Sunday, October 21, 2018

சுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் - பாட்டு புத்தகம்


90களில் பிரசாந்த், பிரபுதேவா, விக்ரம்,  அஜீத், விஜய், அப்பாஸ்ன்னு அழகழகா லட்டு மாதிரி பசங்க வந்த காலக்கட்டத்திலும் என் 16 வயசில்  இந்த  கார்த்திக் அங்கிளைதான் பிடிச்சுது. அது அறியாத வயசுன்னு மன்னிச்சு விட்டுடலாம். விஜய் சேதுபதி, விமல், கார்த்தி, அதர்வா, ஜெயம் ரவின்னு லட்டு மாதிரி நடிகர்கள் வந்தாலும், இந்த    42 வயசுலயும் அதே அங்கிளைதான் பிடிக்குது. இதுலாம் என்ன டிசைனோ தெர்ல... இதுலாம் நல்லதுக்கான்னும் தெரில. போன், லாப்டாப்ல இருக்கும் வசதி மாதிரி நாமும் அப்பப்ப அப்டேட் ஆகிட்டிருக்கனும். அதான் நல்லது. மாற்றத்தை ஏத்துக்காத மனசு சரியில்லன்னுதான் சொல்லனும்.

கார்த்திகின் குறும்புத்தனமான நடிப்பு பிடிக்கும். ஆனா, அந்த குறும்புத்தனத்தை விட்டு கொஞ்சம் சீரியசா நடிச்சாலும் செமயா இருக்கும். அதனால்தான் நவரச நாயகன்னு பேர் வந்துச்சோ என்னமோ!? அதுமாதிரி நடிப்பின் முதிர்ச்சியை சிலபடங்களில் பார்க்கலாம். எனக்கு தெரிஞ்சு, கோகுலத்தில் சீதை, பொன்னுமணி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்லாம் நடிப்பின் உச்சம்.  ஆனந்த பூங்காற்றே படத்துல கொஞ்ச நேரமே வந்திருந்தாலும், அஜீத்தைவிட கார்த்திக்தான் மனசுல நிப்பார். படம் முழுக்க வேட்டி கட்டி, ஆழ்ந்த நிறங்களில் சட்டை அணிஞ்சு, சேட்டுங்க மாதிரி நீளமா குங்குமம் இட்டு.... ச்ச்ச்ச்ச்ச்சோ சுவீட்டான கார்த்திக்.

மாயாவி படத்துல வரும் ஜோக் இது, ஜோதிகாவை பார்த்து காமெடியன் சொல்வாப்ல, அவனவன் சிம்ரன் படத்தை மூணுமணிநேரம் பார்த்தா, நான் சிம்ரன் போஸ்டரையே மூணு மணிநேரம் பார்ப்பேன்னு.. வரவர அந்த மாதிரிதான் ஆகிட்டுது என் ரசனை.  வரவர கார்த்திக் வெறியை ஆகிட்டேனோ?! பாடல்வரிகளும் தமிழில், எளிதா புரிஞ்சு ரசிக்கும்படியா இருந்தது இந்த பாட்டோட பிளஸ். மீனா ரொம்ப அழகா தெரிஞ்ச படத்துல இதும் ஒன்னு. இன்னொன்னு பாரதி கண்ணம்மா. இந்த ரெண்டு படத்தின் மீனாவை மறக்கமுடியாது.   அந்த படத்துல இருந்து சூப்பரான ஒரு பாட்டு...



சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
சோலைக்குயில் பாடும்..
ஹ்ம்ஹூம்.. அப்படி இல்லே..
தானனன னானா னானனனனானா..

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
ம்ம்.. அப்படித்தான்..

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா!
இதயம் துடிப்பதேன்?
இசையின் லயத்தில் அல்லவா?
அதை உள்ளே கேளு.... நீயும் பாடு..
(சோலைக்குயில்..)

கொட்டும் மழை முடிந்திட்ட பிறகு,
கொடிகளில் இலையிலிருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
பல கதை சொல்லுமே! அதை கண்டுபிடி மனமே!
குடங்களை குளத்தில் நிறைத்து
குமரிகள் நடக்கும்பொழுது
குடத்துக்குள் தளும்பும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே!
நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறன்றோ?!
பறவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ?!

பெண்ணின் கையோடு.... வளையொலி சங்கீதம்.
பெண்ணின் காலோடு... கொலுசொலி சங்கீதம்.
அந்த வளையும், கொலுசும் சங்கீதம் உனக்கு சொல்லித்தரவா?!
(சோலைக்குயில்...)

துள்ளி வரும் குழந்தை எடுத்து, அள்ளிவைத்து அணைக்கும்போது
நெஞ்சுக்குள்ளே உதைப்பது சின்ன சுகமல்லவா
அது நெஞ்சுக்கு அழகல்லவா?!
இதயங்கள் எறியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி
இருந்தால் சின்ன சுகமல்லவா?!
சுற்றமெல்லாம் போன பின்னும்.. தனிமைதான் சின்ன சுகம்.
வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்
இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்
இந்த சந்தோஷம் சோகத்திலும் சின்ன சுகம்
ஒரு ஆனந்த பூங்காற்றாய் அள்ளி தருவது இசை இசை அல்லவா?!
(சோலைக்குயில்..)

படம்: ஆனந்த பூங்காற்றே
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
நடிகர்கள்: கார்த்திக், மீனா

பாட்டு நல்லா இருக்கா?!

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. ஹரிஹரனுக்காக அவர் கலெக்ஷனில் இந்தப் பாடல் என்னிடம் இருக்கிறது. அவ்வப்போது கேட்பேன்.

    ReplyDelete
    Replies
    1. போன், லாப்டாப்ன்ன்னு எல்லாத்துலயும் இந்த பாட்டு இருக்கும் சகோ

      Delete
  2. கார்த்திக் அங்கிள் என்ற விசயம் இன்றுதான் அறிந்தேன் சகோ.

    நல்லபாட்டுதான் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே அங்கிள்தான். இப்ப தாத்தா..

      Delete
  3. அருமையான பாடல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete