Friday, January 04, 2019

திரிம்பகேஸ்வரர் கோயில் -திரிம்பாக்,நாசிக் - ஷீரடி பயணம்

ஷீரடி பயணத்தின்போது தரிசித்த பஞ்சவடியிலுள்ள கோவில்களை தொடராக பார்த்துவந்தோம்.  பண்டிகைப்பணிகள் காரணமா தொடர முடியாமப்போனது. பஞ்சவடியை சுற்றியுள்ள கோவில்களின் ரீப்ளே. அஷ்ட கணபதி ஆலயங்கள், சனிசிங்கனாப்பூர், மற்றும் ஸ்ரீராஜ வீரபத்ராமந்திர் ஷீரடி ஜீவசமாதி கோவிலுக்கு செல்லும் வழியில் தரிசனம் செய்தோம். ஷீரடி தரிசனம் முடித்து நாசிக்கிலுள்ள  முக்திதாம் மந்திர், பஞ்சவடிக்கு போகும்வழியில் ஸ்ரீ கபாலேஸ்வரர் மந்திரில் தரிசனத்தை முடித்து கும்பமேளா நடக்கும் கோதாவரி ஆற்றையும் அதனை சுற்றியுள்ள இடங்களையும் பார்த்து, அங்கிருந்து கோரா ராம் மந்திர் மற்றும் காலாராம் மந்திர் தரிசனத்தை முடித்து,  சீதை கடத்தப்பட்ட இடமும் லட்சுமணன் ரேகாவையும் பார்த்தோம்.. இனி திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு பயணமானது வரை பார்த்தோம் .இந்த பதிவுகள் மூலம் முக்கியமாக பார்க்கவேண்டிய விஷயம் என்னன்னா இராமாயணகால சம்பவங்கள் நடந்த சில இடங்களின் மிச்சங்களை நம்மால் உணர முடிகிறது .
உதாரணமா. இராமாயணக்கதையின்படி ராவணன்  புஷ்பக விமானத்தில் சீதாதேவியை நாசிக் அருகே பஞ்சவடின்ற இடத்திலிருந்து இலங்கைக்கு தூக்கிச்சென்றான் என்று சொல்லப்படுது. அப்படி தூக்கிச்சென்ற பாதையை பற்றி குறிப்பிடும்போது ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியா தன் தலைநகரை அடைந்தான்  எனச்சொல்லப்படுது. இதிலொரு ஆச்சர்யம் என்ன்னன்னா?! இந்த ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) மற்றும் ஸ்ரீலங்கா எல்லாம் இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்குது. இது எத்தனை ஆச்சர்யமான விசயம்ன்னு  பாருங்க. 
அதேபோல் இராவணன் தீமையின் வடிவாக சில இடைச்சொருகலால் இராமாயணத்தையே திரித்து சொல்லி வைத்திருக்கிறார்கள். சில செவி வழிக்கதைகள் மூலம் கிடைக்கப்பட்ட செய்திகளை நமது தெரிந்த கதை தெரியாத உண்மை பதிவின் மூலம் பார்த்தோம். அதேசமயம் இராமன் மற்றும் லட்சுமணன் தங்கள் வனவாசத்தின்போது கடைசி இரண்டரை வருடங்களை இந்த பஞ்சவடியில் உள்ள நாசிக்கில் உள்ள தபோவனத்தில் உள்ள தண்டகாரண்ய வனத்தில் கழித்தாக சொல்லப்படுது. அந்த சமயத்தில்தான் தன்னை மணக்க கட்டாயப்படுத்திய சூர்ப்பனகையின் மூக்கை வெட்டிவிடுகிறான் லட்சுமணன்.  அதனால்தான் இந்த இடத்திற்கு பெயர் நாசிக் என்று சொல்லப்படுவதாவும், ஹிந்தியில் நாஸி என்றால் மூக்குன்ற அர்த்தத்தில் சொல்லப்பட்தாகவும் காலங்காலமாக சொல்லப்பட்டுவருகிறது . 
அதேப்போல கர்னாடகாவில் இருக்கும் ரிஷ்யாமுக் பர்வதம் என்பது ஹம்பிக்கு அருகிலிருக்கும் ஒரு மலைப்பகுதியாகும். சீதையை ராவணன் கவர்ந்து செல்லும்போது, அனுமன் மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமா இருந்ததை பார்த்த சீதை தனது நகைகளை கழற்றி துணியில் சுற்றி எறிந்ததாகவும் அதை வானரக்கூட்டங்கள் என்னவென்று தெரியாமல் தங்களது உடலில் அணிந்துகொண்டு திரிந்தன என கம்பராமாயணத்தில்
" அணியும் வகை தெரியாமல் வானரங்கள் இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும் ....
எழில் கழுத்துக்கு உரியதை இடுப்புக்கும் ...
காதுக்கு அணியவேண்டியதை மூக்கிற்கும் ...
மூக்கில் அணியும் மூக்குத்தியை காதுக்கும் மாட்டிக்கொண்டு அலைந்தன என்று .....

வர்ணனை செய்திருப்பார் கம்பர் . இந்த இடத்தை கிஷ்கிந்தை என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த இடம் ஹம்பிவரை பரந்து விரிந்த தண்டகாருண்ய வனமாக துவாபர யுகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுது .
அடுத்த நேர்கோட்டில் இருப்பது ஆந்திராவின் லெபக்‌ஷி . இந்த இடத்தை பற்றி சொல்லணும்னா பறவை அரசன் ஜடாயு ராவணனுடன் நடுவானில் போரிட்டு ராவணனின் வாளால் வெட்டுண்டு பூமியில் வீழ்கின்றான். அப்பொழுது சீதாதேவி , " ஹை பக்‌ஷி " என்று வருந்தி அழைத்த இடமே உருமாறி இன்றய லெபக்‌ஷி என்று மருவிவிட்டதா சொல்லப்படுது. வால்மீகியால் சொல்லப்பட்ட இந்த இடங்கள்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்குது என்பதே விசித்திரமான உண்மை .
ஒருவழியா பஞ்சவடி தரிசனத்தை முடித்துவிட்டோம். கடவுளின் அருள் இருந்தால் வரும் காலங்களில் விடுபட்ட அனைத்து இடங்களுக்கும் மீண்டும் சென்று விரிவான பதிவாக எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பஞ்சவடியைவிட்டு பிரியாவிடை(பிரியாவுக்கு விடை இல்லை. பிரியாவிடை) கொடுத்து 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தோம்.
வண்டியை ஒரு இடத்தில பார்க் செய்துவிட்டு இதற்குமேல் நாம்தான் நடந்து போகவேண்டும் என  எங்களுடன் வந்த வழிக்காட்டி அண்ணா சொன்னார். நாங்களும் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். தூரத்தில் மலைமேல் ஒரு கோவில் தெரிந்தது. அது அன்னபூர்ணேஸ்வரி என சொன்னார்கள்.  வரும்போது மேலேறி தரிசனம் செய்துவிடக்கலாம்ன்னு நினைத்து  திரியம்பகேஸ்வரர் கோயில் நோக்கி செல்ல ஆரம்பித்தோம் .
இந்த தியரிம்பகேஸ்வரர் கோயில் பற்றி சொல்லணும்னா  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில், நாசிக் நகரத்திலிருந்து  28 கிமீ தொலைவிலுள்ள திரிம்பாக் என்னும் ஊரிலிருக்கும் மிகவும் தொன்மையான ஆலயமாகும். இது 12 ஜோதிர்லிங்கத்தலங்களுள் ஒன்றாகும். இந்த 12 ஜோதிர்லிங்கங்கள் எங்கெல்லாம் இருக்கிறதுன்னா

