Tuesday, August 08, 2017

எல்லா மதத்தினரும் சொல்லக்கூடிய காயத்திரி மந்திரம்

Goddess Gayatri - "Gayatri has five faces, they are the five life principles. She has nine descriptions, they are ‘Om, Bhur, Bhuvah, Swah, Tat, Savitur, Vareñyaṃ, Bhargo, Devasya’." [‘My Dear Students’, Vol 3, Ch 2, Mar 19, 1998]
நம் வீட்டை சுத்தப்படுத்த ஆயிரம் வழி இருக்கு. அதேமாதிரி நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும்  சுத்தம் பண்ணவும் தனித்தனியா ஆயிரம் வழி இருக்கு. ஆனா, மனசை சுத்தம் பண்ண!? அதுக்கு காயத்ரி மந்திரம் இருக்கு.. காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழின்னு சொன்ன க்ருஷ்ணபரமாத்மா காயட்ரி மந்திரமா இருக்கேன்னு சொல்றார்ன்னா காயத்ரி மந்திரம் எத்தனை புனிதமானதுன்னு தெரிஞ்சுக்கலாம். 


ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக்கடலை கடைந்தபோது த்ரயி என்ற வேதாச்சாரம் கிடைத்தது. அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்தபோது காயத்ரி தேவியின் வடிவம் கிடைத்தது. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் விளங்குகிறது.    பிரணவ மந்திரமான "ஓம்" என்ற வார்த்தைக்கு அடுத்தபடி இந்தக் காயத்ரி மந்திரம்தான் என சொல்லப்படுகிறது.
கௌசிகன் என்ற மன்னன் , தன்னுடைய நாட்டில் வந்த பஞ்சத்தை போக்க வசிஷ்ட மகரிஷியிடம் இருந்த காமதேனு பசுவின் தங்கையான நந்தினி பசுவை கேட்கிறார். வசிஷ்டர் தரமறுக்கிறார். அதனால் கோபங்கொண்ட கௌசிகன் வசிஷ்டர்மேல் போர்தொடுத்து தோற்றுப்போகிறான். தோற்றுப்போன அவமானம் ஒருபக்கம், பிரம்மரிஷிகளின் பேச்சுக்கு மட்டுமே காமதேனுவும், நந்தினியும் கட்டுப்படுமென்பதால், நாடு, நகரம், அரசு, செல்வம், ராஜபோக வாழ்க்கையை துறந்து,  பிரம்மரிஷி பட்டம் வேண்டி கடும் தவமிருக்கிறான்.   ஒரு சத்திரியனால் பிரம்மரிஷி பட்டம் வாங்கமுடியாதென வசிஷ்டர் எள்ளி நகையாட, பிரம்மரிஷி பட்டம் வாங்கிக்காட்டுவதாக சவால் விட்டு கள்ளிச்செடியின்மீது தவம் புரிகிறார்.


கௌசிகனின் கடுந்தவத்தை கண்ட, அன்னை பார்வதிதேவி, கௌசிகன் முன்தோன்றி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சமுக விளக்கை ஏற்றினால் உன் நோக்கம் நிறைவேறும் எனக்கூறி  மறைந்தார். கௌசிகன் காட்டிலிருந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்து பஞ்சமுக தீபத்தை ஏற்ற திரி தருமாறு சிவ பூதக்கணங்களை   வேண்டினார். ஆனால், பூதக்கணங்கள் திரி கர மறுத்துவிட்டன. சற்றும் யோசியாமல் விளக்கின்மீதேறிப்படுத்து தலை, இரு கைகள், இரு கால்கள் என விளக்கின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு பாகத்தை வைத்து விளக்கேற்றினார். இதைக்கண்ட அம்மையும், அப்பனும் கௌசிகன் முன் தோன்றி பிரம்மரிஷி பட்டம் கொடுக்கின்றனர். பிரம்மரிஷி பட்டம் கிடைத்த மகிழ்ச்சியில் கௌசிகன் புதுமந்திரத்தை ஜெபிக்கின்றார். உடம்பை திரியாக்கி எரித்து மந்திரம் உருவாக்கியதால் இதற்கு, காயத்திரி மந்திரம் என்று பெயர் உண்டானது. காயம்ன்னா உடம்புன்னு ஒரு பொருள் உண்டு.  
காயத்திரி மந்திரத்தில் கா- நீர்த்தத்துவமாகிய கண்களுக்கும் புலப்படும் ஸ்தூலத்தை குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். - என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தை குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. - என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்திரன். த்ரீ என்பது இந்த மூவரும் நம்மை காப்பாற்றி அருள்வது என்பதாகும். இந்த காயத்ரி மந்திரத்தின் பொருள் எவர் நமது அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!” என்பதாகும். எல்லாத் தெய்வங்கட்கும் தனித்தனியான காயத்ரி மந்திரம்  உள்ளது. எல்லாக் காயத்ரி மந்திரங்கட்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்திரி மந்திரம்  ஆகும்.

பரம்பிரம்மத்தின் ஸ்வரூபமான இந்த மந்திரத்தின் அதிதேவதையான காயதிரிதேவி, மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் சேர்ந்த உருவமாக போற்றப்படுகிறாள். இவள் லட்சுமிதேவியின் அம்சம் என்பதால் செந்தாமரை பூவில் வீற்றிருக்கும் காயத்திரிதேவி செல்வத்துக்கும் அதிபதியாக கருதப்படுகிறாள். ஐந்து தலையுடனும், பத்து கண்களுடனும் எட்டு திசைகள், ஆகாயத்தில் உதிக்கும் சூரிய, சந்திரர், பூமி உள்ளிட்ட ஈரேழு லோகங்களையும் பார்க்கும் விதமாக காயத்திரிதேவியின் உருவ அமைப்பு கொண்டது. அவளின் பத்து கரங்களும் அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கும். சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம்,கசை, ஏடு , சாட்டை, பொற்கிண்ணம் ஏந்தி அபய,வரத முத்திரையோடு அருள்பாலிக்கிறாள். இவள் சரஸ்வதியின் அம்சம் என்பதால் வெண்ணிற அன்னம் இவளது வாகனமாகும். 
Goddess Gayatri
காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகமும் மூன்று கண்களோடு தேவி சித்தரிக்கப்படுகிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான விஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவனின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓர் உருவமாகக் காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும், வைராக்கியத்தையும் அருளகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய ஐந்து நிறங்களில் காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன.  காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுவது உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்திரிக்காகவும் நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
Gayatri | ... Religious Painting "Goddess Gayatri" of Goddess painting depicts

பெண்கள் காயத்ரி மந்திரத்தை  சொல்லக்கூடாது என்பார்கள். காயத்ரிதேவியே பெண்தான். ஆகவே பெண்களும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.  இந்த காயத்ரி மந்திரத்தை சொல்பவர்கள், குளிர்சியான மோர், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். காயத்ரி மந்திரம் உஷ்ணத்தன்மை கொண்டது என்கிறது சாஸ்திரம். அந்த மூன்று நாட்களில் மந்திரத்தை உச்சரிப்பதை தவிர்த்தல் நலம். உஷ்ணத்தன்மை கொண்டதால் இம்மந்திரம் உச்சரிக்கும் பெண்களுக்கு வெள்ளைப்பாடு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.  காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை கண்திருஷ்டி நெருங்காது. துஷ்ட சக்திகளை,துஷ்ட எண்ணம் கொண்டு பழகுபவர்களை பொசுக்கும் சக்தி கொண்டது.  தெரிந்தும், தெரியாமல் செய்த பாவங்கள் தீரூம். முன் ஜென்ம வினைகள் தீரும்.  காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் நலமும் வளமும் பெற்று வாழ்வார்கள்.
Gayatri | Your Are Here → Home → Gayatri Devi → gayatri devi water color ...
காயத்ரி மந்திரம் எந்தவொரு தெய்வத்தையும் முன்னிறுத்தி உண்டானதில்லை. எல்லா கடவுளுக்கும் மேலான பரம்பொருளை குறித்து எழுதப்பட்டதாகும். அறிவியலின்படி உயிர், உலகம் உருவாக காரணமான சூரியனை நோக்கு எழுதப்பட்டதாகும். எனவே, இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும், எந்த மதத்தினரும் உச்சரிக்கலாம். இதுவரை, காயத்திரி மந்திரத்தை சொல்லாதவர்கள் இன்றிலிருந்து சொல்ல தொடங்கலாம். மனம் ஒருமுகப்படுத்தாம நூறு, ஆயிரம், லட்சக்கணக்கில் இம்மந்திரத்தை சொல்லி பலனில்லை. நிலையான மனதோடு இருபத்தி ஏழு முறை உச்சரித்தாலே போதும். காலை, மாலை குளித்து, சூரியன் இருக்கும் திசை நோக்கி இம்மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.  மனதை ஒருநிலைப்படுத்த காயத்ரி மந்திரம் சிறந்தது. அதனால் மாணவர்களும் இம்மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இம்மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும். 

காயத்திரி மந்திரத்தை சரியான உச்சரிப்பில் சொல்வது மிக முக்கியம்.... துளசி தண்ணீர் அல்லது தண்ணீர் அருகில் வைத்துக்கொண்டு , ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் அமர்ந்து சூரியன் இருக்கும் திசை நோக்கி இம்மந்திரத்தை சொல்ல வேண்டும். இம்மந்திரத்தை சொல்லி முடித்ததும் அருகிலிருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டும்.  
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468764
Great Goddess
நன்றியுடன்,
ராஜி.

34 comments:

  1. நம்புவோர் நம்பட்டும்! த ம 2

    ReplyDelete
  2. இப்போது இந்த (G3) பெயரைக் கேட்டாலே பதறுகிறார்கள் மூடர்கள்...!

