Wednesday, April 03, 2019

கொலையும் செய்வாள் பத்தினி - பேய்த்தெய்வம்- சிறுதெய்வ வழிபாடு

உக்கிர தெய்வம் எனப்படும் காளி, சண்டி, வீரபத்திரன், ஐயனார் கையில்  கொலை ஆயுதங்கள் இருப்பது தவறில்லை. ஆனா, முருகன், சிவன், விஷ்ணு, வினாயகர், அம்பிகை, அம்மன் முதலான தெய்வங்களின் கைகளில் கொலை ஆயுதம் ஏன்னு என்னிக்காவது யோசிச்சிருப்போமா?! அப்படி யோசித்து கேள்வி கேட்டால்,  தீயவைகளை அழிக்க கொலை ஆயுதம்ன்னு சொல்வாங்க. கடவுளுக்கு ஆயுதம் தேவையா?!   கடவுளுக்கே கொலை ஆயுதம் தேவைப்படும்போது, சாதாரண மானுடர் தன்னை தற்காத்துக்கொள்ள ஆயுதத்தினை எடுப்பது எப்படி தப்பாகும்?! அதும் பெண்கள் ஆயுதமெடுத்தால் தப்பா?! அப்படி தனக்கு நேர்ந்த துரோகத்துக்கு பழிவாங்க புறப்பட்ட ஆத்மாக்கள் இன்னிக்கு தெய்வமா போற்றப்படுது. பழிவாங்க புறப்பட்ட கொலைத் தெய்வம் பேரருள் கொண்ட தெய்வமாவதும், பேரருள் கொண்ட தெய்வம் தண்டிப்பதும்  முரண்.


ரொம்ப சின்ன வயசில் திருவாலங்காட்டுக்கு ஒரு திருமணத்திற்காக, அக்கம்பக்கத்தினருடனும், அம்மாவுடனும் ஒரு இரவு தங்க நேர்ந்தது. எல்லோரும் எங்கேயோ போனோம். சின்னதா ஒரு அறை. சுவற்றுக்கு பதிலா  வெளியிலிருந்து உள்ளே பார்க்கும் வகையில் கம்பிகள். உள்ளே ஒரு மேடை மாதிரியான அமைப்பில் எரியும் நெருப்பில் சிலர் இறங்குவது மாதிரி ஒரு சிற்பம். அங்க இருந்தவங்க கதை சொல்ல, புருசனை பொண்டாட்டி பழிவாங்கின கதைன்னும், வீட்டிற்கு வந்தும் அழுது அலறி, மந்திரிச்சு விட்டதும் இன்னிக்கும்  நினைவிருக்கு. ஆனா, முழு கதை தெரியாது.  ஆனா, முழு கதை சமீபத்துலதான் தெரிய வந்துச்சு. சின்ன வயசில் கேட்ட கதை பழையனூர் நீலி கதை.

சென்னைக்கு வெகு அருகில்  சிவனின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தின சபைன்னு சொல்லப்படும் திருவாலங்காடு இருக்கு. ,  இங்கதான் காரைக்கால் அம்மையார் சிவன் காலடியில் சேர்ந்தார். அங்கிருந்து அரை கி.மீ தூரத்தில் இருக்கு இன்னிக்கு பதிவில் பார்க்கப்போற   பழையனூர் நீலி அம்மன் கோவில் அங்கதான் இருக்கு. இங்குள்ள அம்மன் நீலி அம்மன் என அழைக்கப்படுகிறாள். மிக மிக சிறிய கோவில்தான் இது. இதன் வரலாறோ சற்று பெரியது. நல்லதங்காள், கண்ணகி கற்புக்கரசியாய்  வாழ்ந்த பல பெண்கள் தெய்வமாகி கோவில் கொண்டும், வழிபாட்டுக்குரியவங்களாகவும்  இருக்கிறார்கள். அவர்களுக்கு கோவிலும் உள்ளது. தனக்கு துரோகம் செய்தான்னு புருசனையே கொலை செய்ய மறுபிறவி எடுத்து வந்துபழிவாங்கியவள்தான் பழையனூர் நீலியாவாள். ஆச்சரியமும், அமானுஷ்யமும், பழியும், பரிதாபமும், பயமும் என உணர்ச்சி கலவையானது நீலியின் கதை.  


