எம்ப்ராய்டரி செய்யுறதால துணியில் ஒட்டினது போக மிச்சம் மீதி கற்கள் நிறைய இருக்கும். கொஞ்சமா இருக்குறதால முழுத்துணிக்கும் ஒட்ட முடியாது... அதையெல்லாம் பேக் பண்ணி பரண்ல தூக்கி போட்டு வைப்பேன். ஸ்டாக்கிங் துணி, வுல்லன் நூல், சில்க் த்ரெட் நூல் இதுமட்டுமில்லாம பிளாஸ்டிக் கவர்லயும் பூக்கள் செஞ்சு ஓய்ஞ்சு போய் வலையில் மேயும்போது துணியில் ஒட்டும் கற்களைக்கொண்டு பூக்கள் செய்யுறதை பார்த்தேன்..உடனே செஞ்சு பார்த்தாச்சு...
தேவையான பொருட்கள்:
கலர் கலரான திலகம் வடிவ குந்தன் கற்கள்
வட்ட வடிவ குந்தன் கற்கள்
கோல்ட் இல்ல சில்வர் கலர் அலுமினிய கம்பி
பச்சை டேப்
நூல்
எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க...
இப்படியே எல்லா கற்களிலும் கம்பி கோர்த்து முறுக்கி வச்சுக்கோங்க.
வட்ட வடிவ குந்தன் கற்களை மையமா வச்சு திலக வடிவ குந்தன் கல் வச்சு பூ கட்டுற மாதிரி நல்லா இறுக்கமாக் கட்டிக்கோங்க.
இப்படியே ஒண்ணொன்னா ஆறு இல்ல எட்டு கற்கள் வச்சு இறுக்கமா கட்டிக்கிட்டே வந்தால் ஒரு பூ ரெடியாகிடும்.
உங்களுக்கு பிடிச்ச மாதிரி வளைச்சு ரெடிப் பண்ணிக்கோங்க.
இதை வச்சு க்ரீட்டிங் கார்ட் ரெடி பண்ணலாம். பொக்கே தயாரிக்கலாம். ஃப்ளவர் வாசும் செய்யலாம். புது கற்கள்தான் வாங்கனும்ன்னு அவசியமில்ல. பழசாகிப்போன பிள்ளைங்க ட்ரெஸ், நம்ம புடவைல இருக்கும் கற்களிலே கூட செய்யலாம்.பிடிச்சிருக்கா!?
வினாயகர் சதுர்த்தி வருதே! வினாயகருக்கு போட மாலை வேணும்ல்ல... அதனால....
தேவையான பொருட்கள்:
கோல்ட் கலர் சமிக்கி
பச்சை கலர் கண்ணாடி மணி,
மணி கோர்க்கும் நரம்பு,
கோல்ட் கலர் பிளாஸ்டிக் கோவில் மணி
கோல்டன் ரிப்பன்
வெள்ளை கண்ணாடிப் பூ
கோல்ட் கலர் பிளாஸ்டிக் குண்டு மணி
சமிக்கி எல்லா கலர்லயும் ஃபேன்ஸி கடைகள்ல கிடைக்குது. 100 கிராம் பத்து ரூபாய். உங்களுக்கு பிடிச்ச கலர்ல வாங்கி வந்து அதோட இதழ்களை உள்பக்கமா மடிச்சா கீழ் படத்துல இருக்குற ஷேப்புல வந்துடும். இது மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க.
உங்களுக்கு மாலை தேவைப்படும் அளவுக்கு பிளாஸ்டிக் நரம்பை கட் பண்ணி, அதுல பிளாஸ்டிக் கோவில் மணியை கோர்த்துக்கோங்க. இந்த கோவில் மணியும் எல்லா கலர்லயும் கிடைக்குது.
அடுத்து மணி கோர்த்த நரம்போட ரெண்டு நுனியையும் ஒண்ணா சேர்த்து ஒரு நரம்பாக்கி அதுல பிளாஸ்டிக் பூவோட இதழ்கள்லாம் மணியை பார்த்த மாதிரி கோர்த்துக்கோங்க. இந்த பிளாஸ்டிக் பூவும் எல்லா கலர்லயும் கிடைக்குது. இந்த பூ கிடைக்காட்டி சமிக்கி கூட யூஸ் பண்ணிக்கலாம்.
அடுத்து பிளாஸ்டிக் குண்டு மணி கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து கோல்ட் குண்டு மணியை கோர்த்துக்கோங்க.
அடுத்து வெள்ளை பிளாஸ்டிக் பூவை கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து 3 பச்சைக் கலர் மணியை கோர்த்துக்கோங்க. இதோட மாலையோட குஞ்சலம் ரெடி.
அடுத்து, ஒண்ணா இருக்கும் ரெண்டு பிளாஸ்டிக் நரம்பையும் தனித்தனியா பிரிச்சு, ஒரு நரம்புல மடிச்சு வச்சிருக்கும் சமிக்கியோட இதழ்கள் மாலையோட மேல்பக்கம் பார்க்கும் மாதிரி கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து, பச்சை கண்ணாடி மணி 3 கோர்த்துக்கோங்க.
அடுத்து சமிக்கியோட இதழ்கள் மாலையோட கீழ்பக்கம் வர்ற மாதிரி கோர்த்துக்கோங்க. அதுக்கப்புறம் இன்னொரு சமிக்கியை திருப்பி எதிரும் புதிருமா வரும் மாதிரி, மேல் படத்துல இருக்குற மாதிரி கோர்த்துக்கோங்க.
