அம்மா அப்பாக்கு என்மேல கொள்ளை அன்பு. நல்லபடியா வளர்க்குறேன்னு என்னை பயத்தோடவே வளர்த்துட்டாங்க. அவங்க பேசிப்பாங்க. என்னை பேச விடமாட்டாங்க. அப்பா, அம்மாக்கிட்ட சொல்ல வேண்டியதைலாம் அவங்க இல்லாதப்ப தனியா இருக்கும்போது ரோல்பிளே மாதிரி சொல்லிக்குவேன். அந்த பழக்கம் இன்னிய வரை தொடருது. பேச ஆளில்லன்னா இப்படிதான் போல. இதுமாதிரி தனியா பேசி நான் யாரையும் பார்த்ததில்லை. மனநோயாளிகளை தவிர. முதல்முறையா என்னை மாதிரி ஓவியாவை பார்த்தேன். ஜூலி மாதிரி என் பெரிய பொண்ணு. நான் எதாவது சொன்னா அவ அப்பாக்கிட்டா ஒன்னுக்கு ரெண்டா கோள் மூட்டுவா. நாந்தான் முக்கியம் என்னைதான் சீராட்டனும்ன்னு சக்தி, காயத்திரி மாதிரி கோவக்கார என் பையன். இடியே விழுந்தாலும் தானுண்டு தன் படிப்புண்டு, தன் வாட்ஸப் உண்டு, தன் மேக்கப் உண்டுன்னு ரைசா மாதிரி என் சின்ன பொண்ணு. வீட்டுல யாராவது எப்படியாவது போங்க எனக்கு என் வேலைதான் முக்கியம்ன்னு கணேஷ் மாதிரி என் ஆத்துக்காரர். எங்களுக்குள் நடக்கும் சண்டைய சமாதானப்பண்ணியே ஓய்ஞ்சு போகும் வையாபுரி மாதிரியான அம்மா, அழுகும் குழந்தைகளை கட்டிப்பிடி வைத்தியம் செஞ்சு தேத்தும் சினேகன் மாதிரி அப்பா.. ஆரவ் மாதிரி தேவைபோது மட்டும் உறவு கொண்டாடும் உறவுகள்.. இப்படி நம்ம வீட்டுல இருக்குற கேரக்டர்களை காட்டுறதாலாயே பிக்பாஸ் பிடிச்சு போச்சு.
ஸ்ட்ரெயிட் பார்வேர்டா இருந்தா திமிர் இருக்கும். அழகு இருந்தாலும் திமிர் இருக்கும். ஆனா ரெண்டும் இருந்தும் ஓவியாக்கிட்ட திமிர் இல்ல. பொதுவா குழந்தைதனம் இருக்குற பொண்ணுங்களை பிடிக்கும். ஓவியாவை தமிழகம் கொண்டாடுறதுல தப்பில்ல. வீட்டு வேலை செய்யலைன்னா பொண்ணுங்களை திட்டுவோம். ஆனா, நமக்கு பிடிச்ச பொண்ணாயிருந்தா போற வீட்டுல எப்படிலாம் லோல்படபோகுதோ! இங்காவது ஃப்ரீயா இருக்கட்டும்ன்னு சொல்வோம். அதுப்போலதான் ஓவியாக்கிட்ட சில கெட்டப்பழக்கம் இருந்தாலும் அவுட்ஸ்போக்கன், ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட்ன்னு நம்மை ஈர்த்துச்சு. எல்லாரும் ஊத்த மூஞ்சியோடு இருக்கும்போது அழகா ரெடியாகி குத்தாட்டம் போடும் அழகு, ஆடிக்கிட்டே பேசும் குழந்தைத்தனம், கொஞ்சூண்டு அன்பு காட்டினாலும் மெல்ட் ஆகிடும் ஓவியான்னு சீக்கிரத்துலயே இந்த மாதிரி ஒரு பொண்ணுதான் நம்ம வீட்டுக்கு வரனும்ன்னு நினைக்குமளவுக்கு சீக்கிரத்திலேயே கொண்டு வந்திருச்சு. பொங்கி வந்த அழுகையை கேமராவிலிருந்து க்யூட்டா மறைச்ச பொண்ணு அதே கேமரா முன் பொங்கி பொங்கி அழுத கோலம்....
