Tuesday, August 22, 2017

இருட்டுல பிடிச்ச கொழுக்கட்டைன்னா என்ன அர்த்தம்?! கிச்சன் கார்னர்


கம்மிங்க் வெள்ளிக்கிழமை நம்ம பிள்ளையாருக்கு பொறந்த டே.  பொறந்த நாள்ன்னா கேக் வெட்டுவோம். ஆனா நம்ப பிள்ளையாரு இந்தியாவுல பொறந்ததால இவருக்கு கேக் வெட்டாம கொழுக்கட்டையும், சுண்டலும் செஞ்சு பொரி, கடலை வச்சு படைச்சா போதும்.   பிள்ளையார்ன்னு ஏன் பேர் வந்துச்சுன்னு இப்ப தெரிஞ்சுக்கலாமா?! 
ஒருநாள் பார்வதிதேவி குளிக்க போகும்போது மஞ்சள் பொடியால(தன் உடல் அழுக்குன்னும் ஒரு கதை உண்டு. நாம நல்லவிதமாவே சொல்லுவோம்..) ஒரு குழந்தையை உருவாக்கி  காவலுக்கு வச்சிட்டு போனாராம். அங்க வந்த சிவனை தடுத்தி நிறுத்தி இருக்கு அந்த குழந்தை. கோவம் வந்த சிவப்பெருமான் அக்குழந்தையின் தலையை வெட்டிட்டாராம். அங்க வந்த பார்வதி தேவி இதைக்கண்டு கலங்கி, அக்குழந்தையை உயிர்ப்பிச்சு தருமாறு கேட்டுக்கிட்டாராம். அதுக்கு சிவப்பெருமான், வடக்கே தலை வைத்து இறந்திருக்கும் உயிரின் தலையை கொண்டு வருமாறு சொன்னாராம். உடனே அம்மன் உலகம் முழுக்க சுத்தி பார்த்திருக்கார், எங்கயும் அதுமாதிரியான தலை கிடைக்கல. கடைசில ஒரு யானையோட தலைதான் கிடைச்சதாம். அதை கொண்டு வந்து சிவனிடம் கொடுக்க, வெட்டுப்பட்ட குழந்தையின் உடலோடு அத்தலையை வச்சு உயிர்பிச்சு கொடுத்தாராம்..  அங்க வந்த எல்லாரும் மனித உடலும், யானை முகத்தோடு இருக்கும் பிள்ளையை கண்டு யார் இந்த பிள்ளை? யார் இந்த பிள்ளைன்னு கேட்டதால பிள்ளையார்ன்னு பேர் வந்துச்சாம். 

எல்லோரும் பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் கொழுக்கட்டை செய்வாங்க. ஆனா, எங்க ஊர்ல கல்யாண, காதுகுத்து, சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்யும் முன் குல தெய்வத்துக்கு சாமி கும்பிடும்போதும், பொங்கல் பண்டிகை கழிந்ததும் சாமி கும்பிட, ஆடி மாசம் மாரியம்மனுக்கு கூழ் ஊத்தன்னு எப்படியும் மாசம் ஒரு தரமாவது கொழுக்கட்டை செய்ய வேண்டி வரும்.  அதனால, எனக்கு கொழுக்கட்டை நல்லாவே செய்ய வரும். ரொம்ப ஈசியா அதே நேரம் ருசியா எப்படி கொழுக்கட்டை செய்யலாம்ன்னு இனி பார்க்கலாம். பிடிச்சு வச்சாதான் கொழுக்கட்டை.. பூரணம் வச்சு செய்யுறதுக்கு பேரு மோதகம், இல்லன்ன உருண்டை.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 ஆழாக்கு (ரேஷன் அரிசின்னா கொழுக்கட்டை நல்லா வரும்)
வெல்லம் - கால் கிலோ
வேர்க்கடலை - 100 கிராம்
உப்பு - கால் டீஸ்பூன்

