என்னடா! ரக்ஷாபந்தன் போய் நாலு நாள் ஆச்சே! இண்னிக்கு ராக்கி கயிறு செய்ய ராஜி கூப்பிடுதேன்னு யோசிக்காதீங்க. என் பையன் ஹாஸ்டல்ல இருக்குறதால பொண்ணுங்க இன்னும் அவனுக்கு ராக்கி கயிறுகட்டல. வாட்ஸ் அப்ல ராக்கி கயிறை அனுப்பினதோட சரி. அவன் வரும்போது அவனுக்கு கட்ட ராக்கி கயிறு ரெடி பண்ணி வைக்கனும்ன்னு பொண்ணுங்க ஆர்டர். அதான் சில்க் த்ரெட்ல ஒன்னு... க்வில்லிங்க் பேப்பர்ல ஒன்னுன்னு ரெண்டு ராக்கி கயிறை ரெடி பண்ணி வச்சாச்சு. நாளைக்கு அப்பு வந்ததும் கட்ட வேண்டியதுதான் பாக்கி...
க்வில்லிங்க் பேப்பரை சுருட்டி வட்டமாகவும், திலகம் ஷேப்புலயும் செஞ்சுக்கனும்....
உருட்டிக்கிட்ட க்வில்லிங்க் பேப்பர் டிசைனை பூ ஷேப்புல ஒட்டிக்கனும்...அங்கங்க முத்து ஒட்டிக்கிடனும்...
ஒரு பேன்சி கயிறில் முத்து, பேன்சி அயிட்டலாம் கோர்த்துக்கிட்டா ராக்கி கயிறு ரெடி.
சில்க் த்ரெட்டை இருபது , முப்பது இழை எடுத்துக்கிட்டு ஒருமுனைல முடிப்போட்டுக்கிட்டா குஞ்சலம் ரெடி..
முடி போட்ட நுனில்லாம் ஊசி நூல்ல கோர்த்துக்கிட்டு வட்ட வடிவமாக்கிக்கனும்...
பிடிச்ச மாதிரி அலங்காரம் பண்ணிக்கனும். என்கிட்ட பெரிய சைஸ் கல் இருந்ததால் ஒட்டிக்கிட்டேன்.
சில்க் த்ரெட்டை இருபது, முப்பது இழைகள் கொண்டதா மூணு லேயர் எடுத்துக்கிட்டு தலைக்கு பின்னல் பின்னுற மாதிரி பின்னிக்கிட்டு வரனும்.
சில்க் த்ரெட் பின்னலில் ஏற்கனவே செஞ்சு வச்சிருந்த சில்க் த்ரெட் குஞ்சலத்தை ஒட்டிக்கனும்..
அங்கங்க கல் ஒட்டிக்கிட்டா இன்னொரு ராக்கி கயிறு ரெடி.
என் அண்ணன், தம்பிலாம் கை நீட்டுங்க. ராக்கி கயிறு கட்டி விடுறேன். பதிலுக்கு நீங்களும் ரோஸ் கலர் ரூபா நோட்டுக்கட்டுல ஒன்னே ஒன்னு கொடுங்க போதும். வேறெதும் வேணாம். ஏன்னா நீங்களும் பாவம்ல!
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468996
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468996
நன்றியுடன்,
ராஜி.
க்வில்லிங் ஆர்ட் நன்றாகவே உள்ளது , ராக்கியும் தான்.
ReplyDeleteநன்றிங்க சகோ
Deletehttps://www.youtube.com/watch?v=JYAraNxeR1Q
Deleteஎதுக்கு இந்த லிங்க்?! சம்பந்தமில்லாம....
Deleteதுளசி: மிக்க நன்றி ராக்கி க்கு!! நல்லா இருக்கு
ReplyDeleteகீதா: சூப்பர் ராஜி!!! அருமையா இருக்கு!
இருவரின் பாராட்டுக்கும் நன்றிங்க
Deleteரோஸ் கலரா.... அப்படீனா.... நான் பார்த்தே இல்லையே......
ReplyDeleteம்க்கும். பார்த்துட்டாலும்...
Deleteகைவண்ணம் அழகு.
ReplyDeleteநன்றிம்மா
Deleteஅழகு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ
Deleteகைவண்ணம் மிக மிக அழகு!!
ReplyDeleteநன்றிங்க சகோ
Deleteஎன்னவொரு திறமை...! வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteகிண்டல் பண்ணாதீகண்ணா
Deleteரோஸ் கலர் நோட்டு தான் குறைந்த பட்சமா ?நல்லா வருவீங்க :)
ReplyDeleteஹி ஹி. உடன்பிறந்தவளுக்கு சீர் செய்ய யோசிக்கக்கூடாதுண்ணே
Deleteநல்லா இருக்கே... வாழ்த்துகள்.
ReplyDeleteத.ம. ஆறாம் வாக்கு.
நன்றிண்ணே
Deleteரைட்டு......... நானு ரெடி......பட்,இங்க எல்லாம் ரோஸ் கலர் நோட்டு கெடையாதேம்மா......///க்விலிங்க் எக்ஸ்பர்ட் (இன்னொரு தங்கச்சி)அஞ்சு வை கொஞ்ச நாளா காணோம்......அவ எடத்துக்கு நீங்க.....காங்கிரஸ்.......
ReplyDeleteநான் பிஜேபி
Deleteசகோதரிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதம 8 ஆம் வாக்கு.
ரோஸ் கலர் நோட்டு கட்டு?!
Deleteஹலோ அக்கா...
ReplyDeleteஅண்ணன்களுட்ட எல்லாம் கேட்டது போதும்..
தங்கச்சிக்கு என்ன தரீங்க ன்னு சொல்லவே இல்ல...
........
ரெண்டு ராக்கியும் நல்லா இருக்கு..ஆன சில்க் thread ராக்கி ரொம்ப சூப்பர்...
.....
https://anu-rainydrops.blogspot.in/2017/08/diy-hand-made-minion-rakhi.html ...என்னோட minion ராக்கி எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க...
இது அண்ணன் தங்கச்சிக்கான விழா, நீங்க கெட் அவுட் பண்ணுங்க..\
Deleteசீர் செய்யாம இருக்க என்னவெல்லாம் சொல்லி தப்பிக்க வேண்டியிருக்கு பாரு
ஸ்....அப்பா கண்ண கட்டுதே...
Deleteநீங்க கெட் அவுட் பண்ணுங்க..
Deleteஹா..ஹா.....செம..{
கெட் அவுட் பண்ண சொன்னது சும்ம்மா கலாய்ப்புக்கு..
Deleteஎன்னால் வர இயலாதே!
ReplyDeleteபரவாயில்லப்பா. ஆன்லைன் வழியா ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க
Deleteத ம 10
ReplyDeleteநன்றிப்பா
Delete