Wednesday, September 11, 2013

பூண்டு ஊறுகாய் - கிச்சன் கார்னர்

முன்னலாம் வெயில் காலம் வந்துட்டா நம்ம பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா. அத்தைலாம் மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், கிச்சிலிக்காய், நெல்லிக்காய்லாம் வெட்டி, உப்பு போட்டு காய வச்சு வத்தலாக்கி எடுத்து வச்சுக்குவாங்க.

ஒரு மாசத்துக்கொரு முறை, வத்தல்ல கொஞ்சம் எடுத்து சுடுதண்ணில ஊற வச்சு, மிளகாய் தூள், பெருங்காயம்லாம் போட்டு தாளிச்சு, கடுகு வெந்தயம் வறுத்து போட்டு ஊறுகாய் செய்வாங்க. காலைல பழைய சாதத்துல தயிர் ஊத்தி ஒரு துண்டு ஊறுகாய் வச்சு சாப்பிட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தேவாமிர்தமா இருக்கும். நான்லாம் கறிக்கொழம்புக்கு கூட ஊறுகாய் சாப்பிட்ட காலம்லாம் உண்டு!

ஆனா, இப்போ இருக்குறவங்களுக்கு அந்த பொறுமை இல்ல(எனக்கும் சேர்த்துதான்). கடைக்கு போனா விதம், விதமா ஊறுகாய்கள் நாக்கில் எச்சி வர வைக்க வரிசைக்கட்டி நிக்குதுங்க. என்னதான் அந்த ஊறுகாய்கள் ருசிச்சாலும், விநிகர் மற்றும் கெமிக்கல் வாசனை போகாம அப்படியே இருக்கு.

அதனால, நான் அந்த ஊறுகாய்களை வாங்குறது இல்ல. வீட்டுலயே செஞ்சுக்கிடுவேன். பூண்டு ஊறுகாய்ன்னா என் பசங்களுக்கு முக்கியமா பெரியவளுக்கு பிடிக்கும். அவளை பார்க்க எப்ப போனாலும், இதை ஒரு பாட்டில் கொண்டு போனாதான் அவளுக்கு ஒரு திருப்தி. அரை கிலோ ஊறுகாயை இட்லி, சப்பாத்தி, சாதம், சும்மான்னு ரெண்டே நாள்ல காலி பண்ணிட்டு ஊறுகாய் காலின்னு சொல்வா!

பூண்டு உரிக்கும்போது பட்ட கஷ்டம் அவ சொல்லும் வார்த்தைல காணாம போய்டும்.ஈசியான பூண்டு ஊறுகாய் செய்யுறது எப்படின்னு இன்னிக்கு பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்:
பூண்டு - 1/2 கி
மிளகாய் - 25
புளி, - 200 கிராம்
உப்பு- தேவையான அளவு,
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு,வெந்தயம் வறுத்து அரைத்த பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 100மிலி
மஞ்சப்பொடி -சிறிது,


பூண்டை உரிச்சு, கழுவிக்கோங்க.

மிளகாயை காம்பு கிள்ளி எடுத்து வச்சுக்கோங்க!

புளில நார், கொட்டை, மண் இல்லாம சுத்தம் பண்ணிக்கோங்க! புளி, மிளகாய் ரெண்டையும் கொஞ்சம் நேரம் தண்ணில ஊற வைங்க.அப்பதான் மிக்சில போட்டு அரைக்கும்போது மிளகாய் விதைகள் அரைப்படும்.  

மிக்சில முதல்ல மிளகாய், புளி போட்டு கொஞ்ச நேரம் அரைச்சுட்டு கழுவி வெச்ச பூண்டை போட்டு நைசா அரைச்சுக்கோங்க! 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொறிய விடுங்க!

அரைச்சு வச்சை பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக்கோங்க. மிக்சில லேசா தண்ணி விட்டு கழுவி ஊத்திக்கோங்க. ஊறுகாய் கெட்டு போகாது! 


உப்பு சேர்த்துக்கோங்க!

மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க.

