Monday, April 01, 2019

கோடையை சமாளிக்க தயாராவோம்!! - ஐஞ்சுவை அவியல்

மாமா உன் தலையில் பூச்சி இருக்கு...

ம்க்கும் இன்னும் சின்ன பொண்ணுன்னு மனசுக்குள் நினைப்பு. 

நான் உன்னையவிட சின்ன பொண்ணுதானே மாமா?! 

ஆமா ஆமா! சரி எதுக்கு முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுதுன்னு தெரியுமா?! மகளிர் தினம், குழந்தைகள் தினம்,    காதலர் தினம்,       ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றையும் சிறப்பிக்க   கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாத்தி மகிழ  ‘முட்டாள்கள் தினம்’கொண்டாடப்படுது. சொந்தபந்தங்கள் சூழ வாழும் இந்தியருக்கு கொண்டாட்டத்துக்கும், எல்லோரும் ஒன்னு சேர, மகிழ்ந்திருக்க ஆயிரம் காரணம் கிடைக்கும் ஆனா, வெளிநாடுகளில் இப்படி எதாவது சொல்லி மகிழ்ந்திருந்தால்தான் உண்டு.  குழந்தைகளால் பெரிதும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் இந்நாள்.முன்பு  ஏப்ரல் 1 அன்று, காலை முதல் மாலை வரை இத்தினத்தை கொண்டாடினர். பின்னர் மதியம் வரை கொண்டாடினாங்க. இந்த மாதம் முழுக்க பிள்ளைகள் கொண்டாடினாங்க. இதுமாதிரியான ஒரு தினத்தை கொண்டு வந்ததில் ’பாஸ்வெல்” என்பவருக்கு முக்கிய பங்குண்டு. சில பழங்குடி மக்கள் இத்தினத்தை வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாய் சூரியனை வழிப்பட்டு கொண்டாடடினர். பண்டையக்காலத்தில் ரோமானியர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தினை ஏப்ரல் 1 தேதிதான் கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய  நாடுகளும் ஏப்ரல் 1 தேதியில்தான் புத்தாண்டை கொண்டாடினர். 1562ஆம் ஆண்டு கிரகோரி என்ற போப்’ஜார்ஜியன்’ என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஏப்ரல் 1 க்கு பதில் ஜனவரி 1 தான் புத்தாண்டு தினமாய் குறிக்கப்பட்டு, இனி புத்தாண்டை ஜனவரி 1தான் கொண்டாடப்படவேண்டுமென உத்தரவிட்டார். 


இங்கிலாந்தில் இந்த மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏப்ரல் 1யே புத்தாண்டு தினமாய் கொண்டாடினர். மேலும் போப்பின் உத்தரவு போய்ச் சேராத நாடுகள் ஏப்ரல் 1ஐ புத்தாண்டாய் கொண்டாடினர்.  பழைய காலண்டர் முறை மாறி புது காலண்டர் முறை வந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்களென  கிண்டல் செய்தனர்.  காலப்போக்கில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமானது. நம்மூர்ல சட்டையில் இங்க் அடிப்பது, காலுக்கு கீழ் பாம்பு இருக்கு, இன்னிக்கு ஸ்கூல் லீவ்ன்னு முட்டாள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். எது எப்படியோ எப்பயாவது முட்டாளாக ஏமாறுபவர்களுக்கு இத்தினம் ஒரு கொண்டாட்டதினம். அனுதினமும் ஏமாறுபவர்களுக்கு?! இந்நாளும் மற்றொரு நாளே! அறிவாளிகளுக்கு அறிவு அதிகம்தான். ஆனா, முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.
ஆமா, அறிவாளிகளுக்கு அறிவு அதிகம்தான். அதான் இப்படிலாம் யோசிக்க தோணுது போல! இது முகநூலில் வந்துச்சு. நவீன தீண்டாமை இதுதான் போல மாமா! 
ம்ம் இப்படிலாம் இருந்தா மழை எப்படி வரும்?!

மழை வருது.. மழை வருதுன்னு சொல்ல கேட்டிருப்போம். மழை வந்து பார்த்திருக்கியா மாமா?! இந்த வீடியோவில் பாரு மாமா. 

இப்படிலாம் மழையை பார்த்தால்தான் உண்டு. இப்பவே கசகசங்குது. இன்னும் சித்திரை வெயில், கத்திரிலாம் இருக்கு. எப்படி சமாளிக்க போறோம்ன்னுதான் தெரில.

இதுலாம் ஒரு பெரிய விசயமா மாமா. தினத்துக்கு ரெண்டு வேளை குளிக்கனும். தண்ணீரில் எலுமிச்சை அரைமூடி பிழிஞ்சு குளிச்சா வேர்வையால் வரும் அலர்ஜி, துர்நாற்றம்லாம் விலகும். தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, முலாம்பழம்ன்னு நீர்சத்துள்ள பழங்களை சாப்பிடலாம். சோற்ரு கற்றாழையின் உள்ளிருக்கும் சதைப்பகுதியை உடலில் தேய்த்து குளித்தால் நாள் முழுக்க குளிர்ச்சியா இருக்கும். அதிகமான காரம், எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுறதை தவிர்க்கலாம்.  தாகமெடுக்கும்போது ஐஸ் வாட்டரை தவிர்த்து தயிர்+சீரகம்+உப்பு சேர்த்து மிக்சியில் அடித்து நீர் சேர்த்து கொ.மல்லி இலை தூவி அடிக்கடி குடித்து வ் அந்தால் தாகமும் தீரும். உடல் நலனுக்கும் நல்லது. கேஸ் அடைக்கப்பட்ட ஜூஸ் குடிக்காம, இளநீர், தர்பூசணி ஜுஸ், வெள்ளரி ஜூஸ், தக்காளி ஜூஸ் குடிக்கலாம். வெள்ளரி,கேரட் பச்சடி சாப்பிடலாம். கூழ், பழைய சோறு, நீராகாரம்ன்னு நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடலாம். டார்க் கலர் ட்ரெஸ் போடுறதை தவிர்க்கலாம்... பாதுகாப்புடன் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கலாம்.  இப்படி நம்மை தயார்படுத்திக்கிட்டால் கோடையை சமாளிக்கலாம் மாமா!!

டிப்சுக்கு நன்றி மேடம்!!

நன்றிக்கு நன்றி மாமா!

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. இந்த மாதமே இப்படி இருக்கு... இன்னும் அடுத்த மாதம் எப்படி இருக்கப்போகுதோ..? வெயிலையும் சொன்னேன்...!

    ReplyDelete
    Replies
    1. என்னையும்ன்னு சேர்த்தே படிச்சுட்டேன்

      Delete
  2. சுவையான அவியல்...

    கோடை - எல்லா வருடமும் இப்படியே தான் அதிகம் எனச் சொல்வோம்! இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
    Replies
    1. கடந்துதானே போகனும்?!

      Delete
  3. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீரமாட்டேன் என்கிறது! கோடை இப்போதே சுடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வீடே செங்கல் சூளை மாதிரி அனல் அடிக்குது

      Delete