மனசு மகிழ்ச்சியாய் இருப்பது என்பது அத்தனை எளிதல்ல! ஆனா, எளிதாய் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு மனம் மகிழ்ந்தவர்களின் சிறிய நினைவு மீட்டலே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்....
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழம், காய்கறிகளை சாப்பிட்டு வந்தாலே உடம்புக்கு ஒன்னும் பண்ணாதுன்னு என் அப்பா சொல்வாங்க. அதனால், நாவல் பழம், மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாம்பழம், கொய்யான்னு கிடைக்குறதை சாப்பிடனும். பலாப்பழம் வாங்கி வந்தால் பலாச்சுளையை தின்னுட்டு, பலாக்கொட்டையை குருமா, பொரியல்ன்னு அம்மா செய்வாங்க. அப்படி செய்யும்வரை பொறுமை இருக்காதே! முன்னலாம் விறகு அடுப்பு இருக்கும். அந்த நெருப்பில் சில பலாக்கொட்டைகளை பதமா சுட்டெடுத்து சாப்பிடுவோம். கேஸ் கனெக்ஷன் வந்தப்பின்னும் கொட்டைகளை கடாயில் வறுத்து சாப்பிடுவோம். உப்பு காரம் எதும் சேர்க்காமயே அத்தனை ருசியா இருக்கும்.
பெப்பர்மிண்ட் மிட்டாய். மாத்திரை மிட்டாய்ன்னும் சொல்வாங்க. கொஞ்சம் சுர்ருன்னு இருக்கும். ஆனா, இந்த மிட்டாயை வாங்கினாலே அம்மா திட்டுவாங்க. வீட்டுல மாத்திரைங்க நிறைய இருக்கு. ஒருநாளைக்கு மிட்டாய்க்கு பதிலா மாத்திரையை சாப்பிட்டு சாகப்போறேன்னு சொல்வாங்க. ஆனா, நாமதான் உஷார் பார்ட்டியாச்சே! சிக்குவோமா!! இதுக்கு சூடம் மிட்டாய்ன்னும் இன்னொரு பேர் இருக்குன்னு இணையத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
ஆரஞ்ச் மிட்டாய்ன்னு கொஞ்சம் அட்வான்ஸ் வெர்சன் இந்த மீன் மிட்டாய். வால், துடுப்பு, தலைன்னு பிச்சு பிச்சு சாப்பிடுவோம். மிட்டாயின் கலர் நாக்கில் ஒட்டிக்கிட்டு வீட்டில் காட்டிக்கொடுக்கும். சிவப்பு மிட்டாய் சாப்பிடத்தான் எனக்கு விருப்பம். ஏன்னா, அப்பதான் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி உதடு சிவந்திருக்கும்.
பொதுவா எனக்கு வரைய வராது. ஒரு செம்பருத்தி பூ வரையக்கூட யாரையாவது தேடுவேன். இந்த திருகளவி,மீச்சிற்றளவு, சுழிப்பிழைன்னு இருக்கும் இந்த படத்தை வரைய சொன்னால் என் நிலை?! பத்துக்கு பாதி மார்க்கூட தேறாது. அறிவியலில் மார்க் குறைஞ்சதுக்கு படம் வரையாததும் ஒரு காரணம். இல்லன்னா மட்டும் ஸ்டேட் பர்ஸ்டுன்னுலாம் கமெண்ட் அடிக்கக்கூடாது.
கிரகணத்தின்போது என்ன செய்யலாம் செய்யக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா, சூரிய கிரகணத்தின்போது சூரியனை பார்த்தால் கருவிழி உருகி வழிஞ்சுடும்ன்னு நம்பிய அப்பாவி நானுங்க! என்னைய எப்படிலாம் ஏமாத்தி இருக்காங்கன்னு பாருங்க சகோ,ஸ்!! :-(
கொசுவர்த்தி சுருள் ஏற்றப்படும்...
நன்றியுடன்,
ராஜி
இனிமையான கொசுவர்த்தி.
ReplyDeleteசூட மிட்டாய் என்று தான் எங்கள் பகுதிகளில் சொல்வார்கள். மீன் மிட்டாய் பார்த்ததில்லை. பலாக்கொட்டை - குமுட்டி அடுப்பில் சுட்டுச் சாப்பிட்டதுண்டு.
சூரிய கிரகணம் - :)
அப்பா சொன்னது மிகவும் சரி...
ReplyDeleteகிரகணம் எல்லாம் சாதாரண மூடநம்பிக்கை...!
பலாக்கொட்டை கரி அடுப்பு அதான் இந்தக் காலத்துல க்ரில்லுனு சொல்ற குமுட்டி அடுப்பு அதுல சுட்டு சாப்பிட்டுருக்கேன்.
ReplyDeleteஅட மிட்டாய் பெப்பர்மின்ட் மிட்டார்ய் அல்லது சூடன்மிட்டாய்னு சொல்லுவோம்
கீதா
சுவையான பழைய நினைவுகள்!
ReplyDelete"//பொதுவா எனக்கு வரைய வராது. ஒரு செம்பருத்தி பூ வரையக்கூட யாரையாவது தேடுவேன்.//" - ஆஹா நீங்க நம்ம ஜாதியா..
ReplyDeleteஇந்த வரையரதுக்கு பயந்தே, 11ஆம் வகுப்பில் கணினி பாடத்தை தேர்வு செய்தவன் நான்.
பெப்பர்மிண்ட் மிட்டாய். மாத்திரை மிட்டாய் - மலரும் நினைவுகள். நானும் சாப்பிட்டிருக்கிறேன்
கிராகநினைவுகள் இனிமை.
ReplyDeleteமீன்மிட்டாய் எங்கள் கிராமத்தில் இருக்கவில்லை. தோடம்பழ,மல்லி,சீரகம் மிட்டாய்கள் இருந்தன.