புதிய பறவை படத்துல சிவாஜி, சரோஜாதேவிக்கிட்ட சொல்வார். என்னை வீழ்த்த நீ வேற வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காதல்ன்ற ஆயுதம்தானா கிடைச்சதுன்னு ... அதுமாதிரி ஆரவ் ஜெயிக்க எத்தனையோ வழியிருக்க காதலை சொல்லி ஒரு பொண்ணை வீழ்த்தனுமா? ரெண்டு பேரையும் ஸ்க்ரீன்ல பார்க்கும்போது அத்தனை பொருத்தம். ஒரே மன அலைவரிசை, ஜோடிப்பொருத்தம், கெமிஸ்ட்ரின்னு... அப்ப்ப்ப்ப்பா. டிவில பார்க்கும்போதே அந்த பொண்ணுக்கு ஆரவ் மேல கொள்ளை ஆசைன்னு தெரியும்.
காயத்திரியின் அடக்குமுறை, சக்தியின் ஆணாதிக்கம், ரைசாவின் பொறாமை, நமீதாவின் போட்டி, ஆர்த்தியின் கிண்டல், சினேகனின் பாலியல் சீண்டல், ஜூலியின் மறைமுக தாக்குதல்ன்னு அத்தனையையும் கெத்தா கடந்து வந்த பெண், ஆரவ்வின் போலியான காதலால செமையா அடிவாங்கிடுச்சு. ஸ்கிரிப்ட்டாவே இருந்தாலும் இது டூ மச். சின்ன வயசிலிருந்தே அன்புக்கு ஏங்குன பொண்ணை.. அன்போட எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கொண்டு போய்... இமேஜ் பாதிக்கும், என்கிட்ட பேசாதன்னு சொல்லி ஒரேநாளில் துண்டிச்சதோடு, ஓவியாவை வெறுப்பேத்த ஜூலி, காயத்ரி, ரைசான்னு கடலைப்போட நொறுங்கிப்போய் சாகவும் துணிஞ்சிடுச்சு. காதல் தோல்வி ஒரு பொண்ணை எப்படி பாதிக்கும்ங்குறதுக்கு ஓவியா சாட்சி.
நீ வெளிய வா ஓவியா! நாங்க இருக்கோம். கண்ட கழிச்சடையெல்லாம் தாங்கி உயிரை கொடுத்த தமிழகம் உன்னையும் தாங்கும். நாங்க இருக்கோம். ஆரவ் இல்லாட்டியும், பிக்பாஸ் வீடு இல்லாட்டியும் எத்தனையோ பேரின் வீடும், இதயமும் உனக்காக காத்திக்கிட்டிருக்கு. கெட் வெல் சூன் ஓவியா.
விஜய் டிவில மௌனராகம்ன்னு ஒரு சீரியல் ... மாலை 7.30 டூ 8 வரை ஒளிப்பரப்பாகுது. தன் அம்மாவோட இறப்புக்கு பின் தன் அப்பாவை தேடி புறப்படும் ஒரு சிறுமி பத்திய கதை அது. வல்லூறுகள்க்கிட்ட இருந்து தப்பிக்க தன்னை ஆம்பிளையா வேசம் போட்டுக்கிட்டு தெருவுல சுத்துது. அந்த பையனை பிடிச்சு போய் ஒருத்தர் தத்தெடுத்து போய் வளர்க்குறாரு. இதுவரை எல்லாமே ஓக்கே. ஆனா, பல நாளா வீட்டுல இருந்தும் வீட்டுல இருக்கவுங்க யாரும் அது பொண்ணுதான்னு கண்டுப்பிடிக்கல. அது எப்படி?! என்ன லாஜிக் இது?!
90களில் பல ஆண்களின் தூக்கத்தை கெடுத்த கனவுக்கன்னியான சிம்ரன் ஆண்டியாகி , கல்லூரி பேராசிரியா ஒரு சீரியல்ல நடிக்குறாங்க. கல்லூரி பேராசிரியரா தான் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து எப்படி வெளி வர்றாங்கன்னுதான் கதை. இந்த சீரியல் புதிய தலைமுறை டிவில 8.30க்கு அகினி பறவைன்ற பேர்ல ஒளிப்பரப்பாகுது.
சத்தியம் டிவில உரக்க சொல்வோம்ன்ற நிகழ்ச்சி ஞாயிறு மதியம் 12.30க்கு ஒளிப்பரப்பாகுது. அதிகார துஷ்பிரயோகம், சமூக அவலங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள்ன்னு வாரம் ஒரு விசயத்தை ஆதாரத்தோடு அலசுறாங்க. இந்த வாரம் நீட் தேர்வு பத்தி பேசப்போறாங்க.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468501
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468501
நன்றியுடன், ‘
ராஜி.
தமன்னா 1
ReplyDeleteஇதோ வர்றேன்...
