Tuesday, October 30, 2012

சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை





மழை பெய்யும்போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில் கலந்திருக்கும்..,
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை??!!
ஆனால், தயவு செய்து
என் கனவில்
வருவதை மட்டும்
நிறுத்திவிடாதே.!

இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
எனக்கு வேண்டும்,.. என் உயிரை
எடுத்துக் கொள், உன் கண்ணில் நான்
இருக்கும்போது இந்த உடல் எதற்கு?


நான்  என்ன சொன்னாலும்.....,
 நீ கேட்பாய் என்று தெரியும்!!!. 
ஆனால், இந்த அளவிற்கு!
கேட்பாய் என்று தெரியாது!!,

ஏதோ கோபத்தில் வாய் தவறி
”என்னை மறந்துவிடு"
 என்று சொன்னால்...,
 இப்படி ஒரேயடியாகவா
மறந்துவிடுவது??!!


Monday, October 29, 2012

கால ஓட்டத்தில் காணாமல் போன பொக்கிஷங்கள்- ”ஒரு குடம் தண்ணி ஊத்தி”...,

                                           
டாக்டர் சர்! என் பையனுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது..., நானும் எவ்வளாவோ ஹெல்த் டிரிங்க்ஸ், கூரை, பழம், காய்கறிகள்ன்னு குடுக்குறேன்..., அவனையும், எங்க வீட்டையும் சுத்தமா பார்த்துக்குறேன். இருந்தாலும்.., அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது..., கொஞ்சம் என்னன்னு பாருங்க சார்...,

நான் உங்க ஃபேமிலி டாக்டர்.., உங்க குடும்பத்தை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால சில யோசனைகள் சொல்லவா?

ம் ம் ம் சொலுங்க டாக்டர். அதுக்குதானே குழந்தை கூட்டி வந்திருக்கோம்.

ஸ்கூல் விட்டு ஈவினிங் வந்து உங்க பையன் என்ன பண்றான் சுஜி மேடம்?

டியூஷன் போவான்..,

அப்புறம்?

வீட்டுக்கு வந்து ஹோம் வொர்க் செய்வான்.., டிவி பார்ப்பான்.., டிவி போரடிச்சா கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடுவான்.., கடைசியா சாப்பிட்டு தூங்குவான்.

வெளிய தெருவுக்கு போய் பசங்களோடு விளையாடுறதுலாம்?!

ம்ஹூம் கீழ விழுந்துடுவான்னும்.., கெட்ட வார்த்தைலாம் கத்துக்கிட்டு வந்துடுவான்னும் விடுறதில்லை சார்.., அப்படியே பசங்களோடு விளையாடினாலும்.., செஸ், கேரம்தான்...,

இங்கதாம்மா நீங்க தப்பு பண்றீங்க...,காலை எழுந்ததும் படிப்பு.. பின்பு கனிவு தரும் நல்ல பாட்டு.., மாலை முழுதும் விளயாட்டு என வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பான்னு பார்தியார் சொல்லிட்டு போயிருக்கார். இப்போ இருக்குற காலகட்டத்துல மாலை முழுதும் விளையாடலைன்னாலும்! ஒரு அரை மணி நேரமோ இல்ல ஒரு மணி நேரமோ விளையாட விடுங்க சுஜி..

விளையாடுறதால நல்லா பிளட் சர்க்குலேஷன் ஆகும்.., வேர்த்து கொட்டும்.., உடலும் இளைக்கும்.., நாலு பிள்ளைகளோடு சேர்றதால கஷ்ட நஷ்டம் தெரிய வரும்...,  விட்டுக்குடுத்தல் போன்ற நல்ல பண்புகள்லாம் அவனை வந்து சேரும்மா...,

ஓ அப்பிடியா! ஆனா, என்ன விளையாட்டு விளையாட சொல்றீங்க? டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி கிளாஸ்ல சேர்த்து விடட்டுமா?!

விளையாட சொன்னேன் .., அதுக்காக காசை செலவழிக்க சொல்லல. பிள்ளைகளை கிளசுக்கு அனுப்பிட்டு கைல அடிப்பட்டுச்சோ?! கால்ல அடிப்பட்டுச்சோன்னு நீ இங்க பதறிக்கிட்டு உக்காந்திருக்கனும். இதெல்லாம் தேவையா?! காசே செலவழிக்காம பக்கத்து வீட்டுல இருக்குற பிள்ளைகளைச் சேர்த்துக்கிட்டு பெத்தவங்க மேற்பார்வைல விளையாடட்டுமேம்மா..,

என்ன விளையாட்டு சார்?!

பாதுகாப்பா விளையாட எவ்வளவோ தமிழர் விளையாட்டுகள் இருக்கும்மா.. உதாரணத்துக்கு பூப்பறிக்க வருகிறோம் அல்லது கூண்டுக்கிளின்னு ஒரு விளையாட்டு..,

ஆண்பிள்ளாகளோ இல்லைன்னா பெண் பிள்ளைகளோ இல்லைன்னா ரெண்டு பேருமே சேர்ந்து விளையாடுற விளையாட்டு. எத்தனை பேர் வேணும்னினாலும் சேர்ந்துக்கலாம் கணக்கில்லை..  உயரமான ரெண்டு பிள்ளைகள் எதிரெதிரே கைகளை நீட்டி கோர்த்துக்கிட்டு .., தலைக்கு மேலே பந்தல் போல தூக்கிக்கிட்டு நின்னுக்கிடுவாங்க.