திருவாலங்காடு....
பழையனூர் கிராமம்...
 பூதேஸ்வரர் கோவில்....
ஆல மரத்தின் கீழே வெள்ளாளர்களின் கூட்டம் பஞ்சாயத்துக்காக கூடியிருந்தது. ஒரு அழகிய பெண் கைக்குழந்தையுடன் தனக்கு நீதி கேட்டு போராடிக் கொண்டிருந்தாள். என் பெயர் நீலி,  இவர்தான் என் கணவர். பல விலைமாதர்களுடன்  இவர் தொடர்பு வைத்திருந்தார். நான் கண்டித்தேன், அதனால், என்னையும், என் பிள்ளையையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இப்பொழுது பழையனூருக்கு வியாபார விஷயமாக வரும்பொழுது என் கண்களில் சிக்கிவிட்டார். பஞ்சாயத்தார்தான் எங்கள் இருவரையும் சேர்த்துவைக்கவேண்டும்  பஞ்சாயத்தார்முன் கதறினாள் நீலி..



காஞ்சியிலிருந்து வந்த வணிகன் தரிசனனுக்கு தலை சுற்றியது. பழைய நிகழ்வுகள்  மனதில் ஓடியது.  முன் ஜென்மத்து கதையெல்லாம் மனதில் நிழலாடியது..



முன்னொரு காலத்தில் காஞ்சி மாநகரில் புவனபதி என்ற அந்தணர் ஒருத்தர்  இருந்தார். அவருக்கு புனித யாத்திரை போகனும்ன்னு  ஆசை வரவே, தனது மனைவி, குழந்தையை விட்டுவிட்டு,  காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் நம்ம புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் நம்மாள் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விடலை. கொஞ்ச நாளில் நவாக்கியானி அவருக்கு அலுத்து போனாள். அதன்பின்னரே அவருக்கு தன்னுடைய குடும்பம் நினைவுக்கு வந்தது. 
No photo description available.
பழைய மனைவி, பிள்ளை நினைவு வரவே காஞ்சிக்கு புவனபதி புறப்பட்டாரு.  நவாக்கியானி நானும் வர்ரேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாம அவளையும், கூப்பிட்டுக்கிட்டு காஞ்சிக்கு புறப்பட்டார். கூடவே  நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் அவர்களோடு வருவேன்னு அடம்பிடிக்க மூணு பேருமா கிளம்பிட்டாங்க. சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. முதல் பொண்டாட்டி சும்மாவா விடுவா?! வெளக்குமாறு எடுத்துக்கிட்டு துரத்துவாளேன்னு பயம் வந்திட்டுது. திருவாலங்காட்டுக்கு அருகில்,  குடும்பம் நடத்த தேவையான பொருட்களை வாங்கிவர பணம் கொடுத்து சிவாக்கினியை    அனுப்பிட்டு,  நவாக்கியானிக்கிட்ட  இப்படி தனக்கொரு குடும்பம் இருக்குறதா பஞ்சாயத்து பேசினார். 
Image may contain: text
"அப்படியென்றால்  நீங்கள் அப்டியே இருந்திருக்கலாமே! என்னை எதுக்கு திருமணம் செய்தீர்கள்?! கடைசிவரை வைத்து காப்பாற்றுவேன்  என வாக்களித்து ஏன் என் வாழ்க்கைய பாழாக்கினாய் என நீலி கத்தினாள்.
Image may contain: tree, plant, outdoor and nature
சாட்சி பூதேஸ்வரர் ஆலயம்.
 "அது என் விருப்பம். அதுல தலையிடும் உரிமை உனக்கில்லை..'


" கணவன் செய்யும் தப்பை மனைவி தட்டிக்கேட்க கூடாதா.."நீலி ஆவேசமாக கேட்டாள்..