எப்ப பாரு தமன்னா நினைப்பே உங்களுக்கு. இப்ப ஓவியா ஃபீவர்ல இருக்கோம் எல்லாரும்.
Deleteஇன்றைக்கு தமிழகமே சொந்தக் கவலைகளை மறந்துட்டு ஓவியாவுக்காக வருந்தும் அளவுக்கு தியாகி ஆகிவிட்டது கொடுமையிலும் கொடுமை.
Deleteஎவ்வளவோ பெண்கள் காதலில் தோற்று வாழுறாங்க நமக்கு அதெல்லாம் அவசியம் இல்லை.
ஒரு நடிகையின் காதல் எவ்வளவு தரமானது, எவ்வளவு தூரமானது என்பது அனைவரும் அறிந்ததே...
ஓவியா - ஆரவ் இரண்டு பேரையும் வெளியேற்றினால் இனி குடும்பத்துடன் கௌரவமாக பார்க்கலாம் என்பது எனது கருத்து.
நடிகை காதல் அத்தனை இளப்பமானதா?!
Deleteஎன்ன ராஜி ஒரே ஓவியா புராணமாவே இருக்கு எங்க பார்த்தாலும்!!ஹஹஹஹ்ஹ் நீங்கள் ஏன் பிக் பாஸ் பாக்கறீங்கனு சொல்லியிருக்கற ரீஸன்ஸ் என் உறவுகளும் சொல்லி அதுலருந்து நிறைய பாடங்களும் கத்துக்கறதா சொல்றாங்க...நான் சொன்னேன் ஏம்பா அதே தானே எல்லார் வீட்டுலயும் நடக்குதுனு...அப்ப பாடம் கிடைக்கலையானு!! ஹிஹிஹீஹி...
ReplyDeleteகீதா
ஓவியாவை அத்தனை பிடிச்சு போச்சுங்க கீதா
Deleteநமக்கு பிடிச்ச பொண்ணாயிருந்தா போற வீட்டுல எப்படிலாம் லோல்படபோகுதோ! இங்காவது ஃப்ரீயா இருக்கட்டும்ன்னு சொல்வோம்.////இங்க தான் நாம தப்புப் பண்றோம்........போற இடத்துல கஷ்டப்படாம இருக்கணும்னா,பொறந்த வூட்ல கஷ்டம் குடுக்கணும்......அப்ப தான் சரியா வரும்,சமாளிப்பாங்க.///அப்புறம் மெளன ராகம்.........தத்தெடுத்து வளக்கிறவர் வூட்டுக்கு அந்தப் பொண்ணு வந்து ரெண்டு/மூணு நாள் தான் ஆகுது....அப்பவும் அந்தக் குட்டிப் பையப் பொண்ணு வாய் தடுமாறி இது வரைக்கும் ரெண்டு தடவ தான் பொண்ணுங்கறத எசகு பெசகா புரியாத மாதிரி சொல்லிடுது........
ReplyDeleteயோகா அவர்களின் கருத்து மிகச்சரியானது.
Deleteஅது வாய் தவறி சொல்லிடுது. அவங்க கண்டுப்பிடிக்கலைங்குறதுதான் என் வாதம்..
Deleteஅதுமில்லாம, வேலை கத்துகொடுக்குறது வேற.என்ன இருந்தாலும் கடினமான வேலையை செய்ய விடமாட்டாங்க பெரும்பாலான தாய்மார்கள்
த.ம. 4
ReplyDeleteடி.வி. நிகழ்ச்சிகள் பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல! நான் டி.வி.யே பார்க்கறதில்லை!
நானும்தான் டிவி பார்க்குறதில்ல
Deleteவெளியே வந்தும் லவ் யூ ஆரவ் ங்குதே...
ReplyDeleteஆறாம் வாக்கு!
ஆரவ்மேல அத்தனை லவ் வச்சிடுச்சு அந்த பொண்ணு. அதான் அவன் தூக்கிப்போட்டுட்டாலும் அதால தூக்கி போட முடில.
Deleteபொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. இருந்தாலும் பதிவினை ரசித்தேன்.
ReplyDeleteநானும்தான் டிவியே பார்க்குறதில்லப்பா
Deleteஅக்னி பறவை - சிறந்த பறவை...
ReplyDeleteஜொள்ளு வழியுது தொடைச்சுக்கோண்ணே
Deleteஎதையும் விடுவதில்லை(சீரியல் த ம 9
ReplyDeleteஏன் விடனும்?!
Deleteஅன்றைய கனவுக்கன்னி...இன்றைய கனவுக்கன்னி...நல்ல பதிவு !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Delete