மத்த பிள்ளைகள்லாம் அந்த கைகளுக்குள் நுழைஞ்சு வெளிய வரனும். அப்படி வரும்போது ...,
”ஒரு குடம் தண்ணி ஊத்தி 
ஒரே பூ பூத்ததாம்..,
ரெண்டு குடம் தணி ஊத்தி 
ரெண்டே பூ பூத்ததாம்ன்னு 

பாடிக்கிட்டே வரனும். அப்பிடி வரும்போது பத்தாவதா வர்ற பிள்ளையை கோர்த்திருக்கிர கையினால பிடிச்சுக்குவாங்க..., அப்பிடி பிடிச்சுக்கிட்டவங்க கிட்ட இருந்து தப்பி வந்தா மீண்டும் சுத்தி வரலாம்.., இல்லாட்டி அவுட்ன்னு சொல்ல்லி வெளிய அனுப்பிடுவாங்க. 

எத்தனை பேரு விளையாட வந்தாங்களோ! அத்தனை பேரையும் பிடிச்சாதான் ஆட்டம் முடிஞ்சுதா கணக்கு.. ஆனா இந்த விளையாட்டு கடைசி வரை முடிச்சுட்டு போனதா, நான் விளையாடுன வரை  எனக்கு நினைவில்லை..  குழந்தைகளுக்கு பசிக்கும், தூக்கம் வரும்.., அப்பா அம்மா கூப்பிடுவாங்க..., இல்லாட்டி கைக்குள்ள மாட்டிக்கிட்ட புள்ள திமிரி தப்பிச்சுக்கும். இப்படி இந்த விளையாட்டு தொடர்ந்துக்கிட்டே போகும்...,

இந்த விளயாட்டுனால ஏகப்பட்ட சந்தோஷமும்.., தோட்டத்து செடிகளுக்கு பூக்குறா நேரத்துல தண்ணி ஊத்தனும்ங்குற மெசேஜும் அழகா வருது பாருங்க சுஜ்ஜி.., விளையாட்டுல கூட ஒரு மெசேஜை சொல்லியிருக்குற நம்ம பெரியவங்களை என்னன்னு சொல்லி பாராட்டுறது?

ரொம்ப கரெக்ட்தான் சார். இனி என் பையனை விளையாட அனுப்புறேன்.

குட்.., இனி உன் பையனோட உடம்பு இளாஇக்கும்.., அடிக்கடி உடம்பு சரியில்லாம போறது இனி நடக்காது பாரேன்.

ரொம்ப நன்றி டாக்டர்.

Saturday, October 27, 2012

உன்னை அறிந்தால்.....,


                                                      
கண்ணில் காண்பதெல்லாம்!!
கனவென்று நம்பாதே...,
காணாத கனவுகளும்!!
நனவாகிப் போகலாம்...,



நிகழ்கால நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
எதிர்கால மர நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
இறந்தக் கால தென்றல் காற்றின்...,
இதமான அரவணைப்பில் ஓய்வெடு....,



கண்களை மூடித் திறக்குமுன்..,
உன் கற்பனைகளை திறந்து விடு...,
பூக்களின் வாசனையை நுகர்வது தப்பில்லை..., 
அதிலுள்ள முட்களின் வேதனையை புரிந்துக் கொள்...,


புன்னைகையே மட்டுமே 
வாழ்க்கையல்ல...,
பூகம்பமும் வரும்..,
 எதிர் கொள்ள தயராகு!!


நீ விதைத்ததை...,
 நீயே அறுவடை செய்துக் கொள்ள்ள வேண்டும்...,
அன்று கொல்லாவிடினும்..., 
நின்றாவது கொல்லும்..., 
மாற்றான் துயரம் மட்டுமல்ல!!??
மதுவும், மாதுவும் கூடத்தான்.....,


மற்றவர் கண்களில் தெரிவது,
 கண்ணீரென்று மட்டும் எண்ணாதே...,
விஷமாவும், கேலியாகவும், 
விஷமமாகவும்..., ஏன்? உனக்கென
தோண்டப்பட்ட புதை குழியாவும் கூட இருக்கலாம்...,

உனக்கென ஒரு பாதை.....,
 உனக்கென ஒரு பயணம் .....,
உன்னோடு சில பயணிகள்....,
தேர்வு உன் கையில்!!??