"கேட்ககூடாதுங்குறேன். ஆம்பிளைங்க 1000  தப்பு பண்ணுவாங்க. அதையெல்லாம் கேட்கற உரிமை உங்களுக்கில்லை. பொம்பளைங்க எல்லோருமே அடிமைதான்.."கத்தியபடி அங்கிருந்து நகர்ந்தான் தரிசனன்.



Image may contain: plant
பொங்கி எழுந்தாள் நீலி. நீ எனக்கு சொந்தம். இனி உங்களை பிரிந்து இருக்க மாட்டேன் என சொல்லிபடி தரிசனனின் காலை கெட்டியாக பிடித்தாள் நீலி.. கோபங்கொண்ட புவனபதி நவாக்கியானியை எட்டி உதைக்க அருகிலிருந்த கல்லில்  தலை பலமாக மோதி, தலையிலிருந்து ரத்தம் வடியும் நிலையிலும்  தவழ்ந்து வந்து புவனபதி காலை பிடித்தபடி  தன்னை விட்டு போகவேண்டாமென நவாக்கியானி கதறினாள்.  புவனபதி ஆவேசம் கொண்டவனாய் "நீ எவ்வளவு சொன்னாலும் அடங்கமாட்டியா?! அருகிலிருந்த கல்லை அவள தலையில் தூக்கி போட்டு கொன்றுவிட்டு  ஜனங்கள் ஒன்றுகூடியிருக்க தனது மனைவி அருகிலிருந்த மலையில் பாறையில் மோதி உருண்டு விழுந்து இறந்துவிட்டதாக சொல்லி அழ, ஊர் மக்கள் தரிசனின் நிலை கண்டு இரக்கம் கொண்டு, திருவாலங்காடு அருகிலிருந்த இடுகாட்டில் எரியூட்டபட்டாள் நவாக்கியானி. 
Image may contain: tree, plant and outdoor

தகனம் முடிந்த கையோடு காஞ்சிபுரத்துக்கு போய் முதல் மனைவி, குழந்தைகளோடு செட்டில் ஆனான். குடும்பம் நடத்த தேவையான பொருட்களுடன் வந்து தன் சகோதரியையும், அவள் கணவனையும் தேடி, அருகிலிருந்தோர் விவரம் சொல்ல, நவாக்கியானி எரியூட்டப்பட்ட இடத்துக்கருகே இருந்த ஒரு மரத்தில் தூக்குபோட்டு இறந்தான்.  தீராத ஆசையாலும், அகால மரணமும் அடைஞ்சதால் நவாக்கியானி நீலியாகவும், சிவாக்கினி நீலனாகவும் திருவாலங்காட்டில் பேயாய்  மாறி புவனபதிக்காக காத்திருந்தனர். 
No photo description available.

புவனபதியின் காலம் முடிந்து மூப்பெய்து இறந்து போனான். புவனபதி தன்னுடைய மறுப்பிறப்பில் வைசிய குலத்தில் தரிசனனாய் பிறந்தான். அவன் பிறந்ததும்,   அவனது ஜாதகத்தை கணித்த ஜோதிடர், இவனை பழிவாங்க காஞ்சிபுரத்துக்கு வடக்கே பேய் ஒன்று காத்திருப்பதாகவும், கூடிய மட்டிலும் அந்த பக்கம் போவதை தவிர்க்க சொல்லி, மந்திரித்த வாள் ஒன்றினை தந்து, அதை எப்போதும் தன்னுடன் வைத்திருக்க சொல்லி தரிசனனின் தந்தையிடம் கொடுத்தார்.  தந்தையும், தன் பிள்ளையை கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார். 
No photo description available.

