தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வாலியும், தான் செய்தது சரியென ராமனும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொன்னதை போன பதிவில் பார்த்தோம். தன்னுடைய தரப்பு வாதங்களை வாலி எடுத்துரைக்க அவை எல்லாவற்றிக்கும் இராமன் எதிர்வாதம் செய்யாது தன் தரப்பு நியாயத்தை மட்டுமே ஒரு அரசனுக்குரிய ரீதியில் எடுத்துரைத்தான். அதிலும் இராமர் ,வனவாசம் வரும்போது அயோத்தியை ஆண்டது அவரது தம்பி பரதன். இங்கே, நீதியை எடுத்துரைக்கும்போது தன்னை அரசனாக காட்டிக்கொள்ளாமல், எங்களது அரசன் பரதனது ஆணைப்படி என்றுதான் குறிப்பிடுகிறார். எல்லா வாதங்களும் ஓரளவு முடிவுக்கு வருகின்றன. சரி இனி என்ன நடக்கிறதென பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து பார்க்கலாம் சீக்கிரம் வாங்க ... முன்னாடி போய் உக்காந்துக்க இடம்புடிக்கலாம்....
முதலில் எதிர்ப்பை காட்டிய வாலி சிறிது நேரம் மெளனமாக இருந்தான். மெதுவாக தன்னை உணர்ந்தவனாய் ஹேய் அயோத்தி ராஜகுமாரனே! ஆரிய இளவரசனே! நீ கூறிய வாதங்கள் எல்லாமே சரிதான். நான்தான் தவறு செய்துவிட்டேன். என்னுடைய நெறி தவறிய செயலுக்காக வருத்தபடுகிறேன். அறியாமையால் உங்களை பலவாறு நிந்தித்துவிட்டேன். என்னுடைய பிழைகளை பொறுத்தருள வேண்டுமென இராமனை நோக்கி இருகரம் கூப்பி தொழுதான். எந்த ஒரு குற்றமும் செய்தவர்கள் அந்த குற்றைத்தைஉணர்ந்து, அதற்காக வருந்தி இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த கருணைக்கடல் நம்மை மன்னித்து அருள்வார். அது தேவரானாலும் சரி மனிதரானாலும் சரி. அப்படிப்பட்ட பரம்பொருளின் ஆசிபெற்ற ராமனும் பிழை பொறுப்பது என்பது இயல்பானதே! இராமர் கருணையோடு வாலியை நோக்கி, வாலி நீ செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டாய். தற்பொழுது எல்லா பாவங்களிலிருந்தும் நீ விடுப்பட்டு மோட்ச உலகம் செல்வாய் என வாலிக்கு உறுதியளித்தார். இராமரின் வார்த்தைகளாலும் அம்பினாலும் புனிதமடைந்த வாலி மோட்சத்தை அடைந்தான்.
இதுல நாம கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னன்னா, ஒரு வழக்கில் எதிரெதிர் தரப்பினர் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அங்கு வழக்கு என்பதே இல்லை. திருட்டுத்தனமாக அடுத்தவர் சொத்துக்கோ இல்லை பொருளுக்கோ அலையும் அரசியல்வாதிகள் அதை அடைய எத்தனை குறுக்குவழிகள் உண்டோ அத்தனையும் செய்யும்போது, நியாயத்தின்பக்கம் நின்று தன் தவறை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். காரணம் அவர்கள் நீதியின் பக்கம் என்றுமே நின்றது இல்லை. இப்பொழுது நீதி சொல்ல ராமனைப்போன்று யாரும் வரவும் இல்லை. அதுப்போல, இங்கே இராமர் தான் செய்ததில் உள்ள நியாங்களை, பொறுமையுடன் வாலியிடம் தெளிவுபடுத்தினார். வாலியும் அதை ஏற்றுக்கொண்டு இராமரிடம் சரணடைந்தான். குற்றம் உணர்வது என்பது ஒரு நல்ல அரசனுக்கு அழகு. அதை வாலி உணர்ந்தான். பின்னாளில் வந்த திருவள்ளுவர்கூட தனது திருக்குறளின் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில்
"செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"
என்று தெளிவாக கூறி இருக்கிறார். அதன்படி வாலியும், இராமர் தரப்பு நியாங்களை ஏற்றுக்கொண்டு .அவரிடம் சரணடைந்தான். வழக்கும் சுமூகமாக முடிவுற்றது. இதற்கு பிறகும் அப்பீல் வாங்குவதில் அர்த்தம் இல்லை. ஒருவேளை தன்னுடைய திருட்டுத்தனங்களை ஒத்துக்கொள்ளாமல் இன்றைய அரசியவாதிகளைப்போல் வாலி இருந்திருந்தால் வாதம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். வழக்கும் முடிவுற்றிருக்காது. தன்னுடைய தம்பி சுக்ரீவனை மன்னனாகும்படி கட்டளையிட்டிருக்க மாட்டான். தனது கழுத்தில் இருக்கும் மணிமாலையை சுக்ரீவனுக்கு வழங்கி இருக்கமாட்டான். மேலும், தனது மகனான அங்கதனை சுக்ரீவனுக்கு உறுதுணையாக செயல்பட்டிருக்கவிடவும்மாட்டான் .ஒரு குற்றம் என்றால் அதை நாம் தெரியாமல் செய்தால் பரவாயில்லை. குற்றம் என்று தெளிவாக தெரிந்தால், அந்த இறைவனிடம் சரணாகதி அடைந்தால் பின்வருவன யாவுமே இன்பகரமானதாகவே இருக்கும் .
இந்தளவு நியாய தர்மங்களைப் பற்றி புரியாதவர்கள் இராமனைப் பற்றி குறைகூறுவர். வாலிக்கு கருணைக் காட்டவும், கடக்கமுடியாத பிறப்பு, இறப்பு எனும் பெருங்கடலையும், பிறவா நிலையை அடையவும், அந்த பரம்பொருள் செய்யும் லீலைகளை, அவரால் உருவாக்கப்பட்ட இராமன்மூலம் அந்த ஆதிபரம்பொருள் செய்யும் லீலைகள் இது. அதை தெய்வங்களே புரிந்துகொள்ளமுடியாதபோது சாதாரண மானிடர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?! அவர் ஒருவரை ஆசீர்வதித்து மற்றொருவரை வதம் செய்தாலும் இருவருமே உண்மையில் பலனடைகின்றனர். இதுவே பரம்பொருளின் கருணை. தாயினும் சிறந்த தயாபரன் அல்லவாஅவன்?!
இறைவனின் அருளால், உயிரை நீத்தல் என்பது மாபெரும் புண்ணியம். பகவான் கிருஷ்ணரின் முன்பாக உடலை நீத்த பீஷ்மரின் அதிர்ஷ்டத்தை ஸ்ரீமத் பாகவதம் புகழ்கிறது. அதுப்போலவே, இராமரால் வதம் செய்யப்பட்டு, அவரிடம் மன்னிப்பை வேண்டிய பின்னர், இராமரைப் பார்த்தபடியே மரணமடைந்த வாலி, தனது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலையடைந்தான். பகவானிடமிருந்து தான் பெற்ற பாக்கியத்தை ஒரு வானரத்தால்கூட உணர முடிந்தது. ஆனால் நவீன கால மக்களோ பூலோக நீதியையும் தர்க்கத்தையும் வைத்து இராமரைக் கேள்வி கேட்கின்றனர்.