பெருங்காய பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. அடிக்கடி கிளறி விடுங்க. இல்லாட்டி அடிப்பிடிச்சுக்கும். ஊறுகாய்ல இருந்து எண்ணெய் பிரிஞ்சு வர ஆரம்பிக்கும்போது அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க.


பொடி செஞ்சு வச்ச கடுகு, வெந்தயப்பொடியை சேர்த்து கிளறி விடுங்க.

பூண்டு ஊறுகாய் ரெடி. டப்பாவை முழுசா மூடி வைக்காம லேசா காத்து போற மாதிரி வச்ச இருபது நாட்கள் வரை நல்லா இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சு யூஸ் பண்ணா ஒரு மாசம் வரை வரும் .

விநிகர், கெமிக்கல், கல்ர்லாம் கலக்காம ஒரு ஊறுகாய் ரெடி! பூண்டு உடம்புக்கும் நல்லது, லேசான, இனிப்பும் புளிப்பும், காரமுமா இந்த ஊறுகாய் நல்லா இருக்கும், சாதம், இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, வெரைட்டி ரைஸ்ன்னு எல்லாத்துக்கும் சைட் டிஷ் இதான் எங்க வீட்டில்.நீங்களும் செஞ்சு பாருங்க.

டிஸ்கி: ஊறுகாய் செய்ய முக்கியமான ஒரு பொருளை சொல்ல மறந்துட்டேன். அது என்னன்னா ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்கியமா வேணும் (அது, அப்பாவா, தம்பியா, காதலனா, கணவனா இல்ல மகனா இருக்கலாம்). ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தால் சாரி, நீங்களே உரிச்சுக்கோங்க!!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான டிஷ்ஷோட வர்றேன்!!


26 comments:

  1. இப்படி பூண்டினை அரைத்துச் செய்வது எனக்குப் புதிது. ஆனால் ருசி பிரமாதமாய் இருக்கும்போல தெரிகிறதே...:)

    அருமை. நல்ல குறிப்பு.!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும் . செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.

      Delete
  2. எதுக்கு இதை வீட்ட சொல்லிட்டு ஏமாந்த ஆளா நான் பூண்டு உரிக்கிறதுக்கா...?


    ரைட்டு... நமக்கு சாப்பிடமட்டும்தான் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டா மட்டும் போதாது. சமைக்கவும் கத்துக்கோங்க! எதிர்காலத்துக்கு நல்லது!!

      Delete
    2. ரைட்டு.. கத்துகிட்டாபோச்சி...

      Delete
  3. '' ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்கியமா வேணும்'' பூண்டு ஊறுகாய் செய்றதிலேயே இதுதான் ஹை லைட்டே!(போனா போவதுனு உரிச்சு கொடுத்தா எங்கள் தலைலேயே கட்டிடுவீங்களே! சரி சரி நாங்க செய்யாம யார்தான் செய்யறது. ஓகே ஓகே)

    ReplyDelete
    Replies
    1. பூண்டு உரிக்குற வேலைதானே சொல்றோம். இதை கூட செய்யாட்டி எப்படி!?

      Delete
  4. கடைசி ரெண்டு பாரா நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. கஷ்டப்பட்டு பூண்டை உரிச்சு, அரைச்சு, ஃபோட்டோ எடுத்து பதிவு போட்டால் அதை பத்தி எதும் சொல்லாம கடைசில மொக்கை டிச்கி மட்டும் ரசிக்குறீங்களே! இதெல்லாம் நியாயமா?!

