Friday, September 13, 2013

ஜடாயுபுரம் இராமலிங்க சுவாமி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

போன வாரம் நாகர்கோவில் அருகில் இருக்கும் “திருப்பதிசாரத்துல இருக்கும் “திருவாழ்மார்பனை” தரிசித்தோம். அப்படி தரிசனம் பண்ணிட்டு வரும் வழியில் நம்மாழ்வார் பிறந்த இடத்தையும் பார்த்துட்டு வந்தோம். அப்படி போன வாரம் வராதவங்கலாம் அங்க போய் ஒரு எட்டு எட்டி பார்த்துட்டு வந்துடுங்க. அந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு அலங்கார வளைவு இருக்குன்னு சொன்னேன், அது வழியா போனா,  ”ஜடாயுபுரம்”ன்ற ஊருல இருக்குற ஜடாயுபுரீஸ்வரர் இராமலிங்க ஸ்வாமி  திருக்கோவில் வரும். அந்த கோவில் பத்திதான் இன்னிக்கு பார்க்க போறோம்.
இயற்கை வளம் நிறைந்த  கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகு,  பச்சை பசுமையான வயல்வெளிகளும், தென்னைமரங்களும், பச்சை பட்டாடை போர்த்திய மலை சூழ்ந்த காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு. தூரத்தில் இருந்து பார்க்கும் போதே,  தென்னை மரங்களுகிடையே ஜடாயுபுரஸ்வரர் திருகோவில் கம்பீரமாக காட்சியளித்தது.
கோவிலுக்கு போறதுக்கு முன்னே,  யார் இந்த ஜடாயுன்னு பாப்போம். சூரியனின் தேரோட்டி அருணன்.  விஷ்ணுவின் வாகனமான கருடனின் அண்ணந்தான் இந்த அருணன். அருணனோட பிள்ளைகள்தான் சம்பாதியும், ஜடாயு”ன்ற கருட பறவைகள்.இராவணன்,  சீதையை கடத்தி செல்லும் போது, தடுத்து நிறுத்தி, சீதையை காப்பாத்த ராவணனை தாக்கியது இந்த ஜடாயு. இதானால்,  கோபமுற்ற இராவணன், சிவனிடம் தவம் இருந்து பெற்ற குறி தவறாமல் தாக்கும் சந்திரகாசம் என்னும் தானுடைய நீண்ட இந்திரனின் வஜ்ராயுதிர்கு நிகரான கூறிய வாளை எடுத்து ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான்.இராமன் சீதையை தேடி வரும்போது, அங்கு,  நடந்தவைகளை சொல்லி இறந்து விடுகிறான் ஜடாயு. இந்த கதை நமக்கு முன்னமயே தெரியும். ஆனா,  அது பற்றிய படங்கள் ரவிவர்மாவின் கைவண்ணத்தில் அழகுற வந்திருக்குதாம்.     எல்லோரா கைலாசநாதர் கோவிலில் இராவணன் ஜடாயுவை வெறி கொண்டு தாக்கும் சிற்பம் இருக்குதாம்.

