நம்ம ஊரு காதலுக்கும் ஆத்தங்கரைக்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போய் இருக்கு போல! மிருகங்களோடு மிருகங்களாய் வாழ்ந்து வந்த மனிதன் காடு மேடு, மலையெல்லாம் சுற்றி வந்த மனிதன் ஒருகட்டத்தில் ஆத்தங்கரையோரம் தங்க ஆரம்பித்தபின்னரே உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு காதல், காமம், கோபம், பழி, குடும்பம்ன்னு வாழ ஆரம்பித்து கிராமம், நகரமென நகர்ந்து இன்றைய அறிவியல் யுகத்துக்கு வந்து நிற்கிறான்.
என்னதான் வாழ்க்கையை எளிதாக்கும் அறிவியல் சாதனங்களோடு வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் மனசு கிராமத்து சுத்தமான காற்று, ஆற்றங்கரை, அருவி, கரையோர மரங்கள். மரத்தடி கயித்து கட்டில், மாந்தோப்பு, நாவல்/இலந்தை மரம்ன்னு இப்படியேதான் சுத்துது. சின்ன வயசில் ஆத்தங்கரைக்கு துணி துவைக்க அம்மா, பக்கத்து வீட்டு அக்கா, பாட்டி, மாமிகளோடு போகும்போது நீச்சல் கத்து தரேன்னு பக்கத்து வீட்டு அண்ணா துண்டெடுத்துக்கிட்டு வருவார். நடக்கையிலே சினிமா கதை, அது இதுன்னு பேசிட்டு வருவார். இதுலாம் எதுக்கு சொல்றார்ன்னு அப்ப புரியல. ஒரு வயசுக்கு அப்புறம் இதுலாம் புரிய வந்துச்சு. அண்ணன் நமக்கு கதை சொல்லல. கூடவரும் அக்காக்கு ரூட் விட்டிருக்கார்ன்னு.. இப்படி பல காதல் ஆத்தங்கரையோரம்தான் வளர்ந்திருக்கு.
கிராமத்துல மட்டுமில்ல, ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது... ஆத்தங்கரை மரமே ... ஏய்! ஆத்தா! ஆத்தோரமா வாரியான்னு சினிமாக்களும் ஆத்தங்கரைதான் லவ் பண்ண சிறந்த இடம்ன்னு சொல்லாம சொல்லுது.
அட, சினிமாவுலயும், கிராமத்துலயும் மட்டுமில்லீங்க.

கருங்கால் வேம்பின் ஒள் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட்டதவத்
”தெழுகுளிறு மிதித்த ஒருப்ழம் போலக்
குழையக் கொடியார் நாவே
காதலர் அகலக் கல்லென்றவ்வே.
- குறுந்தொகைப்பாடல்
கரிய நிறத்தையுடைய வேப்பமரத்தின் காம்புகளில் அழகிய மலர்களின் புதுவரவானது, அதை அனுபவிக்க என்னுடைய தலைவன் இங்கில்லாததால் பயனில்லாமல் போகுமோ?.தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து சென்றதைக் குறித்துத் தவறாக இந்த ஊரில் உள்ள மகளிரின் நாக்குகள் அலர் பேசுகின்றனர். அது, ஏழு நண்டுகள் சேர்ந்து உண்ண நினைத்துக் குழையச் செய்த, ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்திருக்கும் வெள்ளிய கொம்புகளையுடைய அத்திமரத்தின் ஒரு பழத்தைப் போல நான் வருத்தப்படும்படி கல் என்ற ஒலியைத்தரும்படி இருக்கிறது. என சங்ககால பாடலும் ஆத்தங்கரைக்கும் காதலுக்குமான ஒற்றுமையை எடுத்து சொல்லுது.
காதல் பிரிவு பொறுமை கொள்ளாது. அலைகடல்போல் மனசு கொந்தளிச்சுக்கிட்டே இருக்கும். சம்பந்தப்பட்டவங்க வரும்வரைக்கும் இயற்கையா நடக்கும் சின்ன சின்ன எதிர்மறையான விசயத்துக்கும்கூட அவங்கதான் காரணம்ன்னு மனசு கோபம் கொள்ளும் . தான் இப்படி இருக்க அவங்கதான் காரணம்ன்னு கொலைவெறி வரும். ஆனாலும் எப்பவாவது வருவாங்கன்னு காத்திருப்பாங்க. அப்படி வந்துட்டா, கோவமே கோவம் கொள்ளுமளவுக்கு கோவம்லாம் மறந்து ஆத்துமேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தான்னு பாட்டு பாடிக்கிட்டே போகவேண்டியதுதான்....
பொன்னுமணி படத்துல வரும் எல்லா பாட்டுமே செம ஹிட். நெஞ்சுக்குள்ளே இன்னாரென.. பாட்டு பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டுல டான்ஸும், கார்த்திக்கின் முகபாவனையும் நல்லா இருக்கும். அக்னி நட்சத்திரம், மௌனராகம், வருசம் 16, கிழக்கு வாசல் மாதிரியான குறும்புத்தனமான நடிப்பை மட்டுமல்ல குணச்சித்திரமாகவும் நடிக்க தெரியும்ன்னு கார்த்திக் நிரூபித்த படமிது. ஹேய்ய்ய்ய் ஹூய்ய்ய்ன்னு துள்ளாம தன் ஸ்டைலிலிருந்து மாறி செமயா நடிச்சிருப்பார். இந்த பாட்டில் மட்டுமே கார்த்திக்கின் குறும்புத்தனம் தெரியும். மத்தபடி படம் முழுக்க முப்பது வயசுக்குண்டான குடும்பஸ்தன் மெச்சூரிட்டி உருவத்திலும், நடிப்பிலும் தெரியும். சௌந்தர்யா இந்த படத்துலதான் அறிமுகம். ரொம்ப அழகா இருந்த அவங்களை பெண்களுக்கும் பிடிச்சு போனது. அழகா இருக்குறது இல்லாம நல்லாவும் நடிச்சாங்க. திறமைசாலியான நடிகை. ஆனா, அற்பாயுசுல போய்ட்டாங்க.

ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது...
பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி கட்டி
வச்ச கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி
அட ஆத்து மேட்டுல
வெட்டி கதையில
வேகம் கொறையல வீண்
பேச்சி ஏன் மானே தட்டி
கேட்டுக்க கிட்ட ஆளில்ல
நீ ஒன்னு தா மானே!
கட்டாந்தரையில
கட்டில் இருக்குது காத்தாட
வா மாமா கட்டி புடிச்சிக்கோ
வட்டம் அடிச்சிக்கோ
கேப்பாரு யார் மாமா...
ஆத்துமேட்டுல...
வெத்தலைய
போட்டு போட்டு முத்த
கரை நீ போட
நித்தம் அத
பாத்து பாத்து பித்ததுல
நீ ஆட
பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி
கட்டி வச்ச
கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி
அழகான பாட்டு... ரசிக்க வைக்கும் பாட்டு...
ReplyDeleteஆமாம்ண்ணே. என் ஆல்டைம் பேவரிட்
Deleteஅழகாக கொடுத்துள்ளீர்கள். இந்தப் பாடல் கேட்டுள்ளேன் என்றாலும் நீங்களே சொல்லியிருப்பது போல "நெஞ்சுக்குள்ளே..." பாடல்தான் பெஸ்ட். "அன்பைச் சுமந்து சுமந்து" பாடல் சோகமாயிருந்தாலும் அதையும் ரசிக்கலாம்.
ReplyDeleteநெஞ்சுக்குள்ளே பாடல் எனக்கும் பிடிக்கும்...அருமையான பாட்டு
Deleteகீதா
அந்த பாட்டை பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?! சௌந்தர்யா அம்புட்டு அழகா இருக்கும்.
Deleteஅருமையான பாடல்
ReplyDeleteநன்றிண்ணே
Deleteநல்ல பாட்டு கேட்டதில்லை இப்பத்தான் கேட்கிறேன் ராஜி
ReplyDeleteகீதா
92-93லலாம் பட்டிதொட்டிலாம் ஒலிச்ச பாட்டு இது. இதை கேட்கலைன்னு சொல்றீங்களே கீதாக்கா
Delete