Sunday, May 24, 2020

என்னை ஏன் பிடிக்காது என்றாய்?! - பாட்டு புத்தகம்

என்னதான் பிடிச்ச இனிப்பு பண்டமா இருந்தாலும் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டால் பரவாயில்லை.  அதையே சாப்பிட்டுக்கிட்டிருந்தால் போரடிக்க ஆரம்பிக்கும். அதுமாதிரிதான் இந்த பாட்டும்... ஆனா என்ன டிவில தினத்துக்கு பத்து முறை பார்த்து, கேட்டு போரடிக்கவே ஆரம்பிச்சிடுச்சு.
விஜய்யை  பிடிக்காவிட்டாலும்  அவரோட படத்துல வரும் சில பாடல்கள் பிடிக்கும்.  அப்படி பிடிச்ச சில பாடல்களில் யூத் படத்துல வரும்  சர்க்கரை நிலவே... பாடலும் பிடிக்கும். ஆனா, அன்றைய காலக்கட்டத்தில் இந்த படத்தில் வரும் ஆல்தோட்ட பூபதி,,,,ன்ற குத்து பாட்டு செம ஹிட். இந்த படத்தின் எல்லா பாட்டுமே ஹிட்.  பொதுவாகவே விஜயின் டிரெஸ்னெஸ் நல்லா இருக்கும்.  பாடலின்போது தொளதொளன்னு டிரெஸ் போட மாட்டாரு. அதனாலாயே  விஜய்யின் டான்ஸ் எடுப்பா தெரியும். 

சர்க்கரை நிலவே! பெண் நிலவே!!
காணும்போதே கரைந்தாயே!
நிம்மதி இல்லை... ஏன் இல்லை!? நீ இல்லையே!
சர்க்கரை இலவே பெண் நிலவே!
காணும்போதே கரைந்தாயே!

மனம் பச்சைத்தண்ணீதான் பெண்ணே!
அதை பற்றவைத்தது உன் கண்ணே!
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே!

கவிதை பாடின கண்கள்..
காதல் பேசின கைகள்..
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு  நெஞ்சு தாங்குமா?!

சர்க்கரை நிலவே ! பெண் நிலவே!
காணூம்போதே கரைந்தாயே!!

காதல் என்ற ஒன்று அது கடவுள்போல!
உணரத்தானே முடியும்!! அதில் உருவம் இல்லை...
காயங்கண்ட இதயம் ஒரு குழந்தைப்போல
வாயைமூடி அழுமே! சொல்ல வார்த்தை இல்லை..
அன்பே உன் புன்னகை எல்லாம் அடிநெஞ்சில் சேமித்தேன்...
கண்ணே உன் பு புன்னகையெல்லாம் கண்ணீராய் உருகியதே!

வெள்ளை சிரிப்புகள்  உன் தவறா?!
அதில் கொள்ளைப்போனது என் தவறா?!
பிரிந்து சென்றது உன் தவறா?!
நான் புரிந்துக்கொண்டது என் தவறா?!
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவர்தான்!!

கவிதை பாடின கண்க!!
காதல் பேசின கண்கள்.. காதல் பேசின கைகள்..
கடைசியில் எல்லாம் பொய்யா?! பிஞ்சு நெஞ்சு தாங்குமா?!

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்..
எனக்கும்கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்!!
மொட்டைமாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்...
எனக்கும்கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்!!

சுகமான குரல் யார் என்றாய்.. சுசீலாவின் குரல் என்றேன்..
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்..
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்..
தயக்கமென்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும்தான் பிடிக்கும் என்றாய்...
அடி உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க...
என்னை ஏன் பிடிக்காது என்றாய்!?
படம்: யூத்
இசை: மணி சர்மா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ஹரீஸ் ராகவேந்திரா..
நடிகர்கள்: விஜய், சாகின் கான்

இந்த பாட்டு  யாருக்குலாம் பிடிக்கும்ன்னு சொல்லிட்டு போங்க...
நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. Replies
    1. பாடலை ரசித்தமைக்கு நன்றிண்ணே

      Delete
  2. படம் வந்த நேரம் கலக்கிய பாடல்.

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் காதலில் தோல்வி அடைஞ்சவங்களுக்கு இந்த பாட்டு மிகப்பெரிய ஆறுதல்

      Delete
  3. எங்கள் வீட்டில் அனைவரும் ரசிக்கும் பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வயது வித்தியாசமில்லாமல் பெரும்பான்மையானவருக்கு இந்த பாட்டு பிடித்து போச்சு சகோ

      Delete
  4. மிகவும் ரசிக்கும் பாடல்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete