Sunday, March 17, 2019

வானில் போகும் மேகம் யாரை தேடுதோ?! - பாட்டு புத்தகம்

டைம் மெஷின்ல ஏறி மீண்டும் வாழ்ந்து பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சா எந்த பருவத்தை தேர்ந்தெடுப்பீங்கன்னு கேட்டால் பெரும்பான்மையினரின் பதில் பள்ளிப்பருவம் என்பதாகவே இருக்கும்.   ஏன்னா பொறுப்புகளற்ற பருவம் அது.  தங்கள் தவறினை திருத்திக்கவும், கள்ளங்கபடமற்ற வாழ்வினை வாழ்ந்து பார்க்கவும், தாய் தந்தை, சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்த வாழ்க்கைக்காகவும், கிராமத்து வாழ்க்கையினை அனுபவிக்க என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். பக்கத்து வீட்டு அக்கா/ண்ணா. ஆசிரியர்/யை, சக மாணவி/வன் மீதான பப்பி லவ்வை அனுபவிக்க இப்படி பல காரணங்கள் உண்டு.

பதின்ம வயது பள்ளிக்காதலை மையமா வச்சு கார்த்திக், ராதா நடிச்ச அலைகள் ஓய்வதில்லையும், சுரேஷ், சாந்தி கிருஷ்ணா நடிச்ச பன்னீர் புஷ்பங்கள் படமும் ஒரே காலக்கட்டத்தில் வந்தது. பள்ளிக்காதலை சிலாகிச்சு, தெய்வீகமாய், புனிதமாய் காட்டியது அலைகள் ஓய்வதில்லை.  ஆனா, பள்ளிக்காலத்து காதலுக்கும், காதலருக்கும் என்ன பாதுகாப்பு என பொட்டில் அடித்த  மாதிரி உணர்த்தியது பன்னீர் புஷ்பங்கள். இந்த ரெண்டு படத்துக்கு அப்புறம்தான் பள்ளிக்கூடத்து காதல் அதிகமா வர ஆரம்பிச்சுது.. 

விடலைப்பருவத்து நட்பு, அதை காதலென்று நம்பி, ஆசிரியரையும் தோழியையும் சேர்த்து நாயகன் சந்தேகிக்க, விடலைப்பருவத்தின் தவிப்பை உணர்ந்த ஆசிரியர் நாயகனுக்கு சாதகமாய் பேச, இவர்களது நட்பையும் தாண்டிய உறவை தெரிந்த வீட்டினர் கண்டிக்க, அதனால் நண்பர்களின் துணையோடு ஊரைவிட்டு ஓடிப்போகும்போது,  ஆசிரியர் இருக்கும் அதே ரயில்பெட்டியில் ஏற, பொறுப்பான ஆசிரியர் புத்திமதி சொல்லி வீட்டுக்கு அழைத்து போய், அங்கு பெத்தவங்களுக்கு புத்தி சொல்லி சுபமாய் முடிவதாய் படத்தினை முடிச்சிருப்பாங்க. ஆனா, அது காதலா?! நட்பா?! கால்யாணம் ஆச்சா?! காதல் பிழைத்ததா?! அல்லது பணால் ஆச்சான்றதுலாம் நம்ம கற்பனைக்கு விட்டுட்டாங்க.
 இப்பாடல், ரெண்டுமுறை வரும்.கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையுறும் நடுத்தர வயதினரின் பக்குவப்பட்ட பார்வையில் இந்த பாடல் ஒலிப்பது ரொம்ப சிறப்பு. ஆசிரியரின் மனமுதிர்வை அழகாய் தனது குரலில் வெளிக்கொணர்ந்திருப்பார் மலேசியா வாசுதேவன். இரவில் கண்ணை மூடி இப்பாடலைக் கேட்டால் காற்றிலோ/அலையிலோ/ஆற்றிலோ  அதன்போக்கில் போறதுமாதிரி இருக்கும். 
கோடைகால காற்றே!!
 குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு....
அதைக்கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே!! புதுச்சோலை பூக்களே~~
கோடைக்கால காற்றே!!
 குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!

வானில் போகும் மேகம் இங்கே
 யாரைத் தேடுதோ?!
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ?~
தன் உணர்வுகளை மெல்லிசையாக 
தன் உறவுகளை வந்து கூடாதோ?~
இது நாளும் கூடட்டும் 
சுகம் தேடி ஆடட்டும்....

இவைகள் இளமாலை பூக்களே! புதுச்சோலை பூக்களே!
கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!...

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் 
இங்கே கண்டதே...
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
வெண்மலை அருவி பன்னீர் தூவி
பொன்மலை அழகின் சுகம் ஏற்றாதோ?!
இவை யாவும் பாடங்கள்...
இனிதான வேதங்கள்..
இவைகள் இளமாலை பூக்களே!! புதுச்சோலை பூக்களே!!
கோடைகால காற்றே!! குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
மனம் தேடும் சுவையோடு தினந்தோறும் இசைபாடு..
அதைக்கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...
இவைகள் இளமாலை பூக்களே!! புதுச்சோலை பூக்களே!!
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!

பாடல்: கோடைகால காற்றே
திரைப்படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

நன்றியுடன்,
ராஜி

8 comments:

 1. பன்னீர் புஷ்பங்கள் பாட்டுகள் அனைத்தும் ரசித்திருக்கிறேன். இந்தப் பாடலும்.

  ReplyDelete
  Replies
  1. எல்லா பாட்டுமே ஹிட். எல்லாம் கேட்க நல்லா இருக்கும்.

   Delete
 2. மிக இனிமையான பாடல்.

  ReplyDelete
 3. நன்றி அண்ணே

  ReplyDelete
 4. மிக இனிமையான பாடல்.

  ReplyDelete