வியாழன், செப்டம்பர் 12, 2013

மீண்டும் காதலிக்கிறேன்


நீ என்னை நினைத்த தருணங்களிலெல்லாம்
உன் முன் தோன்றி இருக்கிறேன்!
அப்படி தோன்றும்போதெல்லாம் நீ 
நினைத்ததாகவே தவறாக நினைத்துக் கொண்டதுண்டு!!

ஆமென்று,  நீயும் பொய் சொல்வாய்..,
என்னை சமாதானப் படுத்த...
ஏனெனில்,
அப்போது நாம் காதலித்ததாக 
நினைவு!!

காய்ந்த உன் கூந்தல் மலரோடு
என் காதலையும் சேர்த்து..,
ஒரு விடியல் பொழுதில்
தலை முழுகிய போதுதான் தெரிந்துக் கொண்டேன்,
ஒரு அர்த்தமற்ற கதையை 
வருடக்கணக்கில் (சு)வாசித்திருக்கிறேனென!!

ஒத்துக்கொள்கிறேன்! அதில்
உயிர் போ(க்)கும் துயரம் எனக்கு..,
ஆனாலும்,
மீண்டும் காதலிக்க முடிவு செய்து விட்டேன்.
உன்னையல்ல!!

வெற்றிலை வாசம் வீசும் வாயோடு 
முத்தமிடும் பாட்டியையும்!!
சுருட்டு புகைத்தபடியே கதை சொல்லும்
பாட்டனையும்!!

ஏழு கடல் தாண்டியும் என் விருப்ப
பொருளை வாங்கி வரும் அப்பாவையும்!!
என் வலி தன்னை, தன் இதயத்தில்
உணரும் அம்மாவையும்!!

பூக்களை, பூக்களின் வாசம் வீசும் தேனை..,
வர்ணத்தை, வர்ணஜாலம் காட்டும் கோலத்தை..,
இணையத்தை, இணையத்தில் வரும் என்
எழுத்தை!!  எழுத்து தரும் என் நட்புகளை!!

இப்போது என் பக்கங்கள் 
அற்புதமான கவிதையை தாங்கிக்
கொண்டிருக்கிறது!!
இன்னொன்றும் சொல்லிக் கொள்ள 
ஆசைப்படுகிறேன்!!

 இப்போது,
நான் நிஜமாவே காதலிக்கப்படுகிறேன்!
 காதலிப்பதில், காதலிக்கப்படுவதில்
 பெருமிதம் கொள்கிறேன்!!


25 கருத்துகள்:

 1. /// இணையத்தை, இணையத்தில் வரும் என்
  எழுத்தை!! என் எழுத்து தரும் என் நட்புகளை!! ///

  அசத்தல்...!

  பதிலளிநீக்கு
 2. வெத்தலை வாசம், பாட்டனின் சுருட்டு வாசம் - அசத்தல்...!

  பதிலளிநீக்கு
 3. நம்மை நேசிப்பவர்களை நேசிக்கும் சுகம்
  அலாதியானது
  நீங்கள் சொல்வது போல அதை அனுபவித்துப்
  பார்த்தால்தான் அதன் சுகம் தெரியும்
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ///இணையத்தை, இணையத்தில் வரும் என்
  எழுத்தை!! எழுத்து தரும் என் நட்புகளை!!///

  எல்லோரையும் சொன்ன நீங்கள் எங்களை சொல்லவிடாமல் போய்விடுவீர்களோ என்று நினைத்தேன் நல்லவேலை எங்களையும் அதில் இணைத்து இருக்கிறீர்கள் அப்படி இல்லையென்றால் நடப்பதே வேறாக இருக்கும் ஹும்ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 5. கவிதை எழுதுபவர்களுக்கு ஆயுசு ரொம்ப கெட்டிங்க புரியலைன்னா இன்றைய என் பதிவை படியுங்க

  பதிலளிநீக்கு
 6. இப்போது என் பக்கங்கள்
  அற்புதமான கவிதையை தாங்கிக்
  கொண்டிருக்கிறது!!//

  நிஜம். அருமையாக சொல்லி இருக்கீங்க அக்கா!!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லதோர் முடிவு :))) இன்பக் காதல்
  இனிய காதல் என்றும் தோற்காத இந்தக் காதல் தொடரட்டும் என்
  தோழியே !!

  பதிலளிநீக்கு
 8. காதலில் இருந்து முதலில் வெளி வந்த காரிகையே
  நீ வாழ்க ! உன் குலம் வாழ்க !

  பதிலளிநீக்கு
 9. அப்பா அம்மாவை நேசிக்கும் உண்மை காதல் வாழ்க.

  பதிலளிநீக்கு
 10. நீ விரும்புபவரை விட உன்னை விரும்புபவரை விரும்பு என்பார்கள்!

  உங்களை விரும்பும் இந்த இணைய நட்புகள் என்றென்றும் கூட வரும்!

  மிகமிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 11. மீண்டும் காதலிக்க முடிவு செய்து விட்டேன்..

  அழகா சொல்லி இருக்கீங்க !

  பதிலளிநீக்கு
 12. ஆம், நிறைய விஷயம் இந்த உலகத்தில் இருக்கிறது...... இணையம் மூலம் நட்பு என்பது இன்று சாத்தியமானது கண்டு மகிழ்ச்சி.


  //இப்போது என் பக்கங்கள்

  அற்புதமான கவிதையை தாங்கிக்

  கொண்டிருக்கிறது!!//


  ஆம்....உண்மைதான் சகோதரி !

  பதிலளிநீக்கு
 13. நானும் காதல் பத்தித்தான் எழுதியிருக்கிறேன்!
  காதல் என்பது விவரிக்க முடியாத ஒரு சுகமான அனுபவம்தான் சகோ!

  பதிலளிநீக்கு
 14. வாழ்நாள் முழுவதும் தொடரும் இந்த காதல் முறியவே முறியாது என்பதும் உண்மை !

  பதிலளிநீக்கு
 15. காதலிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது போல! அருமையான படைப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. நேசம் அற்புதமான விஷயம் ராஜி..

  நேசிப்பதை விட, நேசிக்கப்படுவது ஆசீர்வாதம்..

  தாய்மை அன்பு நேசிக்கப்படுவதில் தான் பெறமுடியும்....

  நேசிப்பதிலோ நம்மில் இருக்கும் தாயன்பு பூரணமாய் வெளிப்படும்...

  ரொம்ப அற்புதமான விஷயத்தை அழகா எளிய வரிகளில் கவிதையாவே சொல்லிட்டீங்கப்பா..

  பெருமையும் சந்தோஷமும் உண்டு.. உங்க நேசிப்புக்குரியவரில் நானும் ஒருத்தியாக இருப்பதற்கு....

  பதிலளிநீக்கு
 17. //என் வலி தன்னை, தன் இதயத்தில்
  உணரும் அம்மாவையும்!!//

  அதுதான் அம்மா --- மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. all lines very nice

  varikalai pirithu solla mudiyavillai

  பதிலளிநீக்கு