கோடைக்காலம் தொடங்கிட்டாலே வெயில், வியர்வை, பிள்ளைகளின் லீவுன்னு பல இம்சைங்க வெசனப்பட்டுக்கிட்டு இருப்பேன் நான், ஆனா என் அம்மாவோ வத்தல், வடாம், வடக, ஊறுகாய் வத்தல் போடுறதுலயும், புளி வாங்கி உடைச்சு சுத்தம் செய்து சேமிச்சு வைக்குறதுலயும் பிசியாகிடும். இந்த வருசத்துக்கான வத்தல், வடகம்லாம் போட்டு எடுத்து வச்சாச்சு.
தாளிப்பு வடகம் செய்வது எப்படின்னு பார்க்கலாமா?!
தேவையான பொருட்கள்...
வெங்காயம் - 1கி
பூண்டு - 1/4 கி
உ.பருப்பு - 1/4கி
கடுகு - 1/4கி
கடலை பருப்பு - 100 கி
வெந்தயம் - 50கிராம்
மஞ்சப்பொடி
கறிவேப்பிலை
விளக்கெண்ணெய்
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் இதுல எது வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம். எங்க ஊரில் சின்ன வெங்காயம் அதிக விலைன்றதால பெரிய வெங்காயத்தில்தான் செய்வோம். வெங்காயத்தை சுத்தம் செய்து ரொம்ப சின்னதா வெட்டிக்கனும். சாப்பரோ இல்ல ஃபுட் பிராசரோ இருந்தா அதுலயும் வெட்டிக்கலாம். ஒன்னுப்போல வெங்காயம் வெட்டுப்படும். பூண்டை மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்திக்கனும். முழு உளுத்தம்பருப்பா இருந்தால் ஊற வச்சு ஒன்னு ரெண்டா அரைச்சு சேர்த்துக்கலாம். உடைச்ச உளுத்தம்பருப்பா இருந்தால் அப்படியே சேர்த்துக்கலாம்,
வெட்டி வச்ச வெங்காயம், நசுக்கிய பூண்டு, ஊற வச்ச உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம், கடுகு, சுத்தம் செய்த கறிவேப்பிலை, மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து நல்லா கலந்து மூடி வைக்கனும்.
மறுநாள் காலையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து கொஞ்சம் வடகத்தை பரப்பி..
அதன்மீது பிள்ளையார் பிடிச்சு வைக்கனும்..
அதன்முன் வெற்றிலை பாக்கு வைத்து, கறிவேப்பிலை ஒருவாரம் தாக்குபிடிக்கும். வெங்காயம் பூண்டு ஓரிரு மாசம் தாக்குப்பிடிக்கும். பருப்புகள் ஆறு மாசம் வரை தாக்கு பிடிக்கும். அதுக்கு மேல போனலால் வெங்காய்ம் பூண்டு அழுகிடும், பருப்புகள் வண்டு வச்சிடும். ஆனா இதையெல்லாம் சேர்த்து வடகமா உன்னை நம்பி பிடிச்சு வைக்கிறேன். இது வருசக்கணக்கில் தாக்கு பிடிக்கனும். இதை சாப்பிடும் யாருக்கும் எந்த உடல் உபாதையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு...
வெங்காயம், பூண்டு, பருப்பு கலவையில் உப்பு போட்டிருப்பதால் அதில் நீர் விட்டிருக்கும். அதை மொத்தமா பிழிஞ்சுடாம வடகம் பிடிச்சு வைக்கனும்.
மாலையில் எடுத்து வைக்கும்போது அழுத்தி பிடிச்சு வைக்கனும் பிள்ளையாரா பிடிச்சு வச்ச கலவையையும் உருண்டையா பிடிச்சு வைக்கனும்
இரண்டாவது நாள் மாலையில் கைகளில் கொஞ்சம் விளக்கெண்ணெயை குழைச்சுக்கிட்டு காய்ந்த வடகத்தினை நல்லா அழுத்தி உருண்டை பிடிக்கனும். காலையில் காய வைக்கும்போது அழுத்தினால் உருண்டை உடைஞ்சுடும். அதனால் மாலையில் எடுத்துவைக்கும்போது அழுத்தி பிடிச்சு வைக்கனும்...
இப்படியே நாலு இல்ல ஐந்து நாள் வெயிலில் நல்லா காய வச்சு எடுத்து வச்சால் இரண்டு வருசம்கூட வடகம் நல்லா இருக்கும். ஆறு மாசத்துக்கொரு முறை மீண்டும் வெயிலில் எடுத்து வச்சா பூச்சி பிடிக்காது.. வடகம் பிடிக்குற அன்னிக்கு வீட்டு விலக்காகி இருந்தால் பாட்டி யாரையும் தொட விடாது. கேட்டா சாப்பாடு தெய்வ அம்சம்ன்னு சொல்லும்.
கீரைக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார், மீன்குழம்புக்குலாம் வடகம் போட்டு தாளிக்கலாம். எங்காவது டூர் போய்ட்டு ஊர் சுத்தி ஹோட்டல் சாப்பாட்டினால் நாக்குலாம் மரத்து போயி வீட்டுக்கு வரும்போது து. பருப்பு+ காய்ந்த மிளகாய்+ பூண்டு+தக்காளி சேர்த்து வேக வச்சு உப்பு, புளி சேர்த்து கடைஞ்சு, அடுப்பில் பாத்திரத்தை வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வடகம் போட்டு பொரிஞ்சதும் கடைஞ்ச சாம்பாரை ஊத்தி சூடு படுத்தி சாப்பிட்டா நாக்குக்கு உயிர் வந்திடும். பருப்பு ரொம்ப குழைஞ்சுடக்கூடாது. அதான் இதில் முக்கியம். நான்லாம் குழம்புக்கு வடகம் தாளிக்கும்போது தனியா கொஞ்சம் எடுத்து வச்சி சாப்பிடுவேன்.
உங்க வீட்டு செய்முறையை நீங்க சொல்லுங்க...
நன்றியுடன்,
ராஜி
திருப்பதி லட்டு ஞாபகம் வந்து விட்டது...!
ReplyDeleteவரும்.. வரும்...,
Deleteகாய வைக்கும்போது பிள்ளையாரை வேண்டுவது புதிது. நாங்கள் வீட்டில் இதுபோட்டதில்லை. என் தங்கை செய்யும்போது எனக்கும் கொஞ்சம் தருவாள்.
ReplyDeleteஉணவே மருந்து என நம் முன்னோர்களது நம்பிக்கை. என் பாட்டி இப்படிதான் செய்வாங்களாம். மொத்தமா பருப்புகள், தானியங்கள், வத்தல், வடகம், புளிலாம் வச்சிருக்கும் பானையை குளிக்காம தொடக்கூடாது, வீட்டு விலக்கா இருக்கும்போதும் தொடக்கூடாது, கால் படக்கூடாதுன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்களாம்.
Deleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஆஹா கடைசிபடம் ஆசையை தூண்டுகிறதே...
ReplyDeleteஎண்ணெயில் வறுத்து அப்படியேவும் சாப்பிடலாம்.
Delete