 நீலனும் நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு அண்ணன், தங்கையாய் பிறந்து வளர்ந்து வந்தனர். பகலில் குழந்தையாகவும், இரவில் பேயாகவும் மாறி ஆடுமாடுகளை கொன்றும் ரத்ததாகம் தீர்த்து வாழ்ந்து வந்தனர்.  ஆடுமாடுகள் தொடர்ந்து இறப்பதை தடுக்க, தீவிரமாய் கண்காணித்த ஊரார், அது நீலன், நீலி வேலை என தெரிந்துக்கொண்டு இருவரையும் ஊரைவிட்டே விரட்டிவிட்டனர். பழையபடி பேய் உருக்கொண்டு தரிசனனை தேடி திருச்செங்கோட்டுக்கு சென்றாள் நீலி, நீலன்  ஊருக்கு வெளியே இருந்த புளியமரத்தில் காத்திருந்தான். 
Image may contain: tree, sky, plant, night, outdoor, water and nature


தரிசனனுக்கு உரிய வயது வந்ததும், ஒரு பெண்ணை திருமணம் செய்வித்து, காஞ்சிபுரத்தில் குடியமர்த்தினார் அவனின் தந்தை. தரிசனனுக்கு   ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா சாவதற்குமுன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் அவனிடம் கொடுத்துவிட்டு இறந்தார்.  விவசாயத்துக்காக ஏர் கலப்பை செய்யவேண்டி, நீலன் இருந்த வேல மரத்தினை ஊர்க்காரர்கள் வெட்டி எடுத்து சென்றனர். தங்கி இருந்த  வேலமரம் போன ஆத்திரத்தில் அந்த பக்கமாய் போய்க்கொண்டிருந்த சிவன் கோவில் குருக்களை அடி பின்னி எடுத்துவிட்டான் நீலன்.  கோவில் குருக்கள் நேராய் சிவனிடம் முறையிட, சிவனின் பூதகணங்கல் நீலனை கொன்று கயிலாயத்துக்கு அனுப்பி வைத்தது.

திருச்செங்கோடு பகுதியில் சுற்றியலைந்தும், புவனபதியை காணாமல் பழையனூருக்கு வந்த நீலி, நீலனுக்கு நேர்ந்த கதியினை கண்டு கலங்கி புவனபதியோடு, ஊர்க்காரர்களையும் பழிவாங்க சபதமெடுத்தாள்.
No photo description available.
ப்பொழுது வியாபார விஷயமாக மந்திர வாள் இருந்த தைரியத்தில் தந்தையின் சொல்லையும்மீறி பழையனூருக்கு வந்ததை நினைத்து நொந்துக்கொண்டே,  தன்னை பழிவாங்க, எடுத்த பல்வேறு முயற்சிகள், தன்னிடமிருந்த மந்திரவாளால்  தோற்றுப்போக, இப்பொழுது , அழகிய தோற்றத்தில் நீலி தன்னை பழிவாங்க கொள்ளிக்கட்டையை கைக்குழந்தையாய் மாற்றி  நிற்பது கண்கூடாக தெரிந்தது.
No photo description available.

தரிசனன்..தரிசனன்.. என பஞ்சாயத்து தலைவர் கூப்பிட.. சுயநினைவுக்கு வந்தவனாய் நீங்கள் பார்ப்பது என் மனைவியல்ல! என்னை கொல்ல வந்திருக்கும் கொடூரமான பேய் என்று கதறினான். நீலி கதறினாள். தாரைதாரையாக கண்ணீர் விட்டாள். பெண்ணென்றால் பேயும் இரங்கும். நீலி வடித்த கண்ணீரை கண்டு  பேய்க்கு மனிதர்கள் மனம் இரங்கினர்.  "இதோ பாரம்மா! இவன் உன் கணவன் என்பதற்கு என்ன சாட்சி"என்று பஞ்சாயத்தார் கேட்க..."சரியாக கேட்டீர்கள்" என்றான் தரிசனன்..

Okay, it's not a breastfeeding photo, but babywearing is pretty amazing too :)
"என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள் அவருடைய இந்த குழந்தையே சாட்சி" என்ற நீலி, குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கிவிட ஓடிச்சென்று தரிசனனை கட்டிப்பிடித்து அப்பா என்று முத்தமிட்டது குழந்தை. குழந்தை பொய் பேசாது என்ற முடிவெடுத்த  பஞ்சாயத்தார்,  நீலியுடன் இன்றிரவு இந்த அறையில் தங்கி இருவரும் மனம்விட்டு பேசுங்கள் என, தரிசனன் எவ்வளவோ மன்றாடி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை எடுத்துச்சொல்லியும், இன்று ஒருநாள் மட்டும் அவளுடன் தங்கு. அப்படி உன் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நாங்கள் அனைவரும் இந்த பூதேஸ்வரர் ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபத்தில் இவரை சாட்சியாக வைத்தே தீக்குளிக்கின்றோம் என்று சத்தியம் செய்து,  ஒரு அறையில் இருவரையும் அடைத்து வைத்து கதவை பூட்டினர். 
Kratika Sengar, who plays the title role in the historial saga Jhansi Ki Rani airing on Zee TV shares her challenging experience about ...
கதவை பூட்டியதும்தான் தாமதம், நீலியின் கூக்குரல் எழுந்தது அடிக்காதீங்க என்னை கொல்லாதீங்க என எழுந்தது. என்னவென்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தவர்களிடம்"அய்யா அந்த வாளை வாங்கிச்செல்லுங்கள்..என் மீது உள்ள கோபத்தில் என்னை கொலை செய்ய பார்க்கிறார் .."என பயந்து நடுங்கியவாறே பஞ்சாயத்தாரிடம் சொன்னாள். மந்திர வாளை தரிசனனிடம் கேட்க, தன்னுடைய உயிரை காக்கும் சக்தி இந்த வாளுக்கு மட்டுமே உண்டு என கேட்காமல்,  நாங்கள் 70 பேர் இருக்கின்றோம் அதை மீறி இந்த சிறு பெண்ணால் உன்னை என்ன செய்யமுடியும்?! அந்த வாளைக்கொடு என்று வலுக்கட்டாயமாக வாங்கிக்கொள்ள நீலியின் முகத்தில் மெல்லிய குரூரமான புன்னகை தெறித்தது. 
Image may contain: plant, tree and outdoor
இரவுவேளையானதால், பஞ்சாயத்தார் அனைவரும் ஆங்காங்கே உறங்க ஆரம்பிக்க, தரிசனன் எதிரில் நீலி உக்கிரமாய் நின்றாள், குழந்தையை இறக்கி,  அதை ஓங்கி ஒரு மிதிமிதிக்க அது கொள்ளிக்கட்டையாய் மாறி பூமிக்குள் புதைந்தது. இதைக்கண்டு அதிர்ந்த தரிசனன் வேகமாக எழுந்தான். தனது கூந்தலை அவிழ்த்துவிட்ட நீலி தன்னுடைய சுயரூபத்தில் மிகவும் அகோரமாக தரிசனனை நெருங்கி, அவன் கழுத்தை நெறித்தே கொன்றாள். பொழுது விடிந்தது, எப்பேற்பட்ட புருசன் பொண்டாட்டி சண்டையையும் தீர்க்கும் வித்தை இரவுக்கு உண்டுன்னு நமுட்டு சிரிப்பு சிரித்தபடியே   அறைக்கதவை திறந்து, குரல் கொடுத்தனர்.   எந்தவித பதிலும் வராததால் தலைவர் முதலில் உள்ளே நுழைய, உள்ளே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான் தரிசனன். அருகில் குழந்தையை மிதித்த நீலியின் பாதச்சுவடும் இருந்தது. 
No photo description available.