அப்படி இறக்கை வெட்டப்பட்டு ஜடாயு வெட்டப்பட்ட  வீழ்ந்த  இடம் தான் இந்த ஜடாயுபுரமாம். ஜடாயுவிற்கு மோட்சம் வேண்டி இராமபிரான் லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் மற்றும் ஜடாயுவினுடைய சமாதி இருந்த இடம்தான் மூலஸ்தானமாம். இது அந்த கோவில் குருக்கள் சொன்ன தகவல்கள்.
இந்த திருக்கோவில் பழயாற்றங்கரையில் இருக்கு.  அதில் நாற்கால் மண்டபத்துடன் கூடிய படிக்கட்டு துறை காணப்படுகிறது.  அங்கு கை, கால்களை கழுவி , அங்கு வீற்றிருக்கும் அரசடி ஆதிவிநாயகரை வணங்கிவிட்டு கோவிலுக்குள் போகனுமாம்.
இந்த விநாயகருடைய சிறப்பு என்னன்னா,  ஒன்றை ஒன்று பின்னி தழுவிய நிலையில் அரசமரமும், வேம்பும் வளர்ந்து நிற்கும் மரநிழலில் லிங்கேஸ்வரனை தழுவும் நாகலிங்கரையும், நர்த்தன கண்ணனை தாங்கும் காளிங்கனின் தெய்வ விக்கரகங்கள் சூழ அமைந்து இருப்பது.
கோவிலின் முன்  தாமரை பூக்கள் நிறைந்த தாடாகம் காணபடுது.  இது ஒருகாலத்தில் தெப்பகுளமாகஇருந்ததாம்.  திருமால், தினமும் ஆயிரம் பூக்கள் கொண்டு அபிஷேகம் செய்வாராம்.  ஒரு நாள் பூக்களில் ஒன்று  குறைத்து பெருமான் திருவிளையாடல் புரிந்தாராம்.  அதற்கு ஈடாக திருமால் தன கண்ணையே சமர்ப்பித்து வணங்கினாராம்.இதனால்,  மனம் மகிழ்ந்த சிவபெருமான்,  திருமாலை ஆரதழுவிய போது..,  திருமாலுக்கு கண் மீண்டதாம்.  அவரின் நெற்றி திருமண் லிங்கத்தில் பாதிந்ததாம் ஆகையால் இன்றும் சிவலிங்கத்தில் திருநாமம் பதிந்த நிலையில் காணபடுகிறதாம்.    இவ்வளவு சிறப்பு மிக்க இந்த திருக்கோவில் நுழை வாயில் வழியாக சுவாமியை தரிசிக்கலாம் வாங்க!!