1)  சோம்நாத் ஜோதிர்லிங்கம் - குஜராத்
2)  மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் - ஸ்ரீ சைலம் (ஆந்திரா)
3)மஹாகாளேஸ்வர் ஜோதிர்லிங்கம் - உஜ்ஜயினி (மத்திய பிரதேசம்)
4)  ஓம்காரேஸ்வர் ஜோதிர்லிங்கம் - சிவபுரி (மத்திய பிரதேசம் )
5)  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் - ஜார்கண்ட்
6)பீமாஷங்கர்  ஜோதிர்லிங்கம் -     புனே (மகாராஷ்டிரா)
7)  ராமேஸ்வர் ஜோதிர்லிங்கம் -     ராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8)  நாகேஸ்வர்  ஜோதிர்லிங்கம் -   சௌராஷ்ட்ரா (குஜராத்)
9)  காசி விஸ்வநாத் ஜோதிர்லிங்கம் - காசி
10)த்ரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் - நாசிக் (மகாராஷ்டிரா)
11)  கேதார்னாத்  ஜோதிர்லிங்கம் -  இமாலயம்
12)கிரிஸ்னேஸ்வர் ஜோதிர்லிங்கம் -  ஒளரங்காபாத்  ( மகாராஷ்டிரா)
12ஜோதிர்லிங்க வரிசையில் இருப்பதே இந்த திரியம்பகேஸ்வரர் கோவில் .இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றான கோதாவரி நதி  தொடங்கும் இடத்தில் அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்புகளில் ஒன்று. மற்ற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் பரம்பொருளாகிய சிவனையே முக்கிய கடவுளாகக்கொண்டு அமைந்திருக்கும் வேளையில்,  இங்குள்ள லிங்க அமைப்பானது  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது இக்கோவிலின் தனித்துவமான அம்சமாகும்.
ஒரு நீண்டபாதைவழியாக நாம் போகனும். இங்க பலவிதமான கடைகளும், உணவகங்களும் இருக்கு. பொழுதுதன்னிக்கும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும் கோவில் இது. மேலும், சிறந்த சுற்றுலா தலமாவும் இருக்குறதால கூட்டத்திற்கு குறைவே இல்லை. நாங்க போகும்போது சிலர் சந்தனத்தில் தோய்த்தெடுத்த சூல அச்சு மற்றும் மூன்று கோடுகள் கொண்ட சைவசின்னங்களை நம் நெற்றியில் குறியிடுகிறார்கள். அது ஒருவகையான தர்மம். குறியிட்டுவிட்டு நம்மிடம்  2 ரூபாய் வசூல் பண்ணிவிடுகிறார்கள் சிலர் கடமையாகவும், சிலர் வியாபாரமாகவும் செய்கின்றனர். எது எப்படியோ அந்த சின்னம் நம் நெற்றியில் அழாகத்தான் இருக்குது. அப்படி இட்டுக்கொண்ட இரு வடநாட்டு சிறுவர்கள் 
புதுசா போறவங்க கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா கோவில் வளாகத்தினுள் மொபைல் போன்களுக்கு அனுமதியில்லை. சாய்பாபா சமாதி கோவில்போல் இங்கேயும் நம்முடைய மொபைல் போன்களை பாதுகாக்க திடீர்க்கடைகள் முளைத்திருக்கும். அவர்களை தவிர்த்து கோவிலின் அலுவலகம்மூலம் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ இடங்களிலோ இல்லை நாம் சுற்றுலா செல்லும் வாகனத்திலோ விட்டுச்செல்வது உத்தமம். ஒருவழியா கோவிலின் முகப்பிற்கு வந்து சேர்ந்தோம். உண்மையில் சிவனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், சிவபரம்பொருளை மகாதேவர் என்றே அழைப்பர். அதுவே சரியானதாகும் .கன்னியாகுமரி மற்றும் கேரளாவிலும் மகாதேவர் என்றே அழைப்பார்கள் .அதிலும் வடஇந்தியாவில் சிவன் கோவில்களையெல்லாம்"மஹாதேவ் கி மந்திர்"என்றுதான் சொல்கிறார்கள்.
ஒருவழியா கோவிலை நாங்கள் அடைந்தோம். பொதுதரிசனத்தில் செல்லமுடியாதளவுக்கு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. இங்கே சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் அன்னதானத்திற்காக செலவிடப்படுவதாக கோவில் அதிகாரி தெரிவித்தார். இருந்தாலும் புகைப்படம்  தடை செய்யப்பட்டு இருந்தாலும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக குரூப் போட்டோ எடுக்க அனுமதித்தனர். காசு இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தமிழ்நாட்டைவிட இங்கே உள்ள அலுவலகங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர்.சரி அன்னதானத்திற்குத்தானே செல்கின்றதென நாங்களும் காசை கொடுத்து ஸ்பெஷல் தரிசனத்தில் சென்றோம் .
