Sunday, April 07, 2019

கன்னத்தில் முத்தமிட்டால் - பாட்டு புத்தகம்

ஒருசில பாடலை கேட்கும்போது அழுகை வரும், இன்னும் சில பாடல்கள் மனதை உற்சாகமூட்டும். தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள், பக்தி, காதல்..ன்னு பலவித உணர்ச்சிகளை கொடுக்கும் பாடல்கள் நிறைய இருக்கு. ஆனா, இன்னிக்கு பார்க்(கேட்)கப்போற பாட்டு சூனிய வெளியின் தனிமையை உணரச்செய்யும். 

இந்த பாட்டு இரண்டு முறை வரும். தாய்க்கும், மகளுக்குமிடையில் வரும். அதில் இருவரது பாசப்பிணைப்பை சொல்லும். .  இன்னொன்று,  தந்தை மகளுக்கானது...   மெல்லியதாய் ஒரு சோகம் புதைஞ்சிருக்கும். மனசு வருத்தமா இருக்கும்போது இந்த பாட்டை கேட்டா கண்டிப்பா அழுகை வரும்,. சின்மயி, ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து , மாதவன், சிம்ரன், கீர்த்தனா என அனைவருக்கும் இந்த பாட்டு பேர் வாங்கி கொடுத்தது.
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே....
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே?!

நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...


எனது சொந்தம் நீ... எனது பகையும் நீ...
காதல் மலரும் நீ... கருவில் முள்ளும் நீ...
செல்ல மழையும் நீ... சின்ன இடியும் நீ...
செல்ல மழையும் நீ... சின்ன இடியும் நீ...
பிறந்த உடலும் நீ... பிரியும் உயிரும் நீ...
பிறந்த உடலும் நீ... பிரியும் உயிரும் நீ...
மரணம் மீண்ட ஜனனம் நீ... 
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே?!

நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...

டம் : கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : மின்மினி
பாடல் வரி : வைரமுத்து’
நடிகர்கள்: சிம்ரன், மாதவன், கீர்த்தனா பார்த்தீபன்

நன்றியுடன்,
ராஜி



12 comments:

  1. எனக்கும் பிடித்த பாடல். இதன் இன்ஸ்ருமெண்டல் பாடலை அவ்வப்போது கேட்பதுண்டு. வார்த்தையில்லாமல் ஒலியாகக் கேட்கும்போது இன்னும் அருமையாக இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் இயர்போன்ல கேக்கும்போது செமயா இருக்கும் அதும் இரவில் வழிப்பயணத்தில் கேட்கனும்

      Delete
  2. ஒவ்வொரு முறை கேக்கும் போதும் ...புதிதாக கேக்கும் ஆனந்தம் இந்த பாடலில் உண்டு ராஜி க்கா

    ReplyDelete
    Replies
    1. மனசை அசைக்கும் இந்த பாட்டு.

      Delete
  3. கேட்டிருக்கிறேன். நல்லதொரு பாடல்.

    ReplyDelete
    Replies
    1. கேட்டிருக்காவிட்டால் சாமி குத்தம் ஆகி இருக்கு சகோ

      Delete
  4. மிகவும் ரசிக்கும் பாட்டு... இந்த பாட்டின் பின்னணியில் ஒரு காணொளியும் உருவாக்கி இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! லிங்க் கொடுத்திருக்கலாமே

      Delete
  5. மிகவம் ரசித்து கேட்கிற ஒரு பாடல்

    ReplyDelete
    Replies
    1. ஏ.ஆர் ரகுமானின் டாப் டென்ல இந்த பாட்டு எப்படியும் வந்துடும்

      Delete
  6. இந்தப் பாட்டு ரொம்பப் பிடித்த பாடல் ராஜி! அருமையான பாடல்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

      Delete