மூலவர் பெயர் - ஜடாயுபுரீஸ்வரர்,
 தாயார் பெயர் - சிவகாமி அம்பாள்,

கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கி இருக்க்கு.  நாம் தெற்கு நோக்கிய வாசல் வழியாக கோவிலினுள் நிழையும் போது நேர் எதிரே தாயார் சன்னதி இருக்கு. 
சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் இராமலிங்க ஸ்வாமி திருக்கோவிலினுள் உள் பக்கம்  நுழைந்தாச்சு!!
திருக்கோவிலினுள் நுழைந்தவுடன், அழகான கோலத்துடன் வீற்றிருக்கும் ”சிவகாமி அம்மனை”  வெளியே இருந்து தரிசித்தவாறே   பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய அமைப்பில் விநாயகரும்,  ஸ்ரீ ஐயப்பன் தர்ம சாஸ்தாகாவும் அருள் பாலிகின்றனர்.
தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி அழகாக காட்சியளிகிறார். தினமும் இங்கே இரண்டு கால பூஜை நடைபெறுதாம்.  மேலும், பிரதோஷ காலங்களிலும் சிறப்பு பூஜைகளும் பௌர்ணமி நாட்களில் யாஹங்களும், வடை பாயாசத்தோடு விருந்தும்,  மாலையில் கோவிலை வலம் வருதலும் நடைபெறுமாம்.இதெல்லாம் குறித்துகொண்டு பிரகாரத்தில் குடிகொண்டிருக்கும் பூதத்தான் சுப்ரமண்யரை தரிசித்து கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தோம்.
இந்த கோவில் புராதான பழமை வாய்ந்தது என்றும்,  சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு இங்கே கும்பாபிஷேகம் நடந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கோவிலில் காணபடுகின்றனவாம். மேலும் அந்த ஊர் பெரியவர் சொன்ன தகவல்..., இந்த பழையாறு எபோழுதும் கரை புரண்டு ஓடுமாம்.  ஆற்றின் கரையோரம் சில கிராமங்கள் இருந்தனாவாம். ஒரு வெள்ளத்தில் அவை எல்லாம் அழிந்து விட்டனவாம். அதன் பிறகு இடைப்பட்ட காலங்களில் பராமரிப்பு குறைவாக காணபட்டதாம் இப்பொழுது ஊர் பெரியவர்களும் கோவில் குருக்களும் சிறந்த முறையில் பராமரித்து வருகின்றராம்.
 இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வம்.  மேலும், செண்பக பூக்களும் சந்தனமரங்களும் முன்பு இருந்ததாம்.  ஆனா இப்ப இல்லை.   இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னன்னா இராமபிரான் ஜடாயுவிற்கு மோட்ஷம் வேண்டி பிரதிஷ்டை செய்து வழி பட்ட இடம் இது என்பதால், இங்கு, பித்ரு கர்ம செய்ய அனுகூலமான ஸ்தலமாம். இது, ராமேஸ்வரத்திற்கு இனையாக பித்ரு கர்மம் செய்யும் சக்தியுடைய ஸ்தலம் என்றும் கோவில் குருக்கள் கூறினார் .
 மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால்,  காலபைரவரரின் நேரடி பார்வையில் நவகிரகங்கள் அமைந்துள்ளன. ராகுகால பூஜைகளும், தேய்பிறை அஷ்டமி, நவமி நாட்களிலும் பைரவருக்கு பூஜைகள் நடைப்பெறுமாம் காலபைரவரை வணங்கி விட்டு நவகிரகங்களை சுற்றி கும்பிட்டுவிட்டு திருக்கோவிலினுள் மூலவரை தரிசிக்க சென்றோம்!!
அழகான ஒரு முன் மண்டபம். அதில் யாககுண்டம். மிகவும் அமைதியான் சூழ்நிலையில் அங்கே இருந்து சிவனை தியானிக்கவும்,  அங்கே வந்த சில பக்தர்கள் மனமுருகி பாடுவதையும் கேட்கும் போது பக்தி பரவசமாக இருந்தது. அங்கே உற்சவர் செல்லும் நந்தி வாகனம் ஒரு மூலையில் பார்பதற்கு அழகாக காட்சியளித்தது.
இந்த மண்டபத்தை கடந்தால் மூலவர் சன்னிதானம்.   கோவில்களை போல் அல்லாமல் மேல் உத்திரம் தாழ்ந்த அமைப்புடையதாக காணபட்டது.  அது குறித்து குருக்களிடம் கேட்ட போது அவர் கூறியது ஆச்சர்யமான தகவலாய் இருந்தது.  அதாவது, யுகங்கள் முற்பட்ட கோவிகளில் மேல் உத்திரம் தாழ்ந்த அமைப்புடன் தான் காணப்படுமாம். ஏனெனில் அந்த சமயத்து மனிதர்கள் கொஞ்சம் உயரம் குறைவாகத்தான் இருந்தார்களாம். இது யுகங்கள் கொண்ட கோவில் என்பதால் அந்த அமைப்புடன் காணபடுகிறது என்றார்.
சாமி தரிசனம் எல்லாம் முடிந்து,  எனக்கும், இதை படிக்கின்ற உங்களுக்கும் சேர்த்து புண்ணியத்தை சேர்த்துக்கிட்டு வெளியே வரும் போது ஒரு கிருஷ்ண சைதன்யமடம் ஒண்ணு இருக்கு. இங்க ஒரு பெரிய மகான் இருந்த தாகவும் அவுருடைய சமாதின்னும் சொல்லப்ப்படுது.  அங்க யாரும் இல்லதாததுனால அதுபற்றி கூடுதலா தகவல்கள் பெற முடியல. நீங்களும் இந்த பழைமையான சரித்திர புகழ் வாய்ந்த கோவிலுக்கு ஒரு முறை போய் வாங்க. 