    ReplyDelete
  3. அருமையான விளக்கத்துடன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  4. காயத்ரி மந்திரம்..........அருமையான விளக்கம். நன்று, நன்றி......

    ReplyDelete
  5. காயத்ரி மந்திரம் பற்றி பிரமிப்பான விளக்கம் அருமை சகோ
    இப்பொழுது எல்லோரும் பிக்பாஸ் காயத்ரி ரகுராம் பற்றித்தான் நினைக்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. அதும் மூஞ்சியும், மொகரக்கட்டையும் ஹேர் மாதிரி இருக்கு.

      Delete
  6. இதை பெரும்பாலான ஹிந்துக்களே சொல்வதில்லை,எல்லா மதத்துக் காரர்களுமா :)
    த ம 6 (விழுந்தே விட்டது :)

    ReplyDelete
    Replies
    1. இனி சொல்வோம். இன்றிலிருந்து சொல்ல தொடங்குவோம்ண்ணே

      Delete
  7. நல்ல மூச்சுப்பயிற்சி.

    7 வது வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் மந்திரம் சொல்ல சொல்ல வித்தியாசம் தெரியும்

      Delete
  8. சித்திரங்கள் அற்புதம்.

    ReplyDelete
  9. //காயத்திரி மந்திரத்தை சரியான உச்சரிப்பில் சொல்வது மிக முக்கியம்
    எது நல்ல உச்சரிப்பு என்று எப்படித் தெரிந்து கொள்வது?

    ReplyDelete
    Replies
    1. உபாசகரிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க

      Delete
  10. //உஷ்ணத்தன்மை கொண்டதால் இம்மந்திரம் உச்சரிக்கும் பெண்களுக்கு வெள்ளைப்பாடு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
    இதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா?

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைப்பாடு எனக்கிருக்குன்னு எந்த பொண்ணும் பொதுவில் வந்து சொல்லமாட்டாங்க.

      Delete
  11. நல்ல பதிவு!! ராஜி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதா

      Delete
  12. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  13. For ladies, the Sri Vidhya upasana is better, since they have the amsam of Devi more in them. Devi Mahatmyam (Chandi) parayanam gives immediate benifit.

    ReplyDelete
    Replies
    1. Thank you sir. we will try it in home

      Delete
    2. Thank you sir. we will try it in home

      Delete
  14. கள்ளிச்செடிமீது தவம் செய்யும் சிற்பத்தைப் பார்த்தபோது நான் அருங்காட்சியகங்களுக்கு புத்தர் சிலைகளைத் தேடிச் சென்ற நினைவு வந்தது. ஒரு அருங்காட்சியகத்தில் இது போன்ற ஒரு சிலையை புத்தர் சிலை என்று கூறினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ சகோ! இந்த சிலை யாருதுன்னு தெரில. பதிவுக்கு பொருத்தமா இருக்குமேன்னு கூகுள்ல சுட்டது. உங்களுக்கு சொன்ன தகவல் உண்மையாகக்கூட இருக்கலாம் சகோ.

      Delete
  15. காயத்ரீ மந்திரம் தமிழ் படுத்தி ஒரு அன்பர் கொடுத்தார் அதை தான் நான் படித்து வருகிறேன்,


    நம்முடைய உயிராற்றலாகவும், துக்கத்தை அழிப்பதாகவும் இன்பமே வடிவமாகவும் உள்ள
    சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தனனைவிட மேலாக ஒன்றும் இல்லாததும் நம்
    பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீக பரம்பொருளை நாம் மனதில் இருத்தி தியானிப்போக அந்த பரம்பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.


    எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!

    இந்த இரண்டையும் சொல்வேன்.

    படங்கள் தேர்வு மிக அருமை.
    செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்படுத்தியமைக்கு நன்றிம்மா

      Delete
  16. "காயத்ரீ மந்திரம் தமிழ் படுத்தி ஒரு அன்பர் கொடுத்தார் அதை தான் நான் படித்து வருகிறேன்"

    அதை இங்கு வெளியிடலாமே!!

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு தமிழ்படுத்தி சொல்லி இருக்காங்க. நானும் எனது பதிவில் சேர்த்துக்குறேன்

      Delete
  17. பதிவர் சொன்னது சரி.
    //எல்லா மதத்தினரும் சொல்லக்கூடிய காயத்திரி மந்திரம்//
    மத நல்லிணக்கம்காப்போம் என்ற ஆர்வத்துடன் உள்ள எல்லா மதத்தினரும் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  18. எல்லா கடவுளும் போதிப்பது சக மனிதனை நேசிக்கனும்ங்குறதுதான். பேதம்லாம் மனிதனுக்குதானே தவிர கடவுளுக்கு இல்ல. கடவுள் பேரை சொல்லி நாம்தான் தள்ளி வைக்கிறோம்.

    ReplyDelete