குத்துப்பாட்டு கேட்டாலே எத்தனை சோகமா இருந்தாலும் நமக்குள் ஒரு சுறுசுறுப்பு வரும். அதிலும், பிடிச்ச நடிகர் அதில் இருந்தால்?! உற்சாகத்துக்கு கேட்கவா வேணும்?! இன்னிக்கு கார்த்திக் நடிச்ச பாண்டி நாட்டு தங்கம் படத்துல வரும் மயிலாடும் பாறையிலே நாங்க ஆடியிருக்கோம்... பாட்டை பத்திதான் பார்க்கப்போறோம்....
இப்ப மாதிரி ஏகப்பட்ட சேனல்கள் இல்லாம டிடி எனப்படும் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே இருந்த காலமது! ஊர் உலகமே ஒளியும், ஒலியும் பார்க்கும். முதல்நாள் இந்த பாட்டை பார்த்துட்டு வந்து, மறுநாள் என்னைய கலாய்ப்பாங்க. என்னடி! உன் ஆளு குருவிக்காரிக்கிட்ட வாங்கின பாவாடையை கட்டி இருக்கார்ன்னு.... ஒரே அசிங்கமா இருக்கும். ஆனாலும் மனசுக்கு பிடிச்சுட்டா குத்தம் தெரியாதே! எதாவது சொல்லி முட்டுக்கொடுப்பேன். இந்த படம் வெளிவந்த காலக்கட்டத்தில் பள்ளி ஆண்டுவிழாவில் கண்டிப்பா இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாங்க. தயாரிப்பாளருக்கு என்ன பணநெருக்கடியோ தெரியாது. பாடல் முழுக்க ஒரே காஸ்ட்யூம்தான் :-( டான்ஸும், இசையும் செமயா இருக்குங்குறது வேற விசயம்).
இளையராஜா இசையில், எஸ்.பி.பி, சித்ராவும் ரொம்ப பாஸ்ட்டா பாடி அதகளம் பண்ணி இருப்பார். இன்னிக்கும் இந்த பாட்டை கேட்க நேர்ந்தால் மனசு துள்ளாட்டம் போடும். அன்னிக்கு என் ப்ரெண்ட்ஸ்ங்க கிண்டல் செஞ்சாங்க. இன்னிக்கு நான் பெத்ததுங்க கிண்டல் பண்ணுதுங்க.. என்னம்மா! உன் ஆளு இப்படி..... பச்சைக்கலர் ஜிங்குச்சான்னு தைய்ய்ய தக்கன்னு குதிக்குறாப்லன்னு... காலம் மாறினாலும் கோலம் மாறாது போல! :-(. ... கனவுப்பாட்டுன்னாலும் ஒரு ரசனை வேணாமா?! சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ரேஞ்சுக்கு அரைப்பாவாடைல தலைவனை ஆடவிட்டு ஒரு கிளாமர் ஹீரோவா ஆக்கிட்டீங்களே! என்னமோ போங்கடா!
மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கி இருக்கோம்..
மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கி இருக்கோம்...
நாங்க போகாத ஊருமில்லை..
இப்ப நாங்கவாங்காத பேருமில்ல..
நாங்க போகாத ஊருமில்லை..
இப்ப நாங்கவாங்காத பேருமில்ல.. (மயிலாடும்..)
திருச்சி சேலம் தஞ்சாவூர் பாண்டி பொள்ளாச்சி போலே
ராணி போலே நாட்டியம் ஆடி பெருமை தானே??
பேரு பெத்த சென்னையிலே பரிசு பல வாங்கிவந்தேன்!!
பெரியவங்க கையலதான் பதக்கம் பல பெற்று வந்தேன்!!
ஆட்டம்பாட்டத்துல என்னை யாரும் ஜெயிக்க வரல
துள்ளலான பாட்டு...
ReplyDeleteஆமாம்ண்ணே
Deleteபடக் காட்சியிலும் அதே துள்ளலை உணரமுடியும்.
ReplyDeleteஆமாம் சகோ. பாடலை கேட்க, பார்க்கும்போது உற்சாகம் நம்மை தொற்றும் என்பது உண்மை
Deleteஅந்த காலத்து குத்துப்பாட்டு...
ReplyDeleteஅந்த காலத்தில் எல்லா பள்ளிகளிலும் ஆண்டுவிழாவில் இந்த பாட்டு கண்டிப்பா இருக்கும்.
Deleteசூப்பர் ..
ReplyDeleteஎன்னோடு சேர்ந்து பாடலை ரசித்தமைக்கு நன்றி அனு
Delete