உங்களுக்கு ஏதாவது கூடுதல் தகவல் வேணுமின்னா, இக்கோவிலின் குருக்கள் சந்திர சேகர  ஐயரை (94424 51399)தொடர்பு கொள்ளவும் ..இனி அடுத்தவாரம் வேறொரு கோவில் பற்றிய தகவலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் 

17 comments:

  1. என்னவொரு அருமையான கோவில்... படங்கள் பிரமாதம்... (இராஜராஜேஸ்வரி [http://jaghamani.blogspot.com/]அம்மாவிற்கு போட்டியா...? ஃபோன் செய்கிறேன்... ஹிஹி...)

    ReplyDelete
    Replies
    1. ராஜேஸ்வரி அம்மாக்கு போட்டியா வர முடியுமா!? சுற்றுலா போகும்போது அப்போ எடுத்த புகைப்படங்கள் சும்மாதான் பெண்ட்ரைவ்ல தூங்குது. அதை வச்சு பதிவு தேத்துறேன். அவ்வளவுதான் அண்ணா!

      Delete
  2. யாருடனும் நீங்கள் போட்டி இடவில்லை என நினைக்கலாம் ஆனா சக்தி விகடன் குமுதம் பக்திம்லர் நிறைய நியூஸ் பேப்பர்கள் எல்லாம் பெரிய டீம் வச்சு வொர்க் பண்ணுறாங்க ஆனா அவங்க கூட இந்த கோவிலை பத்தி தகவல் சொல்லி இருகிறாங்களா சந்தேகம்தான் கூகுளே சர்ச் லையே இவுளவு விரிவான வரலாறு காணப்படவில்லை ..இப்படி தெரியாத கோவில்கள் தெரிய வைப்பதே பெரிய புண்ணியம் ...வாழ்த்துக்கள் நான் வெள்ளி தோறும் உங்கள் வாசகி வெள்ளிகிழமை புண்ணியம் தேடி ஒரு பயணம் உண்மையில் புண்ணியம் சேர்க்கும் பயணம் மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. படங்களும் தொகுப்பும் ரொம்ப நல்லா இருக்கு

      Delete
    2. தனபாலன் அண்ணா சும்மா என்னை கலாய்ச்சார். மத்தபடி உங்க வாழ்த்துகளுக்கு நன்றிங்க அமிர்தா!

      Delete
  3. படங்கள் சூப்பராக உள்ளது .

    ReplyDelete
  4. அமிர்தாவின் கருத்தை நான்
    மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்
    படங்கள் விளக்கம் தகவல்கள்
    அனைத்தும் மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. என்னக்கா.. இப்பல்லாம் ஆன்மிகம் கொஞ்சம் தூக்கலா இருக்கு?

    ReplyDelete
  6. புண்ணியக்கணக்கு ஏறிக்கிட்டே போகுது-படிக்கும் உங்களுக்கும்,படிக்கும் எங்களுக்கும்!
    த ம 6

    ReplyDelete
  7. சிறப்பான படங்கள்....

    கோவிலும் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் பயணங்கள்.

    ReplyDelete
  8. ஜடாயுபுர இராமலிங்கசாமி கோவில் நன்றாக இருக்கிறது.
    படங்கள் எல்லாம் அழகு.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. எங்கள் ஊரின் (நாகர்கோவில்) அருகில் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோவில் இது. நிறைய அரிய தகவல்களுடன் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்... எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. சிறப்பான கோவில் பகிர்வு. படங்களும் அருமை. தொடருங்க...

    ReplyDelete
  11. அன்பின் ராஜி - அருமையான படங்கள் - கருத்துச் செறிவுள்ள விளக்கங்கள் - பதிவு அருமை - பகிர்வினிற்கு நன்றி - ஆன்மீகத் தொண்டு மேன் மேலும் தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. ஜடாயுபுர இராமலிங்கசாமி கோவில் பற்றி அறிந்துகொண்டோம்.

    ReplyDelete
  13. very well done
    continue and eager to know more

    ReplyDelete