தங்கள் தவறினை உணர்ந்த பஞ்சாயத்தார், கொடுத்த வாக்குறுதியின்படி  பூதேஸ்வரர் கோவிலின் முன்பு உள்ள மண்டபத்தில பூதேஸ்வரரை சாட்சியாக வைத்து   69பேர் தீக்குளித்தனர். மீதமுள்ள ஒருவர், தனது நிலத்தில் ஏர்  உழ சென்றுவிட்டிருந்தார். அவரை தேடி நீலி, அவரது மகள் வடிவில் சென்று, ஊருக்குள் நடந்ததை சொல்ல, ஏர்கலப்பையின் கூரிய முனையை நெஞ்சில் பாய்ச்சியபடியே உயிரை விட்டார். தன்னுடைய நோக்கம்  நிறைவேறிய நீலியின் ஆன்மா சாந்தியடைந்தது..பின்னாளில் வந்தவர்கள் நீலியம்மனாக அவளை வழிபட ஆரம்பித்தனர். 
Image may contain: sky, tree, outdoor, text and nature

இன்றும் அங்கே நீலியின் சமாதியும், நீலி கோவிலும், பஞ்சாயத்தார் தீக்குளித்த மண்டபமும், நீலி குழந்தையை மிதித்த இடமும்,  பூதேஸ்வரர் கோவிலும் அதனுடைய கல்வெட்டுக்களும், 69 பேர் தீக்குளித்த, ஒருவர் ஏர்க்கலப்பையால் உயிர்நீத்த காட்சியின் சிற்பம் என கோவில் குளத்தருகே  ஆங்காங்கு சிதறி கிடந்தவற்றையெல்லாம் ஒன்று திரட்டி, முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் ஓரிடத்தில் வைத்து அடுத்த தலைமுறைக்காக பத்திரப்படுத்தினார்.   

மன தைரியத்துக்கும், கணவனால் கொடுமையை அனுபவிக்கும் பெண்களும் பழையனூர் நீலியை வழிபட்டால் மனதைரியம் பெறலாம். கணவன் கொடுமைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீலியம்மன் வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என்றாலும், மன உறுதியுடன் இருந்து மறு ஜென்மம்வரை போராடி தன் கணவனை கொன்று பழிதீர்த்து உக்கிர தெய்வமாக உருமாறி இருக்கிறாள். வடமாவட்டங்களில் வழிபடும் நீலியம்மனே தென்மாவட்டங்களில் வழிபடும் இசக்கி அம்மனாக சொல்பவர்களும் உண்டு.
No photo description available.

சென்னையில் சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி செல்லும் ரயிலில் சென்றால் திருவாலங்காடு போகலாம். அங்குள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு இந்த நீலி அம்மன் கோவிலுக்கு செல்லலாம். மிகவும் சிறிய அளவிலான கோவில்தான் இது.  
பெரிய புராணம், விவேக சிந்தாமணி போன்ற நூல்களிலும் நீலியின் கதையை பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும், இடம், காலம் சூழ்நிலைக்கேற்ப கதை மாறுபடவே செய்கின்றது. இதே  நீலியை வைத்து இன்னும் சில மாறுபட்ட கதைகள் இருக்கு. ஆனால் எல்லாவற்றிலும் துரோகம் செய்த கணவனை பழிவாங்குவதே கருவாய் இருக்கு. நேரம் கிடைக்கும்போது அது பற்றி பார்ப்போம். 

படங்கள் முகநூலில் இவரிடமிருந்து  சுட்டது..

நன்றியுடன்,
ராஜி.

8 comments:

  1. பல நீலியம்மன்கள் இன்று நாட்டிற்கு அதிகம் தேவை...

    ReplyDelete
    Replies
    1. நீலன்களும் தேவை.

      Delete
  2. எத்தனை எத்தனை கதைகள்...

    நீலி கதை கேட்டதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நீலி கதைகளிலேயும் பல உண்டுண்ணே

      Delete
  3. சுவாரஸ்யமான கதை.

    ReplyDelete
    Replies
    1. அமானுஷ்யமும்கூட....

      Delete
  4. கிட்டத்தட்ட பேய், அமானுஷ்ய சினிமா பார்த்தது போல இருக்கு அப்படியான கதை. இப்படி நிறைய கதைகள் இல்லையா

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் எங்க ஊருல நீலி, உங்க ஊரு இசக்கியம்மன்னும் சொல்றவங்க உண்டு,

      அடுத்த வாரம் உங்க ஊரு கள்ளியங்காட்டு நீலிக்கதைதான் வரப்போகுது...

      Delete