மறைந்திருந்து வாலியை கொன்றது தவறு என வாதிடுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். அவர் குற்றவாளி என்றால், ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் அவரை வழிபட்டது ஏன்? பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பி அவரது புகழையும் போதனைகளையும் பரப்பியது ஏன்? அவர்கள் அனைவரும் மூடர்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் இராமாயணத்தை முழு நம்பிக்கையுடன் படித்தனர், முறையாகக் கேட்டனர், ஒழுங்காகப் புரிந்துக்கொண்டனர். இராமரை இதயப்பூர்வமாக வழிபட்டனர். ஆனால் இன்றைய மக்களோ, மாமிசம், மது, மாது, சூது போன்ற எல்லாவித பாவச்செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சாஸ்திரங்களைப் படிப்பதில்லை. எது சரி?! எது தவறு?! என தர்க்கம் செய்து தெளிவதில்லை, கோவிலுக்குச் செல்வதில்லை, எந்தவொரு புண்ணியத்தையும் செய்வதில்லை. ஆயினும், பகவான் இராமரிடத்தில் திறமையாக குறை காண்கின்றனர். என்ன ஒரு மூடத்தனம்!? மேலும், அவர்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழிவாகப் பேசுகின்றனர். நமது முன்னோர்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற கற்பனை கதைகளைக் கேட்டு நேரத்தை வீணடித்தார்கள் என்றும், அவர்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகள் என்றும் நினைக்கின்றனர். கற்றறிந்த பண்டிதர்களைக் காட்டிலும் உண்மையான அர்த்தங்களை” தாங்கள் கிரகிப்பதாகவும், தங்களின் தர்க்கங்கள் வேதகால ரிஷிகளைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் எண்ணுகின்றனர்.
இன்றைய நாத்திகர்கள், இராமாயணம், பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற எந்த சாஸ்திரங்களையும் படிப்பதில்லை. ஆனால் எல்லா வேதங்களையும் தொகுத்த வியாசரைவிட அதிகம் அறிந்தவராக தம்மை எண்ணிக் கொள்கின்றனர். அதை படித்து அதில் என்ன உள்ளது என தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் தாமாகவே ஆஸ்திகர்களாகி விடுகின்றனர் வேறு சில தத்துவ ஞானியரோ, வாலி எதிரே நின்றால் எதிராளியின் பலத்தில் அரை மடங்கு அவனுக்கு வந்து சேரும் என்பதை சொல்லிக்க்காட்டுகிறார்கள். இறைவனுக்கு இதுலாம் ஒரு பொருட்டா?!
எது எப்படியோ! இந்த வாலி வதைத்த வாதம் மறைந்திருந்து தாக்கியது சரிதானா என்பதற்கும், இல்லை இது கற்பனை கதை என்று சொல்பவர்களுக்கும் தேவையான வாத பிரதிவாத கருத்துக்கள் இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அது சரியே என்று நினைப்பவர்கள் தம்முள் எழும் தீய எண்ணங்களுக்கு நியாயத்தை கற்பிக்காமல் இறைவனின் துணைக்கொண்டு அதை அழித்துவிடுவார். இல்லை இது கற்பனை கதை என்று சொல்பவர்களுக்கு இங்கே விடை சொல்லப்படுகிறது .தீய எண்ணங்கள் நியாயப்படுத்தும்போது, அது முதலில் வாதமாக இருந்தாலும் முடிவில் உபாதையாக மாறும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தையும் அறிவையும் கொண்ட நமது முன்னோர்கள் ஆராயாது எதையும் சொல்லவில்லை என்ற தீர்ப்புடன் இராமர் செய்தது சரியே என்ற உண்மையுடன் மீண்டும் ஒரு சுவாரசியமா தகவலுடன் உங்களை அடுத்தவாரம் சந்திக்கிறேன்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469574
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469574
நன்றியுடன்
ராஜி
வாதம் சரியே த ம 2
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteவாலி..........வதை........வாதம்....... நன்று.தெரிந்த கதை தான்,தெரியாத உண்மையைப் போட்டுடைத்தமைக்கு நன்றி........
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteநல்ல வாதம் பாராட்டுகள் த.ம வாக்குடன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவாதங்களும் கருத்துகளும் அருமை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ
Deleteகேள்வியும் அங்கேயே இருக்கிறது. பதிலும் அங்கேயே இருக்கிறது. ரசித்தேன். ஆறாம் வாக்கு என்னுது.
ReplyDeleteஎல்லாமே அவனுள் அடக்கம் சகோ
Deleteவதமும் அது தொடர்பான வாதமும் நன்று !
ReplyDeleteவாலி வதமும் வாதமும் - நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete