர் கோழிதான் அதிகளவு புழக்கத்திலிருக்கு. கிடைக்குதுன்னு சாப்பிடும் நம்மை குத்தம் சொல்வதா?! இல்ல கல்லா கட்டுனா போதும்ன்னு நினைக்கும் ஆட்சியாளர்கள், கோழிக்கம்பெனிக்காரங்களை சொல்றதான்னு தெரில.  

தேவையான பொருட்கள்..
சிக்கன்
சின்ன வெங்காயம்
தக்காளி
மிளகு,
சீரகம்,
சோம்பு,
தனியா
காய்ந்த மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சப்பொடி
உப்பு 
எண்ணெய்
கறிவேப்பில, கொத்தமல்லி, புதினா

கோழிக்கறியை சுத்தம் பண்ணிக்கனும். வெங்காயம், தக்காளியை கழுவி வெட்டி வச்சுக்கனும். வெறும் வாணலில மிளகு, சீரகம்,, சோம்பு, மிளகாய், தனியாவை வறுத்து பொடிச்சுக்கனும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு பொரிய விடனும்.
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கனும்...

இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கனும்...

 தக்காளியை சேர்த்து வதக்கனும். கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயமு, தக்காளியும் சீக்கிரம் வெந்துடும்.
சுத்தம் செய்து நல்லா கழுவி வச்சிருக்கும் சிக்கனை சேர்த்து வதக்கனும்...
 பொடிச்சு வச்சிருக்கும் தனியா, மிளகாய், மிளகு, சோம்பு, சீரகப்பொடியை சேர்த்து, காரத்துக்காக கொஞ்சம் மிளகாய் தூளையும், வாசனைக்காக கரம் மசாலா தூளையும்  சேர்த்து வதக்கி, தேவையான அளவுக்கு உப்பு தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்...
கறிவேப்பிலை, புதினா, கொ.மல்லி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினா செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெடி. என் அப்பாக்கு சிக்கன் குழம்பு தண்ணியா இருக்கனும். அதுமாதிரி ஆளுங்களுக்காக தேங்காய், முந்திரிப்பருப்பு சேர்த்து அரைச்சு சேர்த்து கொதிக்க விட்டா குழம்பு ரெடி. 

அடுத்த வாரம் ஒரு ஸ்வீட்டோடு வரேன்..

நன்றியுடன்,
ராஜி

13 comments:

 1. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 2. நீங்க ஸ்வீட்டோடு வரும்போது அன்னிக்கு வாரேன்.,,...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உங்க வீட்டுக்கு வரும்போது அப்ப புளியம்பிரியாணிதானா?! சோ சேட்

   Delete
 3. யக்கோவ் செய்முறை சூப்பர்......

  ReplyDelete
  Replies
  1. பாட்டன், பூட்டனாகிட்ட ஆட்கள்லாம் இந்த சின்ன பொண்ணை அக்கான்னு சொன்னா எப்பூடி தம்பி?! இமேஜ் பாதிக்காதா?!

   Delete
 4. சொல்றதை எல்லாம் சொல்லிட்டு செய்முறை வேற...

  ReplyDelete
  Replies
  1. சிகரெட் பாக்கெட்டிலும், சரக்கு பாட்டிலும் எச்சரிக்கை வாசகம் இருக்குதுல்ல. அதுமாதிரிதான்ண்ணே இதும்...

   Delete
 5. நல்லா இருந்தா சரிதான்!

  ReplyDelete
  Replies
  1. நல்லாதான் இருந்துச்சுது

   Delete