இது நீ ”பிறந்த நாள்” அல்ல..,
உன்னை நீ நன்கு உணர்ந்த நாள்”,  ஆயின்...,
உன்னை எண்ணி பூரிப்பதில் 
தோழி நானும் ஒருத்தி உண்டு...,
  
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்களுடன்...,  


Wednesday, October 24, 2012

விஜய தசமி - அன்றும்..., இன்றும்.........,




                                                                                                                               
வணக்கம் சகோ’ஸ்

விஜய தசமி வாழ்த்துக்கள்...,

என்னடா! எல்லாரும் சரஸ்வதி  பூஜை அன்னிக்குதான் வாழ்த்து சொல்லுவாங்க. ஆனா, ராஜி விஜயதசமி அன்னிக்கு வாழ்த்து சொல்லுதேன்னு நினைக்காதீங்க.
சின்ன புள்ளைல பண்டிகைகாலம் வரும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா, அப்பா, அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாம், பய பயபக்தியா சமி கும்பிடலம்ன்ற நினைப்பே தவிர, பள்ளிக்கூடத்துக்கு 1 நாள் லீவும், பலகாரம் கிடைக்குமேன்றவேற இல்லீங்கோ.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்த காலத்துல ஆயுத பூஜை பண்டிகையை எப்படி கொண்டாடினேன் தெரியுமா?! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்....

ஒட்டடை அடிக்குறேன் பேர்வழின்னு ஏணி மேல ஏறிட்டு இறங்க பயந்துக்கிட்டு அப்பாவை கூப்பிட்டதும்....


தலைவாசக்கால், கதவுல்லாம் தொடச்சி பொட்டு வைக்குறேன்னு  பல்லியோட வாலை அறுத்ததும்.....,

பரண்மேல ஏறி சுத்தம் பண்ணும்போது, சாப்பிட முடியாம, வெளில எறிஞ்சா அம்மாக்கு தெரிஞ்சு போகும்ன்னு பரண்மேல தூக்கி போட்ட இட்லி அப்பா கைக்கு கிடைச்சு, அல்கொய்தா தீவிரவாதியைவிட மோசமா விசாரிக்கப்பட்டதும்....,

அம்மாக்கு ஹெல்ப்பா பெட்ஷீட், டிவிகவர்லாம் துவச்சு தரேன்னு சொல்லி கிழிச்சு வெச்சதும்.., அதுக்கு அம்மா செம மாத்து மாத்துனதும்...

ஒரே ஒரு ஸ்லேட்டுக்கு அடுப்புக் கரியும், கோவை இலையும் அரைக்க போறேன்னு சொல்லி,  டிரெஸ்ஸை கரியாக்கி வூட்டுக்கு போனா திட்டுவாங்களேன்னு பயந்து ஃப்ரெண்ட் வீட்டுல இருந்ததும்....,

வடகையே தராம பீரோவுக்குள் ஒண்டு குடித்தணம் பண்ணிய எலியை பிடிச்சு தூர கொண்டு போய் விட சொன்ன பாட்டி பேசை கேக்காம, கேப்டன் கஷ்மீர் தீவிரவதியை அழிச்ச மாதிரி தண்ணில முக்கி சாகடித்ததையும்.....,

8 மாசத்துக்கு முன்னாடி காணாம போன தாத்தாவோட மூக்குப்பொடி டப்பாவை ரேடியோக்கு பின்னால இருந்து எடுத்து குடுத்ததுக்கு இனாமா 25 பைசா வாங்கி தேன் மிட்டாயும், சர்க்கரை அப்பளமும் வாங்கி சாப்பிட்டதும்....,

புத்தகம், அப்பாவோட பேங்க் பாஸ் புக், சர்டிஃபிகேட், விவாசயத்துக்கு யூஸ் பண்ணுற அருவா, மண்வெட்டி, கடப்பாரை, கத்தி, உலக்கை,அம்மை, ஃபேன், ரேடியோ, அடுப்பு, லைட், சைக்கிள், ஸ்விட்ச் போர்டு, ன்னு யூஸ் பண்ற எல்லாத்துக்கும் பொட்டு வைக்குறிங்களே! அப்போ, செருப்பு, வெளக்குமாறுக்குலாம் ஏன் பொட்டு வச்சு சாமி கும்பிட்டாதான்னு அடம்பிடிச்சதும்...,

சாமி கும்பிட்டதும்..., அப்பா தன்னோட சைக்கிளை எப்படியும் நமக்கு ஓட்ட தருவார்ன்னு வெயிட் பண்ணும்போதுதான் ஊருக்கதைலாம் பேசிக்கிட்டு மெதுவா சாப்பிட்டு முடிக்கும்போது இந்த காலத்து கரண்ட் கட் போல கரக்ட் டைம்முக்கு ராகு காலமும், எமகண்டமும் வந்து நிக்கும்....,

ஒரு வழியா. ராகு காலத்தையும், எம கண்டத்தையும்  பேக் பண்ணி அனுப்பின பின் அப்பா, சைக்கிளை எடுத்து எலுமிச்சை பழத்துமேல ஏத்தி அவர், ஒரு முறை ஓட்டி பார்த்து தருவார்..., அப்பதான் அம்மா ஒரு டப்பாவை கொண்டு வந்து ஸ்டெல்லா அத்தை வூட்டுக்கு கொண்டு போய் குடு, நசீமா பெரியம்மா வூட்டுக்கு குடுன்னு உயிரை வாங்குவாங்க.                                                      
வாழை மரம், மாவிலை, மாலை, கலர் பேப்பர், பலூன்  கட்டுன சைக்கிள்ல ஹேண்டில்பாரை தேடி...,  

ஒரு குரங்கே...,
குரங்கு பெடல்...,
அடித்து, சைக்கிள்
ஓட்டுச்சேன்னு., ன்னு சகோக்கள் கமெண்ட் போடனுமேன்னு குரங்கு பெடல் அடிச்சு சைக்கிள் ஓட்டுனதும்.....,

புதுசா ஸ்கூல் சேருர பிளைங்க தர்ற புளிப்பு மிட்டாய்க்காகவே  lலீவாயிருந்தாலும் ஸ்கூல் போன  சந்தோஷமிருக்கே..., அட! அட! அட!
சொர்க்கம்ங்க அது.
                                             
ஏதோ பேருக்கு லேசா ஒட்டடை அடிச்சு,  பொரி, கடலை வெச்சு சாமி கும்பிட்டு பொழுதன்னிக்கும் பிளாக்ல பதிவு போட்டு, டிவிட்டர், ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ், ஸ்கைப்ல சாட்ன்னு கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து பண்டிகை கொண்டாடுனதுல கிடைக்கலீஙக.


Monday, October 22, 2012

யார் உண்மை பக்தன் ? - பாட்டி சொன்ன கதைகள்


                 
    ஒன் டே  ”யார் உண்மையான பக்தன்” ன்னு   டூ ஏஞ்சல்சஸ்க்கு  டவுட் வந்துடுச்சு. நேரா “காட்”கிட்ட போய். ஓ காட்! கோவிலுக்கு  வந்து உன்னை,  நிறைய பேர் கும்பிட்டு, தங்களுக்கு தேவயானதை செய்ய சொல்லி  வேண்டிக்குறாங்க. அதுல சில பீப்பிள்ஸ் ""இறைவா... நான் தினமும் உன்னை கும்பிடுறேன்'' என்னைவிட உன்னை யார் நம்புறங்கன்னுலாம் சொல்லி சாமி கும்பிடுறாங்க... சோ, ”உன்மேல உண்மையான பக்தி வெச்சிருக்குறது” யாரு?ன்னு சொல்லுங்கன்னு  நேரா  ”காட்”கிட்டயே போய்  தங்கள் டவுட்டை கேட்டாங்க்.



அப்போ, காட், ""ஏஞ்சல்ஸ்!நீங்க ரெண்டு பேரும் ஊருக்குள்ள போய், அங்கிருக்குறவங்களை மீட் பண்ணி,  யார் என்னோட  உண்மையான பக்தன்?ன்னு என்கொயரி பண்ணிட்டு வாங்கன்னு சொன்னார்.

உடனே ”டூ ஏஞ்சல்ஸும்” பூமிக்கு வந்து, கோவிலுக்கு வர்றவங்களை  என்கொயரி பண்ண ஆரம்பிச்சாங்க.


ஒருத்தன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூணு வேளை ”காட்”ஐ பிரே பண்றேன் ,'' ன்னான்.



அடுத்த ஆளு,  ""நான் ஃபிரைடே, சாட்டர் டே, டியூஸ் டே மட்டுமே   கோவிலுக்கு போவேன்”ன்னு சொன்னான்.



இன்னொரு ஆளு கோவிலுக்கு வந்தான், அவனை, என்கொயர் பண்ணும்போது, "நான் வாரத்துல ஒரே  ஒரு நாள் கன்ஃபார்ம்டா கோவிலுக்கு வருவேன்,'' ன்னு சொன்னான்.


இன்னொரு ஆளு, ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்துல மட்டும்  கோவிலுக்கு வருவே,'' னான்.


இப்படி, வந்தவங்கல பல பேர் ,  ஏதோ ஒரு சமயத்தில் ”காட்”ஐ நினைப்பவராகவே இருக்க, "இதுல  யார் உண்மையான பக்தன்'? ன்னு கண்டு பிடிப்பது எப்படி?ன்னு டூ ஏஞ்சல்ஸுக்கும்  கன்ஃபியூஸ்ஆயிடுச்சு.


சரி, நாம “காட்”கிட்டயே போய் கேட்டுக்கலாம்ன்னு திரும்பும்போது...,  கோவில் வழியே அவசரமாக போக்கிட்டிருந்தான்.  அவனை,  நிறுத்தி, "ஹலோ! உனக்குக் கடவுள் பக்தி இருக்கா? நீ எப்போ ”காட்”ஐ பிரே பண்ணுவே?'' இப்போ கூட கோவில் பக்க்கமாத்தான் போறே. ஆனா, பிரே பண்ணாஆம போறியே?!ன்னு ஏஞ்சல்ஸுங்க கேட்டுச்சு.


அதுக்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே டைமில்லை... அவசரமா ஒருத்தருக்கு பிளட் தேவைப்படுது. அவர் பிளட் குரூப்பும், என் பிளட் குரூப்தான். அதான் அவருக்கு ஹெல்ப் பண்ண போய்கிட்டு இருக்கேன்.  இதுல சாமியை எங்கிருந்து கும்பிடுறது? நான் கிளம்புறேன். குட் பை...'' ன்னு ஆன்சர் பண்ணிட்டுபோய்ட்டான்.


  ஏஞ்சல்ஸ் ”காட்”கிட்டயே  திரும்பி வந்து என்ன நடந்துடுச்சுன்னு சொல்லிச்சுங்க....

எல்லாத்தையும் கேட்ட”காட்” அமைதியா இருந்தார்.....,


""ஓ காட்... உண்மையான பக்தன் யார்?ன்னு  எங்களால கண்டுபிடிக்க முடியலை. நீங்களாவது  கண்டுபிடிச்சுட்டீங்களா?!?'' ன்னு கேட்டுச்ச்சு.


""கண்டு பிடிச்சுட்டேன்!'' ன்னு சின்ன புள்ளை போல குதூகலமா   சொன்னார் ”காட்”....,


""யார்?  டெய்லி மூணு வேளை கோவிலுக்கு வர்றவர்தானே?'' ன்னு கேட்டனஏஞ்சல்ஸ்....,


”காட்” ஸ்மைல் பண்ணியபடியே...,  ""நோ... நோ... லாஸ்ட்டா  என்னை நினைக்கக்கூட டைமில்லாம..,  இன்னொருத்தருக்கு ஹெல்ப் பண்ண  ஓடினானே... அவன் தான் என் ” உண்மைப் பக்தன்,'' ன்னு சொன்னார்.


உதவி தேவைப்படுறவங்களுக்கு நம்மாலான உதவியை செய்தா,  கோவிலுக்கு போய் கடவுளை கும்பிட்டதோட பலன் கிடைக்கும்ன்ற  உண்மை அந்த ”ஏஞ்சல்ஸ்க்கும் ”புரிந்தது .

Thursday, October 11, 2012

கைகளிலே கலை வண்ணம் கண்டார்...,












சின்ன பொண்ணு.., பெரிய பொண்ணு..,

                                         
இன்னிக்கு என்ன போஸ்ட் தேத்தலாம்ன்னு யோசிச்சுக்கிட்டே ஃபேஸ்புக்குல சுத்தும்போது இன்னிக்கு ”சர்வதேச பெண்குழந்தைகள் தினம்”ன்னு ஒருத்தர் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அவருக்கு நன்றி சொல்லிட்டு என் பொண்ணுங்க அடிக்குற லூட்டியை போட்டு ஒரு பதிவையும் தேத்திப்புட்டாச்சு..,

பெரியவ எப்பவும் ஒரே மாதிரி பேலன்ஸ்டா இருப்பா. அழுகை,அடம், சிரிப்பு, கோவம்ன்னு எந்த உணர்ச்சிக்கும் அதிகம் ஆட்படாம, ஆழ்கடல்   அமைதி போல தெளிவா இருப்பா. அதனால,  அதிகமா சேட்டை செய்யுறது இல்ல. 

ஆனா, சின்ன பொண்ணு புதுசா பொறந்த கன்னுக்குட்டி போல... ரொம்ப துள்ளும்.., சேட்டை..., சட்டுன்னு கோவம், அழுகை, குறும்புன்னு வீட்டை ரெண்டாக்குவா....

                                              


ஒரு வெள்ளிக்கிழமை ஸ்கூல்ல இருந்து வந்த சின்னது..., எனக்கு “டூ டேஸ்,  ஹாலிடேஸ்” ம்மான்னு சொல்லிட்டு “பால கணேஷ்”  கார்ட்டூன் டிவிடி எடுத்து போட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டா..., மணி ஆறாச்சும்மா.., தூயாக்கா ஹோம் வொர்க் பண்றா. நீ ஹோம் வொர்க் பண்ணலையாம்மா?ன்னு கேட்டேன்.

டூ டேஸ் ஹாலிடேதானே நான் நாளைக்கு பண்றேனேன்னு சொன்னா.., வேணாம்மா எந்த வேலையும் ஒத்தி போட கூடாது. இன்னிக்கே முடிச்சுட்டா நாளைக்குலாம் ஹாயா இருக்கலாம்.., திடீர்ன்னு எதாவது தடங்கல் வந்து நீ ஹோம் வொர்க் முடிக்கலைன்னா மிஸ்கிட்ட நீதான் திட்டு வாங்குவேன்னு சொல்லியும் கேட்காம  டிவி பார்க்க ஆரம்பிச்சா.

டிவில பார்வதி தேவி குளிக்க போகும்போது, தன் மகன் கணேஷை கூப்பிட்டு காவல் காக்க சொல்வதும்.., அவர் அப்படியே காவல் காப்பது போலவும் சீன் போய்க்கிட்டு இருந்துச்சு..., அப்போ தூயா, ஏய் இனியா! அங்க பாரு எவ்வளவு பெரிய காட் பிள்ளையார்! அவரே அவங்கம்மா பேச்சை கேட்குறாரு. நீ மட்டும் ஏன் அம்மா பேச்சை கேட்க மாட்டேங்குறேன்னு கேட்டா.

அம்மா பேச்சை கேட்டா..., நம்ம தலை துண்டாகிடும்டி அதனால இனி நாம அம்மா பேச்சை கேட்ககூடாதுடின்னு சொன்னா. என்னடி உளர்றே?ன்னு தூயா கேட்டதுக்கு...,  இங்க டிவில பாரு அம்மா குளிக்குறாங்க. யாரும் உள்ள  வராம பார்த்துக்கோன்னு பிள்ளையார்கிட்ட சொல்லிட்டு போறாங்க. அப்பா சிவன் உள்ள போக பார்க்குறார். உள்ள விடக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லியிருக்க்காங்கன்னு சொல்லி தடுக்குற புள்ளையோட கழுத்தை அப்பா வெட்டுறார். சோ, இனிமே அம்மா பேச்சை நாம கேட்டா.. இதான் நடக்கும்டின்னு சொன்னதை கேட்டு ங்ஙேன்னு முழிச்சா தூயா..



                                       

  ஒரு நாள் ரெண்டுத்துக்கும் சண்டை. சின்னது சூப்பரா படம் வரையும்., ஆனா, தூயாக்கு படம் வரைய வராது.  ஒரு நாள் படம் வரைஞ்சு தூயாக்கிட்ட  கையில் புல்லாங்குழலோடு மயில் மீதிருக்கும் கடவுள் படம் காட்டியிருக்கா. படம் அழகா இருக்கு. ஆனா, யார் இந்த கடவுள்ன்னு புரியாம கேட்க. முருகன்னு சின்னது சொல்லியிருக்கு. 

லூசு, முருகன் கையில வேல் இருக்கும்..., புல்லாங்குழல் இருக்காதுன்னு சொல்ல., தன் தவறை புரிஞ்சுக்க்கிட்டாலும் ஒப்புக்கொள்ள மனமில்லாம.., அதில்ல தூயா, தன் மாமா “கிருஷ்ணர்” போல புல்லாங்குழல் ஊத முருகனும் கத்துக்கிட்டாராம்ப்பான்னு சொல்லி தூயாவை நிலைகுலைய வச்சிருக்கா.

                              

சின்னதுக்கு 4 வயசாயும் மழலை மொழி மாறாம இருந்துச்சு. ”த”னாவை உச்சரிக்க வராது. ”த”னாக்கு பதில் “க”னா போட்டுதான் பேசுவா. ஒரு நாள் திடீர்ன்னு, அம்மா ஓடி வாயேன்.., “தம்பிமேல தாத்தா உக்காந்திருக்கு”ன்னு கத்துனா.

நான் என்னமோ ஏதோதுன்னு பதறி..., ஓடி போய் கட்டில்ல தூங்குற பையனை  பார்த்தேன். எல்லாமே சரியா இருக்கவே புரியாம சின்னதை கூப்பிட்டு என்னன்னு கோவமா கேட்க...,

அம்மா அங்க பாருன்னு ஜன்னலுக்கு வெளிய கரண்ட் கம்பியை காட்டுறா. அங்க கம்பி மேல காக்கா உக்காந்திருக்கு. அதை பார்த்துதான் ”கம்பி”தம்பியாவும்..., “காக்கா” தாத்தாவாகவும் மாறி இருக்குறது புரிஞ்சு கோவத்தையும் மீறி சிரிக்க வைத்தது. .


டிஸ்கி: எல்லாரும் ரெண்டாவதும் பெண்ணாய் பொறந்துடுச்சேன்னு வருத்தப்பட்ட போதும்..  ஒண்ணுக்கொண்ணு துணையாய் இருக்கட்டும்ன்னு எல்லருக்கும் நான் ஆறுதல் சொல்வேன். ஒரு நொடி கூட கவலை பட்டதில்லை. என் வாழ்வை மிகுந்த தேடுதலுடன் ரசிக்கவும் ,ருசிக்கவும் வைக்கும் என் இரு மகள்களுக்கும் இந்நாளில் நன்றியை சொல்லிக்குறேன்.





Wednesday, October 10, 2012

அன்பும் நஞ்சுதானடி.....,


ஊற்ற, ஊற்ற...,
உளவாங்கியபடியே
நிரம்ப விரும்பாத...,
மது கோப்பை!

எனை மீட்டும் உன் அன்பும்..,
அது மீட்கும் உன் நினைவும்...,
மதுவை விடவும்??!!
 மயக்கமாய்...,

எப்போது தொடங்கினாய்..,
என்னென்ன பேசினாய்..,
என்ன சொல்லி முடித்தாய்!!??
எந்த பிரக்ஞையுமின்றி நான்.....

மூச்சுத் திணறுகிறது...,
மூச்சு விட முடியவில்லை..., 
மூழ்கி கொண்டிருக்கிறேன்...,
 உன் அன்பிற்குள்??!!

நீந்தி கரசேரும் நிலையில் நானில்லை..,
நினைவும் எனதாயில்லை..,
கரம் நீட்டி கேட்கிறேன்..,
கரையேற்றி விடும்படி....,

”நீயாய் நீந்தி .., கரை சேர்”!
எனச்சொல்லி ...,
தேய்ந்து புள்ளியாய்..., 
போய் கொண்டேயிருக்கிறாய்!!??

”அன்பும் நஞ்சுதானடி”
அசரீரி காதில் விழ...,
 அண்ணாந்து...,
வானத்தை  பார்க்கிறேன்...,

விடியும் வானில்..,
சிரித்தபடி..,
மேக மூட்டத்திலிருந்து விலகி..,
கண் சிமிட்டுகிறது “விடிவெள்ளி”

Friday, October 05, 2012

காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்....,


காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்...., 

நன்பேண்டா.....,


நம்மளைப் போல ஏதோ பிளாக் பைத்தியம் போல.....,



மூக்குக்கு மேல கோவங்கறது இதானா?! 



என்ன கொடுமை சரவணா இது................

                                                                             
அம்மான்னா சும்மா இல்ல....,

 

”ராஜி” பிளாக் படிக்காம தப்பிச்சு போறான்..., அவனை பிடிங்க...


வியாபாரம் நல்லா போகுதுங்களா சார்?!


Thursday, October 04, 2012

காதலில் சொதப்புவது எப்படி?

                                                              
டேய், மச்சான், நான் ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்றேன். அது என்னை திரும்பிகூட பார்க்கலை. அதை நம்ம பக்கம் திருப்பி விட எதாச்சும் ஐடியா சொல்லுடான்னு கேட்டா போதும், டீக்கா டிரெஸ் பண்ணு, சத்தமா பேசாத, முடி வெட்டு, இந்த போனை வாங்கு, இந்த வண்டி ஓட்டுன்னு ஒரு லிஸ்டே அடுக்குவானுங்க.

ஆனா, அந்த பொண்ணுக்கும் அவனுக்கும், செட்டாகி, காதல்ல கசிந்துருகி..,  தீஞ்சு ..., அந்த பொண்ணை விட சூப்பர் ஃபிகர் கிடைச்சுட்டா காதலியை எப்படி கழட்டி விடுறதுன்னு தெரியாம நம்ம பசங்க முழிப்பானுங்க..., ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டா ”ஙே”ன்னு முழிப்பானுங்க..., 

நம்ம பசங்களோட எதிர்கால நலன் கருதி நான் பொண்ணுங்களை கழட்டி விடுறதுக்கு சில ஐடியாக்கள்லாம் தர்றேன்.  யூஸ் பண்ணி பாருங்க. ஹெல்ப்ஃபுல்லா இருந்தா மாலை மரியாதை  பண்ணுங்க. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.


1.  போன்ல பேசிக்கிட்டு இருக்கும்போது...,   முதல்ல, இந்த ம்ம்ம் போடுறதை  விடுங்க. ரெண்டு நிமிசமா   எதுவும் பேசலேன்னா “என்ன, ரொம்ப போர் அடிக்குதா?”ன்னு கேள்வி வரும், கொஞ்சம் கூட பயப்படாம டக்குன்னு ஆமான்னு பதில் சொல்லிடுங்க. (  நேருல பார்க்கும்போது மூஞ்சை தூக்கி வச்சுக்குவாங்க.)   

2. காலைல எழுந்து பொறுப்பு வெளக்கெண்ணெய் போல Good Morning, ராத்திரி க்குGood Night எஸ்எம்எஸ் அனுப்புறதை நிறுத்துங்க. நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)     

3. “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் பொய்யா கொஞ்சுறதை நிறுத்துங்க. “நீ இன்னிக்கு போட்டிருக்குற மஞ்சள் சுடிதார் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி உண்மையை சொல்லிப் பழகுங்க.(சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்றது? தாதலில் தோற்பது அம்புட்டு ஈசியில்லீங்கோ.)

     4.  என்னதான் காஞ்சு போய் கிடந்தாலும், “ஒண்ணே  ஒண்ணு  கொடேன். ப்ளீஸ்!”ன்னு  தப்பித்தவறிக்கூட கேட்டுடப்படாது.  அப்பாலிக்கா கழட்டி விடுறது கஷ்டம்.


5. உங்க ஆள் மற்றும் அவங்க  ஃப்ரெண்ட்ஸ் கூட  (கேர்ள்ப்பா அபுறம் பாய் ஃப்ரெண்டை பார்த்துக்கிட்டிருந்தா தப்பா நினைச்சுக்குவாங்க.)  இருக்கும்போது, அவங்களையே பார்த்துக்கிட்டிருங்க. அவங்களோடயே பேசிக்கிட்டிருங்க. இடையில உங்க ஆளு பேச வந்தாலும் கண்டுக்காதீங்க. (யார் கண்டது வருங்காலத்தில் பிக் அப் ஆனாலும் ஆகலாம்!) உங்க ஆளுக்கு தன் அழகின்மீதே சந்தேகம் வரும். வரட்டும்! அப்புறம் எப்படி பிரியறதாம்??!!

   6. சும்மா சும்மா அப்பா பர்சுல ஆட்டையை போட்டு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேணாம்! பிசினாறித்தனமா கேட்டா கூட நானே உனக்கொரு கிஃப்ட்; அப்பௌறம் ஏண்டி இன்னொரு கிஃப்ட்ன்னு சமாளிங்க!

 7. சுடுகாட்டுக்கு கூப்பிட்டாலும் சொன்ன நேரத்துக்கு டான்னு போய்  நான்  அரிச்சந்திரன் பேரன்னு  நிரூபிக்க வேணாம். ஒரு மணி நேரம் கழிச்சு போங்க இல்லாட்டி  போகாமலயே  கடுப்பேத்துங்க.

8.எப்ப தண்ணியடிசாலும் மறக்காம, அம்மணியை  போன்ல கூப்பிட்டு அரை மணிநேரம் அறுக்கவும்! (மீதி நேரமெல்லாம் அவிங்கதானே அறுக்கிராங்க!). “தண்ணியடிசிருக்கியா?” ன்னு கேட்டா ரொம்ப தெகிரியமா  ஆமா, இப்ப அதுக்கென்னன்னு கேளுங்க.

9.ரெண்டு பேரும் ஒண்ணா எங்காவது வெட்டியா ஊர் சுத்தும்போதும் சரி, மொக்கையா கடலை போடும்போதும் சரி..,  அங்க பார்க்குற பொண்ணுங்களைலாம் பார்த்து மறைக்காம ஜோள்ளுங்க. அப்பாலிக்கா, அன்னிக்கு ஃபுல்லா ஒரு இம்சையிலிருந்து உங்களுக்கு விடுதலை!

10.    அவங்க அம்மா அப்பாவுக்கு ஐஸ் வைப்பதை லாம் அடியோடு நிறுத்துங்க. அவிங்க அப்பனை பார்த்த உடனே தம்மை கீழே போட்டுட்டு நான் ரெம்ம்ம்ம்ம்ப நல்லவன்னுலாம்  நடிக்க வேணாம். அந்தாள் பார்க்கும் போதுதான் புகையை ஊதணும்.  கண்டிப்பாய் நம் சாரி உங்க ஆள்கிட்ட  சொல்வான்(ர்), “இதுக எல்லாம் எப்படி உருப்படப் போகுதோ!” (ர் – அதான் பிரிய போறோமே அப்புறம் என்ன இதுக்கோசரம் மரியாதை?)     

11. அவங்க பர்த் டேக்கு , உங்க செல், அப்பா, அம்மா, பாட்டி செல்போன்,  டி.வி, கம்ப்யூட்டர், வாட்ச்ன்னு எதிலெல்லாம், அலாரம் வைக்குற வசதி இருக்கோ அதிலெல்லாம் அலாரம் வச்சு டான்னு  12 மணிக்கு எழுந்து, “ஹாப்பி பர்த்டே”ன்னு  சொல்றதையெலாம் விட்டுடுங்க.  அன்னிக்கு சாயந்தரம் 7 மணிக்கு போன்ல  கூப்பிட்டு “ஆமா, உனக்கு இன்னிக்கு பர்த் டே இல்ல! முக்கியமான வேலை நிறைய இருந்துச்சா சுத்தமா இதை மறந்தே போய்ட்டேன்! ஹாப்பி பர்த்டே!”ன்னு சொல்லி பாருங்க.....,

ரெண்டு பேரும்  பிரியரதுக்கு முயற்சியே செய்ய வேண்டியதில்லை.      அம்மண்ணி காண்டாகி காச் மூச்சுன்னு கத்தும். அப்போ,  இதை மட்டும் மறக்காம சொல்லுங்க. ஏன்னா இதான் ஃபினிஷிங் டச்   “உன்னைப் போய் நான் ஹே ஹே ஹே” அம்புட்டுதேன்! முடிந்தது நம்ம வேலை! மிச்சம்லாம் அம்மணியே பார்த்துக்குவாங்க...

 டிஸ்கி: எல்லாத்தையும் விட இப்ப நான் சொல்றதுதான் முக்கியம்.   இதை உங்கள் ஆளும் படிக்ககூடும். உங்களைக் கழட்டிவிட அவகங்களும் இதையே யூஸ் பண்ணிக்கலாம், கவனம் தேவை சகோ!   தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்! என்ன நான் சொல்றது சரிதானே?!

Wednesday, October 03, 2012

கணற்பொறி வாழ்க்கை...,

                                                         
சலசலக்கும் சிற்றோடையின் ஓசை ..., 
மரங்களடர்ந்த சூழல்..,
சல சலக்கும் சிற்றோடையின் ஓசை ..., 
மரங்களடர்ந்த சூழல்.., 

பெயர் தெரியாப் பூக்களின் வாசம்.., 
காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம்...,
 இதமான தென்றல்...,
 நட்சத்திரங்கள் கண்சிமிட்ட..., 

பௌர்ணமி ஒளியில்..., 
கயிற்றுக் கட்டிலில்..., 
கதையளந்தபடி இரவு உணவு... 
விவசாயம் செய்துக்கொண்டு நீயும்... 

பானை முடைந்துக் கொண்டோ, 
பாய் பின்னிக்கொண்டோ..., 
உனக்குதவியாக நானும்...,
எனக்காதரவாய் நீயும்...,
 இருந்திருப்போம்..., 
மகிழ்ச்சியாகவே 
போய் இருக்கும் வாழ்க்கை..??!!! 
நரகத்து நகர வாழ்க்கையில்...,

கணிப்பொறியாளனாய்
நீ இருக்க.....,
கணற்பொறியை கக்கிக் கொண்டு 
நகர்கிறது வாழ்க்கை..., 

Tuesday, October 02, 2012

தெரிந்த மனிதர்..., தெரியாத தகவல்



                                  
                                                                    
 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார். மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார். காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!

காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறை, குடியரசு தினம், சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!

முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!

காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்தி. இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது , அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!

உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!

காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான், அனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’

கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு’. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!

தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!

கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’

யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!

கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைப்பிடித்தார்!


ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.

`சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!

எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!

தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார். இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.

ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.  

இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா? அவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது. இது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.

ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.

`என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.  

மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.

இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்!.

போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டு, குஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.

`கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!. 

நன்றி: ஆனந்த விகடன்