அம்பாள் மாதமான ஆடிமாதம் முழுக்க பண்டிகை கொண்டாட்டங்களை தனித்தனியா பார்த்தோம். ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு. ஆடிமாத முதல் வெள்ளி சொர்ணாம்பிகை, 2வது வெள்ளி அங்காளபரமேஸ்வரி, 3வது காளிகாம்பாள், 4வது வெள்ளி காமாட்சி அம்மன்ன்னு கும்பிடனும். ஒருவேளை இந்த ஆடி மாசத்துக்கு ஐந்து வெள்ளிக்கிழமை இருந்திருந்தா நாம வணங்க வேண்டிய தெய்வம் வரலட்சுமியாகும்.
வரலட்சுமி அம்மனை பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு முந்தி ஆடிமாசம் உருவான கதையை பார்ப்போம்.
ஆடி என்ற தேவலோக மங்கை சிவன்மீது காதல் வயப்பட்டாள்.. பார்வதிதேவி சிவனை பிரிந்து தவம் செய்ய பூலோகத்தில் இருந்தபோது , பாம்பு உருக்கொண்டு யாரும் அறியாதபோது கயிலாத்திற்குள் ஆடி நுழைந்தாள். பின் பார்வதிதேவியாக மாறி சிவனை ஆசையோடு நெருங்கினாள். ஆடி சிவனை நெருங்க நெருங்க ஒருவித கசப்பு சுவையை நாவினில் உணர்ந்த சிவபெருமான் தன்னை நெருங்குவது தன் மனைவி பார்வதிதேவி அல்ல என்பதை புரிந்துகொண்டு கடுங்கோபத்துடன் தனது சூலாயுதத்தால் ஆடியை குத்தி கிழிக்க முயன்றார்.
சூலாயுதத்திலிருந்து வெளிவந்த தீப்பொறிகள் ஆடியை புனிதவளாக ஆக்கியது. ஆடியின் காமம் மறைந்து ஈசனை தொழுது, ஐயனே! ஒருநிமிடமாவது தங்களது அன்பான பார்வை என்மீது படவேண்டுமென இவ்வாறு நடந்துக்கொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டுமென வேண்டி நின்றாள். என்ன இருந்தாலும், நீ பார்வதிதேவி உருக்கொண்டு வந்தது தவறு, எனவே, நீ பூலோகத்தில் கசப்பு சுவையுடைய மரமாய் பிறப்பா என சபித்தார். இதற்கு விமோசனம் என்னவென்று ஆடி கேட்க, கவலைப்படாதே! பார்வதிதேவியின் உருக்கொண்டு வந்ததால் அவளுக்கு ஈடான மரியாதை உனக்கு கிடைக்கும். பார்வதிதேவியின் பரிபூர்ண அருள் உனக்கு கிடைக்கும். உன் நிழலில் தேவி இளைப்பாறுவாள். உன் பெயரிலேயே பூலோகத்தில் ஒரு மாதம் தோன்றும். அது அம்பாளுக்கு உகந்த மாதமாகும் என அருளினார்.
தேவலோக மங்கை ஆடிக்கு சிவன் அளித்த சாபமே அவளுக்கு வரமானது. ஆடி, பூலோகத்தில் தெய்வாம்சம் பொருந்திய சக்தியின் வடிவமான வேம்பாய் நின்றாள். நோய்கள் பலவற்றை நீக்கும் ஆற்றல் இந்த வேம்புக்குண்டு. தீய சக்திகளை அண்டவிடாது. செவ்வாய், வெள்ளியில் வேப்ப மரத்துக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வணங்குவதால் மாங்கல்யபலம் கூடும். வேம்பினைப்போலவே துளசி வழிபாடும் ஆடிமாதத்தில் சிறந்தது.
இனி வரலட்சுமி தேவியைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்..
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்தபோது கடலில் இருந்து தோன்றியவர் லட்சுமி. அவரை மகாவிஷ்ணு மணந்தார். பூலோகத்தில் தசாவதாரங்களை விஷ்ணு எடுத்தபோதும் அந்த சமயங்களில் லட்சுமியும் துளசி, பத்மாவதி, சீதா தேவி என்று பல வடிவங்களில் வந்து நித்ய சுமங்கலியாக விளங்கினார். தன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கு செல்வங்களை வாரி வாரி வழங்கும் குணம் படைத்த மகாலட்சுமி, பெண்களுக்கே உரிய தாயுள்ளமும் பொறுமையும் கொண்டவர். அப்படிப்பட்ட லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும். . திருமணத் தடை விலகி மாங்கல்ய பாக்கியம் பெறலாம். கலை, செல்வம், வீரம், குழந்தைப்பேறு, தான்யம், வெற்றின்னு பதினாறு வகையான செல்வத்தையும் ஒரு சேர அளிப்பவள் இந்த வரலட்சுமி. இவளைத்தான் இன்று பூஜிக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு பற்றி ஏற்கனவே பதிவு போட்டதால மகாலட்சுமியை வீட்டில் வரவைக்க செய்ய வேண்டியதை பார்க்கலாம்....
அதிகாலை எழுந்து கைகால் கழுவி, பல் துலக்கி விபூதி, குங்குமமிட்டு கொல்லைப்புற கதவை திறந்தபின்னே தலைவாசலை திறக்கவேண்டும். இதுக்கு காரணம் மூதேவின்னு சொல்ற தூக்கத்துக்கு அதிபதியான மூத்ததேவி பின்வாசல் வழியாக செல்வாள் என்பதால்... தெரு வாசலுக்கு நீர் தெளித்து மிச்ச மீதி தண்ணியை கொண்டுவந்து பின்வாசலுக்கு தெளிக்க வேண்டும்.. வாசல் பெருக்கி கோலம் இடவேண்டும். சாணம் தெளித்தால் நல்லது. சாணத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர், பூக்கள், கண்ணாடி, துணிகள், வளையல் என அவரவர் வசதிக்கேற்ப கொடுக்க வேண்டும். இதனால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். வெள்ளி, செவ்வாய், விளக்கேற்றிய பின் உப்பு, தண்ணீர், பால், தயிர், பணத்தை கொடுக்க கூடாது. தனக்கு சீராய் வந்த வெள்ளி பொருட்களை விற்க, பிறருக்கு கொடுக்ககூடாது. வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி தேவி விரும்பிய வரங்களை அளித்து அருள்புரிவார்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.
ஆடியின் பெருமை அறிந்தேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteஆடி வெள்ளியும் அம்மன் சிறப்புகளும்தொடர்களாக பகிர்ந்துள்ளீர்கள். கண்டுகொண்டேன்.
ReplyDeleteகண்டுகொண்டதற்கு நன்றிப்பா
Deleteஆடி க்குப் பின்னாடி இவ்ளோ கதைகளா........ நன்றி,தங்கச்சி........
ReplyDeleteநன்றிண்ணே. வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஆடி க் கதைகள் அனைத்தும் அருமை...அறியாதவை...ஆடி போயி ஆவணி வந்தாச்சே!!! அடுத்து ஆவணி ஞாயிறின் சிறப்பு பற்றி வருமோ!!!
ReplyDeleteகீதா: எங்கள் ஊரில் அதான் நாகர்கோயிலில் ஆவணி ஞாயிறுனா நாகராஜா கோயில் களை கட்டும்...
ஓ. 5 வாரமும் கலக்கிடலாம்
Deleteபுதுக்கதை. அதாவது நான் அறியாத கதை!
ReplyDeleteஆறாம் வாக்கு.
நானும் அறியாத கதை சகோ. வார வழிப்பாட்டில் சொன்னாங்க...
Deleteஆடிவெள்ளியின் சிறப்பு அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஎனக்கு தெரிந்ததெல்லாம் ஆடி கார்தான் :)
ReplyDeleteஆடி மாசம்கூடவா தெரியாது
Deleteபுருஷன் பெண்டாட்டியை பிரித்து வைப்பார்களே ,அந்த ஆடி தெரியாமல் போகுமா :)
Deleteஅதானே
Deleteசிவனும் பார்வதியும் வெவ்வேறு சாதியாக இருந்திருந்தால் அப்போதே ஆணவப் படுகொலை நடந்திருக்கும்..........
ReplyDelete
Deleteஅவர்கள் இறை ஜாதி ,முதலில் ,மதம் கொண்ட மனிதர்ளளுக்கு தான் ஜாதி ,இறைவன் படைத்த உயிர்களில் ,இனங்கள் இருந்தன ,குலங்கள் இருந்தன ,மலையில் வாழும் இனம் ,வயலில் ,வாழும் இனங்கள் ,கடல் சார்ந்து வாழும் இனங்கள் ,பாலை சார்ந்த இடங்களில் வாழ்பவர்கள் ,இவர்க்ளுக்கு ஏற்ப அவர்களது ,உடலமைப்பும் ,உணவுமுறையும் ,பழக்கவழக்கங்களும் அமைந்து இருந்தன ,உதாரண்மாக ,மலையில் வாழ்பவனுக்கு ,நல்லமிளகுதான்உபயோகப்படுத்த வேண்டும் ,ஏனெனில் ,அங்கே அதுதான் கிடைக்கும் ,வயல் சார்ந்த இடங்களில் இருப்பவனுக்கு பச்சை மிளகாய்தான் ,உபயோக படுத்தி வந்தனர் .தொழில் கலப்பு ,இனக்கலப்பு என ஆகியதால் யாருக்கும் ,தனித்தன்மை இல்லாதுபோய்விட்டது .உலகில் இரண்டே இரண்டு சாதிதான் உண்டு ..ஆண்சாதி ,இனி ஒன்று பெண்சாதி .இதுதவித்து வேறு எதுவும் இல்லை.
ஆடிப் பதிவு அருமை! த ம 8
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteஆடி மாதத் தகவலும், வேம்பாக பிறந்த கதையும் நன்று.
ReplyDeleteத.ம. +1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete