Monday, April 29, 2019

தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்வது ஏன்?! - ஐஞ்சுவை அவியல்

மாமோய்!

சும்மா சும்மா மாமா மாமான்னு கூப்பிட்டு உசுரை வாங்காத!

ம்க்கும். உன்னை டிசைன் பண்ணும்போதே உன் கடவுள், உனக்கு லவ்ன்ற சப்ஜெக்டே இல்லாம படைச்சுட்டானா?! எப்பப்பாரு இஞ்சி தின்ன மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு... கணவன், மனைவின்னா எப்படி இருக்கனும்ன்னு  இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோ. சின்ன சின்ன விசயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குது.  ஆனா, வாழ்க்கையை வாழ்வதென்பது சின்ன விசயங்கள் இல்லைன்னு தெரிஞ்சுக்க...


ம்ம்ம்  இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் கேர் எடுத்திக்கிட்டு இருக்குறதாலதான் சண்டை சச்சரவு இல்லாம வீடு மகிழ்ச்சியாய் சகல செல்வமும் பெற்று இருக்கும். அதனால்தான் தாய்க்குப் பின் தாரம்ன்னு சொல்றாங்க.  Wifeக்கு தமிழில் பொண்டாட்டி, மனைவி, துணைவி, இல்லாள், தாரம்ன்னு எத்தனையோ பேர் இருக்க  தாய்க்கு பின் தாரம்ன்னு எதுக்கு சொல்றாங்கன்னு தெரியுமா மாமா?! 

இதென்ன கேள்வி?! தாய்... தாரம்.....ன்னு ரைமிங்கா இருக்கட்டுமேன்னுதான் தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்லி இருப்பாங்க.  

பொன்மொழிக்கு ரைமிங் மட்டும் போதுமா?! அர்த்தம் வேண்டாமோ!!??  "தாரம்'ன்ற வார்த்தைக்கு "மகிழ்ச்சி'ன்னு அர்த்தம். தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதுக்கு அர்த்தம்.  அனுபவமொழியில் இப்படி ஒரு அர்த்தம் இருக்குதுன்னா, ஆன்மீகரீதியாகவும் ஒரு அர்த்தம் வருது. அது என்னன்னா,  மந்திரம் சொல்லும்போதெல்லாம்  "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கிறோம். அந்த ஓம்ன்ற வார்த்தையை "தாரம்'ன்னும் சொல்வாங்க.  இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும். ஒரு சன்னியாசி பெரிதும் மதிப்பது தாய்.. அவளுக்கு அடுத்து பிரணவ மந்திரத்தினைதான். அதனாலும்தான் தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்றாங்க மாமா. 

ம்ம்ம் இப்படியே பொண்டாட்டிக்கு சாம்பிராணி போட்டுக்கிட்டிருந்தால் வாழ்க்கையில் உருப்படுவது எப்படியாம்?!
Image may contain: one or more people, cloud and outdoor

சாம்பிராணி போடுறதுன்னு எகத்தாளமா சொல்லிட்டே!!  சாம்பிராணி புகை போடுவது எல்லா மதச்சடங்கிலும் இருக்கு. அதில்லாம முன்னலாம் தலைக்கு குளிச்சதும் சாம்பிராணி புகை போடுவது வழக்கம். சாம்பிராணியில் பல மருத்துவ குணங்கள் இருக்கு, இந்த சாம்பிராணி எதிலிருந்து கிடைக்குதுன்னு தெரியுமா?!    இந்த சாம்பிராணி பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால்தான் ஆகும். இது மெல்ல மெல்ல கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணியாக மாறுது. இவையை எரித்தால் மனதுக்கு இதமான வாசணையை பரப்பும்.  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒடிசா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுது. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் இந்த மரம் இருக்குது. இந்த  மரம் உறுதியானது, அதேவேளையில்  எளிதில் அறுக்கவும்,  இழைக்கவும் முடியும்.  இவ்வகை மரங்கள்தான் தீக்குச்சிகள் தயாரிக்க உதவுது.  இந்த மரத்தில் நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் வடியும். பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில்தான் சாம்பிராணி பெற முடியும். மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில்கிட்ட படிக்கும்போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின்போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.
Image may contain: food

பாறைப்போல் இறுகிக்கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை. சாம்பிராணி ஆன்மீகத்தில், மட்டுமில்லாம மருந்தாகவும் பயன்படுது. ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் கிடைக்குது. அந்த  கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்க்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணெய், டர்பெண்டைன் எண்ணெய்போல எண்ணெய் எடுக்கிறார்கள். இதிலிருந்துதான் வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணெய்  சோப்பு தயாரித்தலிலும் பயன்படுது... 

சாம்பிராணின்னு கிண்டல் அடிக்கும் விசயத்தில் இத்தனை இருக்கா?!

ஆமாம். ஆனா, இதுலாம் மடசாம்பிராணியான உனக்கு இது தெரியாது. 

எனக்கு தெரியாதா?! எனக்கும் சில விசயங்கள் தெரியும். ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடுகளை பார்த்திருக்கியா?! அதுக்கு அர்த்தம் தெரியுமா?! தெரியலைன்னா இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்க. 
கார் ஓட்டுற உன் பிள்ளைக்கிட்ட இதை காட்டு. 

இதுலாம் வாட்ஸ் அப்ல வந்துச்சா மாமா?! அதே வாட்ஸ் அப்ல வந்த இன்னொரு படத்தை காட்டுறேன் பாரு.. மனுசன் எத்தனை கொடிய மிருகம்ன்னு...

மனுசனுக்கு தன்னோட சுயநலம்தான் முக்கியம். அவனை தவிர வேறெந்த உயிரினமும் இன்னொரு உயிரினத்தை அடிமைப்படுத்துவதில்லை, கொடுமைப்படுத்துவதுமில்லை. 

ஆமாம் புள்ள! யானையை பார்க்க பாவமாய் இருக்கு...   மனுசன் எப்பதான் திருந்துவான்னு தெரில..

நன்றியுடன்,
ராஜி

8 comments:

 1. //யானையை பார்க்க பாவமாய் இருக்கு//

  இந்த PETA சங்கத்தில யானை உறுப்பினர் இல்லையா? மாடுகளையும் தெரு நாய்களையும் மட்டும்தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்களா?

  ReplyDelete
 2. யானைக்கு மட்டுமா இந்தக் கதி?
  மனிதனை மனிதன் தின்னும் நிலைக்கு வந்தாச்சே!

  ReplyDelete
 3. யானையின் படம் மனதை கணக்கச் செய்கிறது

  ReplyDelete
 4. //மனுசனுக்கு தன்னோட சுயநலம்தான் முக்கியம். அவனை தவிர வேறெந்த உயிரினமும் இன்னொரு உயிரினத்தை அடிமைப்படுத்துவதில்லை, கொடுமைப்படுத்துவதுமில்லை//

  உண்மை சகோ.

  ReplyDelete
 5. இந்த சாம்பிராணியை நல்ல நைசாகப் பொடி பண்ணிக் கொண்டுத் தேன் மெழுகு சேர்த்துத் தேங்காய் எண்ணெயில் சூடாக்கி வைத்துக் கொண்டு கால்களில் வரும் பித்த வெடிப்புக்குத் தடவிக் கொள்ளலாம். அருமையான மருந்து.வீணாகவும் போகாது. வருடக் கணக்கில் வைச்சுப் பயன்படுத்தலாம்.

  ReplyDelete
 6. யானையைப்பார்த்ததும் கண்ணில் ரத்தம்!

  ReplyDelete
 7. இதை இன்னைக்குத்தான் பார்த்தேன். தாய்லாந்தில் யானை வளர்க்கும், யானையின் மீது சவாரி செய்ய இயலும் பார்க் இருக்கிறது. (அநியாயத்துக்கு நானும் யானை மீது சவாரி செய்திருக்கிறேன்). அப்போ யானையின் தலைப் பகுதியில் பார்த்தபோது இதுபோல் பல காயங்கள் இருந்தன. எனக்கு மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாகப் போய்விட்டது. படம்கூட எடுத்துவைத்திருக்கிறேன் என ஞாபகம்.

  விலங்குகளைத் துன்புறுத்துவதைப்போல் கொடிய செயல் இல்லை...அதிலும் நம்மிடம் மாட்டிக்கொண்ட விலங்குகளை.

  ReplyDelete