      Delete
  5. அட இதை நாங்க பூண்டு தொக்கு அல்லது சட்னி என்று சொல்லுவோம். ஆரணிக்காரங்க இதை ஊறுகாய் என்று சொல்லுறாங்களா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க அமெரிக்கா போய் ரொம்ப நாள் ஆனதால இதெல்லாம் மறந்து போய் இருப்பீங்க. அதனால, இது ஊறுகாய்தான்

      Delete
  6. ஆமாம் உங்க வூட்டுகாரர் கிட்ட ரிசிப்பி கேட்டு வாங்கி போடும் போது கவனமாக கேட்டு இருக்கணுமுங்க அவரு இதை சட்னி ரிசிப்பி என்று சொல்லி இருப்பார் நீங்க ஏதோ ஞாபகத்துல அதை ஊறுகாய் என்று நோட் பண்ணி இருக்கிங்க போல இருக்கே? இதுக்குதாங்க அப்ப அப்ப பெண்கள் கிச்சன் பக்கம் போகனுமுங்குறது.... அது இல்லாம கேட்டு எழுதினா இப்படிதாங்க ஆகும்

    ReplyDelete
  7. //ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தால் சாரி, நீங்களே உரிச்சுக்கோங்க!!///

    ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தா மக்கா அமெரிக்கா வந்து செட்டில் ஆகிடுங்க இங்க உரிச்ச பூண்டு மிக மலிவாக பாட்டிலில் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. பட்டு சேலை கட்டினா தண்ணி தாகம் எடுக்குமோ ..அப்படின்னு சொல்கிறமாதிரி நீங்க அமெரிகாவில இருக்கிறது எங்களுக்கு தெரியனுமா ..இங்கே கூடத்தான் மலிவா பூண்டே கிடைக்குது

      Delete
  8. அட என்ன சகோ நான் வர சொன்னது ஆண்களை ஆனா நீங்க அமெரிக்க வர விசாவுக்கு அப்பளை பண்ணுறீங்களா நோ நோ....

    ReplyDelete
  9. இந்த பதிவை படிக்கும் அமெரிக்கா மக்களுக்கு நீங்க உரிச்ச பூண்டை வாங்கி அரைக்க வேண்டாம் அதற்கு பதிலாக பூண்டு பேஸ்டை வாங்கி மேலே சொன்ன குறிப்புகள் படி செய்து சுவைத்து மகிழலாம் அதுவும் கஷ்டம் என்றால் சகோவிடம் ஜாலியாக பேசி அவர் தலையில் மிளகாய் அரைச்சு அப்படியே 2 பாட்டில் அனுப்ப சொல்லலாம் நம்ம அப்பாவி சகோவும் அனுப்பி வைச்சுடுவாங்க ஹீ ஹீ

    ReplyDelete
  10. "ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்கியமா வேணும் " ஹா....ஹா....

    ReplyDelete
  11. ரொம்ப நல்லாயிருக்கும் போல இருக்கே?

    ReplyDelete
  12. செய்து விடுவோம்... நன்றி சகோதரி...

    ReplyDelete
  13. உரிச்சுட்டாலே பாதி வேலை முடிஞ்சதே.. அப்புறம் நீங்க எதுக்கு பண்ணீட்டு, அதையும் நாங்களே பண்ணிடறோம்..

    ReplyDelete
    Replies
    1. சரிங்க ஆவி! மிச்சத்தையும் நீங்களே பண்ணிடுங்க!

      Delete
  14. நல்லதொரு குறிப்பு. செய்து பார்க்கிறேன். அம்மா முழுசாவும் பூண்டு ஊறுகாய் போடுவாங்க...

    ReplyDelete
  15. பார்க்கும்போதே வாய் ஊருது போங்க...... ஆம், அந்த காலத்தில் அம்மா ஊறுகாய் ஜாடி அப்படின்னு ஒன்னு வைச்சிருப்பாங்க, இப்போ எங்கே ?! :-(

    ReplyDelete
  16. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
    ஒரு 500 மி.லி.பாட்டில்ல போட்டு வச்சுகுங்க.அந்தப்பக்கம் வரும்போது வாங்கிக்கறேன்!

    ReplyDelete
  17. ஏம்ப்பா இதை ,பூண்டு அரைக்காமல் ஊறுகாய் செய்வாங்களே.
    அதுக்கு இன்னும் எண்ணெய் சேர்க்கணும்.
    அதையும் செய்து பார்க்கிற யோசனை உங்க பதிவைப் படிச்சதும் வந்திடுச்சே.செய்து பார்க்கிறேன். நன்றிப்பா.

    ReplyDelete