Thursday, April 23, 2020

பேத்திக்காக பின்னிய 1 ரோல் வயர்கூடை- கைவண்ணம்

மகளின் கல்யாணத்திற்காக ஓரகத்தியின் மருமகள் வந்திருந்தாங்க. மருமகளுக்கு 11/2 வயசில் பெண்குழந்தை இருக்கு. அது வீட்டிலிருந்த வயர்கூடையை எடுத்துக்கிட்டு வீடு முழுக்க சுத்திக்கிட்டே இருந்துச்சு. வயர்கூட பாப்பாவை உயரத்துக்கு இருக்கும். சரி, அத்தை கல்யாணம் முடிஞ்சதும் சின்னதா கூடை பின்னித்தரேன்னு சொன்னேன். அதுக்குள்தான் எலும்பு முறிவுன்னு ஃபுல் ரெஸ்ட்ல கொடுத்த வாக்கை மறந்தாச்சு. 


இந்த லாக் டவுனுக்காக மருமகள் ஊருக்கு வந்திருக்கா. வீட்டுக்கு வந்த பாப்பா மீண்டும் கூடையை எடுத்ததை  பார்த்த பிறகுதான் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்திச்சு. கொடுத்த வாக்கை மீறலாமோ?! ஒரு ரோல் வயர்ல கூடை பின்னி கொடுத்தாச்சு. குளிக்கும்போதுகூட இந்த கூடை கையிலே இருக்கனுமாம்! மருமக போன் பண்ணி சொல்லும்போது சந்தோசமா இருந்துச்சு:-).

1 ரோல் வயர் கூடை...

4 3/4 அடில 18 வயர் ....
அடி 7 வரிசையில் பின்னிக்கிடனும்..
உயரம் 15 வரிசையிலும் 1 வரிசை மடிச்சு சொருகவும்ன்னு மொத்தம் 16 வரிசையில் பின்னிக்கிட்டேன். குழந்தைக்கு கை உருத்தக்கூடாதுன்னு உருட்டு கைப்பிடி போட்டேன்.








எப்படி இருக்கு சகோ’ஸ்?!

நன்றியுடன்,
ராஜி



5 comments:

  1. போன் பண்ணி சொன்னது தான் மகிழ்வே...

    வயர்கூடை அழகோ அழகு...

    ReplyDelete
  2. ஸூப்பர். அழகாய் இருக்கிறது. குழந்தையும் அதை ரசித்திருப்பது மகிழ்ச்சி. இதைவிட என்ன சந்தோஷம் வேண்டும்?

    ReplyDelete
  3. கூட மிக அழகாக நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துகள்

    துளசிதரன்

    ராஜி நீங்க பின்னின கூடையை பாப்பா வைத்துக் கொண்டு சந்தோஷப்படுத்து பாருங்க அதுதான் மகிழ்வான விஷயம். இதுவே இன்னும் உங்களை நிறைய பின்ன வைக்கும்.!

    கீதா

    ReplyDelete
  4. அழகு. குட்டிச் செல்லத்துக்கு மகிழ்ச்சி என்றால் நமக்கும்!

    ReplyDelete
  5. 'குளிக்கும்போது கூட கையில் ' மகிழ்ச்சியே.

    ReplyDelete