இதுதான் பொதுதரிசனம் செல்லும் வழி, வழியெங்கும் மலர்மாலைகளை தூவியவாறு செல்கின்றனர். சரி இங்க பொதுதரிசனம் செல்லும் வழியில் இரண்டு லிங்கங்களுக்கு, பக்தர்கள் பூக்களைத்தூவி அர்ச்சனை செய்துகொண்டு சென்றனர். -சரி அதில் என்னதான் இருக்கிறது என்று நாங்களும் அருகில் சென்று பார்த்தோம் .
இது ஒரு சாதாரண லிங்கமா தெரிந்தாலும், இதற்கு பக்கத்திலிருக்கும் லிங்கம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அந்த லிங்கத்தினுள் மூன்று லிங்கங்கள் இருந்தன. அதுப்பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. அடுத்தமுறை செல்லும்போது தெரிஞ்சுக்கனும். இல்லன்னா, கீதாக்கா, துளசி சார், நெல்லைத்தமிழன், வெங்கட் அண்ணா மாதிரி விசயம் தெரிஞ்சவங்க  சொல்லுங்க. தெரிஞ்சுக்குறேன் .
இதற்கிடையில் இந்த கோவிலின் ஸ்தல வரலாறை பார்க்க மறந்திட்டோம் பாருங்க. வாங்க! இங்க ஒரு அறிவுப்பு பலகை இருக்கு. அதில இந்த கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி தெளிவாக எழுத்திருக்கிறாங்க .இந்த திரியம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கும் இடமான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள திரிம்பாக் என்னுமிடத்தில்தான் கோதாவரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி கிழக்குநோக்கி தக்காணபீடபூமியில் அமைந்திருக்கும் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக பாய்ந்து சென்றாலும், இராஜமுந்திரிக்கு அடுத்து இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் சொல்றாங்க.
பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். மற்ற ஜோதிர்லிங்க கோவிலில் எல்லாம் பரம்பொருளான சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்து வந்தார். நாள்தோறும் புனிதக்குளத்தில் நீராடி திரியம்பகேஸ்வரரைப் வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் வந்தார் . ஒருமுறை நாட்டில் வறட்சியும், பஞ்சமும் உண்டாயின. எல்லா இடங்களிலும் நீர் வற்றிப்போய் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று. ஆனால் கங்காதரனை நினைந்து உள்ளன்போடு சிவசிவ என்றே வாழ்ந்த கவுதமரின் ஆசிரமத்தில் எந்தவிதமான பஞ்சமும் இல்லை. திரியம்பகேஸ்வரத்தில் இருந்த நீர்நிலைகளிலும்  நீர்வளம் பெருகியிருந்தது. இதையறிந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த முனிவர்கள் திரியம்பகேஸ்வரத்தில் குடியேறினர்.
உலகத்தை வலம் வருபவனுக்குத் தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பதாக அகல்யையின் தந்தை நிபந்தனை விதித்திருந்தார். கன்றுபோடும் நிலையில் உள்ள பசுவை அதாவது இரண்டு முகங்கள் கொண்ட பசுவை வலம் வந்தால் உலகத்தை வலம் வருவதற்கு ஒப்பாகும் என்று பழைய கிரந்தங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சாத்ஸ்திரப்படி கவுதம முனிவர் கன்று போடும் நிலையில் இருந்த தாய்ப்பசுவை வலம் வந்து வணங்கி அகல்யையைத் திருமணம் செய்து கொண்டார். அத்தகைய கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தாய்ப்பசு ஒன்று இறந்து கிடந்தது. அதைக்கண்ட கவுதம முனிவர் மனம் துடிதுடித்தார். இறந்த பசுவிற்கு எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டுமென்று முனிவர்கள் விரும்பினர். மற்ற உயிரினங்கள் எல்லாம் தமக்காக வாழ்கின்றன. ஆனா, பசுக்கள் மட்டுமே பிற உயிர்களுக்காகவே வாழ்கின்றன .புண்ணிய ஆத்மாவான இந்தப் பசுவை எப்படியாவது உயிர்பிழைக்கச் செய்யவேண்டுமென்று முனிவர்கள் முடிவெடுத்தனர்.
கோடி லிங்கார்ச்சனை செய்து பரம்பொருளை வழிபட்டுக் கங்கைநதியைப் பசுவின் உடலில் பாயச்செய்தால் கோமாதா மீண்டும் உயிர் பெற்றெழுவார் என்று மாதவமுனிவர் ஆலோசனை கூறினார். அவர் ஆலோசனைப்படி மகாமுனிவரான கவுதமர் கோடி சிவநாமம் ஓம் லிங்கார்ச்சனை செய்தார். கோடி சிவநாமங்களை உச்சரித்து லிங்கப்பரம்பொருளைப் பூஜை செய்தார். கங்கைநீரைப் பெறுவதற்காகக் கடுமையாகத் தவம்புரிந்தார். கங்காதரனை நெஞ்சில் நிறுத்தி ஓம் நமச்சிவாயா என்னும் மகாமந்திரத்தை உச்சரித்து திரியம்பகேஸ்வரரை தியானம் செய்து, அன்ன ஆகாரம்மில்லாமல் தவம் புரிந்தார். தவமுனிவர்கள் எல்லோரும் கவுதம முனிவருக்கு உறுதுணையாக இருந்தனர். கடுகளவு புண்ணியம் செய்தாலும் மலையளவில் பலனை வாரி வழங்கும் ஜோதிவடிவானவன் இந்த திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் கவுதம முனிவருக்கு காட்சி தந்தார். பலகாலங்கள் தேடித்திரிந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காணமுடியாமல் மறைந்து இருந்த பரஞ்சோதிப் பெருமானின் திருக்காட்சி கண்ட கவுதம முனிவர் அளவில்லா ஆனந்தம் அடைந்து  போற்றித் துதி செய்து வணங்கினார்.
தனது திருமுடியிலிருந்து சிவன் கங்கை நீர்த்துளிகளை  பூமியில் தெளிக்க,  அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. கங்கை நதி பசுவின் உடலில் பாய்ந்து, பசு உயிர்பெற்று எழுந்தது. கவுதம முனிவர் பசுபதீஸ்வரனின் மாபெருங்கருணைக்கு மனம் நெகிழ்ந்தார். கோமாதாவின் காரணமாக உற்பத்தியான நதி கோதாவரி என்று அழைக்கப்பட்டது.  இந்த கோதாவரி நதிக்கு கவுதமி என்ற பெயரும் உண்டு. பகீதரதனுக்காகப் பாய்ந்த கங்கை பாகீரதி என்று அழைக்கப்பட்டது போல கவுதமருக்காகப் பாய்ந்த கங்கை, கவுதமி என்ற பெயரில் அழைக்கப்படுது. மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத்தீர்த்தம் ஆயிற்று. கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும் தவத்திற்கும் கருணைக்கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயரும் உண்டானது. 
உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமைபெருமைமிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு தொழில் சிறப்புடன் விளங்குவதோடு மட்டுமில்லாம,  வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லையென்றநம்பிக்கையும், வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகுமென்றும் சொல்லப்படுது. இந்த வரிசையானது பொதுதரிசனத்துக்கான  நுழைவாயில்.  இங்கு கம்பியால் ஆன வழிகள் வரிசையாக இருக்கு. அவற்றில் 20 வரிசைகளுக்குமேல் இருக்கலாம். இந்த வரிசையில் நின்னா,  கடைசி வரிசையில் இருப்பவர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 3 மணிநேரமாவது ஆகலாம். எல்லா நாட்களிலும் இந்தக்கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியாவின் அனைத்துவிதமான மாநிலத்தவர்களையும், பல்வேறு மொழி பேசுகிறவர்களையும் ஒருசேர இங்கே பார்க்கமுடிகிறது. எங்களால் அவ்வளவு நேரம் நிற்கமுடியாதென்பதால், காசு கொடுத்து குறுக்கு வழியில்தான் கடவுளை தரிசிக்கனுமான்னு  மனசுக்கு சங்கடமா இருந்தாலும், நேரமின்மை காரணமாவும், இன்னும் பல கோவில்களை பார்க்கவேண்டி இருந்ததாலும், உடன் வந்தோரின் விருப்பத்துக்காக 200 ரூபாய் கட்டண வரிசையில் சென்றோம். அங்கேயும் தள்ளுமுள்ளாகவே இருந்தது.  .ஒருவழியாக சந்நிதானத்திற்குள் நுழைந்துவிட்டோம். நம்மூரிலில்லாத விஷேச வழிபாட்டை அங்க பார்க்கமுடிந்தது.  அது என்னவென்று அடுத்தவாரம் பதிவில் பார்க்கலாம் ....












நன்றியுடன்

12 comments:

  1. உங்கள் வேண்டுகோள்கள் பலதும் நிறைவேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா...நம் எல்லோர் வேண்டுகோளும் நிறைவேற வேண்டும் ,உலகில் என்றும் அமைதியும் சமாதானமும் நிலைத்திருக்கவேண்டும் நல்லதே நடக்கட்டும் அண்ணா...

      Delete
  2. கதைகளை நன்கு தெரிந்து கொண்டு எடுக்க வேண்டியவற்றை எடுத்து தள்ள வேண்டியதை தள்ளியும் அருள் பெறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா ..ஆனால் இவற்றில் எதை தவிர்க்கவேண்டும் என்று சொன்னால் அதற்கான விளக்கத்தை தவிர்த்துவிட வேண்டுமா ,இல்லை விளக்கவேண்டுமா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும்.

      Delete
  3. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்.கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

      Delete
  4. அருமையான இடமும் , தரிசனமும்....ராஜி க்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிமா,வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய இடங்கள் இவை,மார்பில் கற்களில் சிலைவடிவம் அவ்வுளவு அழகு...மேலும் நிறைய கோவில்களும் இருக்கின்றன எல்லவரையும் நமது அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிமா,,,

      Delete
  5. அருமையான இடம் தகவல்கள் சகோதரி ராஜி..

    கீதா: போயிருக்கேன்..நெருங்கிய உறவினர் புனேவில் இருப்பதால்...அருமையான இடம். போகும் இடம் உட்பட...உங்க தகவல்கள் படங்கள் எல்லாமே சிறப்பு...ராஜி!

    ReplyDelete
    Replies
    1. நண்றிங்கண்ணே...நன்றி கீதா...உண்மையில் சிற்பங்கள் அவ்வுளவு அழகு,நம்மூர் கோவில்கள் அளவில் பெரியவை,ஆனால்,நம்மூர் கோவில்களை ஒப்பிடும் போது அளவில் சிறியவை என்றாலும் வித்தியாசமான கட்டிட அமைப்பு கொண்டவை.

      அது சரி கீதாக்கா,உங்க ஊர் பாதை எல்லாமே மாறிப்போச்சு 10 முன்பு ஊரைவிட்டு போய்திரும்பி வரவங்களுக்கு ஊரே அடையாளம் தெரியாத அளவு மாரி போச்சு,முன்பு 2014 ல் பெருவெள்ளம் வந்தப்ப நான் அந்தப்பக்கமாக வரும் போது எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன.இப்பொழுது அந்த இடங்களே மாறிவிட்டன.பழைய ரோட்டையும் புதிய நாற்கர சாலையும் ஒப்பிட்டு ஒரு அழிந்து போன வயல்களும் ,கால்பங்கு அழிந்துவிட்ட உங்க ஊர் முள்ளிக்குளமும் பேசிக்கொள்வது போல் ஒரு மௌன சாட்சி பதிவு எழுதலாம்ன்னு இருக்கிறேன்.என்ன சொல்லுறீங்க அக்கா ..

      Delete
    2. எழுதுங்க ராஜி. எங்க ஊர் மாறியே போச்சு தெரியும்...இப்ப நால்வழிச் சாலை வேற வருது...என்னவோ போங்க....எனக்கு இப்ப எங்க ஊருக்குப் போனும்னா கொஞ்சம் யோசனையா இருக்கு. அத்தனை பசுமையான இடம்...

      எழுதுங்க படங்களும் போடுங்க ராஜி

      கீதா

      Delete
    3. நன்றிங்க கீதா..பசுமையான போட்டோக்களும் என்னிடம் இருக்கிறது.இப்ப அதை பஞ்சர் ஆக்கிவச்சிருக்கிற போடோக்களும் இருக்கு,மௌன சாட்சிகளின் பணிஉடனே ஆரம்பிச்சுடலாம் .

      Delete