Sunday, December 02, 2018

எங்க புள்ள இருக்க?! - பாட்டு புத்தகம்

வானத்துல பறக்கும் பட்டம்போல எதை பத்தியும் யோசிக்காம சுத்திக்கிட்டிருந்த ஒரு பையன்,  விதிவசத்தால் ஒரு இக்கட்டான சூழலில் ஒரு பொண்ணை பார்க்கிறான். பிடிச்சு போகுது. பேர், ஊர், குலம், கோத்திரம்ன்னு எதும் தெரியாது. பார்த்ததும் தனக்கானவள்ன்னு மனசுக்கு தோண, இக்கட்டான சூழலிலும், எதிராட்கள் சூழ்ந்திருக்க, அத்தனைப் பேரு முன்னாடியும் உன்னை எனக்கு பிடிக்குதுன்னு சொல்லிட்டு போயிடுறான். அதுவரை காதல் வசப்படாத அந்த பொண்ணுக்கு,  அவன் போனப்பின் அவளுக்குள் ரசாயாண மாற்றம்.  காதல் கொண்டு அவனை தேடி அவன் சொன்ன இடத்துக்கு அவன்மேல் நம்பிக்கை வச்சு போகுது. 

அந்த பொண்ணை மீண்டும் பார்க்கனும், கூட்டிட்டு வந்திடனும்ன்னு அந்த புள்ளை ஊருக்கு அந்த பையன் போறான். அங்க போனபின்தான் தெரியுது. தன்னை தேடி அந்த பொண்ணு . அவன் சொன்ன இடத்துக்கு வந்திருக்குன்னு.. அங்க  போய் தேடுறான். தேடுறான்.  கைக்கு கிட்டும் சமயத்தில் சுனாமி வந்து அந்த புள்ளையை அடிச்சுட்டு போய்டுது. அந்த சூழலில்தான் இந்த பாட்டு. அவனின் ஏக்கத்தினை மிகவும் மெல்லிய இசையில் இருக்கும். 

வீடியோவில் பார்க்கும்போது காட்சிகளின் இரைச்சல் பாடலின் தரத்தை குறைச்சு காட்டும். ஆனா, ஆடியோவில் கேட்கும்போது இரைச்சல்கள் இல்லாம, ரொம்ப மெல்லிய இசையோடு  இந்த பாட்டு அழகா மனசை பாதிக்கும்.  . அவனின் ஏக்கத்தினை வரிகளாய் அழகாக எளிதான வரிகளால்  பகிர்ந்துள்ளார் யுகபாரதி. 

எங்க புள்ள
இருக்க?!

 நீ சொல்லடி ..
கண்ணு முன்ன வந்து நீ 
கொஞ்சம் நில்லடி....
ஒத்தையா வேகுறேன்...
மொத்தமா நோகுறேன்...
இது ஏனோ தானோ?!
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன நீ
வந்து கொஞ்சம் நில்லடி......

அரிதான பொருளாக
தெரிந்தாயடி!!
அடைக்காக்க முடியாமல்
தொலைத்தேனடி!
எனக்குள்ளே புது
மூச்சை கொடுத்தாயடி...
சுழல் போல
அதை நீயே எடுத்தாயடி…

பொத்தி வச்ச
உன் நினைப்பு
பொத்திக்கிட்டு கொட்டுதடி..
சுத்தி விட்டு ராட்டினமா
என் மனசு சுத்தடி...
இது ஏனோ தானோ….
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து  நீ 

கொஞ்சம் நில்லடி!
எனக்கான வரம்போல
பிறந்தாயடி..

தவமேதும் புரியாமல்
கிடைத்தாயடி...
இனிமேலும் இவன்
வாழ முடியாதடி,
இறந்தாலும் உன்னை
தேடி அலைவேனடி...

உன்ன இவன்
கண்ணு முழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி
அப்படியே செத்திடவும்
தோணுதடி..
இது ஏனோ தானோ…
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து நீ 

கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!

இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: பலராம்
படம்: கயல்

நடிகர்: சந்திரன்

8 comments:

  1. இது வரை கேட்டதில்லை.

    அத்தனை ஈர்க்கவில்லை.

    ReplyDelete
  2. இதுவரை கேட்டதில்லை.

    ReplyDelete
  3. படம் பார்க்கவில்லை
    முதன் முறையாகக் காணொலியில் கண்டேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  5. இந்த பாடல் மிக அருமையா இருக்கும்..

    அதிலும் அந்த நாயகனும் , நண்பனும் பயணிக்கும் இடங்கள் அவொலோ அழகா இருக்கும் கா ..

    ReplyDelete
  6. அழகான பாடல்..எனக்கும் மிகவும் பிடிக்கும்

    ReplyDelete
  7. இந்தப் பாட்டை இப்பத்தான் கேட்கிறேன் ராஜி....ஆனால் எதோ ஒரு பாட்டை அப்படியே நினைவுப்படுத்துது...ஸ்ரீராம் சொல்லிருக்கனுமே எந்தப் பாட்டைன்னு...எனக்கு ட்யூன் மட்டும் கிடைக்குது அந்தப் பாட்டின் வரிகள் நினைவுக்கு வரலை...

    கீதா

    ReplyDelete