Tuesday, May 05, 2020

பச்சை சுண்டைக்காய் சாம்பாரும், மினி இட்லியும்.. -கிச்சன் கார்னர்


காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்றது?ன்றதுதான் தூங்கி எழுந்துக்கும்போதே யோசிக்க தோணும். சாம்பார், சட்னின்னு போரடிச்சு போனவங்க பச்சை சுண்டைக்காய் கிடைச்சா சாம்பார் வச்சு சாப்பிடுங்க. அடிக்கடி செய்வீங்க. கசப்பு சுண்டைகாயை சாப்பிடாத ஆட்களும் இந்த சுண்டைக்காய் சாம்பாரை சாப்பிடுவாங்க. இதில் காரக்குழம்பும் செய்வாங்க.

தேவையான பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் - 25
பாசிப்பருப்பு- 1/2 கப்
வெங்காயம்- 1
தக்காளி-2
ப.மிளகாய்-1
காய்ந்த மிளகாய்-2
குழம்பு மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
மஞ்சப்பொடி-ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-1டீஸ்பூன்
பெருங்காயம்-ஒரு சிட்டிகை
கடுகு
வெந்தயம்
கருவேப்பிலை

பாசிப்பருப்பை கழுவி வேக வைக்கவும். அதோடு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் ரெண்டு பல் பூண்டு சேர்த்து வேகவிடனும்..



வெங்காயம், தக்காளியை கழுவி வெட்டிக்கனும். சுண்டைக்காயை பூச்சி இருக்கான்னு பார்த்து கழுவி எடுத்துக்கனும். சிலர்  ரெண்டா வெட்டியும், நசுக்கியும் சேர்ப்பாங்க. நான் முழுசாவே சேர்த்துப்பேன்.
பருப்பு முக்கால் பதம் வந்ததும் மிளகாய்தூள் சேர்த்துக்கனும்..
மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்...
வெட்டி வச்சிருக்கும் தக்காளி, வெங்காயம் சுண்டைக்காய் சேர்த்து கொதிக்கவிடனும்..
மிளகாய் தூள் வாசனை போனதும், காய் வெந்ததும் உப்பு சேர்த்துக்கனும்..
பெருங்காயப்பொடி சேர்த்துக்கனும். தாளிப்பிலும் சேர்க்கலாம். அவரவர் விருப்பம்..  காய் வெந்ததும் அடுப்பை அணைச்சுட்டு கல் சட்டியில் குழம்பை ஊற்றி நல்லா மசிய கடைஞ்சுக்கனும். 
ஒரு பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிக்கவிட்டு, கருவேப்பிலை ஒரு காய்ந்த மிளாகாய் சேர்த்து சிவக்க விட்டு,
கடைஞ்சு வச்சிருக்கும் சாம்பாரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிடனும்..
உடலுக்கு ஆரோக்கியமான பச்சை சுண்டைக்காய் சாம்பார் தயார். இட்லி, தோசை, பொங்கலுக்கு இந்த சாம்பார் நல்லா இருக்கும். நான் குக்கரில் சமைக்குறதில்லை. குக்கரில் சமைக்கும் பழக்கம் இருக்குறவங்க பாசிப்பருப்பு, வெங்காயம், தக்காளி, சுண்டைக்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒன்றிரண்டு விசில் விட்டு இறக்கி கடைஞ்சு தாளிச்சா சாம்பார் ரெடி.

சாம்பாரை நல்லா மசிய கடையனும். இல்லன்னா சுண்டைக்காய் தோல் வாய்ல மாட்டும்.  குழந்தைகளுக்கு கொடுக்கும்போது தோல் இல்லாம பார்த்துக்கனும். இல்லன்னா மீண்டும் சாப்பிடாதுக.

செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க!

நன்றியுடன்,
ராஜி




6 comments:

  1. ரைட்டு... நன்றி சகோதரி...

    ReplyDelete
  2. சுண்டைக்காய் இங்கே கிடைப்பது கடினம். கிடைத்தால் செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
  3. மினி இட்லி சுண்டைக்கா சாம்பார் சூப்பர்.
    சுண்டைக்கா காரக் குளம்புதான் எங்க வீட்டில் பிடித்தமானது.

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் பருப்பை குக்கரில் வேகவைத்தே பழகிவிட்டது. சுண்டைக்காய் சாம்பார் இந்த முறையில் செய்ததில்லை. ஒருமுறை முயற்சிக்கணும். துப போட்டு, வெங்காயம்,தக்காளி, பூண்டு இல்லாம செய்வோம்!

    ReplyDelete