இப்படியே 3 மணி, ரெண்டு சமிக்கின்னு மாத்தி ரெண்டு நரம்புலயும் கோர்த்துக்கிட்டு வாங்க.
ரெண்டு பக்கமும் ஒரே அளவுல கோர்த்தப் பின், கோல்ட் ரிப்பனை நரம்புல முடிச்சு போட்டுக்கோங்க.
அழகான கோல்ட் சமிக்கி மாலை ரெடி.
எங்க வீட்டு சாமி படத்துக்கு ஒரு மாலை.
எங்க வீட்டு பிள்ளையாருக்கு ஒரு மாலை. என் கையால நானே செஞ்சு போட்டதுல ஒரு சந்தோசம்!!
சமிக்கி பாக்கட் நாற்பது ரூபா, கண்ணாடி பூ, மணி, நரம்புலாம் சேர்த்து மொத்தம் 100 ரூபாய்ல பொருள்லாம் வாங்கி 2 அடி நீளத்துல ரெண்டு மாலை செஞ்சேன். ரெண்டு மாலை செய்ய அரை மணிநேரம்தான் பிடிச்சது. வெளில வாங்குனா ஒரு மாலை 100 ரூபாய் சொல்லுவாங்க. நாமளே செஞ்சா நமக்கு பிடிச்ச கலர்ல, பிடிச்ச டிசைன்ல செஞ்சுக்கலாம்தானே!?
இதுலாம் மீள்பதிவு...
இந்த வினாயகர் சதுர்த்திக்கு குடை, மாலைலாம் செய்யலாம்ன்னு ஐடியா... செஞ்சு பதிவாக்கனும்ன்னு வினாயர்கர்கிட்ட வேண்டிக்கோங்க. ஏன்னா நான் சோம்பேறி....
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469653
நன்றியுடன்,
ராஜி.
இதுலாம் மீள்பதிவு...
இந்த வினாயகர் சதுர்த்திக்கு குடை, மாலைலாம் செய்யலாம்ன்னு ஐடியா... செஞ்சு பதிவாக்கனும்ன்னு வினாயர்கர்கிட்ட வேண்டிக்கோங்க. ஏன்னா நான் சோம்பேறி....
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469653
நன்றியுடன்,
ராஜி.
வீட்ல இருந்துகிட்டே பல லட்சங்கள் புரட்டுவீங்க போலயே...
ReplyDeleteஅடுத்து விநாயகரா ?
ம்க்கும் ஒத்தை ரூபாய்க்கே வழியில்லையாம்.. இதுல பல லட்சம் ஓவாவா?!
Deleteபல லட்சம் தராத சந்தோஷத்தை 'தமிழ்மண முதல்வி' ஆனதில் கிடைக்குமென நம்புகிறேன் !வாழ்த்துக்கள் :)
Deleteகண்டிப்பா மகிழ்ச்சியை தரும். இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். கள்ளத்தனம் செய்தாலும் பெஸ்டா செய்யனும்ங்குறது என் பாலிசி
Delete'விஜயலட்சுமி'யின் அருள் இருக்க ,தூயராஜிக்கு இனிய ,தூயவெற்றி கிடைக்காமல் போகாது :)
Deleteஅருமை........அழகு............வாழ்த்துக்கள்,தங்கச்சி........புள்ளையாருக்கு மாலை செஞ்சு போட்டதில சந்தோஷம்......
ReplyDeleteநன்றிண்ணே
Deleteகுந்தன் பூக்களும், மாலையும் ....பள பள ன்னு அழகா இருக்கு ராஜிக்கா...
ReplyDeleteநன்றிப்பா
Deleteஇன்னாது நீங்க சோம்பேறியா??!!! அப்ப நாங்கல்லாம் எங்கிட்டுப் போக?!!! நீங்க அல்லாத்துலயும் பூந்து வெள்ளாடுறீங்க!!! எளுதறீங்க.....
ReplyDeleteரொம்ப அழகா இருக்கு ராஜி!! சூப்பர் கைவண்ணம்! உங்க வீட்டுப் பிள்ளையார் ரொம்பக் கொடுத்துவச்சவருதான்! ஜிகுஜிகுனு சூப்பரா இருக்கார்..இன்னும் குடை எல்லாமும்னா கேக்கவே வேண்டாம்...சரி அவரை பாக்கறதுக்காவது வேண்டிக்கறோம்...நீங்க செஞ்சு படம் புடிச்சு போடணும்னு...கொஞ்சம் நல்லா எடுத்துப் போடுங்க...எப்பவும் நல்லாருக்கும் படம் இந்த வாட்டி ஏன் டல்லா கீது??!!!
கீதா
சொன்னா நம்புங்கப்பா. நிஜமாவே நான் சோம்பேறிதான், ஆனா, இறங்கிட்டா ரெண்டுல ஒன்னு பார்க்காம விடமாட்டேன்.
Deleteகேமரா பேட்டரி மாத்தனும் கீதாக்கா. இது பழைய மொபைல்ல எடுத்த போட்டோ. அதான் டல்லா கீது/
அருமையான கைவண்ணம்.
ReplyDeleteஆறாவது வாக்கு.
வருகைக்கும் கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி சகோ
Deleteஅருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றிண்ணே
Deleteஅருமையான கைவேலைப்பாடு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteகைவேலைப்பாடு அருமை!த ம 7
ReplyDeleteநன்றிப்பா
Deleteஅழகாய் இருக்கிறதே.... பாராட்டுகள்.
ReplyDeleteநன்றிண்ணே
Delete