பச்சரிசியை குறைஞ்சது 2 மணிநேரம் ஊற வச்சு கழுவி, காட்டன் துணில மூட்டைக் கட்டி ஈரம் காய்ஞ்சதும் மிக்சில இல்ல மெஷின்ல அரைச்சுக்கோங்க. வெல்லத்தை பொடிப் பண்ணி வச்சுக்கோங்க. வேர்க்கடலையை வறுத்து, ஆறினதும் தோல் நீகி சுத்தம் செஞ்சுக்கோங்க. வெல்லத்தை பொடிச்சு வச்சுக்கோங்க.
வேர்க்கடலையை மிக்சில ரெண்டு சுத்து ஓடவிட்டு, கூடவே பாதி வெல்லத்தை சேர்த்து பொடிச்சுக்கோங்க. ரொம்ப நைசா இல்லாம கரகரப்பா அரைச்சுக்கோங்க.
அரைச்ச பச்சரிசி மாவை ஜலிச்சு இட்லி பானைல வச்சு வேக விடுங்க. கைல மாவு ஒட்டாம வரும்வரை குறைஞ்சது கால் மணி நேரம் வேக வைங்க.  ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊத்தி  வெல்லம், கொஞ்சூண்டு உப்பைச் சேர்த்து சூடு பண்ணுங்க. கொதிக்க வைக்கனும்ன்னு அவசியம் இல்ல. வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணால் போதும்.

மாவு வெந்ததும், ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கட்டி இல்லாம ஆற வைங்க. வெல்லத்தை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமா மாவில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைஞ்சுக்கோங்க. எல்லார் வீட்டுலயும் மேல் மாவு வெறும் உப்பும், சுடுதண்ணியும் ஊத்தி செய்வாங்க. ஆனா, அதை சின்ன பிள்ளைக சாப்பிட அடம்பிடிக்கும். உள்ளிருக்கும் பூரணத்தை மட்டும் சாப்பிட்டுட்டு மேல் மாவை தூக்கி போட்டுடும். அதனால, வெல்லம் சேர்த்து செய்வது எங்க வீட்டு பழக்கம். 

சின்ன வயசுல விளையாட களி மண்ணுல சொப்பு செய்வோம். அதுப்போல பிசஞ்ச மாவு எடுத்து சொப்பு செஞ்சு பொடிச்ச வேர்க்கடலை, வெல்லப் பொடியை வச்சு மூடி உருட்டிக்கோங்க. 

எல்லாத்தையும் உருட்டி வச்சு இட்லிப் பானைல தேவையான அளவு தண்ணி வச்சு உருட்டி வச்சிருக்கும் உருண்டைகளை கால் மணி நேரம் வேக வைங்க.
 சூடான, சுவையான, மிருதுவான கொழுக்கட்டை ரெடி. 

டிப்ஸ்: கொழுக்கட்டை பூரணத்துக்கு வேர்க்கடலைப் போலவே எள்ளை வறுத்து வெல்லம் சேர்த்து பொடிப் பண்ணியும் வைக்கலாம். தேங்காய் துருவி சர்க்கரை ஏலக்காய் சேர்த்தும் பூரணம் வைக்கலாம்.
கொழுக்கட்டை உருட்டும்ப்போது ஃபேன் போடாம பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டைகள் வெடிக்கும். மாவு பிசையும் போது வெல்லம் தண்ணி பத்தலைன்னா சாதாரண தண்ணி சேர்த்தும் செய்யலாம். தண்ணிய சேர்க்க சேர்க்க மாவு தண்ணியை இழுத்துக்கிட்டா உருண்டை நல்லா வரும்.

யார்மேலயாவது கோவம் வந்தாலோ இல்லன்னா கொஞ்சம் அசிங்கமா இருக்குற ஆளை பார்த்தாலாவோ இருட்டுல பிடிச்ச கொழுக்கட்டை போல இருக்கான்னு சொல்வோம். அதுக்கு என்ன அர்த்தம்ன்னா, கொழுக்கட்டைன்னா பிசைஞ்ச மாவை கைக்குள் வச்சு பிடிச்சு வைப்போம். கொழுக்கட்டைக்குன்னு தனி உருவம் இருக்காது. பார்த்து பார்த்து செய்யும்போதே இப்படின்னா, இன்னும் இருட்டுல செஞ்சா எப்படி இருக்கும்?! யோசிச்சு பாருங்க.

கொழுக்கட்டை செய்வோம்... பிள்ளையார் அருளை பெறுவோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470044
நன்றியுடன்,’
ராஜி

30 comments:

 1. ஆஹா.. படங்கள் அழகு...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. கொழுக்கட்டை அழகு.
  செய்முறையும் சொல்லிய விதமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இப்படி செஞ்சு பாருங்க. கொழுக்கட்டை நல்லா வரும். வெடிக்காது... ருசியாவும் அதேநேரம் சாஃப்டாவும் இருக்கும்.

   Delete
 3. பிள்ளையார் மூத்த மகன் இல்லையா ?
  அப்படினு கேட்க மாட்டேன் எனக்கு கொழுகட்டை பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த மகந்தான். ஆனா பிடிச்ச மகன். பார்சல் பண்ணிடவாண்ணே?!

   Delete
 4. Replies
  1. ஊப்பு, இனிப்புச்சுவை மட்டுமே

   Delete
 5. படத்தைப் பார்த்தாலே சாப்பிடணும்னு தோணுது. நல்ல செய்முறை. சில மாற்றங்களுடன் விரைவில் செய்வேன்.

  ReplyDelete
  Replies
  1. செஞ்சு பார்த்துட்டு பதிவா போடுங்க சகோ

   Delete
 6. கொழுக்கட்டை ராசியோ என்னவோ ,உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!ன்னு வந்து விட்டதே :)

  ReplyDelete
  Replies
  1. அப்ப இனி கொழுக்கட்டை பதிவே போடுறேன்

   Delete
 7. படங்களள் அருமை. கதை அறிந்த கதை தான் என்றாலும் இங்கு மீண்டும் சுவாரஸ்யமாக இருக்கு பிள்ளையாரப்பன் இல்லையா அதான்...

  கீதா: ரொம்ப க்யூட் பிள்ளையார்...இந்தப் புள்ளை யாரப்பா இது என்று சொல்லி அந்த ஸீ சா பிள்ளைய இடுப்புல தூக்கி வைச்சு தும்பிக்கையைக் கொஞ்சனும் போல இருக்கு!!!!! அம்புட்டு அழகு! அப்புறம் கொழுக்கட்டை பூரணம் எல்லாம் ஓகே மாவுல வெல்லாம் சேர்த்துச் செஞ்சது இல்லை.. ஆனா பிடிச்சு வைச்சது உண்டு....இந்த வாட்டி மேல் மாவுலயும் வெல்லம் சேர்த்து உங்க மெத்தட்ல செஞ்சுடறேன்....நல்லாருக்கு!!! நல்ல சுவையா இருக்கும் போல இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்கும்...., நல்லாவே இருக்கும் செஞ்சு பார்த்து பார்சல் பண்ணி விடுங்க

   Delete
 8. இப்பவே கொழுக்கட்டை வந்தாச்சா.... நல்லது! எஞ்சாய்....

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்ண்ணா

   Delete
 9. அடடே.......... நான் செய்யிற மாதிரியே,தங்கச்சியும் கொழுக்கட்ட செய்யுது......என்ன...அடிக்கடி செய்யிறதில்ல.....அதனால,சைஸ்/அளவு ஒண்ணா வராது......குட் போஸ்ட்.......

  ReplyDelete
  Replies
  1. நான் ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே செய்வேன். இங்க அடிக்கடி திருவிழா, சாமி கும்பிடுறதுன்னு வரும்ண்ணே. எப்படியும் வருசத்துக்கு 10 முறை செஞ்சிடுவோம்

   Delete
 10. அருமையான கொழுக்கட்டை


  நகைச்சுவை எண்ணங்கள் சில...
  http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவுகளுக்கு நான் எப்பவும் வர்றதுதான் சகோ

   Delete
 11. இங்கேயும் கொஞ்சம் கொழுக்கட்டை பார்ஷல்)))

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அனுப்புறேன்

   Delete
 12. விவரங்களும் படங்களும் அழகு. கொழுக்கட்டை படம் சூப்பர். தம 9 ம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 13. படங்களும் விவரங்களும் அருமை த.ம. வாக்குடன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் , ஓட்டுக்கும் நன்றிங்க சகோ

   Delete